ராஜசூய யாக வேலை தடபுடலாக நடந்துகொண்டு இருந்தது. யுதிஷ்டிரன் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை கொடுத்தார். பீமனுக்கு சமையலில் மேற்பார்வையாளராகவும், நகுல சகாதேவர்களுக்கு யாகம் காண வருபவர்களை வரவேற்கும் பொறுப்பையும், அர்ஜுனனுக்கு யாகசாலையைப் பாதுகாக்கும் பொறுப்பையும்.,
திரௌபதிக்கு சாப்பாடு பரிமாறுகிற வேலையும், கர்ணனுக்கு பரிசுகள் விளங்கும் பொறுப்பையும் , துரியோதனனுக்கு கஜானாவை பாதுகாக்கும் பொறுப்பும் கொடுத்தார். ஆனால் கண்னனுக்கு மட்டும் எந்த பொறுப்பும் கொடுக்க வில்லை. கண்ணன் தனக்கும் ஏதாவது வேலை கொடுக்கும் படி கேட்டார். யுதிஷ்டிரனுக்கு
கண்ணனுக்கு வேலை கொடுக்க மனம் இல்லை . ஆனால் கண்ணன் கட்டாயப்படுத்தினான்
அதற்க்கு யுதிஷ்டிரன் " கிருஷ்ணா, நீங்கள் மிகவும் பெருமைக்கு உரியவர். உங்களால் கால்களை கழுவி நாங்கள் உங்களை கவுரவிக்க வேண்டும். அத்தகைய உங்களுக்கு நான் என்ன வேலை கொடுக்க முடியும்? "
இதை கண்ணன் வேறு விதமாக
எடுத்து கொண்டான். சில மணி நேரங்கள் கழித்து கண்ணனை காணவில்லை. பாண்டவர்கள் அனைவரும் தேடினர். ஆனால் கண்ணன் எங்கு தேடியும் காணவில்லை. கடைசியாக சோர்ந்து போய் இருந்த சமயத்தில் ஒரு இடத்தில அந்த கட்சியை பார்த்து அதிர்ந்து போயினர். கண்ணன் ராஜசூய யாகத்திற்கு வந்த ஒவ்வொரு விருந்தாளிகள்
கால்களை கழுவி கொண்டும், அவர்கள் சாப்பிட்ட எச்சிலை எடுத்து கொண்டும் இருந்தான்.
பாண்டவர்கள் " கண்ணா இந்த தாழ்ந்த வேலையை செய்ய பல பேர் இருக்கிறார்களே. பெரும் மதிப்பிற்குரிய தாங்கள் ஏன் இதை செய்ய வேண்டும்"
அதற்க்கு கண்ணன் "வேலையில் தாழ்ந்த வேலை உயர்ந்த வேலை என்று இருக்கிறதா என்ன?
என்னை பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான் " என்று நகைத்தான்.
என்ன சொல்கிறார் ஆதி சங்கரர்? எல்லா லோகங்களிலும் கிருஷ்ணன் தான் ஜகத்குரு. ஏனென்றால் அவன் ஜகத் காரணம் என்பதால்! ஹே! கிருஷ்ணா,தேவகி வசுதேவருக்கு மட்டுமே கண்ணுக்கு
கண்ணாகப் பிறந்தவனா நீ? கண்ணா என்று உளம் மகிழ்ந்து உன்னை நெருங்கும் எண்ணற்ற கோடி உயிர்களுக்கும் அல்லவோ சொந்தம்!. தேவகிக்கு மட்டுமா நீ பரம ஆனந்தம் ? எங்கள் சந்தோஷத்தை எழுத யாராலும் முடியாது என்பதால்தேவகியின் சந்தோஷத்தோடு மட்டும் சங்கரர் நிறுத்திக்கொண்டிருக்கிறார்..
கம்சன், சாணூரன் என்று வெளியே உலவிய அரக்கர்களை கொன்றது போதாது. அவர்களைக்காட்டிலும் பலம் வாய்ந்த மல்லர்கள், ராக்ஷசர்கள், காமம், குரோதம், மோகம், மதம் என்றெல்லாம் பெயரோடு எங்களுக்குள்ளே மறைந்திருக்கிறார்களே.அவர்களையும் மர்த்தனம் செய்யேன்? )
🎊🎉திருமண வரம் அருளும் நித்திய கல்யாணப் பெருமாள் கோவில்🎉🎊
🌳தலவரலாறு🌳
🍁சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில்,குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார்.அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள்.அவளது நோக்கம்,முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும்
.ஆனால்,அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி இறைவனடி சேர்ந்து விட்டார்.
🍁தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண்,காடுகளைச் சுற்றி வந்தாள்.அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர்,அவளை மணம் புரிந்தார்.அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள்.
🍁தர்ம பத்தினியாக
வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார்.இதனால் தன்னுடைய முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.தன்னுடைய நிலையைக் கூறி,வேதமூர்த்தியாகவும் ஞானப்பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார்.வராக மூர்த்தி அவருக்கு
ஒரு சூரிய கிரஹணம். அன்று துவாரகையிலிருந்து கிருஷ்ணன், பலராமன், சுபத்ரா மற்றும் அனேகர் குருக்ஷேத்ரத்தில் ஒரு குளத்தில் ஸ்நானம் செய்யச் சென்றிருந்தனர். கிருஷ்ணனைப் பார்த்து எத்தனையோ வருஷங்களாச்சே, அதனால் கிருஷ்ணன் குருக்ஷேத்ரம் வரப்போகிறான் என்று
அறிந்து பிருந்தாவனத்திலிருந்து நந்தகோபன், மற்றும் பல கோப, கோபியர்கள் எல்லாம் கூட குருக்ஷேத்ரம் வந்துவிட்டனர். கிருஷ்ணனைப் பார்க்க அனைவருக்கும் அவ்வளவு ஆசை.
யசோதை, ரோகிணி இருவரில் ரோகிணி வெடுக் வெடுக் என்று நிறையப் பேசுவாள். குருக்ஷேத்ரத்தில் யாத்ரிகர்கள் யாரோ சிலர் போட்டுவைத்த
ஒரு பெரிய கூடாரம் அவர்களுக்கு வசதியாக அமைந்தது. அதில் கிருஷ்ணனின் எண்ணற்ற மனைவியரில் சிலர், மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் பலர் தங்கியிருந்தனர். கிருஷ்ணனைப் பற்றிய பேச்சு சுவாரஸ்யமாக வளர்ந்தது.
முயற்சியும் நம்பிக்கையும் தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் ஆகப் பெரிய சக்திகள்....
அந்த கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார் . ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை .
முனிவருக்கே உண்டான இயல்பில் , அவருக்கு கோபம் வந்தது.
கோபத்தில் அந்த ஊருக்கு இன்னும் 50 வருடங்களுக்கு மழையே பெய்யாது . வானம் பொய்த்துவிடும் என சாபமிட்டார். இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட ஊர் மக்கள் அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர்.
ஆனால் முனிவரோ சற்றும் மனம் இரங்காமல்,
சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார். வேறு வழியின்றி அவரின் கோபத்தை சாந்தப்படுத்தும் விதமாக ஊர் மக்கள் அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து விட்டனர்.
வைகுண்டத்தில் இருந்து இதைக் கவனித்த பரந்தாமனும் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான். பரந்தாமனின்
தெய்வத் திருவிழா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் -படிக்கப் படிக்கவே பரவசமாக இருக்கிறதே-இந்த சுகானுபவத்தை நேரில் சென்று அனுபவித்தால் எப்படி இருக்கும் -நிச்சயம் கண்ணனோடு கலந்து விடலாம்
ஜகந்நாதருக்கு வரும் ஜுரம்
இறைவனை ஏதோ கோவிலில் இருக்கும் ஒரு விக்கிரஹம் என்று எண்ணாமல்
நம்முள் ஒருவராக எண்ணுவதே நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பு.
அவரை ஜீவனுள்ள, சைதன்யமுள்ள ஒரு நபராகக் கண்டு மகிழுகிறோம்.
சொந்த கிராமத்திலிருக்கும் குலதெய்வங்களிலிருந்து நகரங்களில் மஹாக்ஷேத்திரங்களில் கோலோச்சும் தெய்வங்கள் வரை இதுதான் நம் வழக்கம்.
சிதம்பரத்தில் இருக்கக்கூடிய
தீட்சிதர்கள் நடராஜரை தங்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுகிறார்கள் மதுரையில் இருக்கும் அத்தனை பேரும் மீனாட்சியை தங்கள் வீட்டுப் பெண் என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.
அதேபோல புரி நகர மக்கள் ஜகந்நாதரையும், பலதேவரையும், சுபத்ரையையும் தங்கள் வீட்டுக் குழந்தைகளாகவே எண்ணுகிறார்கள்.
மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்! இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?"- தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு தேடி இருவரும் கிருஷ்ணரை சந்திக்கப் புறப்பட்டனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து
வருவதைக் கண்ட கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி. உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தார். தங்களது சந்தேகம் குறித்து கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.
உடனே, "ஆஹா… இருவரது சிந்தனையும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன்
உங்களுக்கு ஒரு சோதனை!" என்றார் கிருஷ்ணர்.
இருவரும், "என்ன அது?" என்பது போல், பகவானை ஆர்வத்துடன் கவனித்தனர்.
முதலில் தருமரிடம், "தருமா! இந்த பரந்த உலகில் தீயவன் ஒருவனையும், நல்லவன் ஒருவனையும் அழைத்து வா!" என்றார் பகவான்.