#ஸ்ரீ_க்ருஷ்ணாஷ்டகம்

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூரமர்தனம் |
தேவகீ பரமானந்தம் க்றுஷ்ணம் வந்தேஜகத்குரும் ||

என்ன சொல்கிறார் ஆதி சங்கரர்? எல்லா லோகங்களிலும் கிருஷ்ணன் தான் ஜகத்குரு. ஏனென்றால் அவன் ஜகத் காரணம் என்பதால்! ஹே! கிருஷ்ணா,தேவகி வசுதேவருக்கு மட்டுமே கண்ணுக்கு
கண்ணாகப் பிறந்தவனா நீ? கண்ணா என்று உளம் மகிழ்ந்து உன்னை நெருங்கும் எண்ணற்ற கோடி உயிர்களுக்கும் அல்லவோ சொந்தம்!. தேவகிக்கு மட்டுமா நீ பரம ஆனந்தம் ? எங்கள் சந்தோஷத்தை எழுத யாராலும் முடியாது என்பதால்தேவகியின் சந்தோஷத்தோடு மட்டும் சங்கரர் நிறுத்திக்கொண்டிருக்கிறார்..
கம்சன், சாணூரன் என்று வெளியே உலவிய அரக்கர்களை கொன்றது போதாது. அவர்களைக்காட்டிலும் பலம் வாய்ந்த மல்லர்கள், ராக்ஷசர்கள், காமம், குரோதம், மோகம், மதம் என்றெல்லாம் பெயரோடு எங்களுக்குள்ளே மறைந்திருக்கிறார்களே.அவர்களையும் மர்த்தனம் செய்யேன்? )

அதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார
னூபுரஶோபிதம் |
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தேஜகத்குரும் ||

அழகுக்கு அழகாய், மலர்களைத் தூவி, மாலை கட்டி சூடி, கையில் காலில் எல்லாம் பளபளக்கும் தங்க நகைகள் பூட்டி, மரகத, மாணிக்க வைர வைடூர்ய கற்கள் பதித்த கைவளை குலுங்க ஒரு குழந்தை காணப்பட்டால் எந்த மனம் தான் கொள்ளை
போகாது? எங்கள் மனம் மட்டும் என்ன கல்லோ? கிருஷ்ணா, உன்னை நாங்கள் எங்கள் இதயத்தில் பூட்டி வைத்துள்ளோம் -- சிக்கெனப் பிடித்தோம்.

குடிலாலக ஸம்யுக்தம்பூர்ணசந்தர னிபானனம் |
விலஸத் குண்டலதரம் க்ருஷ்ணம் வந்தேஜகத்குரும் ||

(குட்டி கிருஷ்ணா, மூர்த்தி சிறிதானாலும் உன் கீர்த்தி
பெரிது, நீ ஜகத் குரு , உன் கரிய, சுருண்ட, கேசத்தை, வர்ணிப்பதா, காதில் ஆடும் குண்டலத்தை மெச்சவா? பூரண சந்திரன் தோற்கும் பிரசன்ன முகமண்டலத்தைப் பாடுவதா? ஒன்றுமே தெரியாததால் பேசாமல் இருந்து வெறுமே கை கூப்பி உன் காலடியில் விழுந்து என்னை உனக்கு அர்பணிக்கிறேன், என்னுள்
எல்லாமே நீ தானே ? )

மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம்சதுர்புஜம் |
பர்ஹி பிம்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தேஜகத்குரும் ||

(ஹே, லோக சம்ரக்ஷண மூர்த்தி, ஜகத்குரு, எங்கிருந்து கற்றாய், உன் அழகிய மயில் பீலி சூட? அதனால் உன் புன்சிரிப்பின் அழகு கூடியதா? அல்லது உன்னைச் சுற்றி
கமகமக்கும் நீ சூடிக்கொண்டிருக்கும் மந்தார புஷ்பம் தான் எங்களது மனத்தைக் கொள்ளை கொண்டதா? யாருக்கையா விடை தெரியும் ?)

உத்புல்ல பத்மபத்ராக்ஷம் நீல ஜீமூதஸன்னிபம் |
யாதவானாம்ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தேஜகத்குரும்||

ஆதி சங்கரரால் தான் இப்படியெல்லாம் வர்ணிக்கமுடியும். சாதாரணன்
எடுத்துச் சொல்ல முடியுமா? கண்களோ அன்றலர்ந்த தாமரை மொட்டுக்கள், நிறமோ, நீலமேகஸ்யாமம். யாதவ குல திலகம் ! நீ பக்தர் குலத்திற்கும் ஜகத்திற்கும் தலைவன், தெய்வம், குரு அல்லவா?)

ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பரஸுஶோபிதம் |
அவாப்த துளஸீ கந்தம் கிருஷ்ணம் வந்தேஜகத்குரும் ||
சங்கரர் துவாரகை கிருஷ்ணனை நினைவு கூறுகிறார். யாரைக் காண்கிறார்? ருக்மணியுடன் சல்லாபிக்கிறான் மாயக்ரிஷ்ணன். அவனது மஞ்சள் நிற பட்டாடை கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்கிறதே. அவர்கள் இருக்கும் அந்த பகுதியே துளசியின் ஈடற்ற நறுமணத்தை காற்றில் பரப்பி நெஞ்சையு நிரப்புகிறதே. கிருஷ்ணா
உனக்கு நமஸ்காரம்)

கோபிகானாம் குசத்வம்த குங்குமாங்கிதவக்ஷஸம்

ஶ்ரீநிகேதம்மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தேஜகத்குரும் ||

(கோபி கிருஷ்ணா,உன்னைச் சுற்றிலும் எங்கும் உபனிஷத்துக்களே உருவெடுத்த கோபிகள், மார்பில் ஸ்ரீ (லக்ஷ்மி) குடிகொண்ட ஸ்ரீ னிவாசா, உன் கையில் என்ன ஒரு வில், அதற்குப்
பெயர் தான் சார்ங்கமா? அதனால் உலகை ரக்ஷிக்கும் நீ சாரங்கபாணியா ?)

ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலாவிராஜிதம் |
ஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தேஜகத்குரும் |

லோகநாயகா, சாஷ்டாங்க நமஸ்காரம் உனக்கு. அதென்ன உன் மார்பில்ஏதோ பளிச்சென்று தெரிகிறது? ஒ, அது ஸ்ரீ வத்ஸம் அல்லவோ,
இப்போது புரிகிறது. ஆம் அது தான், வண்ண மலர் மாலைகளுக்கிடையே கண்ணில் தோன்றி மறைந்தது . உன்னுடைய காம்பீர்யம், அழகு, நேர்த்திக்கேல்லாம் ஒரு விதத்தில் உன் கரங்களில் மிளிரும் பாஞ்சஜன்யம் என்கிற நாமம் கொண்ட சங்கமும், சுதர்சனம் என்கிற சக்ரமும் கூட என்று யார் வேண்டுமானாலும்
யோசிக்காமல் சொல்ல முடியும்.

கிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம்ப்ராதருத்தாய யஃ படேத் |
கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேனவினஶ்யதி ||

ஆதி சங்கரர் இந்த கிருஷ்ணாஷ்டகத்தை சும்மா விருதாவாக எழுதிவிட்டு அதோடு விடவில்லை. டாக்டர் மருந்து பெயர் மட்டும் எழுதி கொடுக்காமல் அதை எப்போது, எப்படி
சாப்பிட வேண்டும் என்று சொல்வது போல இந்த கிருஷ்னாஷ்டகம் எட்டையும், காலை பொழுது விடிந்தவுடன், எவன் விடாமல் சொல்கிறானோ, பஜிக்கிரானோ அவன் சொல்லொணா ஜன்மங்களில் எல்லாம் செய்து சேர்த்து வைத்திருக்கும் சகல பாபங்களும் ''சட்'' எனத் தீரும் என்கிறார். நினைத்தால் போய்விடும்
என்கிறார். சென்னை வெள்ளம், அதனால் விளைந்த கஷ்டங்கள் அனைத்தும் அப்படித்தான் தீரவேண்டும்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

Thanks @nethaji321 ji

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கிருஷ்ணதாசன்

கிருஷ்ணதாசன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @krishnananban55

5 Jul
🎊🎉திருமண வரம் அருளும் நித்திய கல்யாணப் பெருமாள் கோவில்🎉🎊

🌳தலவரலாறு🌳
🍁சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில்,குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார்.அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள்.அவளது நோக்கம்,முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும்
.ஆனால்,அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி இறைவனடி சேர்ந்து விட்டார்.

🍁தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண்,காடுகளைச் சுற்றி வந்தாள்.அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர்,அவளை மணம் புரிந்தார்.அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள்.

🍁தர்ம பத்தினியாக
வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார்.இதனால் தன்னுடைய முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.தன்னுடைய நிலையைக் கூறி,வேதமூர்த்தியாகவும் ஞானப்பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார்.வராக மூர்த்தி அவருக்கு
Read 19 tweets
2 Jul
கண்ணன் செய்த வேலை

ராஜசூய யாக வேலை தடபுடலாக நடந்துகொண்டு இருந்தது. யுதிஷ்டிரன் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை கொடுத்தார். பீமனுக்கு சமையலில் மேற்பார்வையாளராகவும், நகுல சகாதேவர்களுக்கு யாகம் காண வருபவர்களை வரவேற்கும் பொறுப்பையும், அர்ஜுனனுக்கு யாகசாலையைப் பாதுகாக்கும் பொறுப்பையும்., Image
திரௌபதிக்கு சாப்பாடு பரிமாறுகிற வேலையும், கர்ணனுக்கு பரிசுகள் விளங்கும் பொறுப்பையும் , துரியோதனனுக்கு கஜானாவை பாதுகாக்கும் பொறுப்பும் கொடுத்தார். ஆனால் கண்னனுக்கு மட்டும் எந்த பொறுப்பும் கொடுக்க வில்லை. கண்ணன் தனக்கும் ஏதாவது வேலை கொடுக்கும் படி கேட்டார். யுதிஷ்டிரனுக்கு
கண்ணனுக்கு வேலை கொடுக்க மனம் இல்லை . ஆனால் கண்ணன் கட்டாயப்படுத்தினான்

அதற்க்கு யுதிஷ்டிரன் " கிருஷ்ணா, நீங்கள் மிகவும் பெருமைக்கு உரியவர். உங்களால் கால்களை கழுவி நாங்கள் உங்களை கவுரவிக்க வேண்டும். அத்தகைய உங்களுக்கு நான் என்ன வேலை கொடுக்க முடியும்? "

இதை கண்ணன் வேறு விதமாக
Read 7 tweets
29 Jun
கண்ணன் ஜெகநாதனாக மாறினார்

ஒரு சூரிய கிரஹணம். அன்று துவாரகையிலிருந்து கிருஷ்ணன், பலராமன், சுபத்ரா மற்றும் அனேகர் குருக்ஷேத்ரத்தில் ஒரு குளத்தில் ஸ்நானம் செய்யச் சென்றிருந்தனர். கிருஷ்ணனைப் பார்த்து எத்தனையோ வருஷங்களாச்சே, அதனால் கிருஷ்ணன் குருக்ஷேத்ரம் வரப்போகிறான் என்று
அறிந்து பிருந்தாவனத்திலிருந்து நந்தகோபன், மற்றும் பல கோப, கோபியர்கள் எல்லாம் கூட குருக்ஷேத்ரம் வந்துவிட்டனர். கிருஷ்ணனைப் பார்க்க அனைவருக்கும் அவ்வளவு ஆசை.

யசோதை, ரோகிணி இருவரில் ரோகிணி வெடுக் வெடுக் என்று நிறையப் பேசுவாள். குருக்ஷேத்ரத்தில் யாத்ரிகர்கள் யாரோ சிலர் போட்டுவைத்த
ஒரு பெரிய கூடாரம் அவர்களுக்கு வசதியாக அமைந்தது. அதில் கிருஷ்ணனின் எண்ணற்ற மனைவியரில் சிலர், மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் பலர் தங்கியிருந்தனர். கிருஷ்ணனைப் பற்றிய பேச்சு சுவாரஸ்யமாக வளர்ந்தது.

ரோஹிணியை கேள்விகளால் துளைத்து விட்டனர் துவாரகையிலிருந்து வந்தவர்கள்.
Read 11 tweets
29 Jun
முயற்சியும் நம்பிக்கையும் தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் ஆகப் பெரிய சக்திகள்....

அந்த கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார் . ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை .

முனிவருக்கே உண்டான இயல்பில் , அவருக்கு கோபம் வந்தது.
கோபத்தில் அந்த ஊருக்கு இன்னும் 50 வருடங்களுக்கு மழையே பெய்யாது . வானம் பொய்த்துவிடும் என சாபமிட்டார். இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட ஊர் மக்கள் அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர்.

ஆனால் முனிவரோ சற்றும் மனம் இரங்காமல்,
சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார். வேறு வழியின்றி அவரின் கோபத்தை சாந்தப்படுத்தும் விதமாக ஊர் மக்கள் அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து விட்டனர்.

வைகுண்டத்தில் இருந்து இதைக் கவனித்த பரந்தாமனும் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான். பரந்தாமனின்
Read 9 tweets
28 Jun
தெய்வத் திருவிழா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் -படிக்கப் படிக்கவே பரவசமாக இருக்கிறதே-இந்த சுகானுபவத்தை நேரில் சென்று அனுபவித்தால் எப்படி இருக்கும் -நிச்சயம் கண்ணனோடு கலந்து விடலாம்

ஜகந்நாதருக்கு வரும் ஜுரம்

இறைவனை ஏதோ கோவிலில் இருக்கும் ஒரு விக்கிரஹம் என்று எண்ணாமல்
நம்முள் ஒருவராக எண்ணுவதே நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பு.

அவரை ஜீவனுள்ள, சைதன்யமுள்ள ஒரு நபராகக் கண்டு மகிழுகிறோம்.

சொந்த கிராமத்திலிருக்கும் குலதெய்வங்களிலிருந்து நகரங்களில் மஹாக்ஷேத்திரங்களில் கோலோச்சும் தெய்வங்கள் வரை இதுதான் நம் வழக்கம்.

சிதம்பரத்தில் இருக்கக்கூடிய
தீட்சிதர்கள் நடராஜரை தங்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுகிறார்கள் மதுரையில் இருக்கும் அத்தனை பேரும் மீனாட்சியை தங்கள் வீட்டுப் பெண் என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.

அதேபோல புரி நகர மக்கள் ஜகந்நாதரையும், பலதேவரையும், சுபத்ரையையும் தங்கள் வீட்டுக் குழந்தைகளாகவே எண்ணுகிறார்கள்.

நாம்
Read 17 tweets
28 Jun
வாழ்கையை பற்றி கோவிந்தன் கூறிய அறிவுரை

மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்! இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?"- தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு தேடி இருவரும் கிருஷ்ணரை சந்திக்கப் புறப்பட்டனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து
வருவதைக் கண்ட கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி. உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தார். தங்களது சந்தேகம் குறித்து கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.

உடனே, "ஆஹா… இருவரது சிந்தனையும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன்
உங்களுக்கு ஒரு சோதனை!" என்றார் கிருஷ்ணர்.

இருவரும், "என்ன அது?" என்பது போல், பகவானை ஆர்வத்துடன் கவனித்தனர்.

முதலில் தருமரிடம், "தருமா! இந்த பரந்த உலகில் தீயவன் ஒருவனையும், நல்லவன் ஒருவனையும் அழைத்து வா!" என்றார் பகவான்.

"ஆகட்டும் கிருஷ்ணா!" என்ற தருமர் அங்கிருந்து
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(