தேர் இழுப்பதினால்
இவ்வளவு நன்மைகளா?
நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில்
காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார்.
அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் “ தேர் இழுத்திருக்கிறீர்களா? “ என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார்.
ஒரு முறை தேர்வடம்
இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக முடியும் என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்றார். “ தேர்
இழுத்தாயோ ….” என பெரியவர் வினவ ஆம் அதன்பின் தான் எல்லாம் நன்றாக நடந்தது. என்றார் நிலக்கிழார்.
தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் கண்டுகளிக்க முடியும்.
கோயிலில் தெய்வசக்தி எப்போதும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேர்த்திருவிழா அன்றோ தெய்வ சக்தி ஊர் முழுவதும் வெளிப்படும் ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் அப்போது பறந்தோடி விடும். தேர் இழுப்பவர்களில் பேதங்கள் கிடையாது. எல்லாவற்றிலும் பேதங்கள் பார்க்காத மனிதர்களாலேயே தம்
பக்கம் இழுக்க முடியும் என்பதே தேரோட்டம் உணர்த்தும் உண்மை.
தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் தேர் இழுப்பதற்கும் தேரோட்ட திருவிழாவுக்கு உதவி செய்வதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். பூர்வ ஜென்ம புண்ணீயம் இருந்தால்தான் நம்மால் தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ள முடியும்.
தேர்வடத்தைத் தொட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான பேர் நிற்கும்போது அங்கே அபரிமிதமான மனித சக்தி பொங்கத் தொடங்குகிறது. அத்தனை மனிதர்களும் கடவுளின் அருளை வேண்டி கூடியிருக்கும்போது அங்கே பிரார்த்தனையின் சக்தி மகத்தானதாக மாறுகின்றது.
பக்தியுடன் தெய்வத்தை இழுக்கும் சக்தி தங்களுக்கு இருப்பதாக
மக்கள் கருதுவதும் பக்தர்களின் பக்திப் பெருக்கைக் கண்டு தெய்வம் ஓடி வருவதும் தேர்த்திருவிழாவின் மகத்துவம் ஆகும். அந்த இடத்தில் தெய்வத்தின் சாந்நித்யம் அதிகரித்துள்ள இடத்தில் இருப்பதற்கே ஒருவரின் ஜாதகம் சரியாக அமைய வேண்டும்.
நிலக்கிழாரின் கர்மவினை அவரைத் தேர்த்திருவிழாவில்
பங்கெடுக்க முடியாமல் செய்திருந்தது. ஆனால் ஒரு மஹானை தரிசித்த மாத்திரத்தில் அவரது பாப வினைகள் நீங்கியதுடன் தேர்த்திருவிழாவிலும் கலந்துகொள்ளச் செய்தது. அதனால் கடவுளின் அருள் பலம் சேர வழக்கும் அவருக்கு சாதகமானது.
தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள்
1 கடவுளின்
அருள் பலம் கிடைக்கும்
2 வெற்றி உண்டாகும்.
3 நோய்கள் தீரும்
4 பாபவினைகள் தீரும்.
வழக்கு சம்பந்தமான பிரச்னைகள் அகலும்.
6 மனக்குழப்பங்கள்நீங்கி, நிம்மதி கிடைக்கும்
7 சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
இத்தனை நன்மைகளைத் தரக்கூடிய தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதும் உற்சவம் நடைபெற உதவி
செய்வதும் தொண்டுகள் புரிவதும் நிறைந்த புண்ணியத்தைத் தரும்.
குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய வெண்கல உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.
அது சரி.. குருவாயூர் கோயிலில்
இதற்கு அப்படி என்ன விசேஷம்..?
இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.
முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது.
ஆனால் குழந்தை கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்கு கொள்ளை ஆசை.
அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது....
அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய
சினிமாவைக் கொண்டு நம் இதிகாசத்தை அழிக்கும் முயற்சி.
சிவாஜி நடித்த பழைய கர்ணன் திரைப்படத்தில் உண்மையான மகாபாரதம் எப்படி பொய்யாக திரிக்கப்பட்டது –ஒரு பார்வை.....
ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் மஹாபாரத கதையை அறிந்தவர்கள், அவர்கள் அப்படத்திலுள்ள பெரும்பாலான காட்சிகள்
ஜோடிக்கப்பட்டவை என்பதை உணர முடிந்தது.....
ஆனால் இன்று இருப்பவர்களுக்கு பாரதக் கதையே தெரியாதே, திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதை அப்படியே நம்பிவிடும் வாய்ப்பே அதிகம்...
இத்திரைப்படத்தில் ஜோடிக்கப்பட்டுள்ள காட்சிகளில் மிகவும் கண்டிக்கத்தக்க காட்சி:
இறுதியில் கிருஷ்ணர்
கர்ணனிடம் வந்து தர்மத்தை பிச்சை கேட்கும் காட்சி. எடுத்துச் சொல்வதற்கு ஆள் இல்லை என்பதால், பெரும்பாலான தமிழக மக்கள், கிருஷ்ணர் கர்ணனிடம் பிராமண ரூபத்தில் வந்து அவன் செய்த தானத்தின் பலன்களை தானமாகப் பெற்றார் என்று இன்று வரையில் நம்பிக் கொண்டுள்ளனர். ஆனால் இதில் எள்ளளவும்
துவாரகை அரண்மனையில், கண்ணன் அருகே அமர்ந்திருந்தார் உத்தவர். அவரது முகத்தில் கடும் யோசனை. கண்ணன் பிரியமாகக் கேட்டான்: "உத்தவரே! எதைப் பற்றியது உங்கள் ஆழ்ந்த யோசனை? நான் தெரிந்துகொள்ளலாமா?'' எல்லாவற்றையும் தெரிந்த கடவுளிடமிருந்து எதுவுமே தெரியாததுபோல் ஒரு வினா!
உத்தவர் நகைத்துக் கொண்டார். பகவானிடம் தான் வெளிப்படையாக இருப்பது அவசியம் என்பதையும் அவர் அறிவார்.
ஒருபெருமூச்சுடன் சொல்லலானார்: "பிரபோ! நானும் எத்தனையோ ஜபதபங்கள் செய்துவிட்டேன். என்னை எல்லோரும் ரிஷி என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், மகரிஷி என்ற பட்டம் மட்டும் இன்னும் எனக்குக்
கிட்டவில்லை. முனிவர்களிடையே நானும் ஒரு மகரிஷி என்ற அந்தஸ்தைப் பெற விரும்புகிறேன், என்றார்.
கண்ணன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டான். "ஆசையையெல்லாம் முற்றும் துறந்த முனிவருக்கு, மாபெரும் துறவி' என்ற பட்டம் பெறும் ஆசையைத் துறக்க முடியவில்லையே! பற்றற்றான் பற்றினைப் பற்றிக்கொண்டு
என்ன சொல்கிறார் ஆதி சங்கரர்? எல்லா லோகங்களிலும் கிருஷ்ணன் தான் ஜகத்குரு. ஏனென்றால் அவன் ஜகத் காரணம் என்பதால்! ஹே! கிருஷ்ணா,தேவகி வசுதேவருக்கு மட்டுமே கண்ணுக்கு
கண்ணாகப் பிறந்தவனா நீ? கண்ணா என்று உளம் மகிழ்ந்து உன்னை நெருங்கும் எண்ணற்ற கோடி உயிர்களுக்கும் அல்லவோ சொந்தம்!. தேவகிக்கு மட்டுமா நீ பரம ஆனந்தம் ? எங்கள் சந்தோஷத்தை எழுத யாராலும் முடியாது என்பதால்தேவகியின் சந்தோஷத்தோடு மட்டும் சங்கரர் நிறுத்திக்கொண்டிருக்கிறார்..
கம்சன், சாணூரன் என்று வெளியே உலவிய அரக்கர்களை கொன்றது போதாது. அவர்களைக்காட்டிலும் பலம் வாய்ந்த மல்லர்கள், ராக்ஷசர்கள், காமம், குரோதம், மோகம், மதம் என்றெல்லாம் பெயரோடு எங்களுக்குள்ளே மறைந்திருக்கிறார்களே.அவர்களையும் மர்த்தனம் செய்யேன்? )