#முகலாயப்_பேரரசு_பகுதி_3

பாக்-இ பாபர் என்பது ஆப்கானிசுத்தானின் தலைநகரமான காபுலில் உள்ள ஒரு வரலாற்றுப் பூங்கா ஆகும். முகலாயப் பேரரசை நிறுவி அதன் முதல் பேரரசராக இருந்த பாபரின் சமாதியும் இங்கேயே உள்ளது. இப் பூங்கா 1528 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
பாபரின் குறிப்புக்களான "பாபர்நாமா" என்னும் ஆவணத்தில், காபுலில் ஒரு பூங்காவைக் அமைக்க பாபர் ஆணையிட்டது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
பாபர் கோவிலை இடித்தாரா?
எந்த இடத்தில் கோவிலை இடித்துவிட்டு பாபர் மசூதியைக் கட்டினார் என்று சொல்லப்படுகின்றதோ அதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத்தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள்ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை
Gardens of Babur, Kabul Afghanistan

நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது
முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ளதைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும்
மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
முகலாய மன்னர்களின் ஆட்சி, பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும்
வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் இந்திய மத்திய அரசின் தொல்பொருள் துறையின்
கட்டுப்பாட்டில் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
அந்த உயிலில்,
“மகனே! இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை
உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக்
கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை
இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக
இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி,
தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா
இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸ்லிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் இந்திய நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை
முகலாய வம்சத்தின் நிறுவனர் ஜாஹிர் அட்-தின் முஹம்மது பாபர் (1483-1530). பிப்ரவரி 14, 1483 அன்று ஆண்டிஜானில் பிறந்தார், ஃபெர்கானாவின் ஆட்சியாளரான ஒமர் ஷேக் மிர்சாவின் மூத்த மகன். பாபரின் பாட்டனார் தைமூர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

10 Aug
பாபர் மஸ்தித் தீர்ப்பை முன் கூட்டியே கணித்தவர் கலைஞர் அவர்கள் அதை நெகடிவ் அப்ரோச்சாக ராஜாஜி மண்டபத்திலே முன்பே சொல்லிவிட்டார் .

இது குருட்டுத் தீர்ப்பல்லவா என்று பித்தன் கேட்கிறான் என தொடங்கிய கணீர் குரலில்
அடையாளம் கண்டுகொண்டிருந்தால் அயோத்திப் பிரச்சனை அல்லவா வரும் ?

எனவே இது நெகடிவ் அப்ரோச் –எதிர்மறை அணுகுமுறையைக் கொண்டு ,ஒரு பாசிடிவ் அப்ரோச்சுக்குக் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள்
உங்கள் தீர்ப்பு

உண்மையில்

தீர்ப்பல்ல

ஒரு பக்க வாதம்

ஒன்சைடு ஆர்க்யூமெண்டாம்-தமிழிலே ஒரு வாதம் : நிறுத்தி சொன்னால் ஒரு பக்கவாதம்.

(19.07.1998) அன்று நிகழ்ந்த கவிக்கோ” அப்துல் ரகுமானின் மணி விழாவில் “மாண்புகு முதல்வர் கலைஞர்” ஆற்றிய உரையிலிருந்து.
Read 27 tweets
9 Aug
#முகலாயப்_பேரரசு_பகுதி_2

முகலாயர்கள் :-

1. பாபர்
2. ஹுமாயூன்
3. அக்பர்
4. ஜகாங்கீர்
5. ஷாஜகான்
6. ஔரங்கசீப் #முகலாயப்_பேரரசு_பகுதி
1. பாபர்:-

💠 முதலாய மரபின் முதல் அரசர் - பாபர்

💠 பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு வெளிப்படையாக அழைப்பு விட்டவர் - தௌலத்கான் லோடி

💠 பாபர் முழுபெயர் - ஜாகிருதின் முகமது பாபர்

💠 பாபர் என்பதன் பெயர் - புலி

💠 பாபர் தந்தை பெயர் - உமர் சேக் மிர்சா
💠 பாபர் இருமுறை படையெடுப்பு தோல்வி கண்ட நகரம் - சாமர்கண்ட்

💠 முதல் பானிப்பட் போர் யார்யார்க்கு இடையே நடைபெற்றது - பாபர் Vs இப்ராகிம் லோடி

💠 இந்தியாவில் முதல் முதலில் பீரங்கி பயன்படுத்தப்பட்ட போர் - முதல் பானிபட் போர்
Read 15 tweets
9 Aug
#முகலாயப்_பேரரசு_பகுதி_1

இம்சை அரசன் தைமூர்

முகலாயர்களின் காலம் வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெற்றது. சுமார் 450 வருட காலங்கள் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த முகலாயர்களின் ஆதி அரசர் எனக் கருதப்படுபவர்தான் தைமூர்.
முகலாயப் பேரரசர் பாபரின் முப்பாட்டன். ஒருவகையில், தற்போது பெயர் சூட்டப்பட்டிருக்கும் பிள்ளை தைமூருக்கு, மரபணு ரீதியிலான தொடர்புடையவர்தான் அரசர் தைமூர்.

Emir Timur in the Gur-e-amir Mausoleum in Samarkand, Uzbekistan.
அரசர் தைமூர், முகலாயர்களில் கொடுங்கோல் அரசராகக் கருதப்பட்டவர். நாடோடி அரசர்களில் கடைசி தலைமுறை என்று கருதப்பட்டவர். அவருக்குப் பின்னான முகலாயர்கள் நிலையான ஒரு நிலத்தில்தான் தங்களது ஆட்சியை நிறுவினார்கள். செங்கிஸ்கானின் வழித்தோன்றலாகத் தன்னை அறிவித்துக்கொண்ட தைமூர்,
Read 48 tweets
8 Aug
முகலாய பேரசின் சோக வரலாறுகள் 🥲

"பேரழகியான ஜஹானாரா மீது ஷாஜகான் பைத்தியமாக இருந்தார். தந்தையை மிகவும் அக்கறையாக கவனித்துக் கொண்டார் ஜஹானாரா. அவரால் மேற்பார்வையிடப்பட்ட உணவு மட்டுமே அரசருக்கு வழங்கப்படும் என்ற அளவுக்கு ஜஹானாராவின் கண்காணிப்பு இருந்தது".
ஷாஜகான்- மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்?

"தந்தைக்கும் மகளுக்குமான உறவு குறித்து பரவலாக பேசப்பட்டது. இதுபற்றி ஜாடைமாடையாக பேசிய சில அரசவை அதிகாரிகள், 'தான் நட்ட மரத்தில் விளையும் பழங்களை பறித்து உண்ணும் உரிமை அரசருக்கு உண்டு" என்று கூறியதாக பெர்னியர் கூறுகிறார்.
முகலாய பேரரசர் ஷாஜகான், தனது மூத்த மகள் ஜஹானாராவுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ராணி மும்தாஜ் மஹலின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வந்தது.

உடனே தாயின் அறைக்கு ஓடிச் சென்ற ஜஹானாரா, தாயின் பிரசவம் சிக்கலாக இருக்கிறது; குழந்தை கருப்பையில் இருந்து
Read 74 tweets
8 Aug
பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் ஆகஸ்ட் 12.

பாதவத்தி எத்தனை பேரோட வாழ்ந்து அத்தனை பேரையும் கொன்று சந்தோஷ பட்டவள் .

கிளியோபாட்ராவின் மரணம். பெரிய கிளியோபாட்ராவின் வாழ்க்கை, காதல் மற்றும் இறப்பு.
கிளியோபாட்ரா VII (கிமு 69 - 30) - எகிப்தின் கடைசி ராணி, பண்டைய காலத்தின் மிகவும் பிரபலமான பெண்.ஒரு வேசி ராணி, எகிப்தின் தீய மேதை. நயவஞ்சகமான, கொடூரமான, கோழைத்தனமான மற்றும் நயவஞ்சகமான, மற்றவர்களின் துரதிர்ஷ்டங்களின் மீது அவளது நல்வாழ்வைக் கட்டியெழுப்ப,
இறுதியில் அவள் இறக்க நேரிட்டது, அவளுடைய சொந்த சூழ்ச்சிகளின் வலையமைப்பில் சிக்கிக்கொண்டது.

அறிவார்ந்த மற்றும் படித்த கிளியோபாட்ரா உலகின் மிக புகழ்பெற்ற பெண். அழகான மனிதர்களின் அரிய கலையை கிளியோபாட்ரா தேர்ச்சி பெற்றார், மேலும் வலிமை இன்னும் ஆண்களின் கைகளில் இருந்ததால், எகிப்திய
Read 329 tweets
8 Aug
துக்ளக் பிறந்த கதை!
சம்பவாமி யுகே யுகே’ நாடகம் நடக்கிறது.

நாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.
நாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(