ஆளவந்தாரின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் இலைகள் உதிர்ந்துபோன மொட்டை மரம் ஒன்று இருந்தது.
அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், “இந்த மரத்தை ஏன் இப்படியே வைத்திருக்கிறீர்கள்?”
“அது வீட்டுக்குப் பின்னாடி தானே கிடக்கட்டும்‘னு விட்டுவிட்டோம்.” என்று பதில் சொன்னார் ஆளவந்தார்.
“மொட்டை மரத்தை இப்படி விட்டு வைப்பது கூடாது. அது நல்லதல்ல.
மேலும் அந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டிய பிறகும் நீங்கள் உபயோகிக்கக் கூடாது.
ஏதாவது மோசமான சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடியே அந்த மரத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெளியே வீசி விடுங்கள்" என்றான் பக்கத்து வீட்டுக்காரன்.
அவன் யோசனைப்படியே, ஆளவந்தாரும் மறுநாள் மரத்தை வெட்டித் தள்ளினார். சிறு துண்டுகளாக்கி வெளியே தூக்கிப் போட்டார்.
அந்த மரத் துண்டுகள் வெளியே வந்து விழுந்த சமயத்தில், பக்கத்து வீட்டுக்காரன் தன் இரு மகன்களுடன் சிறு துண்டு துண்டுகளாக கிடந்த அந்த மரத்துண்டுகளை உடனே எடுத்துப் போனான்.
தன் வீட்டில் அடுப்பு எரிக்க.
அதைப் பார்த்து தண்ணீர் விட்டு மரம் வளர்த்த ஆளவந்தார் முழித்தார்.
“மரத்தை வெட்டியதால் எனக்கு நல்லது எதுவும் நடக்கவில்லை. ஆனால் மரத்தை வெட்டச் சொன்ன பக்கத்து வீட்டுக்காரனுக்குத்தான் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது” என்று முணுமுணுத்தார் தன்னை அறியாமல்.
யார் எதைச் சொன்னாலும் உடனே நம்பிவிடக் கூடாது.
ஏன், எதுக்குனு யோசிக்கணும்.?
மொட்டை மரம் இருந்தால் இவருக்கு துரதிர்ஷ்டம். வெட்டிப் போட்டால் அவனுக்கு அதிர்ஷ்டம் என்று தெரியாமல் ஆளவந்தார் அவனிடம் ஏமாந்ததை என்னவென்று சொல்வது.?
"ஏமாறுவது என்பது வேறு.
தெரிந்தே ஏமாறுவது என்பது வேறு."
மேலே நாம் கண்ட கதை இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
"பக்கத்து வீட்டுக்காரன், தானாக முன்வந்து ஒரு ஆலோசனையை சொல்லும்போதே ஆளவந்தார் உஷார் ஆகியிருந்தால், இப்படி பிற்பாடு வருந்தும் நிலை அவருக்கு வந்திருக்காது.?"
"எப்போதோ கேட்ட கதையை இங்குப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.!"
நீதி: "நம்முடைய பல பிரச்சனைகளுக்கு பலரிடம் ஆலோசனைகளை கேட்கலாம். அதில் தவறு இல்லை.
ஆனால் அந்தப் பிரச்சனைகளுக்கு
நம்முடைய இறுதி முடிவு என்பது நமக்கு வந்த ஆலோசனைகளின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்ததாக இருந்தால் நல்லது.!"
ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள்.
உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டு பிடிக்கிறீர்கள்.
அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்கு அந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞர் ஒருவரையே அழைக்கிறீர்கள்.
அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட.
நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டு பிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள்.
சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டு பிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்கிறார்.
பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்.
உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.?
உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்.?
அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா.?
உருசியா நாட்டை சேர்ந்தவர் நிஸ்னி நவ்கிரோட் என்கிற கிராமத்தில் 1868 மார்ச் 28ந்தேதி பிறந்தார் மாக்சிம் கார்க்கி.
அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் தான் இவரது இயற்பெயர்.
5 வயதில் இவர் தந்தை இறந்து போக, தாய் உயிருடன் இருந்த போதும் தாயன்பு கிடைக்காமல் பாட்டி அக்குலினாவிடம் வளர்ந்தார்.
குடும்பத்தில் வறுமை.
விளைவு, பள்ளிக்கு போவதை 7 வயதிலேயே நிறுத்தி விட்டார்.
8 வயதிலேயே வேலைக்கு சென்றார். அங்கு பல தரப்பினரோடு பழகினார், அதோடு கொஞ்சம் படித்து வைக்கலாம் என தனிப்பட்ட முறையில் படிக்கத் துவங்கினார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி மொழிகளை கற்றுக் கொண்டார்.
1892ல் இவர் முதல் சிறுகதை மகர் சுத்ரா என்கிற தலைப்பில் மாக்சிம் கார்க்கி என்கிற பெயரில் எழுதினார்.
அது வெளி வந்தபின் தொடர்ந்து அந்த பெயரிலேயே எழுதத் துவங்கினார்.
1899ல் இவரது முதல் நாவல் வெளிவந்தது. ரஷ்யாவின் ஜார் மன்னராட்சியை எதிர்த்து புரட்சிக்கர கட்டுரைகளை எழுதி வந்தார்.