தமிழ்நாடு அரசின் சார்பாக வங்கி ஆரம்பிப்பதை கொண்டாடுகிறீர்களே? அதனால் என்ன பலன் என்று நண்பர்கள் கேட்கிறார்கள்.
அவற்றை விரிவாக பார்ப்போம்:
1) எந்த ஒரு வங்கியிலும் பொதுமக்கள் சேமிப்பு பணம் பல்லாயிரம் கோடி இருக்கும்.
இன்றைய நிலையில் தமிழர்கள் சேமிப்பும் பல்லாயிரம் கோடிகள் இருக்கும்.
இந்தச் சேமிப்பு பணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் இருக்குன்றன.
அந்தப் பணம் வட இந்திய பெருமுதலாளிகளின் தொழிலுக்கு கடனாக கொடுக்கப்படுகின்றன.
உதாரணமாக ஆஸ்த்ரேலியாவில் சுரங்க்த்தொழில் செய்ய அதானிக்கு ஆறாயிரம் கோடி கடனை SBI வங்கி வழங்கியது தெரிந்திருக்கும்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களின் பல நூறுகோடி சேமிப்பு பணம் SBI வங்கியில் இருக்கும்.
ஆனால் அவை முதலீடாக தமிழ்நாட்டிலேயே வருமா என்றால் அது கேள்விக்குறிதான்.
அவை பெரும்பாலும் வட இந்திய பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டு அவற்றில் பல நூறு கோடிகள் வாராக்கடன்களாக இருக்கின்றது.
தமிழர்களின் சேமிப்பு தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யப்படும்போது "நம் மாநிலத்தின் வளர்ச்சி" இன்னும் அதிகரிக்கும்.
2) வங்கியின் மேலாளரும் காசாளரும் வட இந்தியாவில் இருந்து இங்கு வந்து, நம்மிடம் இனி இந்தியில் திமிராக, ஆணவமாக, பேச வேண்டிய தேவை இதன் மூலம் இனி இருக்காது.
3) வங்கியின் படிவங்கள் தமிழிலேயே இனி இருக்கும். இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என்று இறுமாப்பாக யாரும் சொல்ல முடியாது.
4) வேலைவாய்ப்பில் 69 % இட ஒதுக்கீடு இதன் மூலம் நம் வங்கிகளில் பின்பற்றப்படும். இந்தியாவில் வேறு எந்த வங்கியிலும் இந்த அளவிற்கு இட ஒதுக்கீடு இல்லை.
5) அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களைச் சென்றடைய இந்த நம் வங்கியை பயன்படுத்த முடியும்.
6) நிதியமைச்சர் பலமுறை சொன்னது போல நம்மிடம் தகவல்கள் இல்லை.
ஒரு வங்கியின் மூலம் அரசுக்கு கிடைக்கப்போகும் தகவல்கள் ஏராளம். ஒவ்வொரு பகுதியின் வளரச்சியைக்கூட இதனால் நாம் கணக்கிட முடியும்.
7) அரசின் இன்னொரு நிதியாதாரமாக நம் வங்கி இருக்கும்.
8) எதிர்காலத்தில் வட இந்திய வங்கிகள் திவாலாகும் என்று வைத்துக்கொள்வோம்.
அட்லீஸ்ட் அப்படி ஒரு நிலை வரும் என்று நாம் எதிர்காலத்தை உத்தேசித்தாலும் கூட,
குறைந்த பட்சம் நம் தமிழ் மக்களின் பணமாவது நம் வங்கியில் பாதுகாப்பாக இருக்கும்.
9) வெளிநாடு வாழ் தமிழர்கள் தாராளமாக தங்களது சேமிப்பிற்காக இந்த வங்கியை நம்பிக்கையுடன் இனி பயன்படுத்துவார்கள்.
10) உலகின் பொருளாதார வளர்ச்சி வங்கிகளுக்கு பிறகுதான் பலமடங்கு வளர ஆரம்பித்தது.
அதுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மூலதனத்தை இந்த உலகத்திற்குக் கொடுத்தது.
ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான ஒரு வங்கியை உருவாக்குவது அவசியம் மட்டுமல்ல அது காலத்தின் கட்டாயமும் கூட.
அறிஞர் #அண்ணா வின் மாபெரும் கனவின் முதல் படி இந்த முயற்சி என்று கூட பெருமையாக நாம் சொல்லலாம்.
ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள்.
உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டு பிடிக்கிறீர்கள்.
அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்கு அந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞர் ஒருவரையே அழைக்கிறீர்கள்.
அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட.
நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டு பிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள்.
சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டு பிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்கிறார்.
பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்.
உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.?
உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்.?
அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா.?
உருசியா நாட்டை சேர்ந்தவர் நிஸ்னி நவ்கிரோட் என்கிற கிராமத்தில் 1868 மார்ச் 28ந்தேதி பிறந்தார் மாக்சிம் கார்க்கி.
அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் தான் இவரது இயற்பெயர்.
5 வயதில் இவர் தந்தை இறந்து போக, தாய் உயிருடன் இருந்த போதும் தாயன்பு கிடைக்காமல் பாட்டி அக்குலினாவிடம் வளர்ந்தார்.
குடும்பத்தில் வறுமை.
விளைவு, பள்ளிக்கு போவதை 7 வயதிலேயே நிறுத்தி விட்டார்.
8 வயதிலேயே வேலைக்கு சென்றார். அங்கு பல தரப்பினரோடு பழகினார், அதோடு கொஞ்சம் படித்து வைக்கலாம் என தனிப்பட்ட முறையில் படிக்கத் துவங்கினார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி மொழிகளை கற்றுக் கொண்டார்.
1892ல் இவர் முதல் சிறுகதை மகர் சுத்ரா என்கிற தலைப்பில் மாக்சிம் கார்க்கி என்கிற பெயரில் எழுதினார்.
அது வெளி வந்தபின் தொடர்ந்து அந்த பெயரிலேயே எழுதத் துவங்கினார்.
1899ல் இவரது முதல் நாவல் வெளிவந்தது. ரஷ்யாவின் ஜார் மன்னராட்சியை எதிர்த்து புரட்சிக்கர கட்டுரைகளை எழுதி வந்தார்.
ஆளவந்தாரின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் இலைகள் உதிர்ந்துபோன மொட்டை மரம் ஒன்று இருந்தது.
அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், “இந்த மரத்தை ஏன் இப்படியே வைத்திருக்கிறீர்கள்?”
“அது வீட்டுக்குப் பின்னாடி தானே கிடக்கட்டும்‘னு விட்டுவிட்டோம்.” என்று பதில் சொன்னார் ஆளவந்தார்.
“மொட்டை மரத்தை இப்படி விட்டு வைப்பது கூடாது. அது நல்லதல்ல.
மேலும் அந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டிய பிறகும் நீங்கள் உபயோகிக்கக் கூடாது.
ஏதாவது மோசமான சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடியே அந்த மரத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெளியே வீசி விடுங்கள்" என்றான் பக்கத்து வீட்டுக்காரன்.
அவன் யோசனைப்படியே, ஆளவந்தாரும் மறுநாள் மரத்தை வெட்டித் தள்ளினார். சிறு துண்டுகளாக்கி வெளியே தூக்கிப் போட்டார்.
அந்த மரத் துண்டுகள் வெளியே வந்து விழுந்த சமயத்தில், பக்கத்து வீட்டுக்காரன் தன் இரு மகன்களுடன் சிறு துண்டு துண்டுகளாக கிடந்த அந்த மரத்துண்டுகளை உடனே எடுத்துப் போனான்.