உருசியா நாட்டை சேர்ந்தவர் நிஸ்னி நவ்கிரோட் என்கிற கிராமத்தில் 1868 மார்ச் 28ந்தேதி பிறந்தார் மாக்சிம் கார்க்கி.
அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் தான் இவரது இயற்பெயர்.
5 வயதில் இவர் தந்தை இறந்து போக, தாய் உயிருடன் இருந்த போதும் தாயன்பு கிடைக்காமல் பாட்டி அக்குலினாவிடம் வளர்ந்தார்.
குடும்பத்தில் வறுமை.
விளைவு, பள்ளிக்கு போவதை 7 வயதிலேயே நிறுத்தி விட்டார்.
8 வயதிலேயே வேலைக்கு சென்றார். அங்கு பல தரப்பினரோடு பழகினார், அதோடு கொஞ்சம் படித்து வைக்கலாம் என தனிப்பட்ட முறையில் படிக்கத் துவங்கினார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி மொழிகளை கற்றுக் கொண்டார்.
1892ல் இவர் முதல் சிறுகதை மகர் சுத்ரா என்கிற தலைப்பில் மாக்சிம் கார்க்கி என்கிற பெயரில் எழுதினார்.
அது வெளி வந்தபின் தொடர்ந்து அந்த பெயரிலேயே எழுதத் துவங்கினார்.
1899ல் இவரது முதல் நாவல் வெளிவந்தது. ரஷ்யாவின் ஜார் மன்னராட்சியை எதிர்த்து புரட்சிக்கர கட்டுரைகளை எழுதி வந்தார்.
இவரது எழுத்துக்கள் அனைத்தும் பாமர மக்களை அரசாங்கத்தை நோக்கிக் கேள்வி கேட்பது போலவே இருக்கும்.
இதனால் இவரது எழுத்துக்கள் தணிக்கைக்கு உள்ளாகின.
அதோடு கார்க்கி எழுதிய நாடகங்கள், புதினங்கள், கதைகள் வெளிவரும் போது எல்லாம் கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுவது வாடிக்கையானது.
1906ல் மதர் என்கிற பெயரில் இவரது நாவல் வெளி வந்தது.
அதன் கதை, ரஷ்யாவின் ஜார் மன்னராட்சிக்கும், அதை எதிர்க்கும் ஒரு புரட்சியாள இளைஞனுக்குமான போராட்டத்தில் அந்த இளைஞனின் தாயின் பங்கு பற்றி குறிப்பிடுவதே தாய் நாவலின் மையம்.
ஆட்சியை எதிர்த்து போராடும் மகனை நினைத்து அழுகிறாள் தாய்.
அவனை தடுக்கிறாள். அந்த மகன் அதை மீறி நாடே முக்கியம் என புரட்சிக் கருத்துக்களைத் தொழிலாளர்கள் மத்தியில் பேசுகிறான்.
அவனது கருத்துக்களை படிப்படியாக உள்வாங்கும் அந்த புரட்சிக்கர இளைஞனின் தாய், மகனின் போராட்டத்துக்கு படிப்படியாக உதவி அவளும் ஓரு புரட்சிவாதியாக மாறியதே அந்த நாவல்.
இது ரஷ்யாவில் எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் உலகம் முழுக்கவே இந்த நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நாவலே உலக அளவில் கார்க்கியை பிரபலமடைய வைத்தது.
மாமேதை லெனினோடு சேர்ந்து ரஷ்ய புரட்சிக்கு நிதி திரட்ட உலகின் பல நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டினார் இவர்.
அதோடு, இவர் சம்பாதித்ததை நன்கொடையாக ரஷ்ய புரட்சிக்கர தொழிலாளர் இயக்கத்துக்கு வழங்கினார். புரட்சி வெற்றி பெற்ற போது ஆனந்தம் அடைந்தார்.
தனது கருத்தை யாருக்காகவும், எதற்காகவும் வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டார் இவர்.
லெனின் முன்பே அவரது தவறுகளை சுட்டிக்காட்டுவார் இவர் தைரியமாக.
ஆனாலும் அவர்களது நெருங்கிய நட்பு என்றும் உடைந்ததில்லை.
பென்சிலால் மட்டும்மே கார்க்கி தனது எழுத்துக்களை எழுதுவார்.
அதே போல் சிறு வயது முதலே ஒரு குறிப்பேட்டை தன்னுடன் வைத்திருப்பார், தோன்றும் கருத்துக்களை உடனுக்குடன் அதில் குறித்து வைத்துக் கொள்வது அவரது வாடிக்கை.
வறுமையால் சிறு வயதில் கார்க்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று அது தோல்வியில் முடிந்தது. காயத்தோடு பிழைத்தார்.
அதன்பின் வறுமை கொடூரமாக வாட்ட, சுடுகாட்டில் கூட இவர் வேலை பார்த்தாராம்.
இது தான் அவருக்கு எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் மானப்பாங்கை உருவாக்கி தந்தது.
தான் வளர்ந்து சமூகத்தில் ஒரு இடத்தை அடைந்த பின்பும் கூட, சாலையோரம் உள்ள அனாதை பிள்ளைகளை தன் வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு உணவு வழங்குவது, கிருஸ்துமஸ் உட்பட திருவிழா நாட்களில் அவர்களுக்கு புத்தாடை மற்றும் தேவையான பொருள்களை வாங்கி தருவது போன்றவற்றை செய்து தருவாராம்.
அதோடு, வெளியே செல்லும் போது தனது கோட் பாக்கெட்டில் சாக்லெட் உட்பட இனிப்புகளை எடுத்துச் செல்வார்.
வழியில் தென்படும் அனாதை சிறுவர்களுக்கு அதை வழங்கி அவர்கள் மகிழ்வோடு உண்பதை காண்டு விட்டுச் செல்வாராம்.
தான் அநாதையாக சாலையில் திரிந்த போது தனக்கு ஏற்பட்ட நிலையை அவர் மறந்தது இல்லை.
தனக்கு அப்போது கிடைக்காததை தற்போது தன்னால் முடிந்த அளவுக்கு அதே நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அப்போதே வழங்கி வந்தாராம்.
இவர் மனைவி பெஷ்கோவா. இந்த தம்பதியரன் மகன் தான் இலக்கியத்தில் கார்க்கிக்கு எல்லாமுமாக இருந்தார்.
மகன் பல மொழி அறிந்திருந்தது இவருக்கு உறுதுணையாக இருந்தது.
அவர் மொழி இலக்கியத்தை, கதைகளை, கட்டுரைகளை மொழி பெயர்த்து தந்தைக்கு சொல்ல அவர் அதை உள்வாக்கிக் கொண்டார்.
அந்த மகன் இளம் வயதிலேயே இறந்தது கார்க்கிக்கு பெரும் துயரத்தை வழங்கியது என்று சொல்லலாம்.
1936 ஜீன் 16ந்தேதி கார்க்கி இந்த உலகத்தை விட்டு மறைந்தார். ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவர் எழுதி வைத்திருந்த கவிதைகள் அவர் இறந்த பின்பே புத்தகமாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
படித்ததில் வியந்த ஒரு "அசாதரணமானவரைப்" பற்றி இங்கு உங்கள் அனைவருக்கும் பகிர்வதில் மகிழ்ச்சி.!
நம்மிடையே வாழ்ந்து மறைந்த பல அசாதாரணமானவர்களை பற்றிய தேடலின் சிறு முயற்சியே இது.!
"பிறக்கும் போது சாதாரணமாகவே எல்லோர் பிறப்பும் அமைகிறது.
அதன் பிறகு அவர்களில் சிலர் அசாதரணமானவர்களாக மாறுவது அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் மட்டுமே.
அவர்களேயே வரலாறு தன் கையால் ஏந்திக்கொள்கிறது என்றால் அது நிச்சயம் மிகையாகாது!"
அந்தத் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான் தோன்றுகிறது அவருக்கு தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று.
'வாழ்க்கையில் அவ்வளவு இலகுவாக யாருக்கும் கிடைத்து விடாத பெரும் வாய்ப்பு தங்கத்தட்டில் வைத்துத் தனக்குத் தரப்பட இருக்கையில் அதைத் தானே தட்டிப் பறித்துத் தள்ளி விட்டு விட்டோமோ?'
லேசாக உறுத்தத் தொடங்குகிறது அவருக்கு.
மீண்டும் தொலைபேசியில் அழைத்துத் தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்றொரு குழப்பம்.
விசயம் வேறு ஒன்றுமில்லை. இதுதான்.
சட்டப்படிப்பை முறையாக முடித்து விட்ட அவருக்கு திங்கட்கிழமை காலையில் 'வைவா' தேர்வு நடைபெற இருக்கிறது.
அந்தத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கும்போதுதான் ஞாயிறு காலையில் - அதாவது தேர்வுக்கு முந்தைய நாளில் - அந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.
"நாளைக் காலை சென்னையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது" என்பதே அதன் சாரம்.
ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள்.
உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டு பிடிக்கிறீர்கள்.
அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்கு அந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞர் ஒருவரையே அழைக்கிறீர்கள்.
அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட.
நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டு பிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள்.
சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டு பிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்கிறார்.
பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்.
உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.?
உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்.?
அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா.?
ஆளவந்தாரின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் இலைகள் உதிர்ந்துபோன மொட்டை மரம் ஒன்று இருந்தது.
அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், “இந்த மரத்தை ஏன் இப்படியே வைத்திருக்கிறீர்கள்?”
“அது வீட்டுக்குப் பின்னாடி தானே கிடக்கட்டும்‘னு விட்டுவிட்டோம்.” என்று பதில் சொன்னார் ஆளவந்தார்.
“மொட்டை மரத்தை இப்படி விட்டு வைப்பது கூடாது. அது நல்லதல்ல.
மேலும் அந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டிய பிறகும் நீங்கள் உபயோகிக்கக் கூடாது.
ஏதாவது மோசமான சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடியே அந்த மரத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெளியே வீசி விடுங்கள்" என்றான் பக்கத்து வீட்டுக்காரன்.
அவன் யோசனைப்படியே, ஆளவந்தாரும் மறுநாள் மரத்தை வெட்டித் தள்ளினார். சிறு துண்டுகளாக்கி வெளியே தூக்கிப் போட்டார்.
அந்த மரத் துண்டுகள் வெளியே வந்து விழுந்த சமயத்தில், பக்கத்து வீட்டுக்காரன் தன் இரு மகன்களுடன் சிறு துண்டு துண்டுகளாக கிடந்த அந்த மரத்துண்டுகளை உடனே எடுத்துப் போனான்.