ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள்.
உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டு பிடிக்கிறீர்கள்.
அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்கு அந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞர் ஒருவரையே அழைக்கிறீர்கள்.
அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட.
நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டு பிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள்.
சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டு பிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்கிறார்.
பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்.
உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.?
உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்.?
அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா.?
இப்படி ஒருவர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது.
அவர் சந்திரசேகர் என்ற வானியல் விஞ்ஞானி.
அவர் உலகப்புகழ் பெற்ற வானியல் அறிஞர் ஆர்தர் எட்டிங்டன் என்பவரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு நட்சத்திரங்களை தன் 24ம் வயதிற்கு முன்பு இருந்தே அது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தார்.
நீண்ட ஆராய்ச்சிக்கு பின் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட முடிவு செய்தார்.
அவர் ஆர்தர் எட்டிங்டனுக்கும், மற்ற வானியல் அறிஞர்களுக்கும், அறிவியல் பத்திரிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் முன்னிலையில் தன் கண்டுபிடிப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டார். அதன் விளைவே மேலே பார்த்தது
ஆனால் யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டு அவர் அந்தத்துறையில் ஆராய்ச்சி நடத்தினாரோ, அந்த எட்டிங்டனே இவருடைய நட்சத்திர ஆராய்ச்சியின் முடிவுகளை முட்டாள்தனம் என்று வர்ணித்தார்.
இவர் கூறியது போல நட்சத்திரங்கள் இயங்குவதில்லை என்று கூறிய அவர் அதற்கான விளக்கங்களையும் அளித்தார்.
அந்தத் துறையில் ஒரு மேதையான அவரே அப்படிக் கூறியதால், சந்திரசேகர் கருத்துக்களில் உடன்பாடு இருந்த மற்ற அறிஞர்கள் அங்கு வாயையே திறக்கவில்லை.
சந்திரசேகர் பின்னாளில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த போது கூறினார். "அவர் என்னை அந்தக் கூட்டத்தில் முட்டாளாக்கி விட்டார்.
எனக்கு அது ஒரு பெரிய தலைகுனிவாக இருந்தது.
அந்தத் துறையில் ஆராய்ச்சிகளை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது பற்றி கூட அப்போது யோசித்தேன்."
இந்த விஷயத்தில் தான் தோல்வியாளர்கள் முக்கியமாக வித்தியாசப்படுகிறார்கள்.
இவர்கள் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு பின் வாங்கி விடுகிறார்கள்.
பின் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.
அமெரிக்க இந்தியரான சந்திரசேகரும் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து விரைவாகவே மீண்டு தன் ஆராய்ச்சிகளை அந்தத் துறையில் தொடர்ந்தார்.
சந்திரசேகருடைய எந்தக் கண்டு பிடிப்புகளை எட்டிங்டன் முட்டாள்தனம் என்று வர்ணித்தாரோ, பின்பு நடந்தது டிவீஸ்ட்
அதற்கு 48 வருடங்கள் கழித்து 1983 ல் நோபல் பரிசு கிடைத்தது.
வானியல் துறையில் ஒரு வரையறைக்கு "Chandrasekhar's Limit" என்ற பெயர் சூட்டப்பட்டது.
அவர் ஒரு வேளை பின் வாங்கியிருந்தால், தன் கண்டு பிடிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி விரக்தியுடன் அந்தத் துறையிலிருந்து விலகியிருந்தால்.?
என்னவாயிருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
எத்தனை பெரிய அறிஞரானாலும் சரி அவருடைய கருத்து எல்லா சமயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
இது நம் ஒவ்வொருவருக்கும் பாடம்.
அவர் விஸ்கான்சின் நகரில் உள்ள யெர்க்ஸ் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வந்தார்.
அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறையைக் கற்பிக்கும் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிந்தார்.
வாரம் 2 நாள் வகுப்பு. கடும் குளிரையும் பொருட்படுத்தாது, விஸ்கான்சினிலிருந்து 80 கி.மீ தனது காரில் பயணம் செய்து பாடம் நடத்தினார். ஒரு நாள் கூட அவர் விடுப்பு எடுத்தது இல்லை.
விடாமல் உற்சாகமாகச் சென்று அவர் பாடம் நடத்தியது எத்தனை பேருக்குத்தெரியுமா? வகுப்பறையில் இருந்த 2 பேருக்கே!
அவருடைய முயற்சியின் பல என்ன தெரியுமா?
Chen Ning Yang, Tsaung-Dao Lee என்ற அந்த 2 மாணவர்களும் கூட பின்னாளில் நோபல் பரிசு பெற்று அவருடைய முயற்சிக்குப் பெருமை சேர்த்தார்கள்.
படித்ததில் வியந்த நம்மவர் ஒருவரைப் பற்றி இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி.!
நீதி: "தோல்வியும் மனத்தளர்வும் எல்லோருக்கும் சகஜம் என்றாலும் வெற்றியாளர்களுடைய சோர்வும், மனத்தளர்வும் மிகக்குறுகிய காலமே அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் மிக வேகமாக அதிலிருந்து மீண்டும் விடுகிறார்கள்.?"
அந்தத் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான் தோன்றுகிறது அவருக்கு தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று.
'வாழ்க்கையில் அவ்வளவு இலகுவாக யாருக்கும் கிடைத்து விடாத பெரும் வாய்ப்பு தங்கத்தட்டில் வைத்துத் தனக்குத் தரப்பட இருக்கையில் அதைத் தானே தட்டிப் பறித்துத் தள்ளி விட்டு விட்டோமோ?'
லேசாக உறுத்தத் தொடங்குகிறது அவருக்கு.
மீண்டும் தொலைபேசியில் அழைத்துத் தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்றொரு குழப்பம்.
விசயம் வேறு ஒன்றுமில்லை. இதுதான்.
சட்டப்படிப்பை முறையாக முடித்து விட்ட அவருக்கு திங்கட்கிழமை காலையில் 'வைவா' தேர்வு நடைபெற இருக்கிறது.
அந்தத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கும்போதுதான் ஞாயிறு காலையில் - அதாவது தேர்வுக்கு முந்தைய நாளில் - அந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.
"நாளைக் காலை சென்னையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது" என்பதே அதன் சாரம்.
உருசியா நாட்டை சேர்ந்தவர் நிஸ்னி நவ்கிரோட் என்கிற கிராமத்தில் 1868 மார்ச் 28ந்தேதி பிறந்தார் மாக்சிம் கார்க்கி.
அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் தான் இவரது இயற்பெயர்.
5 வயதில் இவர் தந்தை இறந்து போக, தாய் உயிருடன் இருந்த போதும் தாயன்பு கிடைக்காமல் பாட்டி அக்குலினாவிடம் வளர்ந்தார்.
குடும்பத்தில் வறுமை.
விளைவு, பள்ளிக்கு போவதை 7 வயதிலேயே நிறுத்தி விட்டார்.
8 வயதிலேயே வேலைக்கு சென்றார். அங்கு பல தரப்பினரோடு பழகினார், அதோடு கொஞ்சம் படித்து வைக்கலாம் என தனிப்பட்ட முறையில் படிக்கத் துவங்கினார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி மொழிகளை கற்றுக் கொண்டார்.
1892ல் இவர் முதல் சிறுகதை மகர் சுத்ரா என்கிற தலைப்பில் மாக்சிம் கார்க்கி என்கிற பெயரில் எழுதினார்.
அது வெளி வந்தபின் தொடர்ந்து அந்த பெயரிலேயே எழுதத் துவங்கினார்.
1899ல் இவரது முதல் நாவல் வெளிவந்தது. ரஷ்யாவின் ஜார் மன்னராட்சியை எதிர்த்து புரட்சிக்கர கட்டுரைகளை எழுதி வந்தார்.
ஆளவந்தாரின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் இலைகள் உதிர்ந்துபோன மொட்டை மரம் ஒன்று இருந்தது.
அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், “இந்த மரத்தை ஏன் இப்படியே வைத்திருக்கிறீர்கள்?”
“அது வீட்டுக்குப் பின்னாடி தானே கிடக்கட்டும்‘னு விட்டுவிட்டோம்.” என்று பதில் சொன்னார் ஆளவந்தார்.
“மொட்டை மரத்தை இப்படி விட்டு வைப்பது கூடாது. அது நல்லதல்ல.
மேலும் அந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டிய பிறகும் நீங்கள் உபயோகிக்கக் கூடாது.
ஏதாவது மோசமான சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடியே அந்த மரத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெளியே வீசி விடுங்கள்" என்றான் பக்கத்து வீட்டுக்காரன்.
அவன் யோசனைப்படியே, ஆளவந்தாரும் மறுநாள் மரத்தை வெட்டித் தள்ளினார். சிறு துண்டுகளாக்கி வெளியே தூக்கிப் போட்டார்.
அந்த மரத் துண்டுகள் வெளியே வந்து விழுந்த சமயத்தில், பக்கத்து வீட்டுக்காரன் தன் இரு மகன்களுடன் சிறு துண்டு துண்டுகளாக கிடந்த அந்த மரத்துண்டுகளை உடனே எடுத்துப் போனான்.