இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி 2004யில் எழுதப்பட்டு பின் படமாக 2017இல் வெளியான தரமான ஒரு money heist திரில்லர் படம். Attila வறுமையின் பிடியில் இருக்கும் வாலிபன். ஒரு விளையாட்டு அகாடமில கோல் டென்டர் ah வேலை பார்த்துட்டு இருக்கிறான். அவனுக்கும் மற்றவர்கள் போல் செலவு செய்து சந்தோசமா
வாழ ஆசை.அதனால் திருட ஆரம்பிக்கிறான். திருட செல்லும்முன் பயமில்லாமல் செயல்பட whisky குடித்துவிட்டு செல்கிறான். அதனால் திருடிவிட்டு செல்லும் இடங்களில் அந்த மதுவின் வாசனை அதிகமாக இருக்கிறது. இதனால் whisky திருடன் என அழைக்கப்படுகிறான்.அவன் தேவைக்காக திருட்டை ஆரம்பித்தவன். இப்போது
திருடும் போது கிடைக்கும் கிளர்ச்சிக்காக திருட தொடங்குகிறான்.1993 முதல் 1999வரை 29 கொள்ளை சம்பவங்கள் எங்கும் உயிர் சேதமில்லாத வெற்றிகரமான திருட்டு சம்பவங்கள்🔥🔥.காவல் துறையால் கண்டுபிடிக்கமுடியா சூழ்நிலையில் அவன் கூட்டாளி காவல்துறையில் சிக்கியதால் சிக்குகிறான்.இருப்பினும் அதில்
இருந்து எப்படி தப்புகிறான்? மீண்டும் சிக்கினானா? இவனை பிடிக்க காவல் அதிகாரி எடுத்த முயற்சி என்ன? இதெல்லாம் படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இப்டிலாம் நடக்குமா என கேள்வி கேட்கிற அளவுக்கு படம் நல்லா இருக்கும். முத்த காட்சிகள் படத்தில் இருக்கு. மற்றபடி படம் செமயா இருக்கும்.. 👍❤❤
#சம்பவம் 2014-ஆம் வருடம்,சென்னையில் ஆபீஸ் மீட்டிங் மாதத்தில் ஒருநாள் கண்டிப்பா இருக்கும்.உடன்குடியில் இருந்து சென்னை சென்று வருவதற்கு அலுவலகமே டிக்கெட் போட்டு தருவதால்,நமக்கும் ஊர் சுற்ற பிடிக்கும் என்பதாலும் சந்தோசமாக சென்னைக்கு சென்று வருவேன்.சனிக்கிழமை மீட்டிங் இருக்கும்.
ஞாயிறு நண்பர்களோடு ஊர் சுற்றிவிட்டு அப்டியே மாலை வேளையில் கோயம்பேட்டில் இருந்து உடன்குடிக்கு பயணத்தை தொடங்கிவிடுவேன். எப்போதும் தனிமைதான். முக்கியமா ஜன்னல் சீட். ஜன்னல் சீட் கிடைக்கலைன்னா அடுத்த bus இப்டியே ஒரு நான்கு மாதங்கள் சென்றது. ஜோடியா எவனாவது வண்டியில் ஏறுனா. கொஞ்சம்
மனசுக்கு கடுப்பாகவே இருக்கும். வழக்கம்போல் மீட்டிங் முடித்து ஊர் சுற்றிவிட்டு பேருந்தில் ஏறினேன். ஜன்னல் சீட் என்பதால் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன்.பேருந்து பெருங்களத்தூரில் நின்றது. நம் பக்கத்துல ஒரு பொண்ணு அமருவாள் அவகிட்ட அப்டியே பேசி நம்பர் வாங்கி கடலை போடணும்ன்னு ரொம்ப
கதை 1935யில் நடக்கிறது. நாயகன் green mile எனும் சிறைச்சாலையில் சிறை அதிகாரியாக பணி செய்கிறான். அவனுடன் இன்னும் சில அதிகாரிகள் பணி செய்கிறார்கள். அவனுக்கு மேல் வார்டனும் உண்டு.சிறையில் நடக்கும் சம்பவங்களை அவருடன் நாயகன் பகிர்ந்துகொள்வான்.இந்த சிறைசாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட
கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருப்பர். அதில் ஒருவன்தான் ஜான் coffey. இரண்டு பெண் பிள்ளைகளை கொடூரமான முறையில் கொன்ற காரணத்திற்காய் மரண தண்டனை பெற்றவன். இவனுடன்.. ஒரு psycho, எலி வளர்க்கும் வயதான கைதி. இன்னும் சிலர். நாயகனுக்கு ஒரு யூரின் செல்கயில் தீவிரமான வலி ஏற்படும். அதனால்
அவன் வேதனையில் துடிப்பான். இதை உணர்ந்த John Coffey அந்த வலியினை நீக்கி நாயகனை குணமாக்குவான்.கிறுக்கு சிறை அதிகாரியால் கொல்லப்படும் எலிக்கு உயிர் கொடுப்பான் ஜான் coffey. முரட்டுதனமா உடல் இருந்தாலும்,மற்றவர்கள் வலி உணர்ந்து அவர்களுக்கு உதவிசெய்து குணமாக்கும் சக்தி,John Coffeyக்கு
ஒரு நல்ல காமெடி திரில்லர் movie பார்க்கணும்னு ஆசைப்படுறவங்க கண்டிப்பா இந்த படம் பார்க்கலாம். நாயகன் காவல்துறை அதிகாரி. கிரிமினல் நண்பனை நம்பி பணத்தை இழந்து வீடு ஏலம் போகும் சூழல். காவல் நிலையத்தில் லஞ்சம் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் டீம் விசாரணைக்கு செல்ல வேண்டிய சூழல்.
வீட்டில் எங்கும் வெளிய கூட்டிட்டு போகலன்னு மனைவியின் புலம்பல்.அதே நேரம் தேடப்படும் குற்றவாளி philipines நாட்டில் இருப்பதாக தகவல். இங்கு காவல்துறை நண்பர்கள் பணம் சேர்த்து நாயகன் குடும்பத்தை philipines நாட்டுக்கு சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.நாயகனின் நண்பன் ஒரு புதையல்
கண்டுபிடித்து அதை பற்றிய தகவலை நாயகனுக்கு அனுப்பிவைக்கிறான்.நாயகன் philipines வந்ததும் அவன் நினைத்ததுக்கு மாறாக நடக்கிறது.இறுதியில் நாயகன் எல்லா பிரச்சனையும் எப்படி சமாளித்து ஜெயித்தான் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்க.முக்கியமா நாயகன் பாதுக்காவலர்கள்😂😂,அப்புறம் நண்பன் 😍😍
நம்ம எல்லாரோட நட்பு வட்டத்துலேயும் ஒருத்தன் இருப்பான்.அவன் நாமாககூட இருக்கலாம்.அவனுக்கு எதுவுமே உருப்படியா தெரியாது.ஆனால் எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பில்டப் பண்ணி காரியத்தை சாதிச்சுருவான். இதே ஏன் இப்ப சொல்றேன்னா இந்த கதையின் நாயகனும் அந்த ரகத்துக்குள்தான் வருவான்.நம்ம Oldboy ஹிரோ
நம்ம ஆளு சுங்கத்துறைல வேலை பார்க்கிறாரு..அப்ப ஒரு கேங்ஸ்டர்கூட பழக்கம் கிடைக்குது.அவரோட பழக்கத்தை வைச்சு அவன்கூட பார்ட்னர் ஆகுறாரு.நாயகனுக்கு யார்கிட்டே அதிகாரம் பண்ணனும்னு தெரியாது.சண்டை போட தெரியாது. கடத்தல் தொழிலைப் பற்றி சுத்தமா தெரியாது.கட்டப் பஞ்சாயத்தும் தெரியாது.ஆனால்
Gangster ah உருவாகுறான்..அது எப்படி?.அதான் கதை.படத்துல நாயகன் ஒரு கைத்துப்பாக்கி வைச்சிருப்பான் தோட்டா இல்லாமல் இருக்கும்.படத்தோட கிளைமேக்ஸ் வரைக்கும் அது அவன்கூடவே இருக்கும்.அது ஏன்னு படம் பார்த்துட்டு சொல்லுங்க.இந்த படத்தை பற்றி காலைலே ஒருத்தர் பதிவிட்டிருந்தார் அவருக்கு நன்றி.