தொகுதிக்குட்பட்டப் பகுதிகளிலிருக்கும் வேளாண் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் நிறைவேற்றப்பட்ட உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப்பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததால் அக்கால்வாய்த்திட்டத்தின் பயன்பாடுகள் விவசாயிகளைச் சென்று சேருவதில்லை எனும் - 2/15
செய்திப் பெருங்கவலையைத் தருகிறது.
‘உசிலம்பட்டி 58 கிராமப்பாசனக்கால்வாய்’ எனும் திட்டமானது கடந்த 1996ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள 30 கண்மாய்கள் மற்றும் 5 கசிவுநீர் குட்டைகளைத் தண்ணீர்த் தேக்கப்பகுதிகளாகக் கொண்டு, வைகை அணையிலிருந்து அவற்றிற்குத் - 3/15
தண்ணீரினைப் பெறும் வகையிலும், 110 கிராமங்களிலுள்ள ஏறத்தாழ 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையிலும் உருவாக்கப்பட்ட இக்கால்வாய்த்திட்டத்தின் மூலம் விளைநிலங்களின் பாசன வசதி நிறைவு செய்யப்படுவதோடு மட்டுமின்றி, அப்பகுதியிலுள்ள மக்களின் குடிநீர்த்தேவையையும் - 4/15
நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஆனால் திட்டமிட்டப்படி கால்வாய் வெட்டி முடிக்கப்படாதக் காரணத்தினால் கடந்த பல ஆண்டுகளாக உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் அத்திட்டத்தின் பயனையடைய முடியாது தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டனர். அம்மக்கள் அரசின் கவனத்தை ஈர்க்கப் பல்வேறு கட்டப்போராட்டங்களையும - 5/15
தொடர்ச்சியான பரப்புரைகளையும் முன்னெடுத்ததன் விளைவாக, கால் நூற்றாண்டு கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கால்வாய் முழுமையாகத் தோண்டி முடிக்கப்பட்டது. இருப்பினும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் சரியான முறையான கட்டப்படாததால் சோதனையோட்டம் என்ற பெயரில் மூன்று முறை தண்ணீர் - 6/15
திறந்துவிடப்பட்டும் கால்வாயிலிருந்து கண்மாய்களுக்குத் தண்ணீர் போய்ச்சேரவில்லை. கால்வாய் கரைகள் முறையாகக் கட்டப்படாது பலமில்லாத வகையில் இருந்ததாலேயே வழியிலேயே உடைப்பெடுத்துக் கண்மாய்களுக்கு உரிய தண்ணீர் சென்று சேரவில்லை என்பது தெரிகிறது. அதனை மீண்டும் சரிபார்த்து - 7/15
கட்டிமுடித்த நிலையிலும் உரியப் பருவக்காலத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டுமெனும் கோரிக்கையை முற்றாகப் புறக்கணித்ததினால் உசிலம்பட்டி 58 கால்வாயைச் சார்ந்திருக்கும் விவசாயிகள் அரசால் பெரும் அல்லலுக்கு ஆட்பட்டனர். மேலும், அணை முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பினால் மட்டுமே - 8/15
உசிலம்பட்டி 58 கிராமப்பாசனக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் எனக்கூறி நீர்வளத்துறை அதிகாரிகள் கைவிரிப்பதால், உழவுப்பணிகளை மேற்கொள்ள முடியாமல் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த வேளாண் பெருங்குடி மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
1958 ஆம் ஆண்டுப் பெருந்தலைவர் காமராசரது - 9/15
ஆட்சிக்காலத்தில் வைகை அணை கட்டப்பட்டப்பிறகு, கடந்த 62 ஆண்டுகளில் 26 முறை மட்டுமே அணை நிரம்பியுள்ளதால், அணை நிரம்பும்போதுதான் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கூறுவது உசிலம்பட்டி விவசாயிகளைத் திட்டமிட்டு ஏமாற்றும் கொடுஞ்செயலாகும். வைகை அணை - 10/15
தனது முழுக்கொள்ளளவை எட்ட வேண்டுமானால் முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத்தவிர வேறு வழியில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால் மட்டும்தான் வைகை அணைக்குத் தேவையான நீர்த்தேவையை நிறைவுசெய்ய முடியும் என்பதே புறச்சூழலாகும் 2012ஆம் - 11/15
ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக்கொண்டு, 142 அடியாக நிலைநிறுத்தப்பட்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதே இச்சிக்கலுக்கான நிரந்தரத்தீர்வாக அமையும் என்பதே உண்மை நிலையாகும். அவ்வாறு உயர்த்தும்பட்சத்தில், தேனி - 12/15
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குத் தேவையான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கும், நீர்த்தேவைக்கும் பயன்படக்கூடியதாக இருக்கும்.
நீர்ப்பிடிப்பை நிறைவு செய்ய வேண்டுமெனவும், உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப்பாசனத்திற்கு உரியப் பருவக்காலத்தில் ஆண்டுதோறும் தண்ணீர் திறக்க ஏதுவாக நிரந்தர அரசாணை வெளியிட வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி - 1/3
18-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது - 2/3
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உன்னையும் என்னையும் போல் அந்த இளம் பிள்ளைகள் வானுயர்ந்த பகழ்மிக்க பல்கழைகழகங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்ல, ஆனால் வானத்தை விடவும் புகழ்மிக்க லட்சியங்களுடன் வாழ்ந்தனர்.
எந்த நடிகனையும் தலைவராக கொண்டாடியதில்லை, ஆனால் உன்னதமான ஒருவனை அவர்கள் தலைவராக கொண்டிருந்தனர். அவர்கள் - 1/4
திரையரங்குகளில் சத்தம் போட்டதில்லை, பதுங்கு குழிகளில் நிசப்தமாய் இருந்தவர்கள். விக்கெட்டுகள் விழுந்துவிட்டதற்க்காக பொறுமியவர்களல்ல, விழும் பிணங்களுக்கிடையே ரவைகளை பொறுக்கிக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் பொறியியல் படித்தவர்களல்ல, ஆனால் மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை - 2/4
தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்.
விடுதலை வேள்விக்கான மூலப் பொருட்களிலிருந்து முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்.
அவர்கள் மாலுமிகள அல்ல கப்பல் ஓட்டினர், அவர்கள் விமானிகளல்ல விமானம் இயக்கினர். அவர்கள் தத்துவம் படித்தவர்கள் அல்ல தத்துவமாகவே வாழ்ந்தவர்கள் - 3/4
அறிவிப்பு : - செப். 11, பாட்டன் பாரதியார், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப்போற்றும் நிகழ்வு - தலைமையகம் (சென்னை) #நாம்_தமிழர்_கட்சி
பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் - 1/3
அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் - 2/3
பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சீமானை வேட்டையாடாமல் விடமாட்டோம் நாங்கள்! சீமான் தான் பிரச்சனை, தமிழ் பேசும் தெலுங்கர்கள் நாங்கள் வேட்டையர்கள்...
அண்ணன் சீமானை பகிரங்கமாக மிரட்டும் திராவிடம் என்ற போர்வைக்குள் 50 ஆண்டுகளாக நாங்கள் தமிழர்கள் என்று சொல்லி கொண்டிருந்த திருடர்கள் தற்போது - 1/5
தங்கள் உண்மையான கொடூர முகத்தை காட்டி மிரட்டுகிறார்கள் அவர் யார் என்று தெரியாமல்...
32 நாடுகள் ஒன்று சேர்ந்து படையெடுத்து வந்த போதும் எதிர்த்து நின்ற புறநானூற்று மாவீரன் மே.தகு.வே.பிரபாகரனின் தம்பிடா சீமான் - 2/5
சிங்கள அரசு போரில் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த வேலையில் அஞ்சாமல் சென்று தாய்ப் புலியை சந்தித்து அவரிடம் ஆயுதப் பயிற்சியும் கற்று வந்த மானமறத் தமிழன்டா #செந்தமிழன்_சீமான் - 3/5
உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவரம்மா அவர்கள் உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரம்மா அவர்கள் மாவட்ட வனத்துறை வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் எனதன்பான வேண்டுகோளுடன் கூடிய வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு அரசு அண்ணாபண்ணை மற்றும் தோட்டக்கலைதுறை க்கு சொந்தமான பகுதிகளிலும் தைலமரக்காடுகள் உள்ள புல்வயல் ஊராட்சி பகுதிகளிலும் "மான்கள்" நிறைய நடமாடி வருகிறது கூட்டமாக வாழ்ந்துவரும் மான்களை அப்பகுதி மக்கள் அனைவரும் கண்டு வருகின்றனர் - 2/4
இந்நிலையில் மான்களை வேட்டையாடும் நோக்கில் சில சமூகவிரோதிகள் இரவுபகலென்று பாராமல் குறிப்பாக இரவு நேரங்களில் முகக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் துப்பாக்கிகளுடன் இப்பகுதிகளில் சுற்றி பதுங்கி மான்களை சுட்டு வேட்டையாட வருகின்றனர்.