திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி - 1/15
பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில் நிரூபன், முகுந்தன் ஆகிய இருவரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வரும் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப்போனேன். தமிழர்களின் தாய்நிலமான தமிழகத்திலேயே தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்களுக்கு - 2/15
நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் பெரும் மனவேதனையைத் தருகிறது. ஈழத்தமிழர் எனும் ஒற்றைக்காரணத்துக்காகவே அவர்களைச் சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, அவர்களது சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மறுத்து, மனித உரிமை மீறலை அரங்கேற்றி வரும் ஆளும் அரசதிகாரத்தின் - 3/15
தொடர் செயல்பாடுகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது.
திருச்சி மத்தியச்சிறை வளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்கள் 78 பேரும் தங்களை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து, பல்வேறு வடிவங்களில் அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது - 4/15
பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டவும், அரசின் செவியைத் திறக்கவுமென, கடந்த 10 நாட்களாகப் பட்டினிப்போராட்டம் செய்து வரும் அவர்களை அரசு கண்டுகொள்ள மறுக்கவே வேறு வழியற்ற நிலையில் தூக்க மாத்திரை உட்கொண்டும், கத்தியால் உடலில் அறுத்துக்கொண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் - 5/15
மனவலியைத் தருகிறது. தமிழ்நாட்டிலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடுமைகளும், அதற்கு எதுவும் செய்யவியலாத சூழலில் நிறுத்தியிருக்கும் அதிகாரமற்ற கையறு நிலையும் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளி, ஆற்றாமையையும், பெருஞ்சினத்தையும் வரவழைக்கிறது.
இலங்கையை ஆளும் சிங்களப்பேரினவாத - 6/15
அரசு நிகழ்த்திய கோர இனப்படுகொலைக்கு ஆட்பட்டு, பன்னெடுங்காலமாக அந்நிலத்தில் கடைப்பிடிக்கப்படும் இனஒதுக்கல் கொள்கையால் பாதிக்கப்பட்டு, நிர்கதியற்ற நிலையில் மறுவாழ்வுக்காகத் தாய்த்தமிழகத்தை நம்பி அடைக்கலம் புகும் ஈழச்சொந்தங்களுக்கு அதிகப்படியான முன்னுரிமை தந்து, கூடுதலான - 7/15
வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழகத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்குமானால் அவற்றை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக்குறிக்கலாம். அதற்கு மாறாக, அவர்களை விலங்குகள் போல அடைத்து வைத்து, வாழவேவிடாது நாளும் துன்புறுத்தி அல்லலுக்கு உள்ளாக்கும் இத்தகைய - 8/15
கொடும் முகாம்களை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக்கூறுவது கேலிக்கூத்தானது. சிறப்பு முகாம் எனும் பெயரில் இயங்கும் இவ்வதைக்கூடங்கள் ஈழச்சொந்தங்களின் அடிப்படை சனநாயக உரிமைகளையே முற்றாக மறுத்து, தினமும் அவர்களைத் துயருக்குள் ஆழ்த்தி பெருங்கொடுமைகளை அரங்கேற்றி வருவதாலேயே அவற்றை - 9/15
மூடக்கோரி, பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்.
ஈழத்தில் போர் முடிவுற்றப் பிறகு, சிங்களப்பேரினவாத அரசால் வன்னியிலுள்ள முள்வேலி முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்ட இழிநிலையே, தமிழகத்திலும் சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் தொடருமென்றால், இது தமிழர் நாடா? இல்லை! - 10/15
சிங்களர் நாடா? என எழும் கேள்விக்கு என்ன பதிலுண்டு? இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக, சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை மூடக்கோரிப் பலகட்டமாகப் போராடியும், கருத்துப்பரப்புரை செய்தும், தேர்தல் மேடைகளில் கோரிக்கையாக வைத்தும் அதனை ஆளுகிற அரசுகள் செய்ய மறுத்து வருவது - 11/15
தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணிச் செயல்படும் திராவிடக்கட்சிகளின் தமிழர் விரோத மனப்பான்மையையே உணர்த்துகிறது. தமிழகத்திற்குள் வாழ தஞ்சம் கேட்டு வரும் ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இன்றைக்கு மாநில அரசின் அதிகார - 12/15
வரம்புக்குட்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களின் கொடியப்பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க மறுத்து இரட்டைவேடமிடுவது வெட்கக்கேடானது.
ஆகவே, இனிமேலாவது இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் இயங்கும் அனைத்து வதைக்கூடங்களையும் உடனடியாக மூடி - 13/15
ஈழச்சொந்தங்களுக்கான நலவாழ்வையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தித் தர நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும், பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் உடல் நலிவுற்றிருக்கும் ஈழச்சொந்தங்களின் உயிரைக்காத்து, உடல்நலம் தேற்ற தகுந்த மருத்துவச்சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்ய - 14/15
வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி - 1/3
18-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது - 2/3
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உன்னையும் என்னையும் போல் அந்த இளம் பிள்ளைகள் வானுயர்ந்த பகழ்மிக்க பல்கழைகழகங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்ல, ஆனால் வானத்தை விடவும் புகழ்மிக்க லட்சியங்களுடன் வாழ்ந்தனர்.
எந்த நடிகனையும் தலைவராக கொண்டாடியதில்லை, ஆனால் உன்னதமான ஒருவனை அவர்கள் தலைவராக கொண்டிருந்தனர். அவர்கள் - 1/4
திரையரங்குகளில் சத்தம் போட்டதில்லை, பதுங்கு குழிகளில் நிசப்தமாய் இருந்தவர்கள். விக்கெட்டுகள் விழுந்துவிட்டதற்க்காக பொறுமியவர்களல்ல, விழும் பிணங்களுக்கிடையே ரவைகளை பொறுக்கிக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் பொறியியல் படித்தவர்களல்ல, ஆனால் மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை - 2/4
தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்.
விடுதலை வேள்விக்கான மூலப் பொருட்களிலிருந்து முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்.
அவர்கள் மாலுமிகள அல்ல கப்பல் ஓட்டினர், அவர்கள் விமானிகளல்ல விமானம் இயக்கினர். அவர்கள் தத்துவம் படித்தவர்கள் அல்ல தத்துவமாகவே வாழ்ந்தவர்கள் - 3/4
அறிவிப்பு : - செப். 11, பாட்டன் பாரதியார், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப்போற்றும் நிகழ்வு - தலைமையகம் (சென்னை) #நாம்_தமிழர்_கட்சி
பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் - 1/3
அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் - 2/3
பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சீமானை வேட்டையாடாமல் விடமாட்டோம் நாங்கள்! சீமான் தான் பிரச்சனை, தமிழ் பேசும் தெலுங்கர்கள் நாங்கள் வேட்டையர்கள்...
அண்ணன் சீமானை பகிரங்கமாக மிரட்டும் திராவிடம் என்ற போர்வைக்குள் 50 ஆண்டுகளாக நாங்கள் தமிழர்கள் என்று சொல்லி கொண்டிருந்த திருடர்கள் தற்போது - 1/5
தங்கள் உண்மையான கொடூர முகத்தை காட்டி மிரட்டுகிறார்கள் அவர் யார் என்று தெரியாமல்...
32 நாடுகள் ஒன்று சேர்ந்து படையெடுத்து வந்த போதும் எதிர்த்து நின்ற புறநானூற்று மாவீரன் மே.தகு.வே.பிரபாகரனின் தம்பிடா சீமான் - 2/5
சிங்கள அரசு போரில் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த வேலையில் அஞ்சாமல் சென்று தாய்ப் புலியை சந்தித்து அவரிடம் ஆயுதப் பயிற்சியும் கற்று வந்த மானமறத் தமிழன்டா #செந்தமிழன்_சீமான் - 3/5
உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவரம்மா அவர்கள் உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரம்மா அவர்கள் மாவட்ட வனத்துறை வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் எனதன்பான வேண்டுகோளுடன் கூடிய வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு அரசு அண்ணாபண்ணை மற்றும் தோட்டக்கலைதுறை க்கு சொந்தமான பகுதிகளிலும் தைலமரக்காடுகள் உள்ள புல்வயல் ஊராட்சி பகுதிகளிலும் "மான்கள்" நிறைய நடமாடி வருகிறது கூட்டமாக வாழ்ந்துவரும் மான்களை அப்பகுதி மக்கள் அனைவரும் கண்டு வருகின்றனர் - 2/4
இந்நிலையில் மான்களை வேட்டையாடும் நோக்கில் சில சமூகவிரோதிகள் இரவுபகலென்று பாராமல் குறிப்பாக இரவு நேரங்களில் முகக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் துப்பாக்கிகளுடன் இப்பகுதிகளில் சுற்றி பதுங்கி மான்களை சுட்டு வேட்டையாட வருகின்றனர்.