[Series] Fringe (2008 - 2013)

இது ஒரு மர்மம் கலந்த Sci Fi Thriller தொடர்.

மினி சீரிஸ் தான் பார்ப்பேன் என்பவர்கள் அப்படியே jump ஆகிருங்க..

இது மிகப்பெரியயய சீரிஸ். மொத்தம் 5 Seasons மற்றும் அதில் மொத்தம் சேத்து 100 எபிசோட்.

#Tamil #tamilhollywoodreviews
Lost தொடர் புகழ் J.J. Abrams அவர்களால் உருவாக்கப்பட்டது.

இந்த தொடரின் நீளம் காரணமாக எதை பற்றி சொல்வது என்று தெரியவில்லை. அதனால் மைய கரு மற்றும் முக்கியமான கதாபாத்திரங்கள் பற்றி மட்டும் பார்க்கலாம்.

இந்த தொடர் முழுவதும் Fringe Division எனும் FBI ன் மற்றொரு அங்கத்தை பற்றியது.
Fringe Science பற்றிய வழக்குகளை பற்றி விசாரணை செய்கிறார்கள்.

அது என்ன Fringe Science?
இது நம்முடைய வழக்கமான அறிவியலுக்கு ‌அப்பாற்பட்டது. உதாரணமாக இறந்து போனவர்களின் மூளையை தொடர்பு கொண்டு பேசுவது, பேரலல் யுனிவர்சஸ் பற்றிய ஆராய்ச்சி,
உயிரியல் ஆயுதங்கள் பற்றிய ஆராய்ச்சி என நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத பல களங்கள் உள்ளன.

இந்த பிரின்ஜ் டிவிசனில் உள்ளவர்களை பற்றி பார்க்கலாம்.
வால்டர் பிஷப் :
கொஞ்சம் கிறுக்கு தனமான ஒரு விஞ்ஞானி. 17 வருடங்கள் மனநல மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவர்.
ஆனால் அதிபுத்திசாலி . இளம் வயதில் பல அறிவியல் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியவர். இவர் சோதனை செய்தவர்கள் பட்டியலில் சிறு குழந்தைகளும் அடக்கம்.

ஏஜன்ட் ஒலிவியா டன்கம் :
FBI ஏஜெண்ட் ஆக ‌வருகிறார். இளம் வயதில் வால்டரால் சோதனை செய்ய பட்டவர்களில் ஒருவர்.
பீட்டர் பிஷப் :

வால்டர் பிஷப்பின் மகன். எதையும் சாதிக்கும் வல்லமை கொண்ட அறிவாளி. இவரும் ஒலிவியா மீது காதலில் விழுகிறார். இவரைப் பற்றிய ஒரு ரகசியம் வால்டர் பிஷப்பிற்கு மட்டுமே தெரியும். அந்த ரகசியம் நமக்கு தெரியும் போது அட சொல்ல வைக்கிறது.
Massive Dynamics என்ற ஒரு நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நிறுவியவர் வால்டர் பிஷப்பின் நண்பர் மற்றும் அவருடன் பணியாற்றிய விஞ்ஞானி. இதனை நிர்வாகம் செய்பவர் நினா ஷார்ப் .

இவர்களை தவிர Observers எனும் மொட்டை மண்டைகள் இயக்கம் இவர்களை கண்காணித்து வருகின்றனர்.
தொடர் ஆரம்பத்தில் பல வித்தியாசமான ஃப்ரின்ஜ் வழக்குகளை விசாரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறியும் விதமாக அமைந்தது உள்ளது. ஆனால் பிற்பகுதியில் மொத்த கதையும் ‌பேரலல் யுனிவர்ஸ் மற்றும் நம்முடைய உலகம் அந்த உலகத்தோடு மோதாமல் தவிர்க்கும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு நகர்கிறது.
100 எபிசோட்கள் கொண்ட தொடர் என்றாலும் தொய்வின்றி போகின்றது.

கண்டிப்பாக பாருங்கள் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
IMDb - 8.4
அமேசான் ப்ரைமில் உள்ளது.

தமிழ் டப் இல்லை.தமிழ் சப் டைட்டில் உள்ளது.

DM for Telegram link.

#fringe #series
Review In Blog : tamilhollywoodreviews.com/2020/06/fringe…
@NglVichu @praveenjetlyy @mahaprabhuoffl @doctornandha @santhoshramesh @prabhu581 @Vera_Mathiri @CLPoriyalan
யாருக்காவது Tag பண்றது disturb'a இருந்தா சொல்லுங்க .. I'll remove them from tagging..

அதே மாதிரி யாரையாவது Tag பண்ணணும் என்றாலும் சொல்லுங்க.

நன்றி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with tamilhollywoodreviews

tamilhollywoodreviews Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tamilhollywood2

14 Sep
Widows - 2018
இந்த படத்தை பார்க்க முக்கிய காரணம் இயக்குனர் மற்றும் நடித்த நடிகைகள்.

IMDb 6.9
தமிழ் டப் இல்லை ‌
படம் ஸ்லோ தான்.

12 Years a slave என்ற அகாடமி அவார்டு வாங்கிய திரைப்படத்தை கொடுத்த இயக்குநர் Steve McQueen -ன் படைப்பு தான் இந்த படம்.

#tamilhollywoodreviews #Tamil
நடிகைகள் Viola Davis (How to get away with murder, Prisoners) . இவர் சில வருடங்களுக்கு முன்பு சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் ஆஸ்கார் அவார்டு வாங்கியவர் ஆவார்.

Michelle Rodriguez - இவர் பெரும்பாலும் அதிரடி ஆக்ஷன் (Avatar, Fast and Furious) கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் .
Elizabeth Debicki - இவர் Tenet , Night Manger போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் 4 பேர் இணைந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர் இதற்கு லீடராக இருப்பவர் Harry (Liam Neeson) . கொள்ளையில் ஏற்படும் குழப்பத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்
Read 20 tweets
14 Sep
[Re-post] [Korean] Midnight Runners - 2017

இது ஒரு காமெடி கலந்த அருமையான ஆக்ஷன் திரைப்படம்.

ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல ஒரு காமெடி ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி.

IMDb 7.3
தமிழ் டப் இல்லை.
OTT ல் இல்லை.

#Tamil #tamilhollywoodreviews
கொரியன் போலீஸ் யுனிவர்சிட்டியில் படிக்கிறார்கள் இரண்டு நண்பர்கள். குடும்ப சூழ்நிலையால் வேண்டா வெறுப்பாக போலீஸ் ட்ரைனிங்கில் சேர்ந்திருப்பது பின்னர் தெரிய வருகிறது
ஒரு நாள் இரவில் பார்ட்டி முடித்து வெளியே வரும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண்ணை கடத்துகிறது ஒரு கும்பல்
இருவரும் வேனை விரட்ட அது கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து விடுகிறது. இருவரும் கல்லூரியில் படித்ததை செயலில் காட்டி அந்த பெண்ணை காப்பாற்ற முடிவு செய்கிறார்கள்.

விசாரணையில் பிண்ணனியில் கொடூரமான மெடிக்கல் மாஃபியா இருக்கிறது என தெரியவருகிறது. போலீஸ் கேஸ் மற்றும் ஆதாரம் இல்லை என்கிறது.
Read 17 tweets
13 Sep
The Crazies - 2010

நிறைய Horror படங்களை IMDb வாட்ச்லிஸ்டில் போட்டு வைத்திருந்தேன். அதிலிருந்து சமீபத்தில் பார்க்க முடிந்த படங்களில் இதுவும் ஒன்று.

இதை முழுவதுமாக Zombie படம் என்றும் சொல்ல முடியாது.

IMDb - 6.5
தமிழ் டப் இல்லை.

#Tamil #tamilhollywoodreviews #horror
எப்பவுமே சிட்டியில் நடக்கும் கதைகளை விட சின்ன ஊருக்குள் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எனக்கு பிடித்த ஒன்று. அது மாதிரி ஒரு படம் தான் இது.

ஒரு சின்ன விவசாய கிராமம் . பேஸ் பால் மேட்ச் நடக்கும் சமயம் ஒருத்தன் கையில் Shot Gun ஓட உள்ள வர்றான்.
ஹீரோ அந்த ஊர் தலைமை போலீஸ். அவர் மற்றும் அவரோட அஸிஸ்ட்டன்ட் ரெண்டு பேரும் வார்னிங் கொடுத்தும் வெளியே போகாததால் வேறு வழி இல்லாமல் சுட வேண்டி இருக்கிறது.

இன்னொருத்தன் பொண்டாட்டி பிள்ளைகளை வீட்டுக்குள் போட்டு தீயை வைத்து கொளுத்திக் கொல்கிறான்.
Read 18 tweets
12 Sep
The Lighthouse - 2019

இது ஒரு Horror , Mystery படம்.

1890 களில் நடப்பது போன்று எடுக்கப்பட்டு உள்ளது.

IMDb 7.6
தமிழ் டப் இல்லை

படம் முழுவதும் கருப்பு வெள்ளை மற்றும். Aspect Ratio குறைவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மொபைல்ல கொஞ்சமா நடு ஸ்கிரீன்ல தான் படம் ஓடுது. ImageImage
இரண்டு பேர் கடலுக்கு நடுவே ஒரு லைட் கவுஸ்ல இருக்காங்க.

ஒருத்தர் சீனியர் (William Dafoe - ஒரு ஸ்பைடர்மேன் படத்துல வில்லனா வருவார்) இன்னொருத்தர் 4 வார கான்ட்ராக்டல வேலைக்கு வருகிறார்.( Robert Pattinson - கடைசியாக Tenet ல நடிச்சு இருந்தாரு) Image
ஆரம்பத்திலுல இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாமல் சண்டை போட்டுட்டு இருக்காங்க. அந்த சீனியர் மட்டும் லைட் கவுஸ்க்கு மேல போய் என்னமோ பண்ணிட்டு வறாரு. புதுசா வந்தவன கண்டபடி வேலை வாங்குகிறார்.

புதுசா வந்தவனுக்கு கனவுல கடல்கன்னி வருது , ஏதோ ஒரு கொடூரமான மிருகம் தெரியுது.
Read 11 tweets
12 Sep
[Korean] The Chaser - 2008

The Wailing படம் பார்த்த ‌பின் அந்த பட இயக்குனர் எடுத்த மற்ற படங்களை பார்க்கும் ஆர்வம் வந்து பார்த்த படம் இது.

ஒரு சீரியல் கில்லரை பிடிப்பதை பற்றிய பரபரப்பான திரைப்படம்.

IMDb 7.6
தமிழ் டப் இல்லை.

#tamilhollywoodreviews #Tamil #korean
#killer ImageImage
ஹீரோ முன்னாள் போலீஸ் ஆனால் இப்போது பெண்களை வைத்து தொழில் செய்யும் ஒரு புரோக்கர். தொடர்ச்சியாக அவனிடம் வேலை செய்யும் சில பெண்கள் காணாமல் போய்விடுகின்றனர். அதனால் பணக்கஷ்டத்தில் இருக்கிறான்.

ஒரு கஸ்டமரிடம் இருந்து பெண் வேண்டும் என அழைப்பு வருகிறது.
தன்னிடம் மிச்சம் உள்ள பெண்களில் ஒருவரை அனுப்புகிறான்.

அனுப்பிய சிறிது நேரத்தில் காணாமல் போன அனைத்து பெண்களும் அந்த கஸ்டமரிடம் தான் கடைசியாக சென்று உள்ளனர் ‌என்பதை கண்டுபிடிக்கிறான்.

அந்த கஸ்டமரை கணடு பிடிக்க தானகவே விசாரணையில் இறங்கி கண்டு பிடித்து விடுகிறான். Image
Read 18 tweets
11 Sep
Ready Player One - 2018

பிரபல இயக்குனர் Stephen Spielberg இயக்கத்தில் வந்த Sci Fi , Adventure கலந்த ஆக்ஷன் படம்.
கொஞ்சம் பெரிய படம் தான் ஆனால் ரொம்ப ஃபோர் அடிக்கவில்லை. கிராபிக்ஸ் சூப்பரா இருக்கும்.

நல்ல டைம் பாஸ் மூவி

IMDb: 7.4
தமிழ் டப் இல்லை.

#tamilhollywoodreviews #Tamil ImageImage
படம் நடப்பது 2045 ல . மக்கள் நிம்மதியாக வாழ சூழல் இல்லாததால் பெரும்பாலான மக்கள் Oasis எனப்படும் Virtual உலகத்தில் பெரும்பாலான நேரத்தை கழிக்கிறார்கள்.

Oasis உலகத்தை உருவாக்கிய விஞ்ஞானி அதிபுத்திசாலி. அவர் இறக்கும் முன்பு ஒரு அறிக்கை விட்டுவிட்டு இறந்து விடுகிறார். Image
Oasis - ல் ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்து உள்ளதாகவும் அந்த ரகசியத்தை அடைய மூன்று சாவிக்களை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். அந்த ரகசியத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு தன் சொத்துக்கள் மற்றும் Oasis ன் முழு உரிமையும் கொடுக்கப்படும் என்கிறார். Image
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(