நடிகைகள் Viola Davis (How to get away with murder, Prisoners) . இவர் சில வருடங்களுக்கு முன்பு சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் ஆஸ்கார் அவார்டு வாங்கியவர் ஆவார்.
Michelle Rodriguez - இவர் பெரும்பாலும் அதிரடி ஆக்ஷன் (Avatar, Fast and Furious) கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் .
Elizabeth Debicki - இவர் Tenet , Night Manger போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் 4 பேர் இணைந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர் இதற்கு லீடராக இருப்பவர் Harry (Liam Neeson) . கொள்ளையில் ஏற்படும் குழப்பத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்
இறந்தவர்கள் அனைவரும் எக்கச்சக்க கடன்களை விட்டுட்டு செல்கின்றனர். கடன் கொடுத்தவர்கள் எல்லாரும் வந்து விதவைகளின் சொத்துக்களை பிடிங்கி விடுகின்றனர் அது மட்டும் அல்லாமல் மிரட்டல்கள் விடுகின்றனர்.
இதனால் கடுப்பான Harry - ன் மனைவி Veronica செய்வது அறியாமல் தவிக்கிறார்.
இந்த நிலையில் கணவன் அடுத்த கொள்ளை மற்றும் அதை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றிய விபரங்களை எழுதி வைத்த டைரி கிடைக்கிறது.
ஆனால் இதை செய்ய குறைந்து 4 பேர் வேண்டும் என்பதால் தனது கணவருடன் இறந்த மூன்று பேர்களின் மனைவிகளின் உதவியை நாடுகிறார்.
ஒருவர் இதில் ஆர்வம் இல்லை என விலகி விட இவர்கள் நால்வரும் இணைந்து கொள்ளை அடித்து கடனை அடைத்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை.
படம் மெதுவாக தான் செல்கின்றது. பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை. வீட்டில் நல்ல குடும்பத் தலைவிகளாக இருந்த பெண்கள் திடீரென பொங்கி எழுந்து கொள்ளையில்
கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்பது கொஞ்சம் நம்ப முடியாத வகையில் உள்ளது. அதையும் ஈடுகட்ட இயக்குனர் சில காட்சிகள் வைத்து இருந்தாலும் கொஞ்சம் இடிக்கிறது.
மற்றபடி படம் மெதுவாக தான் செல்கிறது ஆனால் போரடிக்காமல் செல்கிறது. ஒரு சின்ன திருப்பம் உள்ளது.
கொரியன் போலீஸ் யுனிவர்சிட்டியில் படிக்கிறார்கள் இரண்டு நண்பர்கள். குடும்ப சூழ்நிலையால் வேண்டா வெறுப்பாக போலீஸ் ட்ரைனிங்கில் சேர்ந்திருப்பது பின்னர் தெரிய வருகிறது
ஒரு நாள் இரவில் பார்ட்டி முடித்து வெளியே வரும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண்ணை கடத்துகிறது ஒரு கும்பல்
இருவரும் வேனை விரட்ட அது கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து விடுகிறது. இருவரும் கல்லூரியில் படித்ததை செயலில் காட்டி அந்த பெண்ணை காப்பாற்ற முடிவு செய்கிறார்கள்.
விசாரணையில் பிண்ணனியில் கொடூரமான மெடிக்கல் மாஃபியா இருக்கிறது என தெரியவருகிறது. போலீஸ் கேஸ் மற்றும் ஆதாரம் இல்லை என்கிறது.
எப்பவுமே சிட்டியில் நடக்கும் கதைகளை விட சின்ன ஊருக்குள் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எனக்கு பிடித்த ஒன்று. அது மாதிரி ஒரு படம் தான் இது.
ஒரு சின்ன விவசாய கிராமம் . பேஸ் பால் மேட்ச் நடக்கும் சமயம் ஒருத்தன் கையில் Shot Gun ஓட உள்ள வர்றான்.
ஹீரோ அந்த ஊர் தலைமை போலீஸ். அவர் மற்றும் அவரோட அஸிஸ்ட்டன்ட் ரெண்டு பேரும் வார்னிங் கொடுத்தும் வெளியே போகாததால் வேறு வழி இல்லாமல் சுட வேண்டி இருக்கிறது.
இன்னொருத்தன் பொண்டாட்டி பிள்ளைகளை வீட்டுக்குள் போட்டு தீயை வைத்து கொளுத்திக் கொல்கிறான்.
படம் முழுவதும் கருப்பு வெள்ளை மற்றும். Aspect Ratio குறைவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மொபைல்ல கொஞ்சமா நடு ஸ்கிரீன்ல தான் படம் ஓடுது.
இரண்டு பேர் கடலுக்கு நடுவே ஒரு லைட் கவுஸ்ல இருக்காங்க.
ஒருத்தர் சீனியர் (William Dafoe - ஒரு ஸ்பைடர்மேன் படத்துல வில்லனா வருவார்) இன்னொருத்தர் 4 வார கான்ட்ராக்டல வேலைக்கு வருகிறார்.( Robert Pattinson - கடைசியாக Tenet ல நடிச்சு இருந்தாரு)
ஆரம்பத்திலுல இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாமல் சண்டை போட்டுட்டு இருக்காங்க. அந்த சீனியர் மட்டும் லைட் கவுஸ்க்கு மேல போய் என்னமோ பண்ணிட்டு வறாரு. புதுசா வந்தவன கண்டபடி வேலை வாங்குகிறார்.
புதுசா வந்தவனுக்கு கனவுல கடல்கன்னி வருது , ஏதோ ஒரு கொடூரமான மிருகம் தெரியுது.
ஹீரோ முன்னாள் போலீஸ் ஆனால் இப்போது பெண்களை வைத்து தொழில் செய்யும் ஒரு புரோக்கர். தொடர்ச்சியாக அவனிடம் வேலை செய்யும் சில பெண்கள் காணாமல் போய்விடுகின்றனர். அதனால் பணக்கஷ்டத்தில் இருக்கிறான்.
ஒரு கஸ்டமரிடம் இருந்து பெண் வேண்டும் என அழைப்பு வருகிறது.
தன்னிடம் மிச்சம் உள்ள பெண்களில் ஒருவரை அனுப்புகிறான்.
அனுப்பிய சிறிது நேரத்தில் காணாமல் போன அனைத்து பெண்களும் அந்த கஸ்டமரிடம் தான் கடைசியாக சென்று உள்ளனர் என்பதை கண்டுபிடிக்கிறான்.
அந்த கஸ்டமரை கணடு பிடிக்க தானகவே விசாரணையில் இறங்கி கண்டு பிடித்து விடுகிறான்.
பிரபல இயக்குனர் Stephen Spielberg இயக்கத்தில் வந்த Sci Fi , Adventure கலந்த ஆக்ஷன் படம்.
கொஞ்சம் பெரிய படம் தான் ஆனால் ரொம்ப ஃபோர் அடிக்கவில்லை. கிராபிக்ஸ் சூப்பரா இருக்கும்.
படம் நடப்பது 2045 ல . மக்கள் நிம்மதியாக வாழ சூழல் இல்லாததால் பெரும்பாலான மக்கள் Oasis எனப்படும் Virtual உலகத்தில் பெரும்பாலான நேரத்தை கழிக்கிறார்கள்.
Oasis உலகத்தை உருவாக்கிய விஞ்ஞானி அதிபுத்திசாலி. அவர் இறக்கும் முன்பு ஒரு அறிக்கை விட்டுவிட்டு இறந்து விடுகிறார்.
Oasis - ல் ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்து உள்ளதாகவும் அந்த ரகசியத்தை அடைய மூன்று சாவிக்களை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். அந்த ரகசியத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு தன் சொத்துக்கள் மற்றும் Oasis ன் முழு உரிமையும் கொடுக்கப்படும் என்கிறார்.