🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫
கொடநாடு பங்களா காவலாளியை கொலையில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்கவுண்டரில்🔫🔫🔫🔫சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் பரவியுள்ளது.🔫🔫
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ரகசிய
ஆவணங்களை கொள்ளையடிக்க இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவரும் மறு விசாரணைக்கு வர தயார் என சொல்லியுள்ளது கூடுதல் தகவல் .
5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் சிக்கினர்.
இந்தக் கொலை விசாரணை பரபரப்பாக சென்று கொண்டிருந்த அதே நேரத்தில், ஜெயலலிதாவின் மாஜி கார் ஓட்டுநர் கனகராஜ் தீவிரமாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் போலீசாரிடம் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியான கனகராஜை விசாரித்தால் உண்மைகள் பல வெளியே தெரிந்துவிடும்; அதனால் அவரை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்து என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சேலத்தில் பரபரப்பு தகவல் பரவியது.l
இதனால் பதற்றமான போலீஸ் தரப்பு, கனகராஜ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படவில்லை என்றும், அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்றும் செய்தி வெளியிட்டு எஸ்கேபானது. போலீசார் அப்படி சொன்ன பிறகுதான் கொடநாடு கொலை சம்பவத்தில் உள்ள மர்மம் மேலும் அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் நடைபெற்ற ஒரு விபத்தில் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார் என்றால் விபத்து நடந்த இடம் எது என்று இன்னும் தெரியவில்லை. எந்த இரு வாகனத்திற்கும் இடையே விபத்து நடைபெற்றது என்ற தகவலையும் போலீசார் இதுவரை வெளியிடவில்லை.
கசியத்தை மறைக்க.. இதனால், இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ஏதோ ஒரு ரகசியத்தை மறைப்பதற்காகவே கனகராஜ் பலி கொடுக்கப்பட்டுள்ளார் என்றே சேலத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
மேலும், இதன் பின்னால் உள்ள சதி விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கொடநாடு வழக்கில் மேல்விசாரணை ஏன் தேவை?.. அதிமுகவின் இன்பதுரை கூறும் வழக்கே சாட்சி.. கேசி பழனிசாமி.
ஏன் மேல் விசாரணை
"கொடநாடு வழக்கு! ஏன் மேல் விசாரணை வேண்டுமென்பதெற்கு இன்பதுரை கூறும் வழக்கே சாட்சி
மேல்விசாரணை வேண்டுமா வேண்டாமா
இதுகுறித்து கே சி பழனிசாமி ஒரு விவாதத்தில் கூறுகையில் இந்த கொடநாடு வழக்கில் மேல்விசாரணை வேண்டுமா வேண்டாமா என்றால் அந்த பங்களாவின் உரிமையாளர்களுள் ஒருவரிடம் சாட்சியமும் விசாரணையும் நடத்தப்படவில்லை. இது நிச்சயமாக சட்டப்படி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லும் போது இந்த வழக்கில் சசிகலாவின் சாட்சியங்களை எடுத்தீர்களா என கேட்கும் போது எடுக்கப்படவில்லை என சொல்ல முடியுமா. ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் அந்த பங்களாவில் என்ன இருந்தது , தற்போது என்ன காணாமல் போயுள்ளது என்பது சசிகலாவுக்குத்தான் தெரியும்.
எனவே இந்த வழக்கில் மேல் விசாரணை தேவை என்றார் கேசி பழனிசாமி.
உதாரணமாக ஒரு வழக்கை மேற்கோள் காட்டி ஏன் மேல் விசாரணை
"கொடநாடு வழக்கு! ஏன் மேல் விசாரணை வேண்டுமென்பதெற்கு இன்பதுரை கூறும் வழக்கே சாட்சி என கூறியுள்ள கே சி பழனிச்சாமி ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அதில் 2003 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு 2006 ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை வேண்டும் என இறந்தவரின் மனைவி கோரியிருந்தார்.
முக்கிய சாட்சியங்கள்
அந்த வழக்கில் அவரை கைது செய்ய போகும் போது மாடியிலிருந்து குதித்துவிட்டார். அந்த வழக்கில் அவரை கைது செய்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த வழக்கின் தீர்ப்பை எடுத்து படித்து பார்த்தால் அதில் அரசு தரப்பு சாட்சியாக இருக்கும் ஒரு
இன்ஸ்பெக்டர் சாட்சி அளித்துள்ளார். அதில் இரு முக்கிய சாட்சிகளை நான் விசாரிக்கவே இல்லை என சொல்கிறார். இறந்து போன பாண்டியனுக்கும் விஐபியின் மனைவிக்கும் ஒரே லாக்கர் இருக்கிறது. இந்த லாக்கரை அவரிடம் சொல்லாமல் இந்த விஐபியின் மனைவி எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டார்.
எனவே இந்த வழக்கில் அந்த மனைவியையும் பேங்கரையும் விசாரித்திருக்க வேண்டுமா இல்லையா. இவ்வாறு முக்கிய சாட்சிகளை விசாரிக்கப்படாததுதான் இந்த வழக்கை கடுமையாக பாதித்துவிட்டதாக சொல்லி சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளிப்பதாக கூறி விடுதலை செய்துவிட்டார்கள் என்கிறார் இன்பதுரை.
Tuesday, August 24, 2021-One India Tamil
April 29, 2017-One India Tamil
கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.
நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.