``அப்படியென்ன மர்மம்?"
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2011-16 காலகட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த
ஐந்து அமைச்சர்களின் மீது சந்தேகப் பார்வை விழுந்தது. அவர்கள் முறைகேடாக சொத்து சேர்த்ததை அறிந்து அதற்கான ஆவணங்களை எல்லாம் ஜெயலலிதா அங்கேதான் வைத்திருந்தார்.
அவர் இறந்த பிறகு சசிகலா கையில் அந்த ஆவணங்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருந்தனர். தங்களின் லகான் அந்த
ஆவணங்களில் உள்ளது என்பதால்தான் கொலை, கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றினர்.அப்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் அ.தி.மு.க அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டனர். அந்த வழக்கை உடனடியாக முடித்துவிட வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை காட்டினர்.
🔫🔫இந்தக் கொள்ளைச் சம்பவத்தின்போது காயமடைந்த கிருஷ்ணா பகதூர் என்ற காவலாளியை நேபாளத்துக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். ஒரு சாவு நடந்தால்கூட உள்ளே கொண்டு போகவிடவில்லை.
🔫🔫அதேபோல், எஸ்டேட்டில் நடந்த டிராக்டர் விபத்தில் 20 பேர் சிக்கினர். அதில் ஒரு பெண்மணி இறந்தபோது அவரது உடலை அடக்கம் செய்யவிடாமல் சொந்த ஊருக்குக் கொண்டு போகுமாறு கூறிவிட்டனர்.
கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி தொழிலாளர்கள் யாரும் பெரிதாக பேசுவதில்லை. ஓரிரு மாதங்களுக்கு முன்பு எஸ்டேட் பகுதியைச் சுற்றி ஹெலிகாப்டர் ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. `யாராவது வந்திருப்பார்களா?' என விசாரித்தபோதும், உரிய தகவல் கிடைக்கவில்லை.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்தபோது கணக்கு வழக்குகளைக் காட்டுவதற்காக எஸ்டேட் மேலாளர் நடராஜன் அடிக்கடி சென்று வருவார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இங்குதான் வருவார் என தொழிலாளர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் வரவில்லை" என்கிறார்.
“கனகராஜ் ஒப்படைத்த ஆவணங்களில் பலரது குடுமிப்பிடிகள் வசமாகச் சிக்கியிருந்தன. அவற்றில் ‘பன்னீர் செல்வம் ’ தொடர்புடைய சில ஆவணங்கள் முக்கியமானவை. மார்ச் 2016 காலகட்டத்தில், அந்தத் தலைவர் தலைமைக்குத் தெரியாமல் சொத்துகளை வாங்கிக் குவித்ததாகத் தோட்டத்துக்குத் தகவல் போனது.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய தோட்டம், பலமாகக் கண்டித்ததோடு, துபாயில் அவர் விலைக்கு வாங்கியிருந்த 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்டார் ஹோட்டலை எழுதி வாங்கியது. அதேபோல, அப்போதைய இரண்டு சீனியர் அமைச்சர்களிடமிருந்த இதே போன்ற சொத்துகளும் எழுதி வாங்கப்பட்டன. இவர்களிடமிருந்து
மன்னிப்புக் கடிதமும் தோட்டத்தால் எழுதி வாங்கப்பட்டது. இந்தக் கடிதங்கள், ஆவணங்கள் கனகராஜ் மூலமாகத் தன் கைக்கு வந்தவுடன், தன் விளையாட்டை ஆரம்பித்தார் பழனிச்சாமி
‘அம்மாவுக்கும் கட்சிக்கும் துரோகம் இழைத்துவிட்டதாக நீங்களே எழுதிக் கொடுத்திருக்கீங்க. எங்கெங்கே சொத்துகள் உங்க பெயர்ல இருந்தது என்கிற விவரமெல்லாம் இந்த மன்னிப்புக் கடிதத்துல இருக்கு. இந்த விஷயம் வெளியில போனா... உங்க அரசியல் வாழ்வே சூன்யமாகிடும்’ என்று பழனிச்சாமி மறைமுக மிரட்டல்
விடுத்தார் பழனிச்சாமி,அரண்டுபோன பன்னீர் , எடப்பாடியிடம் சரண்டரானார். அ.தி.மு.க-வில் ஒவ்வொருமுறை தான் வீழ்த்தப்படும்போதும், பழனிச்சாமி தரப்புக்கு எதிராக எதுவும் பேசாமல், இன்றுவரை பன்னீர் மௌனம் காப்பதற்கு இந்தக் கடிதமும் ஒரு முக்கியமான காரணம்.
அடுத்ததாக சசிகலாவை ஓரங்கட்ட முடிவெடுத்தார் பழனிச்சாமி. கனகராஜ் ஒப்படைத்த ஆவணங்களில், சசிகலா தொடர்புடைய ஐந்து ஆவணங்கள் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டன. அக்டோபர் 2017-ல் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்
சசிகலாவின் கணவர் ம.நடராசன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஐந்து நாள்கள் பரோல் சசிகலாவுக்கு கிடைத்தது.
பரோல் முடிந்து அக்டோபர் 12-ம் தேதி சசிகலா சிறை சென்ற பிறகு, வருமான வரித்துறை இந்தப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்தது. யாரும் எதிர்பாராதவிதமாக, நவம்பர் 9, 2017-ல் சசிகலா தொடர்புடைய 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது வருமான வரித்துறை.
கிருஷ்ணபிரியாவின் வீட்டையும் சோதனையிட்டனர். அப்போது, அவரின் மொபைலிலிருந்து ஒரு போட்டோவை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.பெயர், முகவரி எதுவும் இல்லாமல் வெறும் சில எண்களை மட்டும் குறிப்பிட்டு, அவை ‘செட்டில் ஆகிவிட்டது’, ‘ஆகவில்லை’
என்பது மட்டும் ஒரு பேப்பரில் குறிக்கப்பட்டிருந்தன. அதை கிருஷ்ணபிரியா போட்டோ எடுத்து வைத்திருந்திருக்கிறார். இதைவைத்து விசாரித்ததில், வருமான வரித்துறைக்கு எந்தத் துப்பும் துலங்கவில்லை.
இந்தச் சூழலில்தான், நவம்பர் 17-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஒரு மர்ம போன் கால் வந்தது. ‘ரூம் நம்பர் 302, சி.ஐ.டி நகரிலிருக்கும் ஷில்லி நிவாஸ் அப்பார்ட்மென்ட். இந்த முகவரிக்குச் செல்லுங்கள். சசிகலா தொடர்புடைய 2,000 கோடி ரூபாய்
டாக்குமென்ட்ஸ் கிடைக்கும்’ என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தது மர்மக் குரல். அதன்படி நவம்பர் 18-ம் தேதி, மூன்று அதிகாரிகள் அந்த 302-ம் எண் அறைக்குச் சென்றனர்.
சிக்கிய ஐந்து டாக்குமென்ட்ஸ்!
அந்த அறை, கேரளாவைச் சேர்ந்த செபாஸ்டீன் என்பவரின் பெயரில் புக் செய்யப்பட்டிருந்தது. அறையிலிருந்து 1,911 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஐந்து டாக்குமென்ட்ஸை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். சொத்துகளை வாங்கியதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நான்கும்,
கடன் வழங்கியதற்கான பத்திரம் ஒன்றும் அதில் அடக்கம். இந்த அறை, போலியாகத் தன் பெயரில் புக் செய்யப்பட்டதாக செபாஸ்டீன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறிவிட்டார். கைப்பற்றப்பட்ட அந்த ஆவணங்களில், இந்தச் சொத்துகள் யார் பெயரில் வாங்கப்பட்டன என்கிற விவரம் ஏதும் இல்லை. இதனால்,
சொத்துகளை விற்றவர்களை வருமான வரித்துறை விசாரித்தது. புதுச்சேரி, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்களை விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
நவம்பர் 8, 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்தபோது, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்துகொள்ள கால அவகாசம் வழங்கியது. இதைப் பயன்படுத்திக்கொண்ட சசிகலா, தன்னிடமிருந்த 1,674.5 கோடி ரூபாய் பழைய
ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் சொத்துகளை வாங்கியிருக்கிறார். இதற்காக, வாங்குபவரின் பெயர் இல்லாமலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை சசிகலாவின் வழக்கறிஞர் நாமக்கல் செந்தில்தான் செய்ததாக, இந்தச் சொத்துகளை விற்றவர்கள் வருமான வரித்துறையிடம் வாக்குமூலம் அளித்தனர். இதைத் தொடர்ந்து 1,674.5 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்தச் சொத்துகள் அனைத்தும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டன.
இதை எதிர்த்து, அந்தந்தச் சொத்துகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று விளக்கமளித்திருப்பது தனிக்கதை.இந்த விவகாரத்தில் வசமாக சசிகலா சிக்கிக்கொண்டார். அவர் தொடர்புடைய ஐந்து ஆவணங்களை அறை எண் 302-ல் வைத்து, வருமான வரித்துறைக்குத் தகவல் அளித்ததே எடப்பாடி தான் .
இதற்காக செபாஸ்டீன் பெயரில் போலியாக ரூம் எடுத்துத் தந்தது ஒரு தங்கமான பிரமுகர். பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், இந்த வழக்கை எதிர்கொண்டு வருவது சசிகலாவுக்கு லேசுப்பட்ட காரியமல்ல. கொடநாட்டில் கொள்ளையடிக்கப் பட்ட ஆவணங்களைவைத்து யுத்தத் தலைவரை
அமைதியாக்கி, சசிகலாவையும் அரசியலிலிருந்து ஓரங்கட்டிவிட்டார் அந்தக் கில்லாடி பஞ்சாமிர்தத் தலைவர்” என்கிறார்கள் அவர்கள்.
கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.
நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.