🐍 ஏப்ரல் 23-ந்தேதிமாதம் 23-ந்தேதி இரவு 11 பேர் கும்பல் புகுந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டது.
🐍காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
🐍மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயம் அடைந்தார்.
🐍11 பேரில் தலைவனாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கடந்த 28-ந் தேதி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டது .(அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது)
🐍சயன் என்பவனும் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
🐍வாளையார் மனோஜ் சாமி
🐍தீபு ஜித்தன் ஜாய்
🐍ஜம்ஷேர் அலி
🐍உதயகுமார்
🐍சந்தோஷ் சாமி
🐍சதீசன்
🐍பிஜின் குட்டி
கொடநாடு எஸ்டேட்டில் இந்த 11 பேர் கும்பல் என் னென்ன எடுத்துச் சென் றது என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்தபடி உள்ளது. ஜெயலலிதாவின் அறையில் இருந்த 3 சூட்கேசுகள் உடைக்கப்பட்டு, அவற்றுக் குள் வைக்கப்பட்டிருந்த பணம், தங்க - வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட தாக தகவல் வெளியானது.
அந்த 3 சூட்கேஸ்களில் இருந்த சொத்து ஆவணங்களையும் மர்ம கும்பல் அள்ளிச் சென்று விட்டதாக கூறப்பட்டது.கொள்ளை கும்பல் ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் மற்றும் கண்ணாடி அலங்கார பொருட்களை மட்டும் கொள்ளையடித்து சென்றதாகவும்,
அவை மீட்கப்பட்டு விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பங்களா அறைக்குள் ரூ.200 கோடி பணம் இருப்பதாக கருதியே கொள்ளை கும்பல் வந்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் பணம் எதுவும் இல்லாததால் கைக்கடிகாரத்தையும், கண்ணாடி அலங்கார பொருளையும் மட்டும் திருடி சென்றதாக
கூறுவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதாவின் அறையில் இருந்த சூட்கேஸ்களில் என்ன இருந்தது? என்பது சசிகலாவுக்கு மட்டும் தெரியும். எனவே இதுதொடர்பாக அவரிடம் விசாரித்தால் மட்டும் உண்மை தெரியும். ஆனால் மாநில போலீசார் இதில் நேர்மையாக நடந்து கொள்வார்களா?
என்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால் இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிபடுத்த வில்லை.
குற்றவாளிகள் அனைவரும் பிடிபட்டு விட்டதால், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையில் அவர்களது பங்கு என்ன என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளைக்கு திட்டமிட்டது கனகராஜ் ஆவார். அதை அரங்கேற்ற உதவி செய்தது மனோஜ் என்ற சாமியார் தலைமையிலான கூலிப் படையாகும்.
இதில் கனகராஜ் பின்னணியில் இருந்தது யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மர்மமாக உயிரிழந்து விட்டதால், அந்த ரகசியம் அவரோடு புதைந்து போனது. இதை கண்டுபிடித்தால்தான் கொடநாடு எஸ்டேட்டில் என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட் டன என்பது முழுமையாக தெரிய வரும்.
என்றாலும் பிடிபட்டுள்ள கூலிப்படையினரிடம் இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை மூலம், கொட நாடு எஸ்டேட்டில் இருந்து ரூ.200 கோடி வரை கொள் ளையடிக்கப்பட்டிருக் கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தங்க, வைர நகைகளும் அள்ளிச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
இதுபற்றி நீலகிரி மாவட்ட போலீசார், குற்றவாளிகளில் ஒருவனான சயனிடம் விசா ரணை நடத்தி வருகிறார் கள். இந்த சயன்தான் கனகராஜுக்கு மனோஜ் என்ற சாமியார் தலைமையிலான கூலிப்படையை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு கொலை, கொள்ளையை ஒருங்கிணைத்து நடத்தியதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
எனவே இவரது வாக்கு மூலம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவரிடம் போலீசார் ஜெயலலிதா எழுதி வைத்திருந்த “உயில்” பற்றி விசாரணை நடத் தியதாக தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா தனது சொத்துக்கள் பற்றி விரிவான உயில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தனது மறைவுக்கு
பிறகு பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள தன் சொத்துக்கள் என்ன செய்யப்பட வேண்டும் என்று அவர் அந்த உயிலில் குறிப் பிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த உயில் ஜெயலலிதா அறையில் சூட்கேசுக்குள் வைக்கப்பட்டிருந்ததாம்.
அந்த சூட்கேஸ் உடைக்கப் பட்டு விட்டதாக தகவல் வெளியாகி இருப்பதால் கனகராஜ் தலைமையிலான கும்பல், அந்த உயிலை எடுத்துச்சென்று இருக்கலாம் என்று சந்தேகம் எழுந் துள்ளது. சயன் வாயைத் திறந்தால் இதில் உண்மை வெளியில் வரும் என்று கொடநாடு எஸ்டேட் பகுதி யில் வசிப்பவர்கள் சொல்கிறார்கள்.
அவரிடம் இன்னும் விசாரிக்க முடியாததால் போலீசார் காத்திருக்கிறார்கள். அவருடைய உடல்நலம் சற்று தேறியதும் விசாரணை நடத்த உள்ளனர். அப்போது உயில் மற்றும் சொத்து பத்திரங்கள் திருடப்பட்டதா? என்ற விஷயங்கள் தெரியவரும்.
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நிறைய அறைகள் உள்ளன. ஆனால் கனகராஜ், சயன் அழைத்து சென்ற கும்பல் மிகச்சரியாக ஜெயலலிதா, சசிகலா பயன்படுத்தும் அறைகளை உடைத்து மூன்று சூட்கேஸ்களில் இருந்த ஆவணங்களையே அள்ளிச் சென்றுள்ளனர். அந்த ஆவணங்களில் பெரும்பாலானவை சொத்து ஆவணங்கள் என்று தெரிகிறது.
சில சொத்துகள் சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு அந்த சூட்கேஸ்களில் வைக்கப்பட்டு இருந்ததாம். அவை அனைத்தையும் கனகராஜ் தலைமையில் வந்த கும்பல் எடுத்து சென்றதாக சந்தேகம் நிலவுகிறது.
கொள்ளை போனதாக கருதப்படும் நகைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் உயில் தற்போது யாரிடம் போய் சேர்ந்து இருக்கும் என்பதிலும் மர்மம் நீடிக்கிறது.
ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் சொன்னது கலைஞர் -சசி & ஜெ ஊழல் என்றும் மர்மமே 🐍🐍🐍🐍🐍
கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.
நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.