நைட்ல பக்க நல்ல ஒரு ஹாரர் படம் வேணும்ன்னு நெனச்சேன், இந்த படம் தோணுச்சி..
கதை : 2175 ல உலகம் அழிய போகுது,
ரொம்ப தூரத்துல ஒரு கிரகம் நம்ம பூமி மாதிரியே சுவாசிக்கக் முடியும்,
தண்ணி இருக்குன்னு ஆராய்ச்சி செஞ்சு கண்டுபுடிச்சி வச்சி இருக்காங்க,
இப்போ ஒரு குழுவா கிளம்பி விண்வெளியில் அந்த கிரகத்தை நோக்கி போறாங்க. (முக்காவாசி பேர் ஆழ்நிலை தூக்கம் ல இருக்காங்க Stasis னு சொல்வாங்க அதுக்கு பெயர்)
அப்போ ஹீரோ க்கு முழிப்பு வருது, தான் எங்க இருக்கோம் என்ன நடக்குதுன்னு ஹீரோக்கு புரிஞ்சிக்கவே கொஞ்ச நேரம் ஆகுது,
அவனுக்கு முக்கால்வாசி மறந்து போய் இருக்கு,
எவ்ளோ யோசிசும் நியாபகம் வரல, ஹீரோ ஒரு மெக்கானிக்,
அவனுக்கு மேலதிகாரி கேப்டன்அ எழுப்பி விடுறான்,
கேப்டன்னும் வந்து யாராச்சும் இருக்காங்களா ன்னு பாக்குறான்,
மைக்ல கேக்குறான், யாருமே பதில் சொல்லல,
கேப்டன் ஹீரோவை இங்க இருந்து வெளிய போய்,
வெளி கதவை திற ன்னு சொல்றான், ஹீரோவும் அவன் சொல்றதை கேட்டு வெளிய போறான்,
அங்க தான் ட்விஸ்டு..
வேற்று கிரக உயிரினங்கள் மாதிரி அந்த பெரிய Space Ship முழுக்க இருக்குதுங்க,
யார உயிரோட பாத்தாலும் கொலை பண்ணிடுதுங்க,
ஹீரோவுக்கு அல்லு விட்டு போச்சு,
என்ன பண்றதுன்னு தெரியாம சுத்தி சுத்தி வரான்,
ஒரு பொண்ணு எலியன்ஸ் கிட்ட இருந்து இவனை காப்பாத்துது,
அவங்க ரெண்டு பெரும் வேற ரெண்டு மூணு பேரை சந்திகிறாங்க,
எல்லாரும் சேர்ந்து போய் கப்பலுக்கு நடுவுல இருக்க கருவிய செயல்பட வச்சா தான் எங்க இருக்கோம், எப்போ போய் சேர வேண்டிய இடத்துக்கு போவோம்ன்னு எல்லாத்துக்கும் பதில் கிடைக்கும்..
ஹீரோவும், அந்த பொன்னும், கூட அந்த 2 பேரும் அந்த மெசின் செயல்பட வச்சாங்களா ?
ஏலியன்ஸ் என்ன ஆனது ?
இதெல்லாம் செம விருவிருப்பா,
நல்ல திகிலோட சொல்லி இருக்க படம்..
படம் வந்து 12 வருஷம் ஆகுது,
அதனால ரொம்ப எதிர் பார்க்க வேண்டாம், ஆனா கண்டிப்பா நல்லா இருக்கும் & எனக்கு ரொம்ப புடிச்ச படம்..