#கடவுள்

இவனெல்லாம் பிறக்கவுமில்லே இருக்கவும் முடியாது.

கடவுள்-ன்னு சொன்னாலே, அவனுக்குப் பிறப்புமில்லே, இறப்புமில்லே-ன்னு சொல்லிதான் கடவுளைப் புகுத்தினான். அப்புறம் அவன் பிரசாரம் பண்றதுக்கு அவன் பிறந்தான், வாழ்ந்தான், செத்தான்கிறதுக்காகக் கொல்லப்பட்டான்.
அதனாலே இவன் செத்தான் என இப்படியெல்லாம் எழுதிட்டான். ராமன் செத்தான்னே எழுதறான் கிருஷ்ணனை இன்னொருத்தன் கொன்னான்னு எழுதினான், இதெல்லாம் கடவுள்னு சொல்லி எழுதறது முட்டாள்தனம்.
ஆனால் இதைப் பிரச்சாரம் பண்றவன் கூட ஒரு உறுதியினாலே என்னா எழுதறது என்பதில், யோக்கியமானபடியா நாணயமான கதையா? என்பதையெல்லாம் சிந்திக்காமே, கதையை எழுதிட்டான்.
அதுக்கு உருவம் - அதுக்குக் கோயிலு - அதுக்குப் பண்டிகை - அதுக்குப் பொண்டாட்டி - அதுக்கு வைப்பாட்டி (சிரிப்பு) அதுக்குக் கல்யாணம் மற்றும் என்னென்னமோ வச்சி மக்கள் உள்ளத்திலே ஒரு மூடநம்பிக்கையைப் புகுத்தறதுக்கு கடவுள்பேருன்னு சொல்லி வரிசையா பண்ணிட்டு வந்திட்டான்.
அதுதான். இராமன் ஒருவன் இருந்தான். அவன் பிறந்தான்னு சொல்ல முடியாது? கிருஷ்ணன் ஒருவனிருந்தான். அவன் பிறந்தான்-அவன் செத்தான்னு எவனாலேயும் சொல்ல முடியாது? அவன் கதையின்படி அவன் மனுஷனாகவுமில்லே. அவன் கடவுளாகவுமில்லே .
மனுஷனாக இருந்தால் அவன் மனுஷத்தன்மையோடு இருக்கணும் .இல்லாட்டா கடவுள் தன்மையோடு இருக்கணும். இரண்டுமில்லே. கடவுள்னு சொல்றான் அவன்பொண்டாட்டியை எவனோ இழுத்துகிட்டு போயிடறான்னு இராமாயணத்தை முடிக்கிறான். (சிரிப்பு) (ராமனை) கிருஷ்ணனைக் கடவுளுங்கிறான், எவனோ அவனை வில்லால் அடிச்சான்,
அவன் செத்தான்னு எழுதறான்.இப்படியாக ஒரு முட்டாள்தனமான கருத்து எப்போதும் இருக்கும் படியாக உண்டாக்கின ஒரு தந்திரம் கடவுள் பிறந்த நாளுங்கிறது. அதுக்குப் பின்னாலே என்னா பண்ணினான்? கடவுள் சங்கதி முடிஞ்ச உடனே; பக்தர்கள் பேராலே ஆரம்பிச்சான்.
நாயன்மார்கள் பிறந்தநாள், ஆழ்வார்கள் பிறந்தநாள், குருநட்சத்திரம், ஆழ்வார்கள் நட்சத்திரம், நாயன்மார்கள், ஆழ்வார்கள் இந்த இரண்டுபேரும் அவனுங்க பிறந்தாங்க செத்தானுங்கன்னு. அதிலே ஆழ்வாரிலே 100க்கு 5 பேர்இருந்தாங்களோ என்னமோ?அதிலே 90 பேருபெறட்டு.
இருந்திருக்கமாட்டானுங்க. அந்தக் காரியமெல்லாம் நடந்திருக்காது. அப்படி பேரு வச்சி அவனுங்க பேராலே எழுதினானுங்க.

அப்புறம் அரசியல் பித்தலாட்டம் வந்த பிறகு அரசியல் பெறட்டான கொள்கைகளைப்பரப்பறதுக்கு, அதுக்கும் அந்த மாதிரியான ஆளுங்க பேராலே பொய்யும் புளுகும் பேசிக்கிறது?
அவனுங்களைப் பத்தி பிரமாதமா பேசிக்கிறது. இப்ப கொஞ்சம் மக்கள் அறிவு பெற்றதுக்கு, தெளிவானதுக்கு, அப்புறம் நிஜமாக உயிரோடு இருக்கிறவனை பிறந்தநாளுன்னு அவன் பேரை இப்ப பயன்படுத்தறாங்க அவர்களைப் பெரிசு பண்றதுக்காக. அவர்களுடைய கொள்கையைப் பரப்பச்செய்யணும்.
அதே மாதிரியாகவே எனக்கும் நடத்துகிறார்கள் என்றால், என்னுடைய கொள்கையில் ஈடுபட்டவங்க அதாவது நம்ம கழகத்தோழர்கள் முக்கியமாகக்கழகம் நம்மகொள்கைகளை ஜனங்கள் மத்தியிலே பிரச்சாரம்பண்ண வாய்ப்பை முன் வைத்து மற்ற பெரியவங்களையும் இதை ஆதரிக்கும்படியாகக்கேட்டு
இதில்சேர்த்து அவர்களுடைய தயவினாலேயும் கொண்டாடி இப்படி பல பேரையும் இணைத்து. என்னைப் பற்றியே சொல்லிக்கிட்டு போக அவர்களாலே முடியாது. நம்ம கொள்கையைப்பற்றிச் சொல்லவேண்டுமானா அவர்களுக்குக் கொஞ்சம் தைரியம் வேணும். நான் கடவுளை எல்லாம் அயோக்கியப் பயலுகங்கிறேன்.
அவனுங்க பொண்டாட்டிகளை எல்லாம் விபசாரிகள் குச்சிக்காரிகளுங்கிறோம். அந்தக்கடவுள் காரியங்கள் எல்லாம் பெறட்டு அயோக்கியத்தனம்கிறோம். கடவுளாவது வெங்காயமாவுது மடப்பசங்களாங்கிறோம். இதையெல்லாம் சொல்ல அவர்களுக்குத் தைரியம் வராது. ஏன்னா?
நானும், என்னை யாரும் செருப்பிலே அடிச்சாலும், உதைச்சாலும், கொன்னாலும், குத்தினாலும் என்னா பண்ணினாலும் பரவாயில்லே. சங்கதிகளைச் சொல்லி வைக்க வாய்ப்பு கிடைச்சிதேன்னு துணிஞ்சி நான் பேசறேன். ஒருத்தர்கிட்டேபோயி ஒரு ஓட்டு கேட்க மாட்டேன். எனக்கு இப்ப90வயசாகுது.
எனக்கு 5 வயசு முதற்கொண்டே என்னுடைய அஞ்சாவது வயசு முதல் இன்னைக்கு 90ஆவது வயசு வரையிலும் ஏதாவது ஒருத்தருக்கு நான் கொடுத்தா, கொடுத்திருப்பேனே தவிர, ஒருத்தர் கிட்டே போயி எனக்கு ஒரு காரியம் செய் ஒரு காசு கொடுன்னோ நான் கேட்கமாட்டேன். கேட்டதுமில்லை.
கேட்காது வாழ முடியாது என்பாங்க. ஆனால்என்வாழ்விலேஎனக்கு இது பண்ணு, இன்ன காரியம் செய்யின்னு, எனக்கு இந்த உபகாரம் செய், எனக்கு இன்னது வேணும்ன்னு, அந்த மாதிரியான வாய்ப்பும் எனக்கில்லே.ஆனால் நான் பிறக்கும்போதே நான் துடுக்கான பையனாகவே பொறந்திட்டேன். ரகளை காரணமாகவே இருந்தேன்.
எந்தக் காரியத்திலே நான் ஈடுபட்டாலும், நான் தலைவனாதான் இருப்பேனே தவிர, வெறும் மெம்பராக எதிலேயும் நான் இருப்பதே இல்லை. (பலத்த - கைத்தட்டல்) நான் காங்கிரசிலே கொஞ்ச நாளிருந்தேன். (1919 முதல் 1925 வரை) அதிலேயும் நான் தலைவனாதான் இருந்தேன்.
என் விருப்பப்படி நடக்கலே. காங்கிரசை விட்டு விலகினேன். அந்த மாதிரி நான் துடுக்காகவே இருந்தேன். எப்படி எப்படியோ வசதி ஏற்பட்ட பிறகு நான் துடுக்காகவே பேசப் பழகிட்டேன். அதுக்குத் தகுந்த ஆராய்ச்சிகளையும் செய்தேன்.
எனக்குப் புத்தி இப்படிப் போயிட்டுது (சிரிப்பு) யாரும் கவனிக்காத சங்கதிகளைத்தான் நான் கவனிக்கிறேன் (கைத்தட்டல்).
நம்ம நாட்டிலே நான் சொல்றேனே இன்னைக்கும் ஒருவனுக்குக்கூட,
தான் ஏன் தேவடியா மகனாக இருக்கிறான்? பாப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருக்கிறான், இவன் குச்சிகாரி மகனாகஇருக்கிறான், நாலாவது ஜாதியா இருக்கிறான்
பாப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருக்கிறான், இவன் குச்சிகாரி மகனாகஇருக்கிறான், நாலாவது ஜாதியா இருக்கிறான் இந்த கவலையே இவனுக்கு இல்லையே (கைத்தட்டல்) யாருக்காவது இருக்குதுன்னா எழுந்திரிச்சி
நின்னா நான் வணங்குகிறேன்.
அவனுக்கு தெரியும் காத்தாலே அவன் சாமியைக் கும்பிடுவான். நெற்றியிலே சாம்பலைப் போட்டுக்குவான். மண்னைப் பூசிக்குவான், கோயிலுக்கு போவான், சாஸ்திரங்களைப் படிப்பான். இதுக்கெல்லாம் என்னா அர்த்தம்?
கோயிலுக்குப் போறவங்களும் சாஸ்திரங்களைப் படிக்கிறவங்களும் நாமம் போட்டுக்கிறவங்களும் - சாம்பலடிக்கிறவங்களும் இதுக்கு என்னா அர்த்தம்ன்னா? ஆமாம் நான் பாப்பானுடைய வைப்பாட்டி மகன்தான் (சிரிப்பு கைத்தட்டல்)
நான் குச்சிக்காரி மகன்தான் (மீண்டும்சிரிப்பு) என எழுதறதுக்கு இதிலே கையெழுத்துப் போடற மாதிரி (கைத்தட்டல்). அதைஏண்டா செய்றேன்னா?
அதுக்கு நான் உசுரே கொடுப்பேன்ம்பான். அடே நீ சாம்பலடிச்சி, நீ நாமம் போட்டு, நீ கோயிலுக்குப் போயி,
நீ வெங்காடஜலபதிக்கு நீ தேவடியா மகனா இருக்கிறியே? நீ ஏன் சிந்தனை பண்றதில்லே? நீ தேவடியா மகன். மதத்திலே தேடிவயா மகன் - கோயிலிலே தேவடியா மகன் - சாஸ்த்திரத்திலே தேவடியா மகன் - குச்சிக்காரி மகன் (சிரிப்பு) (கைத்தட்டல்) மன்னிக்கணும் நீங்க. நான் சொல்றதுனாலே நீங்க
கோவிச்சிகாதீங்க. இது பற்றி எவனுக்குமே கவலை இல்லியே? இன்றைக்கு நடைபெறுகிற சட்டத்தை எடுத்துக்கிட்டா நாம நாலாவது ஜாதி நாம சூத்திரன், நாம தாசிபுத்திரன் அந்த நாய்கள் (பாப்பான்க) பிழைக்கிறதுக்காக. நம்ம ஆளுக இருக்கிறானே தவிர, நம்மை சூத்திரன்னு இருக்குதேன்னு,
எவனுக்கும் வெட்கமில்லே. முடியிலே.ஆனால் நம்மை எப்படியோ கொண்டு வந்து மாட்டி வைச்சிட்டான். வெட்கப்படறதுக்கே இல்லாமே? அதிலே வெட்கபட்டா பிழைக்க முடியும். நாமதான் அதுக்கு சத்தம் போட முடியுது. இப்படி ஒவ்வொரு காரியத்திலேயும் கோயிலுக்கு போறான்.
நிஜமாக அவன் பாப்பானுடையவைப் பாட்டிமகன்னுதானே போறான். அவன் பக்தன்னு நினைச்சிகிட்டு போறது நம்மை ஏமாத்தித்தானே? கோயிலுக்கு போறவன் பின்னே என்னா நினைச்சிகிட்டு போறான்? நாம தாசி மகன் சூத்திரன்னு. நான் பந்தயங்கட்டிக் கேட்கிறேனே?
நான் சூத்திரன்னு ஒப்புக் கொள்ளாதவன் எவனாவது கோயிலுக்கு போறானா? கைத்தூக்கட்டுமே யாராவது? நான் சூத்திரன் அல்ல. நான் மனுஷன்னு நினைச்சிகிட்டுதான் நான் கோயிலுக்குப் போறேன் அப்படீன்னு யாராவது கைத்தூக்கட்டுமே? இல்லே. நம்முடைய இழிவை நினைச்சி நான் சொல்றேன் இதெல்லாம் இல்லே,
போவான் கோவிலுக்கு, திருவானைக்காவலுக்கு, வெங்காயத்துக்குப் போவான். அங்கேயில்லே. இந்த தாயுமானவர் சாமி கோயிலுக்கு வெங்காயத்துக்குப் போவான். சீரங்கம் ரெங்கநாதசாமி கொழுக்கட்டைசாமி அங்கே போவான். எந்தப் பேராலே? சாமிகிட்டே நான் சூத்திரன்னு காட்டிக்கிறதுக்குத்தானே அங்கே போறான்.
வெளியிலேயே தானேநிற்கிறான்.கோயில்சாமிஇருக்கிற வாசற்படிகிட்டே தான் நிற்பான். ஏன்டா சாமியிருக்கிற கருவறைக்குள் போகலே? (சிரிப்பு) துணிந்து நீ அங்கே போனா உன்னைப் பாப்பான் கல்தா கொடுப்பான்?
ஏன்டா தேவடியா மகனே நான் இருக்கிற இடத்துக்கு நீ சூத்திரன் ஏன் உள்ளே வந்தேம்பான்? சாமி சாமி தெரியாது வந்திட்டேன்னு கன்னத்திலே போட்டுகிட்டு வெளியே வந்திடுவான்.இந்த மாதிரி இழிநிலையை ஒத்துகிட்டு எவனாவது கோவிலுக்குப் போவானா? இல்லே.
அங்கேயிருக்கிற பாப்பானையாவது கேட்பானா நீ என்னடா ஒஸ்தி? நான் என்னடா மட்டம்னு? அடே நீ இராத்திரி எல்லாம் மாமா வேலை பண்ணிப் போட்டு குளிக்காமல் (கைத்தட்டி சிரிப்பு) நீ உள்ளே வந்து புகுந்துகிட்டே; நான் குளிச்சி முழுகி சுத்தமா பட்டுகட்டிகிட்டு,
பட்டை போட்டுகிட்டு, வந்திருக்கிறேன். என்னை ஏண்டா சூத்திரன்னு வெளியே நில்லுங்கிறீயான்னு கேட்க வேண்டாமா? அவன் என்னா பண்ணினாலும் அவன் பிராமணன் தான். ஜாதியை தர்மத்தைக்காக்க பொண்டாட்டியை விட்டுக்கொடுத்து பிழைச்சாலும் அவன் பிராமணன். திருடினாலும் அவன் பிராமணன். கொள்ளை அடிச்சாலும்
அவன் பிராமணன். கொலை பண்ணினாலும் அவன் பிராமணன். ஒரு பொம்பளையைக் பலாத்காரம் பண்ணினாலும் அவன் பிராமணன் பார்த்துக்கடாங்கிறானே அவன். சூத்திரன் எவ்வளவு பக்தியோட இருந்தாலும் அவன் தாசிமகன். நாலாவது ஜாதி. இதையெல்லாம் படிங்க ஞான சூரியன் என்ற நூலை. அதுக்கு ஏன் போவானேன்?
இராமாயணத்திலேஇருக்குதே.அதைப்பார்க்க மாட்டேங்கிறான். ராமாயணத்தைத் தெருத்தெருவா வாசிக்கிறானே, ராமனே சொல்றான் ஆரிய தர்மம் காக்க சூத்திரனைக் கொல்லத்தான் நான் வந்தேன். ஜாதி காப்பாத்த சூத்திரனைக் கொல்லணும். அப்படீன்னல்ல சொல்றான். அது அக்கிரம மடான்னு சொன்னா கேட்கமாட்டேன்கிறான்.
அந்த இராமாயணத்தைத் தான் படிக்கிறானுங்க. யார் இருக்கிறா அதைப் பற்றி எடுத்துச் சொல்ல? என் (உடல்) நிலைமை எனக்கு இப்ப வயசு 89 ஆயிப்போச்சி. இப்பவே எனக்கு தொல்லை. இரண்டு பேரை பிடிக்காமல் என்னால் நடக்க முடியாது.
ஒண்ணுக்கு (சிறுநீர் கழிக்கவும்) வெளியே போகனும்ன்னா உட்கார்ந்திருக்க முடியாது. நின்னுகிட்டே தான் இருக்கணும். நான்போயிட்டா நாளைக்கு எவன் சொல்வான் இதைஎல்லாம். இல்லே யார் திருந்துவா?

நான் செத்தவுடன் அவனவன் என்னை பூசை பண்ணுவானே தொலைஞ்சானே சண்டாளப்பயல்னு?
(கைத் தட்டல்) இருக்கிற நிலைமை மாறலியே? சீர்திருத்தமாகலியே? புதுக்கோயில் கட்ட 1ஙூ (ஒண்ணரை) லட்ச ரூபாய் அதுக்கு பணம் அனுப்பறான்? இதிலே எவன் பிழைப்பான்? பாப்பான் பிழைப்பான். அய்யங்கார் பசங்க பிழைச்சாங்க. நம்ம பசங்க கெதி என்னாச்சி?
அவன் கிட்டேகாசைக் கொடுத்திட்டு அவன் காலைக்கழுவித் தண்ணீர் குடிக்கிறது. சிறப்பு என்னா? தாசி புத்திரனா இருக்கிறான் அவன். ஏன் அந்தக் கோவில்? அது புதுக் கோயிலு . அது கட்டின பிறகு நீ அங்கே ஒரு புதுத்தேவடியா மகனாகத்தானே ஆகப் போறே நீ. எந்தக் கோயில் கட்டினாலும்?
நீ உள்ளே போகிறாப்பிலே கோயிலு கட்ட முடியுமா? எதுக்குச் சொல்றேன்?கோயிலிலே சாமி இருக்கிற பக்கத்திலே சூத்திரன் வரக் கூடாது.

சூத்திரன் வந்தால் சாமி தீட்டாய்ப் போய்டும் ஏன்னா? நீ தீண்டாதவன்.அவன் (பாப்பான்). அப்படி சொன்னதுக்கப்புறம் சூத்திரப் பசங்க எங்கே மாறியிருக்கிறான்?
நம்ம மந்திரிகளும் அங்கே போயி சாமி கும்பிடறானுங்களே? (சிரிப்பு) பத்திரிகைக்கார திருட்டுப் பசங்களெல்லாம் அதே மாதிரிதான். கோயிலு சாமி பற்றி பரப்பறது.

மனுஷனுடைய அறிவைப் பற்றி, மானத்தை பற்றி, தன்னுடைய வாழ்க்கையைப் பத்தி, என்றதே இல்லை?
யார் சொல்லப் போறா இது பற்றி எல்லாம் உங்களுக்கு? நீ இப்ப. முன்பு உன் அப்பன் இருந்தான். பாட்டன் இருந்தான். உங்க பாட்டி இருந்தாள். நாசமா போனாங்க - மாறினாங்களா? அவுங்க பிள்ளைகள் எல்லாம் மாறியிருக்க வேண்டாமா? அவர்கள் பிள்ளைகளாவது மனுஷனாக இருக்க வேண்டாமோ?
அவனும் தேவடியா மகனாகவே இருக்கணும். அதுவும் அவன் சூத்திரனாகவே இருக்கணும். நாலாவது சாதியாய் இருக்கணும். அப்புறம் நீ இருந்தென்னா? செத்தென்னா? ஈனசாதியைப் பரப்பிக்க நாம ஒரு கூட்டமா? நீ எத்தனைக் குட்டிபோட்டாலும், அதெல்லாம், நீயும், ஈன ஜாதிதானே? நாலாவது
ஜாதியாகத் தானே ஆவப் போவுது? அதைப் பற்றி எவனுமே கவலைப்படறதில்லேன்னா மனுஷனுக்கு எவ்வளவு நாளாகக் கவலை இருக்கிறது? பெரிய மனுஷன் பாருடா அந்தப் பண்டாரப் பயல் - அவன் சாமியைத் திட்டறான். அவன் மதத்தை திட்றான். அவன் அதைச் சொல்றான் - இதைச் சொல்றான்
-அப்படீன்னுதான் அவன் சொல்றானே தவிர - அவன் சொல்றதிலே என்னா தப்பு? நம்ம யோக்கியதை எப்படிடா இருக்குதுன்னு? யார் சிந்திக்கிறா? எவனும் சிந்திக்கிறதில்லே?.

இந்தஎன்பிறந்தநாளுங்கிறது நம்முடையக் கொள்கையைப் பாராட்றதுக்கு. நம் கொள்கையை பரப்ப ஒரு வாய்ப்புதான்.
எல்லாரும் அதுக்குத்தான் செய்றாங்க. நீங்க என்னை வாழ்த்தறது அது மிக மிக சாதாரணம். தலைவர் சொன்னார். நாம வாழ்த்தறதுக்கு நமக்கு யோக்கியதை இல்லேன்னு ஜாடையா சொன்னார். நாம ஒரு பிள்ளையை வாழ்த்துறதுன்னா அதிலே என்னாஅறிவுஇருக்குது?
வாழ்த்தறதுங்கிறது என்பதெல்லாம் அய்யா அது ஒரு முட்டாள் தனம் தானே?. வேறு அதிலே என்னாபுத்தி இருக்குதா? உன்னை ஒருத்தன் பார்த்து நீ மகாராஜனாய் இருன்னா நீ ஆயிடுவாயா?(கைத்தட்டல்) நீ நாசமாபோ ன்னா நீ போயிடுவாயா? (சிரிப்பு கைதட்டல்) சொல்லுங்க. அந்த வார்த்தைக்கு ஏதாவது மதிப்பு உண்டோ?
உண்மையைச் சொல்றேன். அதனாலே உளர்றான்னு நினைப்பீங்க. நீங்கள் ஏண்டா இப்படிச் சொல்றான்னு நினைப்பீங்க. நீங்கள் என்னை வாழ்த்தறதெல்லாம் முட்டாள்தனம் நான் பெரிய கூட்டத்திலேயெல்லாம் பேசியிருக்கிறேன். இது என்னா சின்னக்கூட்டமாக இருக்கிறீங்க. மந்திரிகள்,
அதிகாரிகள் ஜட்ஜ்கள் அவுங்க இருக்கிற கூட்டத்திலேயும் வாழ்த்தறதுங்கிறது ஒரு முட்டாள் தனம்னு நான் சொல்லியிருக்கிறேன்.

நாமம் போட்டுகிறது எப்படி முட்டாள் தனமோ; அது போன்றது வாழ்த்தறதும் என நான் சொல்லியிருக்கிறேன். அதுக்கு என்னா அர்த்தம் சொல்லுங்களே நீங்கள் தான்?
இன்னும் ஒரு 100, 200 வருஷத்துக்கு இருன்னு சொன்னா, எனக்கு என்னா லாபம்? ஒரு நாள் எச்சா இருக்க முடியுமா? என்னை அவரு 100வருஷம் இருக்கனும்னா அவருக்கு வேடிக்கையா நான் சொல்லுவேன். ஏன் அய்யா இவ்வளவு சிக்கனம்,
இவ்வளவு பிச்சக்காரப் புத்தி. ஒரு ஆயிரம் வருஷமிருன்னு சொல்லே என்னா கெட்டுப்போச்சி (சிரிப்பு) (கைதட்டல்) ஆயிரம் வருஷமிருன்னு சொல்றது ஒண்ணுதான். நூறு வருஷம்கிறது ஒண்ணுதான். அஞ்சு வருஷமிருங்கங்கிறதும் ஒண்ணுதான். நம்ம பேச்சினால் சாவைத் தடுத்து நாம இருக்கமுடியுமோ?
அது நம்மவர்களுக்குப் பழக்கமாப் போச்சி பாப்பான் பிச்சை எடுக்கிறதுக்கு நீ நீடுழிகாலமிரு - ஆசிர்வாதம் ஆசீர்வாதம்ன்னு பாப்பான் இதைச் சொல்லிக்கொடுத்து ஆசீர்வாதம்ங்கிற சொல்லுக்கு தமிழிலே கண்டுபிடிச்சான் வாழ்த்துறதுன்னு. மத்தது அப்படி என்னா நடக்கும்?
வாழ்த்தறதிலே என்னா ஆகும்? நான் வாழ்த்தறதுன்னு - சொன்னா நினைச்சா நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்லுவதுதான். எதுக்காகச் சொல்றேன் அது ஒரு மூடநம்பிக்கை.

இப்படியாக நாங்கள் திருத்தமடைய வேண்டியது காரியம் ரொம்ப இருக்குது? ஏன் ரொம்ப இருக்குதுன்னா?
எவனும் இதையெல்லாம் திருத்தறதுக்காகப் பாடுபடலே? எவன் வந்தாலும் இந்த மூடத்தனத்தை வளர்க்கிறதுக்குத்தான் பாடுபட்டானுங்க - சாமியாராவது பக்தனாகிறது புலவனாகிறது - கவிஞனாகிறது. பெரிய பிரசங்கியாகிறது - பழைய முறையை வளர்க்கிறதுக்குத்தான். அதை அதிலிருக்கிற தப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்லி;
மக்களிடையேயுள்ள அந்த முட்டாள்தனத்தைத் திருத்தி நமக்கு இருக்கிற இழிவைமாத்த வேணும்னு எவனும் பேசமாட்டான். பேச பயப்படறான். உத்தியோகஸ் தனாயிருந்தா அவன் மேல் வேலைக்குப் போயிடுவான். அவன் அரசியல்காரனானா அவன் ஓட்டு வாங்கப்போவான்.
அவன் வியாபாரியாயிருந்தால் அதனாலே பணம் சம்பாதிக்க மக்களிடம் தயவு தாட்சண்யம் பாப்பான். இவனை எல்லாம் ஒண்ணு சேர்க்கமுடியுமா? இவனெல்லாம் இந்த மூடநம்பிக்கையை
முட்டாள்தனமான இக்காரியத்தை கண்டிக்க முடியுமா? அதனாலேதானே இவைகள் இன்னமும் இருக்குது.

வாழ்விலே இன்னமும் தாசிபுத்திரன் - சூத்திரத்தன்மை இருக்குதே? நான் பிறக்கிற அன்னைக்கும் நான் சூத்திரன்தான். தாசி மகன் தான் - தாசிபுத்திரன்தான்.
எனக்கு இப்ப 89 வயசாச்சி இன்னும் இந்த ஈன ஜாதித்தன்மைதான். மாறல்லியே. அப்படி எவனாவது மாற்ற முற்பட்டால் நான் புத்தனாயிட்டேன், நான் சமணனாயிட்டேன், புத்தன் சமணனாகிறதிலே தான் இருக்கிறான். வாயிலேதான் சொல்லலாமே தவிர, காரியத்திலே ஒண்ணும் செய்றதில்லே. சாமியில்லே.
அதுக்குப் பொண்டாட்டியில்லே. ஒண்ணுமேயில்ல. அரசாங்கம் மூடத்தனத்தை வளர்த்தது - காங்கிரசு வளர்த்தது மத சம்பிரதாயம் வளர்த்தது - இலக்கியம் வளர்த்தது - மொழிவளர்த்தது - மூடத்தனத்தை.
தேசியமென்றாலே சாமியை நம்பணும். நெற்றியிலே சாம்பலடிச்சிக்கணும். ஆகவே தோழர்களே இனிமக்களுடைய வாழ்வுக்கு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய விஷயம். மக்கள் அடைய வேண்டிய நிலைமை ஆகியவைகளை மாத்தி அமைக்கணும். மாத்தித் தான் அமைக்கணும்.
ஏறக்குறைய 3000 வருஷமா இந்தப்பேரு இருக்குது. சூத்திரன் என்பது தமிழனோ, ஆந்திரனோ, கன்னடியனோ, மலையாளியோ அவனெல்லாம் சூத்திரன். இன்னைக்கு இல்லே இது 4000 வருஷமா இருக்குது. இப்பதான் அது ஒழிய சூத்திரன்கிறது கத்தறாப்பிலே ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்பெல்லாம் சொன்னா ஒழியணும்ன்னா அடிச்சே கொன்னுபோடுவாங்க.

என்னைக் கூட மூன்று மாசத்துக்கு ஒருக்கா நாலு மாசத்துக்கு ஒருக்கா உன்னைக் குத்தப் போறோம், கொல்லப் போறோம்ன்னு மிரட்டி கடிதங்கள் வருது. நேற்று முந்தாநாளு கூட (6.12.1967) பத்திரிகையிலே பார்த்தேன்.
கடவுளுடைய அவதாரங்களை எடுத்துக்கோ வேதத்தைப் பழிச்சான். அவனைக் கடவுள் கொன்னாரு. ஜாதியைக் குறை சொன்னா அவனைக் கொல்லு. மதத்தைக்குறை சொன்னா அவனைக் கடவுள் கொன்னாரு . ஏன்? ராவணனை ஏன் ஒருத்தன் கொன்னான்? இரணியனைஒருத்தன் ஏன் கொன்னான்? இராவணனுக்கு என்னா வேலை?
பாப்பானை எங்கு கண்டாலும் உதைன்னான். பாப்பான் எங்கே பிரசாரம் பண்ணினாலும் உதைன்னான். இரணியன் என்னா சொன்னான்? பாப்பான் ஊட்டை எல்லாம் இடின்னான். அவன் வீட்டுக்கு நெருப்பு வையின்னான். எவனெவன் பூணூல் போட்டிருக்கிறோனோ அவனை எல்லாம் வெட்டித் தள்ளுன்னான்.
யாரு? இரணியன். அதன்படி சொன்னான். பாப்பானை எல்லாம் வெட்டித் தள்ளுன்னான். இரணியன் இருந்தானா?அப்படிச் சொன்னான்னாங்கிறதல்ல இப்பகதை?

பாப்பான் அவ்வளவு முன்ஜாக்கிரதையாக எழுதி இருக்கிறான் எவனாவது உன்னைக் குறை சொன்னா அவனைக் கொல்லுன்னு.
கடவுள் பத்தவதாரம் - எடுத்தாருங்கிறான். ஒன்பது அவதாரம் எடுத்தாருங்கிறான். ஒன்பது அவதாரமும் - சாமிக்கு - வேதத்துக்கு - பாப்பானுக்கு - கோயிலுக்கு -குளத்துக்கு - விரோதமாயிருந்தவனை - பாப்பானுடைய தர்மத்துக்கு -யாகத்துக்கு-
மற்றும்பூஜைமுதலானவற்றுக்கு-விரோதமாக இருந்தவனை எல்லாம் கொன்னதுதான் அந்த பத்தவதாரக் கதைகளாகும்.

எப்படி சூரபத்மனை கொன்னான் கந்தன்கிறவன்? எங்கெங்கே பாப்பானிருக்கிறானோ? அங்கேயெல்லாம் தேடிப் போயி (சூரபத்மன்) உதைச்சான் - கொன்னான் - அப்படீன்னு - கதை. அதனாலே
தேவர்களுக்குக்கெடுதி பண்ணினவனைக் கொன்னான் (கந்தன்) இதைச் சுருக்கமா சொல்றேன். தேவர்ன்னா - பாப்பான், கெடுதிபண்ணினவன் அசுரன். அசுரன்னா - சூத்திரன். அகராதியிலே அப்படி இருக்குது. நான் சொன்னேனே ஆரம்பத்தில் ஞானசூரியன் நூல்
அதிலே இருக்குது. மனுதர்ம சாஸ்த்திரத்திலே உள்ளது உள்ளபடியே, ராட்சதன்கிறவன் சூத்திரன். அரக்கன்கிறவன் சூத்திரன். அந்தக் கதையை நாமளும் படிக்கிறோம். அந்தக் கதைப்படி தான் அவன் (பாப்பான்)நடந்துக்கிறான். இதையெல்லாம் நீங்கள் நல்லபடி சிந்திக்கணும்.
இப்ப இருக்கிற காங்கிரசு அரசாங்கம் (டில்லியில்) நம்ம ஆளுங்களும் அதிலே இருக்கிறாங்க. நம்ம ஆளு ரொம்ப பேரு இருக்கிறாங்க. நான் இல்லேன்னு சொல்லல்லே. ஆனால் அவுக எல்லாம் கடவுளை நம்பணும். கடவுளை நம்புகிறவனுக்குத் தான் வேலை. கடவுளை நம்பாதவனுக்கு அதில் வேலை இல்லை. கண்டிப்பே அப்படிதான்.
அதிலே (காங்கிரசிலே). அதைத் தந்திரமாக ஏற்பாடு செய்திருக்கிறாங்க. அதுக்காக வேண்டியே காந்தி வாழ்க -ன்னு சொல்லவேண்டியது தான். கடவுளை நம்பு இராமனை நம்பு என்பதுதான்.ஜாதியை நம்பணும். வர்ணாசிரமத்தை நம்பணும். அவனவன் ஜாதி மதம்படித்தான் நடக்கணும். அப்படீன்னு காந்தி
சொன்னாருன்னுசொல்லிகிட்டு அதன்படி நடக்கிறவன் தான் காங்கிரஸ்காரன். எவனாவது ஒருவன் ஜாதியில்லே மதமில்லே, பார்ப்பானில்லே, பறையன் இல்லேன்னு ஒருத்தன் சொன்னான்னா அவன் பலத்தினாலே அதில் ஒட்டி கிட்டு இருக்கிறானே தவிர,
காங்கிரசுக்குள்ளே அவனைக் குழியிலே தள்ளி புதைக்கத்தான் பார்ப்பான். அப்படித்தான் வழக்கம்.

இப்ப வந்திருக்கிறது தி.மு.க. (திராவிடர் முன்னேற்றக் கழகம்) அரசாங்கம் தான். ஏதோ எங்களுக்கு கடவுள் நம்பிக்கையில்லே. நாங்கள் மதசம்பிரதாயமில்லே.
அப்படீன்னு சொல்லி எப்படியோ ஆட்சிக்குத் தமிழ்நாட்டில் வந்திட்டாங்க. மறுபடியும் அவுக கால் ஊன்றிடுவாங்கன்னு தான் தெரியுது. ஏன்னா ஓட்டு அவ்வளவு பெருசா இருக்குதல்ல. ஒரு மந்திரி ஒரு காரியம். இன்னொரு மந்திரி இன்னொரு காரியம். இப்படி எல்லாம் காரியம் பண்ண வேண்டியிருக்குது.
ஆனாலும் இன்னைக்கு ஒரு ஆட்சி நமக்கு இருக்குதுன்னா பகுத்தறிவு ஆட்சி என்பதன் பேராலே இந்தக் கருத்துக்களுக்கு இந்த ஆட்சி இருக்குது.

ஆகவே, அருமைத் தோழர்களே!, இன்னும் மக்கள் மாறலியே இவ்வளவு வருஷமாகியும்?. இவ்வளவு நாம பிரச்சாரம் பண்ணி சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு எத்தனை நாளாச்சி
1925லே காங்கிரசை விட்டு நான் வெளியே வந்து, 1925 லேயே குடியரசு ஆரம்பிச்சி 1925 லேயே சுயமரியாதை இயக்கம் வந்திட்டுதே. 1925 முதல் 1968 வரைக்கும் 43 வருஷமாக வேலை பண்ணுது. எவ்வளவு பேரைமாத்துச்சி?முடியிலியே.
கொஞ்சம் பேரைத்தான் மாத்த முடியுது. மாத்தினாலும் அவுக, அவ்வளவு பச்சையா சுயமரியாதை இயக்கத்தில் தொடர்ந்து இருக்க முடிவதில்லை.ஆனதினாலே அருமைத் தோழர்களே! இந்த பிறந்தநாளுங்கிறது யாருடைய பேராலே இது நடக்குதோ அவுகளுடைய கொள்கை என்னமோ அதைத்தான் சொல்லுவது. அந்த முறையிலே தான்
அவர்கள் என்னைப் பாராட்டு முடிஞ்சுது. என்னைப் பாராட்டினால் அதிலே எனக்குள்ள கொள்கையும் அதுக்குள்ளே இருக்குது. அதை எல்லாம் எனக்கே விட்டுட்டாங்க. நான் என்னையே பாராட்டிக் கொள்ள முடியுமா? அதனாலே நான் என் கொள்கையைப் பிரச்சாரம் பண்றேன்.

என்னுடைய கொள்கை என்னா?
மதமிருக்கக் கூடாது.
திருச்சி மக்கள் மன்றத்தில் பெரியார் 80 ஆவது பிறந்த நாள் விழா உரை (08.12.1967)
நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

15 Sep
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
Read 23 tweets
15 Sep
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
Read 4 tweets
15 Sep
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் நாய் தரகர் தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியா ?

அதிமுக முதுகில் சவாரியா ?

@Narayanan3 @BJP4TamilNadu @annamalai_k
சொந்தக்கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியுமா? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

அதிமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
உள்ளாட்சி தேர்தல்: அமமுக-தேமுதிக கூட்டணி முறிந்தது
Read 4 tweets
15 Sep
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
Read 25 tweets
15 Sep
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
Read 4 tweets
14 Sep
#HBDarignaranna
#MupperumVizha2021
#முப்பெரும்விழா
#DravidamisaLifestyle
#திராவிடம்_ஒரு_வாழ்க்கைமுறை

தொ. பரமசிவன்

அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.

நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.
Read 40 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(