நிலத்தின் பெயரையே மாற்றுவது அதைவிடப் பன்மடங்கு பேராபத்தாகும்.
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான சான்றுகள் சங்கத்தமிழ் இலக்கியங்கள் முழுதும் விரவி கிடக்கிறது. ஆனால், திராவிடம், திராவிடம் என்பதற்கான சான்றுகள் எதுவும் சங்கத்தமிழ் இலக்கியங்களிலோ, காப்பியங்களிலோ - 25/34
இல்லை என்பது மறுக்கவியலா பேருண்மையாகும். திராவிடத்திற்கான மூலச்சான்றுகள் கற்பனைத் திணிப்புகளாகவும், தமிழர்களல்லாத அந்நியர்களின் கூற்றுகளாகவும், சமஸ்கிருத மொழி இலக்கியங்களாகவும் உள்ளன. தமிழ் மொழிக்கென்று தனித்த இலக்கியங்கள் உள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளுக்கும் - 26/34
கூட இலக்கியங்கள் உள்ளன. ஆனால் திராவிட மொழிக்கென்று இலக்கியம் எங்கே உள்ளது ? முதலில் திராவிடம் என்பது ஒரு இனத்தின் பெயரா? மொழியின் பெயரா? நிலத்தின் பெயரா? திசையின் பெயரா? நிறத்தின் பெயரா? அல்லது தத்துவத்தின் பெயரா? திராவிடம், திராவிடர் எனும் சொல்லாடல்களுக்கு முதலில் - 27/34
திமுக அரசு விளக்கமளிக்க முன்வர வேண்டும். தமிழகத்திலுள்ள ஒருசில திராவிட அரசியல்வாதிகளைத் தவிர, எந்தத் தென்மாநில மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர் என்பதையும், எந்தச் சங்கத்தமிழ் இலக்கியத்தில் திராவிடம் என்பதற்கான சான்றுகள் உள்ளன என்பதையும் - 28/34
ஆளும் திமுக அரசு திராணியிருந்தால் தெளிவுப்படுத்தட்டும்.
தமிழ்ப்பேரினத்தின் வரலாறுகள் யாவும் மறைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட நிலையில் மீதமிருக்கும் இலக்கியச் சான்றுகளையும் திருடி, கையகப்படுத்தி, திராவிடமயமாக்க முயல்வது ஈனச்செயலாகும். ஆயிரமாண்டுகளாக தமிழர்கள் ஆட்சி - 29/34
அதிகாரத்தில் இல்லாதபோதும் தமிழர்களின் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றைத் தலைமுறைகள் கடந்து, கடத்தி வருபவை தமிழ் இலக்கியங்களேயாகும். இவ்வாறு தமிழர்களின் அறிவுக்கொடையாக, கருத்துக்கருவூலமாக விளங்கும் பழந்தமிழர் இலக்கியங்கள் மீது கை வைப்பதென்பது தமிழர் இனத்தையே - 30/34
முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் வஞ்சகச்செயலேயாகும்.
எனவே சங்க இலக்கியங்கள் என்றாலும் சரி, அதற்குப் பின்வந்த இலக்கியங்கள் என்றாலும் சரி எந்தவொரு தமிழ் நூல்களுக்கும் ‘திராவிட இலக்கியம்’ என்று பெயர்மாற்றம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கால்டுவெல் என்ற ஆங்கிலேயர் - 31/34
‘திராவிடம்’ என்று சொல்லிவிட்டார் என்பதற்காக தமிழ் நூல்களைத் தொகுத்து, ‘திராவிட இலக்கியம்’ என்று பெயர்மாற்றுவது, சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் சட்டமியற்றியதற்காக தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் ஆரியர்களின் சூழ்ச்சிக்கு ஒப்பானது. அத்தகைய கொடுஞ்செயலை - 32/34
தமிழ் இளந்தலைமுறையினரும், இனமானத்தமிழர்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என அறுதியிட்டு உரைக்கிறேன்.
ஆகவே, ஆளும் திமுக அரசு தனது தமிழர் அடையாள அழிப்பு முயற்சியைக் கைவிட்டு, தமிழ் நூல்களின் தொகுப்பிற்கு, ‘தமிழ்க்களஞ்சியம்’ என்றே பெயர் சூட்டவேண்டுமென வலியுறுத்துகிறேன் - 33/34
அதனைச் செய்யத்தவறி, தமிழர்களின் உணர்வுகளை அலட்சியம் செய்யும்பட்சத்தில், மிகக்கடுமையான போராட்டங்களை அரசு எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உன்னையும் என்னையும் போல் அந்த இளம் பிள்ளைகள் வானுயர்ந்த பகழ்மிக்க பல்கழைகழகங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்ல, ஆனால் வானத்தை விடவும் புகழ்மிக்க லட்சியங்களுடன் வாழ்ந்தனர்.
எந்த நடிகனையும் தலைவராக கொண்டாடியதில்லை, ஆனால் உன்னதமான ஒருவனை அவர்கள் தலைவராக கொண்டிருந்தனர். அவர்கள் - 1/4
திரையரங்குகளில் சத்தம் போட்டதில்லை, பதுங்கு குழிகளில் நிசப்தமாய் இருந்தவர்கள். விக்கெட்டுகள் விழுந்துவிட்டதற்க்காக பொறுமியவர்களல்ல, விழும் பிணங்களுக்கிடையே ரவைகளை பொறுக்கிக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் பொறியியல் படித்தவர்களல்ல, ஆனால் மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை - 2/4
தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்.
விடுதலை வேள்விக்கான மூலப் பொருட்களிலிருந்து முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்.
அவர்கள் மாலுமிகள அல்ல கப்பல் ஓட்டினர், அவர்கள் விமானிகளல்ல விமானம் இயக்கினர். அவர்கள் தத்துவம் படித்தவர்கள் அல்ல தத்துவமாகவே வாழ்ந்தவர்கள் - 3/4
அறிவிப்பு : - செப். 11, பாட்டன் பாரதியார், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப்போற்றும் நிகழ்வு - தலைமையகம் (சென்னை) #நாம்_தமிழர்_கட்சி
பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் - 1/3
அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் - 2/3
பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சீமானை வேட்டையாடாமல் விடமாட்டோம் நாங்கள்! சீமான் தான் பிரச்சனை, தமிழ் பேசும் தெலுங்கர்கள் நாங்கள் வேட்டையர்கள்...
அண்ணன் சீமானை பகிரங்கமாக மிரட்டும் திராவிடம் என்ற போர்வைக்குள் 50 ஆண்டுகளாக நாங்கள் தமிழர்கள் என்று சொல்லி கொண்டிருந்த திருடர்கள் தற்போது - 1/5
தங்கள் உண்மையான கொடூர முகத்தை காட்டி மிரட்டுகிறார்கள் அவர் யார் என்று தெரியாமல்...
32 நாடுகள் ஒன்று சேர்ந்து படையெடுத்து வந்த போதும் எதிர்த்து நின்ற புறநானூற்று மாவீரன் மே.தகு.வே.பிரபாகரனின் தம்பிடா சீமான் - 2/5
சிங்கள அரசு போரில் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த வேலையில் அஞ்சாமல் சென்று தாய்ப் புலியை சந்தித்து அவரிடம் ஆயுதப் பயிற்சியும் கற்று வந்த மானமறத் தமிழன்டா #செந்தமிழன்_சீமான் - 3/5
உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவரம்மா அவர்கள் உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரம்மா அவர்கள் மாவட்ட வனத்துறை வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் எனதன்பான வேண்டுகோளுடன் கூடிய வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு அரசு அண்ணாபண்ணை மற்றும் தோட்டக்கலைதுறை க்கு சொந்தமான பகுதிகளிலும் தைலமரக்காடுகள் உள்ள புல்வயல் ஊராட்சி பகுதிகளிலும் "மான்கள்" நிறைய நடமாடி வருகிறது கூட்டமாக வாழ்ந்துவரும் மான்களை அப்பகுதி மக்கள் அனைவரும் கண்டு வருகின்றனர் - 2/4
இந்நிலையில் மான்களை வேட்டையாடும் நோக்கில் சில சமூகவிரோதிகள் இரவுபகலென்று பாராமல் குறிப்பாக இரவு நேரங்களில் முகக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் துப்பாக்கிகளுடன் இப்பகுதிகளில் சுற்றி பதுங்கி மான்களை சுட்டு வேட்டையாட வருகின்றனர்.
முதல் முறையாக ஓர் அரசியல்வாதி மக்களுக்கு இலவசங்கள் கொடுத்து, மதுக் கடையை திறந்து விட்டு இளைஞர்களை குடி போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களை உழைப்பிலிருந்து வெளியற்றியது தான் இந்த இரு பெரும் திராவிட கட்சிகளின் சாதனை என்று உண்மை பேசியுள்ளார் 👇👇👇
இந்த இரு பெரும் கட்சிகள் தேர்தல் வரும் போது மதுவை தடை செய்வோம் என்று புழுகுவார்கள், ஆனால் மூடவே மாட்டார்கள், ஏன்?சாராய ஆலை வைத்திருப்பவர்கள் இந்த இரு திராவிட கட்சிகள் டாஸ்மாக் கொள்முதல் பூராவும் இவர்கள் ஆலையில் இருந்து தான் சப்ளை கொள்முதல் செய்யப்படுகிறது - 2/4
இவர்களுக்குள் திமுக & அதிமுக நல்ல புரிந்துணர்வு உள்ளது வெளில் கீரியும் பாம்பும் போல நடிப்பாங்க, ஆனா யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுவை அரசு இவர்களின் சாராய ஆலையில் இருந்து அரசு கொள்முதல் செய்யும் இதிலேயே கொள்ளை லாபம். அடிப்பார்கள், அது போக பார் வைக்க லஞ்சமோ லஞ்சம் - 3/4