கலைஞர் ....
அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆள் தூக்குவது அரசியலில் சகஜம். புதுச்சேரி எனும் அதிகாரம் குறைந்த ஒன்றியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும், இந்திய ஒன்றியத்தின் ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க. நடத்தி வருகிறது. அதிகார பலத்தால் எதிர்க்கட்சிகளை சிதறடிப்பது..
என்பது ஆளுந்தரப்பின் ‘ராஜதந்திரங்களில்’ ஒன்று.
புதுச்சேரிக்கு #ராகுல்காந்தி வருவதற்கு முன்பாக, முதல்வர் நாராயணசாமி அரசின் பெரும்பான்மை பலத்தை இழக்க வைக்கும் வேலைகளைக் கச்சிதமாக செய்திருக்கிறது பா.ஜ.க. அண்ட் கோ. காரியம் முடிந்ததும், இத்தனை நாள் குடைச்சல் கொடுத்து வந்த..
துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை மாற்றிவிட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசையிடம் பொறுப்பு வழங்கும் நிகழ்வும் ‘இயல்பாக’ நடந்துள்ளது. இப்படிப்பட்ட ‘இயல்பு’கள் எல்லா ஆட்சியிலும் நடக்கும்.
1991-96 #ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தி.மு.க. பிளவுபட்டிருந்த நேரம்.
வைகோவுக்கு எதிராக, தி.மு.க சார்பில் கடுமையான பிரச்சாரம் செய்து வந்தார் காளிமுத்து. எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க அமைச்சரான அவர், ஜானகி அணியில் இருந்து ஜெயலலிதாவை ‘இலக்கிய ரசம் சொட்ட’ விமர்சித்துவிட்டு, பிறகு ஜெயலலிதா பக்கம் சென்று, அங்கு சரிப்படாமல் தனது..
மாணவப் பருவத்து தாய்க் கழகமான தி.மு.க.வுக்கு வந்திருந்தார். ம.தி.மு.க உருவான பிறகும் தென்மாவட்டங்களில் தனது வலிமையைக் காட்டுவதற்காக மதுரையில் மண்டல மாநாடு நடத்தியது தி.மு.க.
மாநாட்டுக்காக வழக்கம்போல ரயிலில் பயணித்து, அதிகாலையில் மதுரையில் இறங்குகிறார் கலைஞர்.
அன்றைய நாளிதழ்களில் தலைப்புச் செய்தி, ‘காளிமுத்து அ.தி.மு.கவில் சேர்ந்தார்’ என்பதுதான். அதாவது, தி.மு.க மண்டல மாநாட்டுக்காக மதுரைக்கு கலைஞர் வரும்போது அவருக்கு ‘ஷாக்’ தருவதற்கான ஜெயலலிதாவின் ராஜதந்திரமாம் இது.
கலைஞர் என்றால்தான் பத்திரிகையாளர்களுக்கு தக்காளி தொக்காச்சே!
தி.மு.க.வை விட்டு அ.தி.மு.க.வுக்கு காளிமுத்து போனது பற்றி, மதுரை செய்தியாளர்கள் ஆளாளுக்கு கேள்வி கேட்டார்கள். மொத்தக் கேள்விக்கும் ஒற்றைப் பதில் சொன்னார் கலைஞர்.
“நரி பரியானதும், பரி நரியானதும் மதுரையிலேதான் நடந்துச்சி”
செய்தியாளர்களின் புருவத்தை உயர வைத்த கலைஞர், இப்போதும் உயர்ந்து நிற்கிறார் மதுரையில்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.
நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.