சமணப்பள்ளிகள் தொடங்கப்பட்டு அனைவருக்கும் பெண்கள் உட்பட கல்வி அளிக்கப்பட்டது
பிராமண ஆதிக்கம்
ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மதேய நிலங்கள் பிடுங்கப்பட்டு உழுபவனுக்கு நிலம் கொடுக்கப்பட்டது.
தமிழ் செழித்தோங்கிய பொற்காலம் களப்பிரர்கள் காலம்.
வேள்விக்குடி செப்பேட்டில் களப்பிரர்களை கலியுக அரசர்கள் என்றும் முற்காலத்தில் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை
களப்பிரர்கள் பிடிங்கிக்கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.
தமிழ் சங்கம் முதன் முதலில் இருந்ததை குறிப்பிட்ட நூல் இறையனார் களவியல் உரை காலம் 7ஆம் நூற்றாண்டு பக்தி இலக்கிய காலம்.முசிறிய நீலகண்டன் என்ற பார்ப்பனர் இது பல காலமாக வாய்மொழியாக வந்த உரை என்று குறிப்பிட்டு
அவரே இதை முதன் முதலில் எழுதுகிறார்.அதில் எவ்வளவு வரலாற்று திரிப்பு நடந்திருக்கும் என்று தமிழ் கூறும் நல் உலகின் சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.
சரி அப்படி என்ன கூறியுள்ளார்.தமிழ் சங்கம் 3 சங்கமாகவும் மொத்தம் 9990 ஆண்டுகள் நடந்ததாகவும் முதல் சங்கத்திற்கு தலைமை தாங்கியவர் இறையனார்
என்ற சிவன் என்றும் சிவன் வடநாட்டில் இருந்து அகத்தி முனியை வரவழைத்து தமிழுக்கு இலக்கணம் எழுதினார் என்றும் குறிப்பிடுகிறார்.
ஒருவனை ஏமாற்ற அவனுக்கு பெருமை புகுத்துவது பார்ப்பனிய தந்திரம் மூன்று தமிழ் சங்கம் 9990 ஆண்டுகள் வரலாறு என்பது பெருமை உகுத்தல் வடநாட்டில் இருந்து வந்த அகத்தி
முனிதான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார் என்பது பார்ப்பன மேன்மையை வரலாற்றில் திரிப்பது அவர்களின் தந்திரம்.
தமிழ்தேசியவாதிகள் இதன் முதல் பகுதி பெருமையை எடுத்துக்கொண்டு பிற்பகுதியை தவிர்த்து விடுவர்.ஒன்று இந்த புரட்டு வரலாற்றில் இரண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது மொத்தமும்
பொய் என்று தவிர்க்க வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்.
ஏன் இப்படி ஒரு புரட்டு வரலாறு நீலகண்ட பார்ப்பனரால் எழுதப்பட்டது.அதற்கு பக்தி இலக்கிய காலம் முன் நடந்த ஆட்சியை பார்க்க வேண்டும் அதுதான் களப்பிரர்கள் ஆட்சி.உண்மையில் தமிழை வளர்த்தவர்கள் செழுமை படுத்தியவர்கள்.இலக்கியங்களை
இயற்றியவர்கள்.அவர்களின் வரலாற்றை மறைக்கத்தான் இந்த இருட்டடிப்பு.7ஆம் நூற்றாண்டு நீலகண்டனின் களவியல் உரைக்குமுன் எந்த தமிழ் இலக்கியங்களிலும் சங்கம் தொடர்ப்பான குறிப்பு இல்லை ஆனால் இலக்கியம் இருந்தது அதுவும் பெரும்பாலானவை களப்பிரர் காலத்தில் தோன்றியது.
ஆனால் இவர்கள் களப்பிரர்கள்
தமிழ் சங்கத்தை அழித்தார்கள் என்று பார்ப்பனர்கள் வரலாற்றை திரித்தனர்.
தமிழ் எப்போதும் மக்கள் மொழியாக இருந்தது அதை வளர்ப்பதற்கு மன்னனோ சங்கமோ தேவை இருக்கவில்லை அதற்கு நம் இலக்கியங்கள்தான் சான்று உலகிலேயே எந்த நாகரிகத்திலும் இல்லாததுப்போல் மக்கள் வரலாறு பெருங்காப்பியங்களாக
தமிழர்களால் வடிக்கப்பட்டது, திருக்குறள் போல் அனைவருக்குமான பொதுமறை உருவானது.உலகில் வேறு எந்த இலக்கியத்திலும் மன்னர் பெருமையும் கடவுள் பெருமையும்தான் இருக்கும் ஆனால் தமிழில் மட்டும்தான் மக்களின் வரலாறு இலக்கியங்களாக இருந்தது.எந்த அளவுக்கு தமிழ் மக்கள் மொழியாக முற்போக்கு மொழியாக
இருந்தது என்றால் மாதவி என்ற விலைமகளை கதாநாயகியாக்கி இலக்கியம் படைத்தவர்கள் தமிழர்கள்.மாதவியின் காதலை உணர்வை வெளிப்படுத்தியது சிலப்பதிகாரம்.இது வேறு எந்த நாகரிகத்திலும் நடக்காத ஒன்று.
களப்பிரர்களை வீழ்த்தி பின்பு வந்த பக்தி இலக்கிய காலம்தான் மன்னர் பெருமையிலும் புராண பெருமையிலும்
தமிழர்களை கடத்தி சென்றுவிட்டனர்.
தமிழ் மன்னரின் மொழியாக இருந்திருந்தால் மன்னர் வீழும்போது தமிழும் வீழ்ந்திருக்கும் தமிழ் மக்களின் மொழி தமிழர்களால் காலம்காலமாக மக்களால் பாதுக்காக்கப்பட்ட மொழி.
தமிழ் மக்களின் வரலாற்றில் எப்போதுமே மதம் அரசு அமைப்பாக இருந்தது இல்லை அதற்கு நம்
இலக்கியங்களே சான்று தமிழர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சமணம்,பெளத்தம்,சைவம்,வைணம் என்று பின்பற்றினர்.ஒரே குடும்பத்தில் பல மதம் சேர்ந்த நபர்களும் இருந்தது சிலப்பதிகாரம் மூலம் தெரிய வருகிறது.
7ஆம் நூற்றாண்டுக்கு பிறகு பக்தி இலக்கிய காலம்தான் மத துவேஷத்தை மதவெறியை மதத்தை அரசு
அமைப்பாக மாற்றி மாற்று மத நம்பிக்கை கொண்டவர்களை கழுவில் ஏற்றி பிற்போக்குத்தனமும் தமிழ் இலக்கியங்களில் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வடநாட்டு புராணங்களை தமிழ்மயப்படுத்தி தமிழர்களை மடைமாற்றியது.
களப்பிரர்கள் காலம் தமிழர்களுக்கு பொற்காலம் பார்ப்பனர்களுக்குத்தான் இருண்டகாலம்
சாணக்கியன் என்ற ஒரு கதாப்பாத்திரம் உண்மையில் இந்திய வரலாற்றில் இருந்ததா?
அர்த்தசாஸ்திரம் உண்மையில் மன்னர்களுக்கு அறநெறியை போதிக்கும் நூலா?
உண்மையில் அர்த்தசாஸ்திரம் யார் எழுதிய நூல்?
இல்லாத சாணக்கியன் எப்படி சொருக்கப்பட்டான் பார்ப்போம்
முதன் முதலில் அர்த்தசாஸ்திரம் 1905ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு பிரதியும் கேரளாவில் ஒரு பிரதியும் கிடைத்தது
அர்த்தசாஸ்திரம் மொத்தம் 15 அத்தியாயங்களையும் 150 உட்பிரிவும் 6000 ஸ்லோகங்களும் உள்ளடக்கியது
சமஸ்கிருதத்தில் மொத்தம் நான்கு கோட்பாடுகள் வாழ்க்கைக்கு தேவையானதாக கற்பிக்கிறது
தர்மம்,அர்த்தம்,காமம்,மோட்சம்
இதில் வரும் அர்த்தம்(தமிழ் அர்த்தம் அல்ல) என்பதற்கு செல்வம் என்று பொருள் ஆனால் நூல் பேசுவதோ அரசியலை.இந்த முரணை எந்த சமஸ்கிருத பண்டிதராலும் உடைக்க முடியவில்லை.
இந்த நூலின் கரு என்பது மன்னனின் ஆட்சி இருக்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட மனுநீதி
புலிகளின் தோல்விக்கான காரணங்களும் ஈழவிடுதலையின் வீழ்ச்சியும்
1.வி.பி.சிங் வீட்டில் திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்து ஈழம் ஒன்றே அந்த மக்களுக்கான தீர்வு அதை இந்தியா பங்களாதேஷ் போல் பெற்றுத்தர வேண்டும் எனவே வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று
பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் வைத்து பத்பநாபன் உட்பட பலரை புலிகள் கொலை செய்தது.இந்த சம்பவம் இந்திய அளவில் பேச்சுப்பொருளாக மாறியது அத்தோடு இந்த கோரிக்கை இந்திய அளவில் நீர்த்துப்போனது.ராஜிவ் வி.பி.சிங்கிற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறார் காங்கிரஸ்
ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆகிறார்.புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது.
2.மக்களின் அனுதாப அலை திமுக மீதும் மத்தியில் வி.பி.சிங் மீதும் வீச மீண்டும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஈழ கோரிக்கையை முன்னெடுக்க நல் வாய்ப்பு இருந்தது.மீண்டும் புலிகள் தங்கள்
இளையராஜா ஏன் இசை உலகின் பெரியார் #Thread#ilayaraja
சிந்து பைரவி படத்தில் வரும் மரி மரி நின்னே என்ற தியாகராய காம்போதி ராக கீர்த்தனையை சாருமதி ராகத்தில் மெட்டுப்போட்டு தியாகராஜரை தன் மெட்டுக்கு எழுத வைத்தவர்.அன்று அவரை மோசமாக எழுதி கோர்ட்டு வரை இழுத்தவர்கள் அறிய வகை ஏழைகள்.
மாம ஊடு மச்சான் ஊடு என்ற கானா பாட்டை மோகனம்&சங்கராபரணம் கலந்து பிலஹரி ராகத்தில் மெட்டு போட்டு பக்கவாத்தியத்தை மக்களின் கருவியான பறை மற்றும் பம்பை இசைத்து orchestrationஐ westernல் அமைத்து கலப்பு செய்து பல கர்நாடக இசை ஜாம்பவான்களை வயிறு எரிய வைத்து கால் நடுங்க வைத்தவர் ராஜா.
அதேப்போல் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலை ஆரம்பத்தில் நாட்டுப்புற இசையான கும்பியில் ஆரம்பித்து பின்பு திரை இசை வடிவம் கொடுத்து கர்நாடக இசையின் மிருதங்கத்தை பக்கவாத்தியமாக அமைத்து western chorusல் முடிப்பார்.