சாணக்கியன் என்ற ஒரு கதாப்பாத்திரம் உண்மையில் இந்திய வரலாற்றில் இருந்ததா?
அர்த்தசாஸ்திரம் உண்மையில் மன்னர்களுக்கு அறநெறியை போதிக்கும் நூலா?
உண்மையில் அர்த்தசாஸ்திரம் யார் எழுதிய நூல்?
இல்லாத சாணக்கியன் எப்படி சொருக்கப்பட்டான் பார்ப்போம்
முதன் முதலில் அர்த்தசாஸ்திரம் 1905ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு பிரதியும் கேரளாவில் ஒரு பிரதியும் கிடைத்தது
அர்த்தசாஸ்திரம் மொத்தம் 15 அத்தியாயங்களையும் 150 உட்பிரிவும் 6000 ஸ்லோகங்களும் உள்ளடக்கியது
சமஸ்கிருதத்தில் மொத்தம் நான்கு கோட்பாடுகள் வாழ்க்கைக்கு தேவையானதாக கற்பிக்கிறது
தர்மம்,அர்த்தம்,காமம்,மோட்சம்
இதில் வரும் அர்த்தம்(தமிழ் அர்த்தம் அல்ல) என்பதற்கு செல்வம் என்று பொருள் ஆனால் நூல் பேசுவதோ அரசியலை.இந்த முரணை எந்த சமஸ்கிருத பண்டிதராலும் உடைக்க முடியவில்லை.
இந்த நூலின் கரு என்பது மன்னனின் ஆட்சி இருக்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட மனுநீதி
போல் ஒரு சட்ட நூலாகவே எடுத்துரைக்கிறது.
சரி அப்படி என்ன சட்டங்கள் பார்ப்போம்
1.மன்னன் தர்மத்தை காப்பாற்ற வேண்டும்
உடனே ஆஹா ஓஹோ பேஷ் என்று நினைக்க வேண்டாம் இங்கு அர்த்தசாஸ்திரம் சொல்லும் தர்மம் நான்கு வர்ணத்தை காப்பது.
2.மன்னனை எதிர்த்து கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை இல்லை
3.தர்மத்தை (வர்ணாசிரம அநியாயத்தை)எதிர்த்து கலகம் செய்பவர்களை மன்னன் தண்டிக்க வேண்டும் உட்சபட்சமாக கொலை தண்டனை அதில் பார்ப்பானுக்கு மட்டும் விலக்கு
4.சிறு நிலப்பிரபு ஆட்சிகளை எதிர்க்கிறது ஒரு மன்னனின் கீழ்தான் அனைவரும் வரவேண்டும்
5.மன்னன் சொல்வது தான் சட்டம் விதி எல்லாம் மன்னன்
கடவுளுக்கு நிகரானவனாக கருத வேண்டும்.
என்னடா இடிக்கிறதே என்று நினைக்க வேண்டாம் அந்த மன்னன் எல்லா சட்டம் விதி கட்டளைகளை ராஜகுரு ஆலோசனைப்படியே பிரப்பிக்க வேண்டும்
அந்த ராஜகுரு யார் என்று சொல்லத்தேவையில்லை பார்ப்பானேத்தான்
அதாவது மன்னனுக்கு உச்சக்கட்ட அதிகாரம் இருப்பதுப்போல்
காட்டிவிட்டு அந்த மன்னனையே ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தை வைத்திருக்கும் அதே தந்திரம்தான்.
இன்னும் நிறைய அயோக்கியத்தனம் இருந்தாலும் மேல் உள்ள விதிகள்தான் முக்கிய சாரம்.
சரி இப்போது நூல் ஆசிரியருக்கு வருவோம்
இந்த முழு நூலிலும் 2 பெயர்கள்தான் வருகிறது நேதி கவுத்தல்யா மற்றும்
விஷ்னுகுப்தா.சாணக்கியன் என்ற பெயர் எங்குமே வருவதில்லை.கவுத்தல்யாதான் சாணக்கியன் என்று பார்ப்பனர்களால் பின்னாளில் பொய்யுரை அளிக்கப்பட்டது
சாணக்கியன் மெளரிய பேரரசின் முதல் மன்னன் சந்திரகுப்த மெளரியர் அரசவையிலும் அவர் மகன் பிந்துசாரா அரசவையிலும் இருந்தார் என்றும் அந்த காலத்தில்தான்
அவர் அர்த்த சாஸ்திரத்தை எழுதினார் என்றும் பார்ப்பனர்கள் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையான ஆசிரியரான நிதி கவுத்தல்யா அர்த்த சாஸ்திரத்தில் எந்த இடத்திலும் மவுரிய மன்னர்கள் பற்றியோ தலைநகரம் பாடலிப்புத்திரத்தை பற்றியோ தான் சந்திரக்குப்த அரசவையில் ராஜ குருவாக இருந்தேன் என்றோ
குறிப்பிடவில்லை.மூல நூலான அர்த்த சாஸ்திரத்திலேயே குறிப்பிடாத இந்த சாணக்கிய புரட்டு தகவல்கள் எப்படி பின்னாளில் சேர்க்கப்பட்டது?
காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டு குப்த பேரரசு காலம் விஷ்வதத்தா என்ற பார்ப்பானால் முத்திர ராக்ஷா என்ற நாடக நூலில்தான் முதன் முதலில் சாணக்கியன் கதாப்பாத்திரம்
வருகிறது.அந்த பார்ப்பான்தான் முதன் முதலில் சாணக்கியன் சந்திரகுப்த அரசின் ராஜகுரு என்றும் அவர்தான் நந்த வம்சத்தை அழிக்க சந்திரகுப்தரை உருவாக்கினார் என்றும் அவர்தான் அர்த்த சாஸ்திரம் எழுதிய நேத்த கவுத்தல்யா என்றும் வரலாற்றை திணிக்கிறார்.
ஏன் அவ்வாறு திணிக்க வேண்டும்?
தமிழகத்தில் எப்படி சமண பெளத்தத்தை அழித்து பக்தி இலக்கிய காலத்தில் தமிழர் வரலாற்றை இன சுத்தகரிப்பு செய்தனரோ அதே தந்திரம்தான் வடநாட்டில்.
இந்தியாவில் முதன் முதலில் ஒரு பேரரசை உருவாக்கியவன் நந்த வம்சத்தை (NandaDynasty) சேர்ந்த மஹாபத்ம நந்தன்.இவர் பிறப்பால் ஒரு சூத்திரர் மரபால்
திராவிடர்.(ஆரிய மன்னன் என்று ஆரம்பத்தில் வரலாற்றில் கூறப்பட்டாலும் இன்றைய நவீன மரபணு அறிவியல் வளர்ச்சியால் இந்தியாவின் OBC,SC,STமக்கள் அனைவரும் திராவிட மரபு என்று நிருபனம் ஆகிற்று).சிறு வயதில் இருந்து சாதிய ஒடுக்குமுறையால் ஏற்பட்ட அவமானத்தை மனதிக் தாங்கி மக்களை திரட்டி so called
சத்ரிய மன்னர்களை வீழ்த்தி பேரரசை உருவாக்கினான்.கிரேக்க அலக்சாண்டர் இந்தியாவின் மீது அடையெடுக்கும்போது தடுமாறியது இவர் படையிடந்தான்.இவர் பிற்காலத்தில் பெளத்த சமண மதத்தை தழுவினார் பார்ப்பனிய அதிகாரம் பிடுங்கப்பட்டது.மக்கள் சமமாக நடத்தப்பட்டனர்.
இவரை ஒரு மன்னன் வீழ்த்தினான்
அவர்தான் இந்தியாவின் மிகப்பெரிய பேரரசான மெளரிய பேரரசை உருவாக்கிய சந்திர குப்த மெளரியர் ஆனால் இவரும் பிறப்பால் சூத்திரர் மரபால் திராவிடர்.இவர் ஏற்றுக்கொண்ட மதமும் சமண பெளத்த மதம்.இவரின் ஆட்சியில் பார்ப்பனியம் அதள பாதாளத்துக்கு சென்றது.இவரின் பேரன்தான் அசோகன் இவர் காலத்தில்
சனாதனம் வேரோடு கருவருக்கப்பட்டு மக்களுக்கு கல்வி,பெண்ணுரிமை,சமூகநீதி தழைத்தோங்கியது.பெளத்தம் இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் தழுவியது.
இந்த காலக்கட்டம்தான் செல்வாக்கு இழந்த பார்ப்பனர்கள் தெற்கு நோக்கி வந்து நம் மன்னர்களையும் கலாச்சாரத்தையும் தமிழையும் காவு வாங்க துவங்கிய காலம்
கிட்டத்தட்ட 500 (கி.மு.322- கி.பி.180)வருடம் பெளத்த சமணம் ஆதிக்கம் செலுத்தியது.பின்பு அசோகனின் 6ஆம் தலைமுறை பிருகாதரத்தனை அவரின் படையிலேயே இருந்த புஷ்யமித்திர சுங்கன் என்ற பார்ப்பான் கொலை செய்து மீண்டும் சனாதனத்தை அரசு மதமாக மாற்றுகிறான்.இவன் காலம் தொடங்கி குப்தர்கள் காலம்வரைதான்
சனாதனத்தின் பொற்காலம்.இந்த காலத்தில்தான் சமண பெளத்தம் போன்ற நாத்திக பிராமண எதிர்ப்பு கொள்கைகள் மேலோங்கக்கூடாது என்று மனுஸ்மிருதி,இராமாயணம்,மஹாபாரதம்,வேத கால கடவுள் அல்லாத நாம் இன்று கும்பிடும் சிவன்,விஷ்ணு,சக்தி இன்னும் பல கடவுள்களின் புராணங்கள் இயற்றப்பட்டன.இவைதான் 7ஆம்
நூற்றாண்டில் தமிழகத்தில் பக்தி இலக்கிய காலத்தில் தமிழ்மயம் ஆனது.
அதே காலத்தில் மன்னர்களும் தடம் புரளக்கூடாது என்று இயற்றப்பட்டதுதான் அர்த்தசாஸ்திரம்.ஆம் அது பார்ப்பன புரட்டு போல் மெளரிய காலத்தில் தோன்றியது அல்ல அவர்களுக்கு பிறகு குப்தர்கள் காலத்தில்தான்.
உறுதிப்படுத்த சில
விடயங்களை பார்ப்போம் வாருங்கள்.
கிரேக்கர்கள் சமகால நிகழ்வுகளை பதிவு செய்யும் பழக்கம் உடையவர்கள்.
அலெக்சாண்டர் காலத்தில் மெளரிய பேரரசும் கிரேக்க பேரரசும் நட்பு சக்திகளாக இருந்தன அவர்கள் உருவாகிய Indo-Greek dynastyல் இருந்த Celicus என்ற மன்னன் Megasthanes என்ற நபரை
தூதரக அதிகாரியாக பாடலிப்புத்திரத்துக்கு அனுப்பியிருந்தார்.அவர் தன் வாழ்க்கை முழுவதும் அங்கேயே கழித்தார் அவர் எழுதிய புத்தகம்தான் 'Indica'.
இந்த புத்தகத்தில் மவுரிய பேரரசு சந்திரக்குப்தரை அரசு வம்சம் இல்லையென்றும் தன் வீரம் திறமையால் ஆட்சியை பிடித்தவர் என்றும் குறிப்பிடுகிறது
மேலும் மெளரிய ஆட்சியை Federal Republic என்று வர்ணிக்கிறது அதாவது சில நிலப்பிரப்புக்களின் கூட்டாட்சி என்கிறது ஆனால் அர்த்தசாஸ்திரம் அதற்கு எதிராக பேசுகிறது சாணக்கியன் ராஜ குருவாக இருந்தால் இதை அனுமதித்திருப்பாரா உங்கள் சிந்தனைக்கே.
அதுமட்டுமல்லாமல் மெளரிய அரசின் வரிமுறை,படைப்பலம்
மந்திரி சபை,சட்டம்,உளவுத்துறை,மாளிகை கட்டமைப்பு,மதம் என்று எல்லாத்தையும் குறிப்பிடுகிறது ஆனால் ஒரு இடத்தில்கூட சாணக்கியனைப்பற்றி குறிப்பே இல்லை.
சந்திரகுப்தருக்கு பிறகு அவரின் மகன் பிந்துசரா ஆட்சியில் இருந்த Dycamus எழுதிய குறிப்பிலும் சாணக்கியன் இல்லை.
கிரேக்க குறிப்பிலிருந்து
சாணக்கியன் இல்லை என்று தெளிவாகிறது இப்போது அர்த்தசாஸ்திரத்தில் இருந்தே அவர்களின் புரட்டை உடைப்போம்.
அர்த்தசாஸ்திரம் பவுத்தத்தை சமணத்தை கடுமையாக விமர்சிக்கிறது ஆனால் சந்திரகுப்தரோ சமணர் சாணக்கியன் அவரின் ராஜகுரு என்றால் எப்படி அனுமதித்திருப்பார்?
மேலும் படைகளை யாரை கொண்டு
கட்டமைக்க வேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது.1.சோரா(திருடர்கள்),விதேசா(foreigners),சூத்திரா(4ஆம் வர்ணத்தவர்),ஆதிவாசியா(மலைவாழ் மக்கள்),ஆயுதம் செய்பவர்கள்.
ஆயுதம் செய்பவர்களாக யவனர்கள்,சாகர்கள்,பாரசிகர்கள்,கன்போஜர்கள் என்று குறிப்பிடுகிறது.
Continuation.......
யவனர்கள் மெளரியர்களுக்கு நண்பர்கள் எனவே அவர்களை தன் படையில் ஆயுதம் செய்யும் அடிமையாக சந்திரகுப்தர் வைத்திருக்க வாய்ப்பு இல்லை ஆனால் குப்தர்களுக்கு எதிரிகள் எனவே குப்தர்கள் வைத்திருக்க வாய்ப்பு உண்டு அது வரலாற்றிலும் பதிவானது.மெளரிய பேரரசுக்கு பின்பு உடைந்த Indo Greek dynasty போர்
கைதிகளை குப்தர்கள் தங்கள் படையில் அடிமையாக வைத்திருந்தனர்.
இன்னொன்று சாகர்கள் அவர்கள் இந்தியாவில் நுழைந்த காலம் கி.பி.2-3ஆம் நூற்றாண்டு அவர்கள் வரலாறே மெளரிய பேரரசுக்கு பிறகுதான் தொடங்குகிறது பிறகு எப்படி அவர்களைப்பற்றி மெளரிய பேரரசில் இருந்த சாணக்கியன் எழுத முடியும்?
சரி ஏன் சாணக்கியனை உருவாக்க வேண்டும்
Simple பார்ப்பனர்களின் அதே Template அரசியல்தான் வரலாற்றில் தன்னை எதிர்த்தவர்களை திரித்து திருடுவது புத்தரை போல அல்லது தனது வீரத்தால் திறமையால் பெரிய பேரரசை எழுப்பிய சந்திர குப்தரை பார்ப்பன தயவால்தான் வென்றார் என்று பார்ப்பன மேன்மை புகுத்துவது
சமணப்பள்ளிகள் தொடங்கப்பட்டு அனைவருக்கும் பெண்கள் உட்பட கல்வி அளிக்கப்பட்டது
பிராமண ஆதிக்கம்
ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மதேய நிலங்கள் பிடுங்கப்பட்டு உழுபவனுக்கு நிலம் கொடுக்கப்பட்டது.
தமிழ் செழித்தோங்கிய பொற்காலம் களப்பிரர்கள் காலம்.
வேள்விக்குடி செப்பேட்டில் களப்பிரர்களை கலியுக அரசர்கள் என்றும் முற்காலத்தில் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை
களப்பிரர்கள் பிடிங்கிக்கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.
தமிழ் சங்கம் முதன் முதலில் இருந்ததை குறிப்பிட்ட நூல் இறையனார் களவியல் உரை காலம் 7ஆம் நூற்றாண்டு பக்தி இலக்கிய காலம்.முசிறிய நீலகண்டன் என்ற பார்ப்பனர் இது பல காலமாக வாய்மொழியாக வந்த உரை என்று குறிப்பிட்டு
புலிகளின் தோல்விக்கான காரணங்களும் ஈழவிடுதலையின் வீழ்ச்சியும்
1.வி.பி.சிங் வீட்டில் திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்து ஈழம் ஒன்றே அந்த மக்களுக்கான தீர்வு அதை இந்தியா பங்களாதேஷ் போல் பெற்றுத்தர வேண்டும் எனவே வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று
பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் வைத்து பத்பநாபன் உட்பட பலரை புலிகள் கொலை செய்தது.இந்த சம்பவம் இந்திய அளவில் பேச்சுப்பொருளாக மாறியது அத்தோடு இந்த கோரிக்கை இந்திய அளவில் நீர்த்துப்போனது.ராஜிவ் வி.பி.சிங்கிற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறார் காங்கிரஸ்
ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆகிறார்.புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது.
2.மக்களின் அனுதாப அலை திமுக மீதும் மத்தியில் வி.பி.சிங் மீதும் வீச மீண்டும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஈழ கோரிக்கையை முன்னெடுக்க நல் வாய்ப்பு இருந்தது.மீண்டும் புலிகள் தங்கள்
இளையராஜா ஏன் இசை உலகின் பெரியார் #Thread#ilayaraja
சிந்து பைரவி படத்தில் வரும் மரி மரி நின்னே என்ற தியாகராய காம்போதி ராக கீர்த்தனையை சாருமதி ராகத்தில் மெட்டுப்போட்டு தியாகராஜரை தன் மெட்டுக்கு எழுத வைத்தவர்.அன்று அவரை மோசமாக எழுதி கோர்ட்டு வரை இழுத்தவர்கள் அறிய வகை ஏழைகள்.
மாம ஊடு மச்சான் ஊடு என்ற கானா பாட்டை மோகனம்&சங்கராபரணம் கலந்து பிலஹரி ராகத்தில் மெட்டு போட்டு பக்கவாத்தியத்தை மக்களின் கருவியான பறை மற்றும் பம்பை இசைத்து orchestrationஐ westernல் அமைத்து கலப்பு செய்து பல கர்நாடக இசை ஜாம்பவான்களை வயிறு எரிய வைத்து கால் நடுங்க வைத்தவர் ராஜா.
அதேப்போல் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலை ஆரம்பத்தில் நாட்டுப்புற இசையான கும்பியில் ஆரம்பித்து பின்பு திரை இசை வடிவம் கொடுத்து கர்நாடக இசையின் மிருதங்கத்தை பக்கவாத்தியமாக அமைத்து western chorusல் முடிப்பார்.