ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தவர்கள் தங்களை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது இல்லை. நாம் மட்டும் ஏன் நம்மை திராவிடர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்?
ஆந்திர மாநிலம் சித்தூரில் தான் திராவிடப் பல்கலைக் கழகம் உள்ளது. அதுபோலவே கர்நாடக மாநிலம் மைசூரில்தான் திராவிட மொழியியல் ஆய்வு மையம் உள்ளது.
மற்றொரு காரணம், திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான் .... தமிழ்ழூ திரமிழ்ழூ திரமிழழூதிரமிடழூதிரவிடழூதிராவிட ...
என்று திரிந்தது என்று கூறுகிறோம். அவ்வாறிருக்க தனிமொழிப் பெருமிதத்தோடு விளங்கும் பிற திராவிட இனத்தவர், தங்கள் மொழி தனித்த மொழியல்ல; தங்கள் இனப் பெயர்கூட தமிழிலிருந்து வந்தது என்பதை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா?
ஆனால், அம்மொழி பேசும் அறிஞர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் திராவிடப் பல்கலைக் கழகமும், திராவிட மொழியியல் ஆய்வு மையமும் அங்கே இயங்குகின்றன. மேலும் அடூர் கோபாலகிருஷ்ணன் எனும் மலையாள இலக்கியவாதி, எங்கள் மொழியின் இலக்கிய வரலாறு சிலப்பதி காரத்தில்
இருந்து தொடங்குகிறது என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பெரியார், திராவிடர் என்ற சொல்லை, ஆரியர் அல்லாதார் என்ற பொருள் கொண்ட இடுகுறிப் பெயராகவே கையாண்டார்.
அதனால்தான் ஜெகஜீவன்ராம்கூட ஒருமுறை தன்னைப் பற்றி
“I am a Dravidian from Bihar” எனக் குறிப்பிட்டார்.
ஏன் “நாம் தமிழரை” ஆதரிக்கக் கூடாது?
பெரியார் ஆரியரை, பார்ப்பனரைப் பிரித்துப் பார்த்ததுகூட, அவரே கூறியுள்ளதைப் போன்று இரத்தப் பரிசோதனை செய்தல்ல;
அவர்களின் ஆச்சார, அனுஷ்டானங்களை, பழக்க வழக்கங்களை கொண்டுதான். பெரியார் கூறியுள்ளார், “நாங்கள் மக்களை ஒன்று சேர்க்க வந்தவர்களே தவிர, பிரிக்க வந்தவர்கள் அல்ல. நாளைப் பார்ப்பானே எங்களோடு சேரவந்தால்கூட உனக்கு மட்டும் பூணூல் எதற்காக என்று கேட்போம். அதை அகற்றிவிட்டால் நமக்கென்ன தடை?
அதற்கப்புறம் கேட்போம், உனக்கு தமிழ் உயர்ந்ததா? சமஸ்கிருதம் உயர்ந்ததா? என்று. கீதை உயர்ந்ததா? குறள் உயர்ந்ததா? ..... வேதம் உயர்ந்ததா? என்று கேட்போம். தமிழ்தான் உயர்ந்தது, குறள்தான் உயர்ந்தது என்போரை அரவணைத்துக் கொள்வதில் எங்களுக்கென்ன பிரச்சனை?”.... இதுதான் பெரியாரின்,
பெரியார் இயக்கத்தின் நிலைப்பாடு. ஆனால், ‘நாம் தமிழர் கட்சி’யோ “தமிழ் உயர்ந்தது, குறள் உயர்ந்தது” என்போரை பிற மொழியாளர் என்று கூறி விலக்கிவைக்கிறது; அதேவேளை “சமஸ்கிருதம் உயர்ந்தது, வேதமும் கீதையுமே சிறந்தவை” என்போரை தமிழ் பேசுகிறார்கள் எனக்கூறி ஆரத்தழுவி அரவணைக்கிறது.
மற்றொருபுறம், ஆதிக்கத் திமிரோடு தாழ்த்தப்பட்ட மக்கள்மீது நடத்தப்படுகிற தாக்குதல்கள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. அதிலும்கூட தாக்கப்படுபவர், தாக்குகிறவர் ஆகியோர் பேசுகிற மொழி குறித்த ஆராய்ச்சியில் இருந்துவிடுவார்களோ என்னவோ?
சுரண்டப்படுவர், ஒடுக்கப்படுகிறவர் பக்கம் நிற்காத, தமிழை, குறளை ஏற்காதவர் பக்கம் நிற்கிற, ஒரு கட்சியை - சமத்துவத்தை, சகோதரத்துவத்தை விரும்புகிற ‘தமிழர்கள்' எப்படி ஆதரிக்க முடியும்?
இதுதான் எமது சுருக்கமான பதில். விரித்தால் பெருகும்.
“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு கொளத்தூர் மணி பதில்
கீற்று
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.
நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.