#இராமவீரப்பன்

“ஆசியாவிலேயே மிக உயர்ந்த ஆலய கோபுரங்களான திருவரங்கம் மற்றும் தென்காசிக் கோயில் கோபுரங்கள் அறநிலையத்துறை அமைச்சராக நான் பதவி வகித்துவந்த காலங்களில், என் முயற்சியால் கட்டப்பட்டவை என்பதுதான் என் வாழ்நாள் பெருமை! Image
திருவரங்கம் கோயில் மொட்டைக் கோபுரமானது மாநில தொல்பொருள் துறைக் கட்டுப்பாட்டில் இருந்துவந்ததால், ‘கோபுரத்தை அப்படியேதான் பராமரிக்க வேண்டும். கட்டுமானப் பணிகள் எதுவும் செய்யக்கூடாது’ என்ற நிலை இருந்துவந்தது. இந்த நிலையில், Image
காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள், திருவரங்கம் வந்திருந்தபோது, ‘இப்படி மொட்டைக் கோபுரமாக நிற்கிறதே’ என்று வருத்தப்பட்டிருந்தார்.இதையறிந்த அகோபிலமட ஜீயர், ‘இந்தக் கோயில் கோபுரத்தை நானே பணம் திரட்டிவந்து கட்டுகிறேன்.
என் பணியில் அறநிலையத்துறை தலையிடாமல் இருந்தால் மட்டும் போதும்’ என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். ‘சரி’ என்று அவருக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு, மாநில தொல்பொருள் ஆய்வுத் துறையில் தலையிட்டு, கோபுரம் கட்டுவதற்கான அனுமதியை அளிக்கச் செய்தேன். Image
இதையடுத்து, டி.வி.எஸ்., இளையராஜா எனப் பல்வேறு வி.ஐ.பி-களிடமும் பணம் திரட்டிவந்த ஜீயர், தஞ்சாவூர்க் கோயில் விமானத்தைவிடவும் உயரமாக 236 அடியில் கோபுரத்தைச் சிறப்புறக் கட்டி முடித்தார். ஒருமுறை கோபுரப் பணியைப் பார்வையிட நான் சென்றிருந்தபோது, பணியாளர்களுக்குக் கூலி
வழங்கிக்கொண்டிருந்த ஜீயர், என்னையும் அருகே அழைத்து, 100 ரூபாயை என் கையில் திணித்தார்.

‘எனக்கு எதற்கு...?’

என்று நான் திகைக்க, ‘இது உனக்கு சம்பளமோ கூலியோ அல்ல... போனவாரம் உனக்குப் பிறந்தநாள் வந்ததில்லையா...

அதற்கான என் அன்பளிப்பு’ என்று சொல்லிச் சிரித்தார்.
அந்த 100 ரூபாயை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

அதேபோல், தென்காசிக் கோயில் கோபுரத்தைக் கட்டுவதற்காகத் தொழில் அதிபர் பா.சிவந்தி ஆதித்தனை நான் முதன் முதலில் சந்தித்துப் பேசியபோது, அவர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ‘அது ரொம்பப் பெரிய காரியம்.
என்னால் அது முடியாது’ என்று மறுத்தார். ஆனால், ‘ராஜராஜ சோழன் மாபெரும் வீரன். அவனைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நமக்குக் கிடைத்தாலும், அவன் வாழ்ந்த அரண்மனையோ அல்லது மற்ற தடயங்களோ இப்போது இல்லை. ஆனால், ‘தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன்’
என்ற புகழ்தான் இன்றைக்கும் அவன் பெயரை நிலைத்திருக்கச் செய்கிறது. அதைப்போல, தாங்களும் இந்த வரலாற்றுத் திருப்பணியை ஏற்றுச் செய்துமுடிக்க வேண்டும். தயவு செய்து மறுக்காதீர்கள்’ என்று நீண்ட நேரம் அவரோடு வாதாடி, அவரை சம்மதிக்க வைத்தேன்.
ஒப்புக்கொண்டபின், சிவந்தி ஆதித்தனும், தனது பல்வேறு பணிகளுக்கிடையேயும் கோபுரம் கட்டும் பணிக்காகத் தனியே நேரம் ஒதுக்கி, குறித்த காலத்தில் பணியை நிறைவு செய்தார். கோயில் கோபுரக் கட்டுமானத்தின்போது, நான் அறநிலையத்துறை அமைச்சராக இருந்ததால் என்னளவில் நான் சில முயற்சிகளை மேற்கொண்டது Image
உண்மைதான். ஆனாலும், கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றபோது, நான் அமைச்சராக இல்லை. அதனாலேயே அந்த விழாக்களில் நான் பங்கேற்கவு மில்லை!’’ என்கிறவரின் கண்களில் அதுவரை இருந்த பெருமிதம் வடிந்து, லேசான ஏக்கம் எட்டிப் பார்க்கிறது!
தந்தை பெரியாரின் உதவியாளர், எம்.ஜி.ஆரின் ‘சத்யா மூவீஸ்’ நிர்வாகி, எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் முன்னணி அமைச்சர், ஜெயலலிதாவின் தீவிர எதிர்ப்பாளர், ரஜினியின் முதல் அரசியல் பேச்சுக்கு மேடையமைத்துக் கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன்.
“புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை தான் என் சொந்த ஊர். படிக்கிற காலத்திலேயே கலைத்துறைமீது ஈடுபாடு. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு டி.கே.எஸ். நாடகக் குழுவில், நடிகராக இணைந்தேன். கூடவே நாடக நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டேன்.
1945-ல் பெரியார் அறிமுகம் கிடைத்து, அவரின் உதவியாளரானேன். அப்போதுதான் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் எனப் பெரிய தலைவர்களோ டெல்லாம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது’’ என்றவர், எம்.ஜி.ஆருக்கும் தனக்குமான நெருக்கத்தைப் பற்றிப் பேசும்போது மட்டும் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்.
“இணை, நட்பு, தோழமை, பாசம் என ஒவ்வொரு உறவுக்கும் பெயர்கள் உண்டு. ஆனால், 1953-ல் எம்.ஜி.ஆரோடு எனக்கு அறிமுகம் கிடைத்தபிறகு அவரோடு இணைந்து பயணித்த காலகட்டத்தை, நாங்கள் இருவரும் அண்ணன் - தம்பியா, தோழமையா,
நண்பனா, வழிகாட்டியா... இப்படி எந்த வார்த்தையில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை.எம்.ஜி.ஆரின் நாடக மன்ற நிர்வாகியாக இருந்தபோதே, என்மீது வைத்திருந்த நம்பிக்கையால், ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரராகவும் என்னை உயர்த்தினார்.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த முதல் படம் ‘நாடோடி மன்னன்.’ உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் என்று அடுத்தடுத்து படங்களைத் தயாரித்தோம். அப்போதெல்லாம் திரைப்படங்களின் வெற்றிவிழாக்கள் திரையரங்குகளில்தான் நடைபெறும். முதன்முதலில், ‘நாடோடி மன்னன்’
பட வெற்றியைப் பொதுவெளியில் நிகழ்த்திக்காட்டியது நான்தான். அண்ணா தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில், முக்கால் பவுன் மதிப்புள்ள 150 மோதிரங்களைச் செய்து, படத்தில் வேலைபார்த்த அத்தனை தொழி லாளர்களுக்கும் அணிவித்தோம்’’ என்றவர், தன் கை விரலில்
அணிந்திருந்த அந்த மோதிரத்தையும் நமக்குப் பெருமையோடு காட்டி, சொந்தத் தயாரிப்புக் கம்பெனியாக சத்யா மூவீஸ் நிறுவனத்தை ஆரம்பித்த கதையையும் சொல்லத் தொடங்கினார்.
“தென்காசியைச் சேர்ந்த சங்கரன், ஆறுமுகம் என்ற இரு நண்பர்களோடு சேர்ந்துதான் 1963-ல் ‘சத்யா மூவீஸ்’ கம்பெனியை ஆரம்பித்தேன். ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தோம். மீதித் தொகையை ஏவி.எம். செட்டியாரிடம் கடனுதவி பெற்று, எம்.ஜி.ஆரை வைத்து ‘தெய்வத்தாய்’
என்ற முதல் படத்தை எடுத்தோம். நல்ல லாபம் கிடைத்தது. அன்றைக்கு அவர் உதவவில்லையென்றால், நான் தயாரிப்பாளர் ஆகியிருக்கவே முடியாது.
அதன்பிறகு தொடர்ந்து 27 படங்கள் எடுத்தேன். ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘பாட்ஷா’தான், சத்யா மூவீஸின் கடைசிப் படம்’’ என்றவர், சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் தொடர ஆரம்பித்தார்.

“பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவின்போது, ‘தமிழகத்தில் வன்முறை பெருகிவிட்டது’
என்ற பொருள்பட ரஜினிகாந்த் பேசிவிட்டார். அமைச்சர் பொறுப்பில் இருந்த நானும்கூட இதைச் சாதாரண ஒரு பேச்சாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. விழா முடிந்து மறுநாள் காலையிலேயே, போயஸ் தோட்டம்
வரச்சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. சென்றேன். அங்கே ஜெயலலிதா இல்லை. இன்டர்காமில்தான் பேசினார்.

‘என்ன... நேத்து ரஜினி அப்படியெல்லாம் பேசியிருக்கிறார்... நீங்க மேடையில் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தீர்களா? அவர் என்னை அட்டாக் பண்ணித்தான்
பேசியிருக்கிறார். நீங்க அதைக் கேட்டுக்கிட்டிருந்தீங்க... நீங்கதான் யார் என்னை அட்டாக் பண்ணிப் பேசினாலும் ரசிப்பீங்களே... உங்களுக்கு எம்.ஜி.ஆரைப் பாராட்டினாதானே பிடிக்கும்...’ என்று ஆவேசமாக வெடித்தவர், என் பதிலுக்குக் காதுகொடுக்காமல், ரிஸீவரை வைத்துவிட்டார். அதன்பிறகு, அமைச்சர்
பதவியிலிருந்து மாற்றப்பட்டேன், கட்சிக் கூட்டங்களில் தொடர்ந்து புறக்க ணிக்கப்பட்டேன்.

1995 செப்டம்பர் 15-ம் தேதி கட்சி சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை. அதனால், காரைக்குடியில் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில்
சென்று பேசினேன். அங்கே, கட்சித் தொண்டர்களோடு ரஜினி ரசிகர்களும் சேர்ந்து வந்திருந்ததால், அரங்கமே திணறியது. அண்ணாவின் புகழைப் பேசிய அந்தக் கூட்டத்தில், ரஜினிகாந்த் பற்றியும் பேசினேன். அவ்வளவுதான்... அடுத்த இரண்டு நாள்களில், ஒட்டுமொத்தமாக
அ.தி.மு.க-விலிருந்தே என்னை நீக்கிவிட்டார் ஜெயலலிதா’’ என்றவர், அதன்பிறகு ‘எம்.ஜி.ஆர் கழகம்’ என்ற கட்சி தொடக்கம், ரஜினிகாந்த் உடனான தொடர்புகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்தும் விரிவாகப் பேசத் தொடங்கினார்.
“எம்.ஜி.ஆரின் நாடகக் குழுவில் தொடங்கி, அவருடனேயே பயணித்து, அ.தி.மு.க உருவாக்கத்திலும் உடனிருந்து, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா எனக் கட்சி இரண்டாகப் பிளவுபட்ட நேரத்தில் அரும்பாடுபட்டு இரு அணிகளையும் ஒருங்கிணைத்தது என, அ.தி.மு.க-வின்
நீண்ட நெடிய பயணத்தில் சாதாரணத் தொண்டனாக இருந்து என்னால் முடிந்தவரை என் விசுவாசத்தைக் காட்டினேன். ஆனால், ஒரு திரைப்பட விழாவில், ரஜினிகாந்த் வெளியிட்ட கருத்துக்கு நான் மறுப்பு சொல்லவில்லை என்ற காரணத்துக்காக அடிப்படை உறுப்பினரிலிருந்தும் வெளியேற்றப்பட்டது
எனக்கு ரொம்பவே மனவேதனையை ஏற்படுத்தியது. ‘பொதுவாழ்க்கையில் இருந்தே ஆகவேண்டும்’ என்ற வைராக்கியத்தையும் அது கொடுத்தது. அதனாலேயே, 1995 அக்டோபரிலேயே ‘எம்.ஜி.ஆர் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினேன். கட்சிக் கூட்டங்களின்போது ரஜினி ரசிகர்களும் எனக்குப்
பெருவாரியாக ஆதரவு தந்தனர். ‘ரஜினி - ஆர்.எம்.வீ கூட்டு முயற்சியில் ஒரு இயக்கம்’ என்றெல்லாம் வெளியே செய்திகள் பரவின. ஆனால், ரஜினிகாந்த் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஒருநாள் என் வீட்டுக்கே வந்து நேரில் சந்தித்த ரஜினிகாந்த், 2 மணிநேரம் பேசினார். முடிவில்,
‘நான் அரசியலுக்கு வருவதாக இல்லை’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

இதற்கிடையில், கோவையில் எம்.ஜி.ஆர் கழகம் நடத்திய கூட்டத்தில் பெருமள விலான ரஜினி ரசிகர்கள் வழக்கம்போல் கலந்துகொண்டார்கள். அதில் இரண்டு ரசிகர்கள், கூட்டம் முடிந்து ஊர் திரும்பும்போது விபத்து ஒன்றில்
மரணமடைந்துவிட்டனர். இதையடுத்து, ‘இனி எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் என் பெயரோ, படமோ பயன்படுத்தக்கூடாது’ என்று அறிக்கை வெளியிட்டுவிட்டார்’’ என்று மனம் திறந்து பேசுபவர், இப்போதும் ரஜினி உடனான நட்பைத் தொடர்கிறார். ரஜினிகாந்தின் இரண்டாவது மகளின் திருமணத்தில்
கலந்துகொண்டதை நினைவுகூர்ந்தவர், கருணாநிதியுடனான தனது நட்பையும் மனம் திறந்து பேச ஆரம்பித்தார்.

‘`தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்துவந்தபோது, அந்தப் பிரிவைத் தடுக்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனாலும் அவை பலனளிக்கவில்லை. அதன்பிறகே, நானும் எம்.ஜி.ஆரோடு இணைந்து
அ.தி.மு.க உருவாக்கத்தில் பங்குகொண்டேன்.பெரியாரின் குடியரசு பத்திரிகைப் பணியில் தொடங்கி எனக்குக் கலைஞருடன் பழக்கம் இருந்தது. ஆனாலும் அரசியல் ரீதியாக, கலைஞர் - எம்.ஜி.ஆர் என இரு துருவங்களாக இவர்கள் பிரிந்துபோனபிறகு, நான் எம்.ஜி.ஆரோடுதான் பயணித்தேன்.
அதன்பிறகு முழுக்க தி.மு.க எதிர்ப்பில் இருந்த நான், 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதே தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவும் நேர்ந்தது. எனது 80-வது பிறந்தநாளின்போது என் வீட்டுக்கே நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார் கலைஞர்.
இப்போது என் 94-வது பிறந்தநாளுக்கு என் வீடு தேடி வந்திருந்தார், அவர் மகன் ஸ்டாலின்!’’ என்று மகிழ்ச்சியில் பூரிக்கும் ஆர்.எம்.வீரப்பன், தன் வாழ்நாளின் சாதனையாகச் சொல்லவருவது மேலே உயர்ந்து நிற்கும் இரு கோயில்கள் .
1982-ம் ஆண்டு அதிமுகவில் அதிகாரப்பூர்வம இணைந்த ஜெயலலிதாவுக்கு அடுத்த ஆண்டே கொள்கை பரப்புச் செயலர் பதவியை வழங்கினார் எம்.ஜி.ஆர். அவ்வளவுதான் அதிமுகவே அதகளப்பட்டது
அதிமுகவில் அப்போது எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக பெருந்தலைகள் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், ஹண்டே, கே.ஏ. கிருஷ்ணசாமி, எஸ்.டி. சோமசுந்தரம், பொன்னையன் என பலரும் இருந்தனர். இவர்கள் யாருக்குமே ஜெயலலிதாவை அதிமுகவுக்குள் எம்ஜிஆர் கொண்டு வந்தது பிடிக்கவில்லை.
ஜெயலலிதாவை அதிமுகவில் இருந்து வெளியேற்றியே தீர வேண்டும் என முனைப்புகாட்டிய அணிக்கு தலைமை தாங்கியவர் ஆர்.எம். வீரப்பன். இவர்களின் சகுனி ஆட்டங்களில் சில நேரம் ஜெயலலிதா வீழ்ந்தது உண்டு. ஆனால் ஒருபோதும் நிரந்தரமாக ஒதுங்கிப் போக மறுத்தார் ஜெயலலிதா.
தம்மை வீழ்த்தியவர்களை வெல்ல வேண்டும் என்ற வேகம், அதற்கான விவேகம்தான் அவரிடம் இருந்தது.எஸ்.டி.எஸ். 1984-ம் ஆண்டு ஜெயலலிதாவை ராஜ்யசபா எம்.பி.யாக்கினார் எம்.ஜி.ஆர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியை விட்டே வெளியே போனார்
எஸ்.டி. சோமசுந்தரம்... இதே எஸ்.டி. சோமசுந்தரம்தான் பின்னாளில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் தொங்கிக் கொண்டு வந்த 'கதாபாத்திரம்'... இது தனிக்கதை.
அப்பல்லோவில் எம்ஜிஆர் அப்பல்லோவில் உடல்நலக் குறைவால் எம்ஜிஆர் பாதிக்கப்பட்ட போது அதற்கு ஜெயலலிதாவே காரணம் என எதிர்ப்பு கோஷ்டி பிரசாரம் செய்தது. அப்பல்லோ மருத்துவமனைக்குள் ஜெயலலிதாவை அந்த கோஷ்டி அனுமதிக்கவே இல்லை.
ஆபாச விமர்சனம் ஜெயலலிதாவுக்கு15,000 எம்.ஜி.ஆர். மன்றங்களின் ஆதரவு இருப்பதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் ஜெயலலிதா குறித்து ஆபாசமாக பேசியதுடன் எம்ஜிஆர் உடல்நலக் குறைவுக்கும் அவரே காரணம் என குற்றம்சாட்ட பெரும் சர்ச்சையாகிப் போனது.
வீரப்பனின் சிஷ்யபிள்ளையாக இருந்தவர் அப்போதைய வேளாண் அமைச்சரான காளிமுத்து. இவர்தான் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் மாமனார்.
கங்கணம் கட்டிய காளிமுத்து ஜெயலலிதாவிடம் இருந்து கொள்கை பரப்புச் செயலர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டபோது அதை மிகக் கடுமையாக வெளிப்படையாக எதிர்த்தவர் காளிமுத்து. அப்போது காளிமுத்து மீது வங்கி மோசடி வழக்கு நடைபெற்றது. அதுதான் 'ராபின் மெயின்'
(காளிமுத்துவின் நண்பர்) வழக்கு. இந்த வழக்கை சிபிஐ தொடரக் காரணமே ராஜ்யசபா எம்பி ஜெயலலிதாவே என ஆணித்தரமாக நம்பினார் காளிமுத்து. இதனால் வீரப்பனுடன் கை கோர்த்துக் கொண்டு ஜெயலலிதாவை ஒழிக்காமல் விடப்போவதில்லை என சலங்கை கட்டி ஆடினார்.
சிபிஐ உளவாளி அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத் தலைவராக முசிறிபுத்தனோ, ஜெயலலிதா சிபிஐ உளவாளி என பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட ஆடித்தான் போனார் எம்ஜிஆர். ஜெயலலிதாவும் வீரப்பன் அணியின் குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க அறிக்கைகள் மூலம் பதிலடி கொடுத்தார்.
அதிமுகவில் குழப்பம் அதிகரித்த நிலையில் எம்ஜிஆர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். பின்னர் அமைச்சர்களிடம் ராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்துக் கொண்டார்.
தொடர்ந்த யுத்தம் ஆனாலும் விடுவதாக இல்லை வீரப்பன் கோஷ்டி... ஜெயலலிதாவுக்கு எதிராக 103 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டுள்ளதாக பேட்டி கொடுத்தனர். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோது ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட நினைத்தது வீரப்பன் அணி.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் காலச்சக்கரம் சுழன்றது.ஜெ. தலைமையில் அதிமுக அதிமுக இரண்டாக உடைந்து பின்னர் மீண்டும் இணைந்தது. ஜானகி அணியை வழிநடத்தினார் வீரப்பன். 1989 தேர்தலில் ஜானகி அணி படுதோல்வி அடைய அந்த அணியினர் ஜெயலலிதாவின் தலைமை ஏற்றனர்.
அரசியலில் இருந்து ஓய்வு நிலைக்கு போன நெடுஞ்செழியன் அதிமுகவில் இணைந்தார். பின்னர் அவரை உதிர்ந்த ரோமம் என விமர்சித்தது வேறு கதை.
காளிமுத்து ஜெயலலிதாவை பரம எதிரி; சிபிஐ உளவாளி; காங்கிரஸின் கையாள் என சகட்டுமேனிக்கு விமர்சித்த காளிமுத்துவும் ஜெயலலிதா தலைமை ஏற்றார். அதேபோல் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரையும் தாய்க் கழகமாக திமுகவுக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்ட தருணம்...
மீண்டும் ஆர்.எம்.வி. சசிகலாவின் கணவர் எம். நடராஜன், அப்போது அரசியலை விட்டு விலகி இருந்த ஆர்.எம். வீரப்பனை சந்தித்து பேசினார்... 'அனைத்தையுமே' மறந்து போயஸ் தோட்டம் போய் அதிமுகவில் மீண்டும் ஐக்கியமானார் வீரப்பன். ஆனால் வீரப்பனை எப்போதும் சந்தேகக் கண்ணோடுதான் ஜெயலலிதா அணுகினார்.
முடித்து வைத்த ஜெ. 1995-ம் ஆண்டு ரஜினியுடன் நெருக்கமாக இருந்தார் வீரப்பன். அப்போதுதான் தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துள்ளது என ரஜினிகாந்த் சாடினார். இதனைத் தொடர்ந்து ஆர்.எம். வீரப்பனை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.
பின்னர் அவரையும் அவரது ஆதரவாளர்கள் என ஜெயலலிதா கருதிய முன்னாள் அமைச்சர் மாதவன், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரையும் கட்சியில் இருந்து நீக்கினார். அத்துடன் முடிவுக்கு வந்தது வீரப்பனின் அதிமுக அரசியல் சகாப்தம்.
கலைஞரின் நண்பர் அதன் பின்னர் தனிக் கட்சியை வீரப்பன் தொடங்கியபோதும் அரசியலில் சோபிக்கவில்லை..
அரசியலில் தனக்கென பல சிஷ்யர்கள் உருவாக்கினார். இன்றைக்கு ஜெகத்ரட்சகன், திருநாவுக்கரசர், ஏ.சி. சண்முகம் ஆகியோர் இவரது சிஷ்யர்கள்.
பிரதமர் இந்திரா மறைந்ததும் 1984ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த நேரத்தில் முதல்வர் எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். எம்ஜிஆர் சிகிச்சை பெறும் படங்களையே
மக்களிடம் பிரச்சாரமாகக் கொண்டு சென்றார். ஆர்எம்வீ. இவரது தேர்தல் வியூகத்தால் எம்ஜிஆர் இல்லாமலேயே அதிமுக அமோக வெற்றி பெற்றது.
எம்ஜிஆர் இருக்கும்போது ஆம்ஆர்வீக்கும், ஜெயலலிதாவுக்கும் ஏழாம் பொருத்தம். சென்னை மாநகர பேருந்துகளில் ஜெ. சிரீஸ் பேருந்துகளும், அதற்குப் போட்டியாக வி சிரீஸ் பேருந்துகளும் இயங்கின. அவை ஜெயலலிதா மற்றும் வீரப்பனை குறிப்பதாக உள்ளது என்றும் அப்போதே பரவலாக பேசப்பட்டு வந்தது.
1987ம் எம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. ஜானகி அணியை ஆர்எம்வீ வழிநடத்தினார். 1989ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு இரண்டு அணிகளும் இணைந்தன. அதைத்தொடர்ந்து 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான போது அமைச்சரவையில்
ஆர்எம்வீ சேர்த்துக்கொள்ளப்பட்டார். பெரியார் தாம் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்றால் தம்மோடு ஒரு புத்தக மூட்டையையும் எடுத்துச் செல்லும் வழக்கமுடையவர். அதற்கென்று ஓர் உதவியாளர் இருப்பார். பெரியாரின் பழைய உதவியாளர் முறையாக பணிக்கு
வராமல் படுத்தியதால்தான் புதியவர் வீரப்பன் வந்திருக்கிறார். பெரியார்க்கு எவ்வளவு புத்தகங்கள் கொண்டு போகிறோம், கூட்டத்தில் என்ன விற்கிறது, மீதம் எத்தனை, கணக்கு வழக்கு என்ன போன்றவை குறித்து எதுவும் தெரியாது.
"ஐயா... இவ்வளவுக்குப் புத்தகங்கள் வித்திருக்குங்க..." என்று உதவியாளர் கொடுக்கும் தொகையைப் பேசாமல் வாங்கிக்கொள்வார்.
இப்போது வீரப்பன் புத்தக மூட்டையைத் தூக்கிவர, தேனி நகரத்திற்கு ஒரு பொதுக்கூட்டத்திற்குச் செல்கிறார் பெரியார். மேடையிலமர்ந்து பெரியார் பேசுகிறார்.
மண்ணில் புத்தகங்களைக் கடைபரப்பி விற்கும் வேலை வீரப்பனுக்கு. கூட்டம் முடிந்தது. விற்றது போக மீதமிருந்த புத்தகங்களைக் கட்டாகக் கட்டி எடுத்து வருகிறார் வீரப்பன். பெரியாரிடம் வந்த வீரப்பன் ஒரு துண்டுச் சீட்டைத் தருகிறார். அதில் அங்கே விற்பனையான நூல்களின் பட்டியல்,
விற்ற படிகளின் எண்ணிக்கை, விலை, மொத்த விற்பனைத்தொகை ஆகிய அனைத்தும் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன. மொத்த விற்பனைத் தொகையைப் பெரியாரிடம் அணா பிசகாமல் கொடுக்கின்றார் வீரப்பன். சொன்னால் நம்பமாட்டீர்கள், பெரியார் வியந்து போய்விட்டாராம். பழைய உதவியாளர் புத்தகம் விற்றுக் கொடுத்து
வந்த தொகையைக் காட்டிலும் அது பன்மடங்கு மிகுதியாக இருந்ததாம். பழைய உதவியாளரிடம் எது விற்றது போனது என்று கேட்டால் விழிப்பாராம். ஆனால், வீரப்பன் ஒரு பட்டியலிட்டு விற்பனைத் தொகையைக் கொடுக்கின்றார். அந்த நேர்மையும் நம்பிக்கை தவறாத நடத்தையும்தான் வீரப்பன் என்னும்
உதவியாளரைப் படிப்படியாக உயர்த்தி அமைச்சராகவும் ஆக்கின என்றால் மிகையில்லை. வீரப்பனைப் பெரியார்க்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. வேறு உதவியாளர்களைத் தேடும் வேலையை அவர் மேற்கொள்ளவில்லை. வேறு யாரும் வீரப்பாவுக்கு நிகராக மாட்டார்கள் என்று கூறிவிட்டார்.
"ஐயா... வீரப்பாவைத் திருப்பி அனுப்புகிறீர்களா?" என்னும் அண்ணாதுரையின் கடிதத்துக்கு "நான் வீரப்பாவைத் திருப்பி அனுப்புவதாக இல்லை... எனக்கு இப்படியோர் ஆள் கிடைக்கமாட்டான். நீ வேறு ஆள் தேடிக்கொள்," என்று கடிதமெழுதிப் போட்டுவிட்டாராம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

15 Sep
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும், Image
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
Read 23 tweets
15 Sep
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17. Image
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
Read 4 tweets
15 Sep
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் நாய் தரகர் தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியா ?

அதிமுக முதுகில் சவாரியா ?

@Narayanan3 @BJP4TamilNadu @annamalai_k Image
சொந்தக்கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியுமா? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

அதிமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
உள்ளாட்சி தேர்தல்: அமமுக-தேமுதிக கூட்டணி முறிந்தது Image
Read 4 tweets
15 Sep
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
Read 25 tweets
15 Sep
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. Image
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
Read 4 tweets
14 Sep
#HBDarignaranna
#MupperumVizha2021
#முப்பெரும்விழா
#DravidamisaLifestyle
#திராவிடம்_ஒரு_வாழ்க்கைமுறை

தொ. பரமசிவன்

அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.

நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.
Read 40 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(