பழநிக்கு செல்ல இயலாத பக்தர்கள் இத்தலத்து ஆண்டவரை வழிபடுவது நலம்.சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
🙏🇮🇳1
அண்ணாசாமி தம்பிரான்:
இவர்தான் இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர்.தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர்.(நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்) 🙏🇮🇳2
இவர்தன் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழநியிலிருந்து வாங்கி வந்த பழநிஆண்டவர் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தவர்.🙏🇮🇳3
இவர் வைத்து பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
🙏🇮🇳4
இரத்தினசாமி தம்பிரான்:
இவரும் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர்.இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார்.அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 🙏🇮🇳5
இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.
🙏🇮🇳6
பாக்யலிங்க தம்பிரான்:
இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிருகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர்.இவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர்.இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது.
🙏🇮🇳7
இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில்பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. 🙏🇮🇳8
இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.
🙏🇮🇳9
சிறப்பம்சங்கள் :
இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது விசேஷம்அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு. இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு தங்க தேர் உள்ளது.
அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா அலை; அலட்சியம் வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை
வாஷிங்டன்: 'அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கோவிட் அலை விரைவாக உச்சம் தொடும்; கவனக்குறைவாக இருக்க வேண்டாம்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கோவிட் அலை முடிவடைந்திருப்பது சற்று நிம்மதியை அளிக்கிறது.
ஆனால் தற்போது இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் ஒரே மாதிரியான கோவிட் தொற்று நிலை தொடர்வதை காண முடிகிறது.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 13ம் தேதி வரையிலான ஏழு நாட்களில், பாதிப்பு 1.72 லட்சமாக பதிவாகியுள்ளது; தினமும் 1,800 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
பீஜிங்: சீனாவில் டெல்டா வகை வைரஸ் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் சீனப் பகுதியில் புஜியான் மாகாணத்தில் புட்டியான் நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை.
குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் மோடி
புதுடில்லி :இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் முதல் முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
வாஷிங்டனில், வரும் 24ம் தேதி நடக்கும் குவாட் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இரு தரப்பு உறவுகள்
குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு, கடந்த மார்ச் மாதம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது. இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்கும் முதல் மாநாடு 24ம் தேதி வாஷிங்டனில் நடக்கிறது.
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு: வரவேற்பும் எதிர்ப்பும்!
சென்னை: சட்டமன்றத்தில் மனித வள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில், “நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்”
என அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெண்களிடம் வரவேற்பும், ஆண்களிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த அறிவிப்புக்கு அரசுப் பணிகளுக்கு தயாராகும் பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் புது கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், காங்., தலைவர் உட்பட சிலர் கலக்கமுற்றுள்ளதாக தெரிகிறது.
இதில் கலக்கமடைய என்ன இருக்கிறது? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் உண்டாகும்.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக இருந்து கலாட்டா நடந்ததால் பயந்து உள்ளனரோ... எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பர் என்று நினைக்க முடியுமா?
யார் புதிதாக பதவிக்கு வந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்.
ஆர்.என்.ரவி, கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகள் எஸ்.பி., உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார். பின், மத்திய அரசு பணிகளுக்கு மாற்றப்பட்டார்.
புதுடில்லி :ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது பற்றி, ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை மறுதினம் பரிசீலனை செய்கிறது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.
அதனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கூட்டம், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நாளை மறுதினம் நடக்க உள்ளது.