1989 களிலே மேதகு பிரபாகரனுடனான புரட்சிப்புயல் வைகோ சந்திப்பின் போது பல புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்கப்பட்டது..
ஆனால் தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறிய 2009ல் சீமான் ஈழம் போய் ஆமை, இட்லி கறி எல்லாம் திண்ண போது ஏன் ஒரே ஒரு போட்டோவோ, வீடியோவோ கூட எடுக்கல??
பொட்டு அம்மான்
நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்ட அழைத்துவரப்பட்ட கருணா "பொட்டு அம்மானை விட்டு விட்டீர்களே!" என்று சிங்கள ராணுவத்தினரை கடிந்துகொண்டதாக செய்தி உண்டு. அந்தளவுக்கு ஒரு வீரியமான மனிதராக அறியப்பட்டவர் பொட்டு.
ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகே அந்த பெயர் இங்கே பிரபலம் ஆனாலும் எங்களை போன்ற பரம்பரை திமுகவினருக்கு அப்பெயர் வைகோவின் மூலம் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தது.
பெயர் மட்டும் தான் தெரியும் என்றாலும் அந்த வித்தியாசமான பெயரே அவருக்கு ஒரு மிகப்பெரிய அறிமுகம் தான்.
அதிலும் வைகோ, பிரபாகரன் இருவருடன் நிறைந்த முடியும் தாடியுமாக செம அழகாக கையை கட்டிக்கொண்டு நிற்கும் ஒல்லியான பொட்டு அம்மான் புகைப்படம் ரொம்பவே பிரபலம்.
பிரபாகரனுக்கு எப்படி பல செவி வழி கதைகள் இருக்கிறதோ, அதைவிட அதிகமான கதைகள் பொட்டு அம்மானுக்கு உண்டு.
புலனாய்வு & உளவுப்பிரிவு தலைவர் என்பதால் எல்லாமே வியக்கவைக்கும், சிலிர்க்கவைக்கும் கதைகள் தான். இஸ்ரேலின் மொசாத் உளவுப்பிரிவுக்கு நிகராக பொட்டு அம்மான் தலைமையிலான புலிகளின் உளவுப்பிரிவு பேசப்பட்டது.
போர் முடிந்து 10 ஆண்டுகள் கழித்து, 2019ல் கூட குருவி என்ற ரகசிய பெயருடன் அவர் கொழும்பிலேயே தங்கியிருப்பதாகவும் அவரை கண்டுபிடிக்க சிங்கள ராணுவம் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும் சர்வதேச உளவு அமைப்புகள் எல்லாம் அவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாகவும் செய்திகள் உண்டு.
இப்படியாக ராணுவம், சிபிஐ, இன்டர்போல், ஸ்ரீலங்கா, அமெரிக்கா, இஸ்ரேல் என்று பேசப்பட்ட பொட்டு அம்மான் பற்றிய கதைகள் எல்லாமே Crime Thriller வகை கதைகளாகவே இதுவரை இருந்திருக்கிறது.
அவருக்கும் குடும்பம் இருக்கிறது, வீடு இருக்கிறது, மனைவி இருக்கிறார்,அவர் சமைக்கிறார், இட்லி சுடுகிறார்,
போர் சூழல் என்றாலும் அந்த இட்லியில் கறியை சேர்த்து சுடக்கூடிய பொறுமை பெற்றவராக இருக்கிறார், அந்த கறியுடன் கூடிய இட்லிகளை மற்றவருக்கு அளித்து மகிழும் விருந்தோம்பல் மிக்கவராக இருக்கிறார் என்றளவிலான குடும்பப்பாங்கான கோணத்தில்...
புதுமையான Family Drama கதையை சொல்லியிருக்கும் சீமான் அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.
யாருக்கு தெரியும்? அடுத்த ஆஸ்கர் விருதை சீமான் வாங்கி கையில் வைத்துக்கொண்டு "எல்லாப் புகழும் அண்ணிக்கே!" என்று சொல்லும் நாள் வந்தாலும் வரலாம்.
பின்குறிப்பு:
கொழும்பிலிருக்கும் ரகசிய இடத்தில் இன்றுவரை உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் பொட்டு அம்மான் கண்ணில் கண்ணீருடன் இக்கதையை கேட்டதாக உளவுப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. 😂
கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.
நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.