1986 மே 6ம் தேதி, கிட்டுவின் தலைமையில் யாழ் கோண்டா பகுதியில் ஈழ விடுதலயை லட்ச்சியாமாக வைத்திருந்த அந்த இதயம் தோட்டக்களால் சுக்குநூறாக
சிதறடிக்கபட்டது, ஒன்றல்ல இரண்டல்ல, எதிரில் நிராயுதாபாணியாக நின்ற அந்த போராளியின் உடலை 20க்கும்.
அதிகமான குண்டுகள் சல்லடையாக்கின, சுட்டது எதிர்த்த சிங்களவன் அல்ல , தன் ரத்தம் பகிர்ந்த சகோதரன்.என்ன தவறு செய்திருந்தாலும் சபாவுக்கு இந்த தண்டனை அதிகம், அதற்கு என்ன காரணம், எந்த தரப்பில் இருந்து சொல்லபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அன்று சரிந்து விழுந்தது சபாவின் சடலம் மட்டுமல்ல.
ஈழம் என்கிற ஒரு தேசத்தின் நம்பிக்கை. சபா மட்டும் அல்ல அவரின் டெலோ இயக்கத்தின் போராளிகள் #அறுநூறு பேர் படுகொலை செய்தார்கள், டயர்களில் போட்டு கொளுத்தி படுகொலை செய்தார்கள்....
நடராஜன் தங்கதுரை மற்றும் யோகசந்திரன்(குட்டிமணி) என்பவரால் உருவாக்கபட்ட ஒரு சிறு
குழு தான் பின்னாளில் தமிழிழ விடுதலை இயக்கமாக(டெலொ) மாறியது. அப்பொழுது அவர்களுடன் களத்தில் தளபதியாக செயல்பட்டவர் சிறி சபாரத்தினம். ..
இந்தியாவிற்க்கு தப்ப முயன்ற தலைவர்கள் இருவரும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யபட, ( இது கூட பிரபாவின் காட்டி காட்டி
கொடுப்பு என்று போராளிகள் வட்டம் பேசிக்கொளவது உண்டு ).
குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில் கொடுராமக கொலை செய்யபட, டெலோவின் தலைவரானார் சிறி சபாரத்தினம்.
தலைவர் என்று ஆணையிடுபவரல்ல சபா, களத்தில் இறங்கி போராடுபவர்.இன்றும் சபாவை அப்படி தான் ஈழ தமிழர்களும்,
புலம் பெயர்ந்த தமிழர்களும் நினைவு கூறுகின்றனர்.ஈழ விடுதலை இயக்கங்களும் அனைத்தும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க, இந்திராவும் போராளி இயக்கங்களுக்கு தாரளமாகவே உதவியளித்தார்.
டெலோ, இராஸ்,விடுதலை புலிகள் என பல இயக்கங்களாக சிதறிகிடந்தவற்றை ஒன்றாக இணைத்து ENLF ஆக
உருவாக்கபட்டது.அனைத்து போராளிகளும் ஒன்றாக இணைந்து தனி ஈழத்திற்க்காக் போராடுவது என உறுதி செய்யபட்டது.
தங்களின் தொப்புள் கொடியான தமிழகத்தின் அரசியல்வாதிகள்.
ஈழ பிரச்ச்னையை அரசியலாக்க முயலுகிறார்கள் என்ற ஒரு சிறு விஷ்யம் தெரியாமல், புலிகளும் ,
மற்ற இயக்கங்களும் பிரிந்தனர். எம்ஜிஆர் புலிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய, கலைஞர் டேலொவிர்க்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார். சபா, கலைஞரின் அன்பிற்க்குரியவரானார்.
கலைஞர் திரைக்கதை எழுதிய ‘பாலைவன் ரோஜாக்கள்’ படத்தில் கதநாயகனின் பெயர் சபாரத்தினம்.
இந்திய உளவுத்துறை போராளி இயக்கங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து அவர்களுக்கு வியுகங்களையும் அமைத்து கொடுக்க, இதனை ஏற்க புலிகள் தயங்கினர்.
இந்தியா தன் சுயலாபத்திற்க்கு ஈழ போராளிகளை பயன்படுத்துகிறதென முடிவு செய்த்னார், ஆனால் இந்தியாவின் உளவுத்துறையின் வாக்கை வேத
வாக்காக் மற்ற இயக்கங்கள் எடுத்து கொள்வதாக் கோபப்பட்டனர்.
தனி ஈழத்தை குறிக்கோலாக கொண்டு மற்ற இயக்கங்கள் இந்தியாவின் உதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தன..
அவர்களுக்கு தேவை தனி ஈழம்.
இயக்கத்துனுள் கருத்து வேறுபாடுகள் முற்றின,எந்த இயக்கம் பெரியது என்ற மிக மோசமான ஃமாபியா
அரசியல் ஈழ விடுதலை இயக்கத்தினுள் புகுந்தது. பரஸ்பரம் சில நபர்கள் கொலை செய்ய்பட்டனர், அந்த கொலைகள் மற்ற இயக்க்ங்கள் தான் செய்கின்றன என தமக்குள் சந்தேக பட தொடங்கினர்.
அந்த வழியில், புலிகள் இயக்கதிற்கு உயிர் சேதமும், தனி ஈழம் என்ற லட்சியத்தில் விரிசல் இருபதாக
புலிகள் மற்ற இயக்கங்களை சந்தேக பாட தொடங்கியது, அவர்கள் ஒரு படி மேலே போய் சில கொலைகளுக்கான காரணத்தை ஆராயமால் ‘துரோகி’ பட்டத்தை சபாவிர்க்கு கொடுத்தனர்.
துரோகி’ என்ற வார்த்தை வந்துவிட்டால் விடுதலை புலிகள் அதற்கு ஒரே தண்டனையாக வைத்திருத்து மரணத்தை.
சபாவிற்க்கு டார்கெட் வைக்கபட்டது. அப்பொழுது சபாவிற்க்கு யாரும் அடைக்கலம் தர கூடதெனவும், சபாவை உடனடியாக் பிடித்து கொடுக்குமாறும் மக்களுக்கு விடுதலை புலிகள் ஆணையிட்டனர்..
சபா என்ன செய்வதறியாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.
தமிழகத்தில் அப்பொழுது நடைபெற்ற டெசோ மாநாட்டின் போது, சபாவின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கலைஞர், விடுதலை புலிகள் இயக்கத்திடம் தன் சார்பில் சபாவை ஒன்றும் செய்ய வேண்டாம் என கோரினார், புலிகளும் அதற்க்கு செவி சாய்த்தனர்.
சபாவின் உயிருக்கு தங்களால் ஆபத்து வராது என உறுதியளித்தனர்.
கஞ்சா காடு ஒன்றில் சமாதானத்திர்க்கு வந்த சபாரத்தினத்தை புலிகள் இயக்கத்தை சேர்ந்த கிட்டு, மண்டியிட்ட சபாரத்தினம் எவ்வளவும் கெஞ்சியும் அவருக்கு மரணத்தை பரிசாகளித்தார்.
போராளி என ஆனபோதே சபாவின் மரணம் உறுதியானது தான் என்ன தன் சகோதரனால் கொல்லபட்டார்.
இலங்கை தமிழ் மக்களின் பாதுகாப்பில் தான் இந்தியாவின் பாதுகாப்பும் தங்கி உள்ளது என்னும் அரசியல் தீர்க்க தரிசனமான கொள்கையை இருதுருவ அரசியல் இருந்த காலத்தில் துணிந்து 1984 ஆண்டு செர்மனிக்கு விஜயம் செய்தபோது ...
எண்ணம் எனும் பத்திரிக்கை பேட்டியில் #டெலோ தலைவர் சிறிசபாரத்தினால் இக்கருத்து கூறப்பட்டுள்ளது.
விடுதலை இயக்கங்களில் ஒரு தெளிவான வெளிநாட்டு கொள்கையை அன்று 80 பதுகளில் கூறும் போது #டெலோ விடம் அரசியல் இல்லை ...
இவர்கள் இந்தியாவின் கூலி படை என்று கூறிய அனைத்து விடுதலை அமைப்புக்களும் இறுதியில் இந்தியாவின் காலடியில் வீழ்ந்தது தான் வரலாறு.
விடுதலை புலிகள்1986ல் டெலோவை அழிக்காமல் விட்டிருந்தால் இன்றைய #முள்ளிவாய்க்காலை தவிர்த்திருக்கலாம்.
கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.
நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.