Time travel லில் இரண்டு வகை உள்ளன. ஒன்று எதிர்காலத்திற்கு பயணிப்பது. மற்றொன்று இறந்த காலத்திற்கு பயணிப்பது.
நீங்கள் விண்வெளிக்கு சென்று அங்கு light speed க்கு ஈடான வேகத்தில் பயணித்தீர்கள் என்றால், உங்களுக்கு நேரம் மெதுவாக செல்லும். பூமியில் நேரம் வேகமாக செல்லும்.
நீங்கள் திரும்பிவரும்போது பூமியில் பல வருடங்கள் ஓடி இருக்கும். ஆக நீங்கள் எதிர்காலத்தை வந்து அடைவீர்கள்.
Black hole அருகே நீங்கள் இருந்தால், நேரம் அங்கே மெதுவாக தான் இயங்கும். ஆகையால், நீங்கள் பூமிக்கு திரும்பி வரும்போது உங்களுக்கு சிறிய அளவிலான காலம் தான் கடந்து இருக்கும்.
ஆனால் பூமியில் பெரிய அளவிலான காலம் கடந்து போய் இருக்கும்.
இப்படியாக எதிர்காலத்திற்கு பயணிப்பது என்பது எப்போதுமே சர்ச்சைக்குரிய ஒரு விஷயமல்ல. சாத்தியமான ஒன்றாக தான் ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.
ஆனால் கடந்த காலத்திற்கு பயணிப்பது, இங்குதான் பல வாதங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன, ஏனென்றால் எதிர்காலத்திற்கு செல்வதை போன்று கடந்த காலத்திற்கு செல்வது என்பது சாத்தியம் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்பவில்லை.
Wormhole குறிப்பாக கடந்த காலத்திற்கு பயணிக்க உதவும் கோட்பாடாக கருதப்படும் Wormhole ஐ ஒரு விசித்திரமான கருத்தாகவே பார்க்கின்றனர். வார்ம் ஹோல் என்பது ஒரு பாலம், நீங்கள் விரும்பினால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கலாம்.
அது இங்கே இருந்து வெளிய செல்ல உதவும் ஒரு குறுக்குவழி அல்லது ஒரு சுரங்கப்பாதையை போன்றது தான். ஒரு பரவெளி வாயிலின் திறப்பு ஆனது இரண்டு வழிகளை கொண்டிருக்கும் மற்றும் அவைகள் ஒரே விகிதத்திலான கால பயணத்தை கொண்டிருக்காது.
அதாவது அதன் ஒரு வழியாக சென்றால் கடந்த காலத்திற்கு செல்லலாம், மற்றொரு வழியில் சென்றால், வேறு வழியில்லாமல், எதிர்காலத்தை நோக்கி பயணப்படுவீர்கள்.
இப்படி Wormhole மூலம் கடந்த காலத்திற்கு செல்ல முடியும் என்று யூகித்தலும் எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Jacob பையன் Joseph அ அவனோட brothers Egypt க்கு அடிமையாக வித்துறுவாங்க ஆனா அங்க இருந்த Pharoah கிட்ட நல்ல பேரு வாங்கி அவரு நல்ல position க்கு வந்துடுவாரு. அப்புறம் ஒரு பெரிய பஞ்சம் வரும் Joseph அவரு சொந்தக்காரங்க எல்லாரையும் Egypt க்கு வாங்க நான் இங்க நல்ல நிலைமையில் இருக்கேன்
உங்க எல்லாரையும் பார்த்துக்கறேன் அப்படினு கூப்பிடுவார். இதெல்லாம் பெரிய கதை அப்புறமா ஒரு தனி thread ஆ போடுறேன். அங்க போய் இந்த Israelites பல்கி பெருகிடுவாங்க. ஜோசப் செத்து போய்டுவாரு அவர support பண்ணுன Pharoah வும் செத்து போய்டுவாரு. புது Pharoah வந்து என்னடா இது நம்ம நாட்டுல
இந்த Israelites ஜன தொகை இவளோ அதிகமாக போச்சே விட்டா நம்மள ஓரம்கட்டி நாட்ட இவங்க கைபற்றிடுவாங்க போல அப்படினு அவங்கள கொடுமை படுத்துனது மட்டும் இல்லாம புதுசா பிறக்குற பிள்ளைங்க எல்லாம் கொன்னு போடுங்க என்று order போட்டாரு. இதுக்கு பயந்து மோசஸ் அம்மா மோசஸ் அ ஒரு பெட்டியில் வச்சு
எல்லா அறிவியல் பெயர்களும் லத்தீன் ல தான் வைக்கப்படும்.
காரணம் ஒரு பொது பெயர் அவசியமா இருக்கு செம்பருத்தி பூவோட குணாதிசியங்கள் பற்றி ஒரு அறிவியலார் விளக்குறார்.
இன்னொருவர் மந்தாரா பூவோட குணாதிசியங்கள் பற்றி விளக்குறார் ரெண்டுமே ஒரே பூ தான், ஆனா வேற வேற பெயர் என்பதால் குழப்பங்கள் வரும். செம்பருத்திக்கு தெலுங்கு ல மந்தாரா அனால் தமிழ்ல இருவாட்சிக்கு மந்தாரை அப்படினும் சொல்லுவாங்க.
இது போன்ற குழப்பங்களை தவிர்க்க உலகம் எங்கும் ஒரே பொது பெயர் தேவை பட்டது அதுதான் Scientific name. செம்பருத்திக்கு Hibiscus rosa-sinensis.
இந்த பைபிள் ல கால்வாசி கதைகள் apocalyptic கதைகள் தான். Daniel, Revelation, 1 Enoch, 2 and 3 Baruch, 4 Ezra, Apocalypse of Abraham, Shepherd of Hermas, Apocalypse of Peter, Joel, Zechariah, Isaiah இப்படி நிறைய...
அதாவது கெட்டவர்கள் அதிகமாகி அவங்க அட்டகாசம் தாங்க முடியாம கடவுள் உலகத்தை அழிச்சுருவாரு. அப்புறம் மறுபடி புதுசா ஒரு சொர்க்க உலகத்தை படைப்பார் என்கிற கதை. எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து உலகத்தை படைக்கறேன் அப்படிங்கற மாதிரி. ஏன் இப்படி apocalyptic கதைகள் இருக்கு?!
தலைமுறை தலைமுறையாக இந்த ஹீப்ரு மக்களின் கஷ்டம் அதாவது யூத மக்கள் கஷ்டம் அதிகரித்து கொண்டே வருது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ரோமானியர்கள் இப்படி யாராவது ஒருத்தர் யூத மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வருகிறார்கள்.
Lucifer யார்?
சாத்தன் (Satan) என்கிற Hebrew வார்த்தைக்கு கேள்வி கேட்பவன் என்று பொருள். Diabolos என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து தான் devil என்கிற வார்த்தை வந்து இருக்கக்கூடும் என்கிறார்கள். Diabolos என்றால் குற்றம் சாட்டுபவன் என்று பொருள்.
"Devil's advocate" என்கிற சொல்லாடலை கேள்விப்பட்டு இருப்பீர்கள். Mock Trial லில் வக்கீல்கள் அவர்களது வழக்கு கோர்ட்க்கு சென்றால் அங்கு எதிர் தரப்பு என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்? என்னென்ன ஓட்டைகள் இவர்களது வாதத்தில் இருக்கிறது என்று இவர்களுக்குள் விவாதித்து கொள்வார்கள்.
அதாவது, எதிர் தரப்பின் கருத்தை ஆதரிக்கவில்லை ஆனால் அந்த எதிர்தரப்பின் சார்பாக கேள்விகள் கேட்டு நமது தரப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது. இப்படி எதிர் தரப்பு சார்பாக கடினமான கேள்விகள் கேட்பவர் Devil's advocate எனப்படுகிறார்.
பழிவாங்கத் துடிக்கும் ஆண் தமிழ்ச்சமூகத்தில் வீரனாகவும் தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறான். சுடலைமாடன், கருப்பசாமி, காத்தவராயன் என ஆண் தெய்வங்களின் வரலாறெல்லாம் அவைதாம். மறுதலையாக, பழிவாங்கத் துடிக்கும் பெண் எந்தச் சமயவாதியாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவளாகிறாள்.
தமிழ் நாட்டார் மரபில் பெண்கள் நீலியின் கதையைப் பேணி வந்திருக்கிறார்கள். பலதார மணம் என்பது தமிழ்ச் சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இயல்பாக இருந்திருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு பெண்ணுக்குக் கணவனின் தங்கை கொடியவளாகவே தோற்றமளிக்கிறாள்.
அது போலவே மறுமணம் செய்துகொண்ட கணவனும் மாற்றாளும் (சகக்களத்தியும்) மனித மதிப்புக் குறைந்தவர்களாவார்கள். பாலியல் பொறாமையும் சொத்துரிமை மறுப்பும் பெண்களைப் பெண்களே எதிரிகளாக நினைக்கும் சமூக உளவியலை உருவாக்கி வைத்துள்ளன.
time travel ல என்னென்ன paradox இருக்குன்னு முன்னாடி பார்த்தோம் இல்லையா? இப்போ கடவுள் என்று ஒருவர் இருந்தால் அதில் என்னென்ன paradox இருக்குன்னு பார்க்கலாம் அதாவது லாஜிக் மீறல்கள்.
1. Paradox of Omnibenevolent God (கடவுள் கருணையே வடிவானவர்):
கடவுள் கருணையே வடிவானவராக இருந்தால் Hitler போன்ற ஆட்களை படைத்து இருக்க கூடாது. தெய்வத்திற்கு சமமான பசுவை கொன்று உண்ணும் புலியை படைத்து இருக்க கூடாது.
11 வயது சின்ன பெண்ணை ஒருவன் கொடூரமாக கற்பழிப்பான் என்று தெரிந்தும் அவனை படைத்து இருக்க கூடாது. ஒருவேளை free will காரணமாக அவன் என்ன செய்வான் என்று முன்கூட்டியே தெரியாமல் போனாலும், அவன் அந்த செயலில் ஈடுபடும்போது அதை தடுத்து இருக்க வேண்டும்.