பழிவாங்கத் துடிக்கும் ஆண் தமிழ்ச்சமூகத்தில் வீரனாகவும் தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறான். சுடலைமாடன், கருப்பசாமி, காத்தவராயன் என ஆண் தெய்வங்களின் வரலாறெல்லாம் அவைதாம். மறுதலையாக, பழிவாங்கத் துடிக்கும் பெண் எந்தச் சமயவாதியாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவளாகிறாள்.
தமிழ் நாட்டார் மரபில் பெண்கள் நீலியின் கதையைப் பேணி வந்திருக்கிறார்கள். பலதார மணம் என்பது தமிழ்ச் சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இயல்பாக இருந்திருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு பெண்ணுக்குக் கணவனின் தங்கை கொடியவளாகவே தோற்றமளிக்கிறாள்.
அது போலவே மறுமணம் செய்துகொண்ட கணவனும் மாற்றாளும் (சகக்களத்தியும்) மனித மதிப்புக் குறைந்தவர்களாவார்கள். பாலியல் பொறாமையும் சொத்துரிமை மறுப்பும் பெண்களைப் பெண்களே எதிரிகளாக நினைக்கும் சமூக உளவியலை உருவாக்கி வைத்துள்ளன.
எனவேதான் கொலைகாரக் கணவனைப் பழி வாங்கிய நீலி தெய்வமாக்கப்படவில்லை; அதே சமயம் அவள் மறக்கப்படவுமில்லை. இந்த இரண்டுக்குமான இடைவெளி நினைக்கப்பட வேண்டிய ஒன்று.
-தொ.பரமசிவன்
இன்றைய தமிழ் சீரியல்களில் கூட காதலித்த பெண்ணை விட்டு வேறு பெண்ணை நாயகன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்து கொண்டால் அந்த நாயகன் வில்லன் அல்ல அதற்கு பழிவாங்க துடிக்கும் அந்த காதலி தான் கதையில் வில்லி.
இந்த பைபிள் ல கால்வாசி கதைகள் apocalyptic கதைகள் தான். Daniel, Revelation, 1 Enoch, 2 and 3 Baruch, 4 Ezra, Apocalypse of Abraham, Shepherd of Hermas, Apocalypse of Peter, Joel, Zechariah, Isaiah இப்படி நிறைய...
அதாவது கெட்டவர்கள் அதிகமாகி அவங்க அட்டகாசம் தாங்க முடியாம கடவுள் உலகத்தை அழிச்சுருவாரு. அப்புறம் மறுபடி புதுசா ஒரு சொர்க்க உலகத்தை படைப்பார் என்கிற கதை. எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து உலகத்தை படைக்கறேன் அப்படிங்கற மாதிரி. ஏன் இப்படி apocalyptic கதைகள் இருக்கு?!
தலைமுறை தலைமுறையாக இந்த ஹீப்ரு மக்களின் கஷ்டம் அதாவது யூத மக்கள் கஷ்டம் அதிகரித்து கொண்டே வருது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ரோமானியர்கள் இப்படி யாராவது ஒருத்தர் யூத மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வருகிறார்கள்.
Lucifer யார்?
சாத்தன் (Satan) என்கிற Hebrew வார்த்தைக்கு கேள்வி கேட்பவன் என்று பொருள். Diabolos என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து தான் devil என்கிற வார்த்தை வந்து இருக்கக்கூடும் என்கிறார்கள். Diabolos என்றால் குற்றம் சாட்டுபவன் என்று பொருள்.
"Devil's advocate" என்கிற சொல்லாடலை கேள்விப்பட்டு இருப்பீர்கள். Mock Trial லில் வக்கீல்கள் அவர்களது வழக்கு கோர்ட்க்கு சென்றால் அங்கு எதிர் தரப்பு என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்? என்னென்ன ஓட்டைகள் இவர்களது வாதத்தில் இருக்கிறது என்று இவர்களுக்குள் விவாதித்து கொள்வார்கள்.
அதாவது, எதிர் தரப்பின் கருத்தை ஆதரிக்கவில்லை ஆனால் அந்த எதிர்தரப்பின் சார்பாக கேள்விகள் கேட்டு நமது தரப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது. இப்படி எதிர் தரப்பு சார்பாக கடினமான கேள்விகள் கேட்பவர் Devil's advocate எனப்படுகிறார்.
time travel ல என்னென்ன paradox இருக்குன்னு முன்னாடி பார்த்தோம் இல்லையா? இப்போ கடவுள் என்று ஒருவர் இருந்தால் அதில் என்னென்ன paradox இருக்குன்னு பார்க்கலாம் அதாவது லாஜிக் மீறல்கள்.
1. Paradox of Omnibenevolent God (கடவுள் கருணையே வடிவானவர்):
கடவுள் கருணையே வடிவானவராக இருந்தால் Hitler போன்ற ஆட்களை படைத்து இருக்க கூடாது. தெய்வத்திற்கு சமமான பசுவை கொன்று உண்ணும் புலியை படைத்து இருக்க கூடாது.
11 வயது சின்ன பெண்ணை ஒருவன் கொடூரமாக கற்பழிப்பான் என்று தெரிந்தும் அவனை படைத்து இருக்க கூடாது. ஒருவேளை free will காரணமாக அவன் என்ன செய்வான் என்று முன்கூட்டியே தெரியாமல் போனாலும், அவன் அந்த செயலில் ஈடுபடும்போது அதை தடுத்து இருக்க வேண்டும்.
கடவுள் நம்பிக்கையை வலியுறுத்த பொதுவாக சொல்லப்படுவது, “X என்னும் விஷயம் ஏன் நடந்தது எப்படி நடந்தது என்று தெரியவில்லை எனவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவர் தான் நிகழ்த்தி இருக்க கூடும்.”
“ஏன் நைல் நதியில் வெள்ளம் வந்தது என்று தெரியவில்லை, ஆகையால் Hapi என்னும் தெய்வம் தான் அதற்கு காரணம்!”
“நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது என்று தெரியவில்லை, எனவே Poseidon!”
“இடி மின்னலுக்கு காரணம் புரியவில்லை, ஆகையால் Thor!”
இப்படியே பல நூற்றாண்டுகளாக விளக்க முடியாத பலவற்றுக்கு ஒரு கடவுளை பதிலாக முன்னிறுத்துகிறார்கள், மக்களும் அதற்கு பழகிவிட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் அவர்கள் கூற்று தவறு என்று அறிவியல் உண்மையான காரணத்தை கண்டுபிடித்து விளக்கி கொண்டு இருக்கிறது.
காபூலை ஆக்ரமித்துக் கொன்ட தாலிபான்கள் ஆப்கான் நாட்டு அதிபதிகளாக தம்மை அறிவித்துக் கொண்டார்கள். ஆனால் உலகத்தில் எந்த நாடும் அவர்களை அதிகாரப் பிரதிநிதிகளாக பொருட்படுத்தவில்லை. 3 நாடுகள் மட்டும் அவர்களை ஏற்று கொண்டது. அதில் முக்கியமானது பாகிஸ்தான் அந்த விதமாக அது தனித்து விடப்பட்டது
ஆனால் தாலிபான்கள் புத்திசாலிகள். புத்திசாலிகள் என்று சொல்வதைவிட குள்ளநரித்தனம் அதிகம் என்று சொல்வது சரியாக இருக்கும். அமெரிக்காவுடன் நட்பு வைத்து கொள்ளவில்லை என்றால் வாழ முடியாது என்று தெரியும். அதேபோல இந்தியாவுடன் சந்தி செய்து கொள்ளவது போல செய்தி அனுப்பியது.
ஆஃப்கனில் திருட்டுத்தனமாக வளர்க்கும் கஞ்சா செடிகளை நாசமாக்குவோம் என்றும், தீவிரவாதிகளை அடக்குவோம் என்றும் அமெரிக்காவுக்கு செய்தியை அனுப்பியது. தன்னுடைய நேர்மையை நிரூபிப்பதற்காக அயிமல்கான்ஸீ என்ற தீவிரவாதியை 1997ல் அமெரிக்காவிடம் ஒப்படைத்தது.
ஆஃப்கனிஸ்தானில் தாலிபான்களுக்கும், முஜஹிதீன்களுக்கும் நடுவில் போர் தொடங்கியது. 50,000 பேர் காபூலை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். லட்சக் கணக்கானவர்கள் ஆதரவின்றி தவித்தார்கள். தாலிபான்கள் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டு
மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.
இஸ்லாம் சட்டங்களை கடுமையாக திணிக்கச் செய்து, எதிர்த்தவர்கள் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். பெண்களையும் விட்டு வைக்கவில்லை. பெரிய பெரிய புத்தரின் சிற்பங்களை சிதைத்தார்கள். உலக நாடுகள் பெரும் அளவில் எதிர்ப்பு தெரிவித்தன. உள்நாட்டு பிரச்சனையில் மூழ்கி இருந்தது ரஷ்யா.
பாகிஸ்தானின் நிலைமை பாக்குவெட்டியில் அகப்பட்டுக் கொண்டதுபோல் ஆயிற்று. தாலிபான்களை சப்போர்ட் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் இந்தியாவை சப்போர்ட் செய்யும் கட்சி அதிகாரத்திற்கு வரும் ஆபத்து இருந்தது. தன்னை இந்த சங்கடமான நிலையில் இருந்து மீட்க வேண்டும் என