Book of Daniel (2 BCE)

இந்த பைபிள் ல கால்வாசி கதைகள் apocalyptic கதைகள் தான். Daniel, Revelation, 1 Enoch, 2 and 3 Baruch, 4 Ezra, Apocalypse of Abraham, Shepherd of Hermas, Apocalypse of Peter, Joel, Zechariah, Isaiah இப்படி நிறைய...
அதாவது கெட்டவர்கள் அதிகமாகி அவங்க அட்டகாசம் தாங்க முடியாம கடவுள் உலகத்தை அழிச்சுருவாரு. அப்புறம் மறுபடி புதுசா ஒரு சொர்க்க உலகத்தை படைப்பார் என்கிற கதை. எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து உலகத்தை படைக்கறேன் அப்படிங்கற மாதிரி. ஏன் இப்படி apocalyptic கதைகள் இருக்கு?!
தலைமுறை தலைமுறையாக இந்த ஹீப்ரு மக்களின் கஷ்டம் அதாவது யூத மக்கள் கஷ்டம் அதிகரித்து கொண்டே வருது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ரோமானியர்கள் இப்படி யாராவது ஒருத்தர் யூத மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வருகிறார்கள்.
இந்த மாதிரியான ஒரு hopeless condition ல அவங்களுக்கு தேவையா இருக்கிறது ஒரு மிக பெரிய miracle. ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட தலையீடு மட்டுமே அவங்களை காப்பற்ற முடியும் அப்படின்னு நம்புறாங்க. ஒரு பெரிய பேரழிவு நிகழ்வு உலகை மூழ்கடிக்கும்.
தீயவர்கள் அழிக்கப்படுவார்கள், மற்றும் கடவுளின் (அவங்க கடவுள் Jehovah) ராஜ்யம் எல்லா காலத்திலும் நிறுவப்படும் அப்படின்றதுதன் apocalyptic கதைகளின் basic. இந்த கதைகளின் நோக்கம் மக்கள் தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க ஊக்குவிப்பதாகும்.
அபோகாலிப்டிக் கதைகள் அவர்களுக்கு விடிவு காலம் நெருங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற உறுதியை அளிக்கிறது.

இந்த கதைகளின் அமைப்பு பாத்திங்கனா ஒரு தீர்க்கதரிசி இருப்பாரு அவருக்கு ஒரு தீர்க்கதரிசனம் கிடைக்கும் கனவு, உள்ளுணர்வு, அசிரீரி இப்படி ஏதாவது.
எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் அப்படினு ஒரு sequence of events அவருக்கு தெரியும். உதாரணமாக, ஒரு வருஷத்தில் A சம்பவம் நடக்கும் 10 வருஷத்தில் B சம்பவம் நடக்கும் 100 வருஷத்தில் C சம்பவம் நடக்கும். இப்போ A and B அவங்க காலகட்டத்துலேயே நடக்கும்.
இந்த A and B சம்பவங்கள் நடந்ததால் C என்கிற சம்பவம் கட்டாயமாக 100 வருடம் கழித்து நடந்தே தீரும் இதுதான் இந்த கதைகளின் அமைப்பு.

அதாவது கடவுளுக்கு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் தெரியும் என்பதால் எதிர்காலத்தில் நடக்க போவதை அவருக்கு பிரியமான ஒரு ஆள்கிட்ட சொல்லி வைக்கிராரு
எப்போவும் இந்த மாதிரி apocalyptic சம்பவங்கள் climax (அதாவது C சம்பவம்) எப்போ நடக்கும் அப்படின்னா விசுவாசிகள் ரொம்ப கொடூரமாக துன்புறுத்தப்படும் போது இந்த climax C சம்பவம் நடக்கும்.
பகை நாட்டு மக்கள், obviously வேற மதத்து மக்கள் கடவுளின் தேர்ந்தெடுக்க பட்ட மக்களை படாதப்பாடு படுத்தி அது ஒரு extreme எல்லை க்கு போகும்போது கடவுள் வந்து ருத்ரதாண்டவம் ஆடி உலகத்தை அழிச்சிருவாரு.

தொடரும்.....
Antiochus Epiphanesஸின் (கிரேக்க அரசர்) கீழ் யூதர்களின் துன்புறுத்தல் தான் டேனியல் புத்தகம் எழுத காரணம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், யூதர்கள் கிரேக்க கடவுள்களை வணங்க மறுத்து, Yahwehவிற்கு தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டது.
பல யூதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக அந்தியோகஸ் மற்றும் அவரது சிரிய அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தனர், ஆனால் சிலர் தண்டனையின் போதும் தங்கள் நம்பிக்கைகளுக்கு உண்மையாக இருந்தனர். இந்த விசுவாசம் மிகவும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த நபர்களை ஊக்குவிக்க, டேனியல் புத்தகம் எழுதப்பட்டது. புத்தகம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது, ஒன்று பாபிலோனிய சிறைப்பிடிக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த மற்றும் அந்தியோகஸின் கீழ் யூதர்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை அனுபவித்த எபிரேயர்களைப் பற்றிய தொடர் கதையாகும்.
மற்றொரு பகுதி, நேரடியாக அபோகாலிப்டிக் வடிவத்தில், எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் தொடர்ச்சியான தரிசனங்களைக் கொண்டுள்ளது.

புத்தகத்தின் முதல் பாகத்தில் நான்கு இளம் ஹீப்ருக்கள் ராஜாவின் கட்டளை படி விக்கிரக ஆராதனையில் ஈடுபட மறுத்ததன் விளைவாக, நெருப்பு உலைக்குள் வீசப்பட்டனர்.
ஆனால் கடவுள் அவர்களை காப்பற்றுகிறார்.

மற்றொரு கதையில், டேனியலை அழிக்க ஒரு சதி உருவாக்கப்பட்டது, அவர் ஒரு எபிரேயராக இருந்தாலும், மன்னர் டேரியஸின் அரசாங்கத்தில் ஒரு முக்கியமான பதவியை வகிக்கிறார்.
அரசனால் அங்கீகரிக்கப்பட்ட கடவுள்களைத் தவிர வேறு எந்த கடவுளுக்கும் பிரார்த்தனை செய்வது, தடை செய்யப்பட்டு இருக்கிறது. டேனியல் இந்த கட்டளையைப் புறக்கணித்து, யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபிக்கிறார் இதற்கு தண்டனையாக சிங்கங்களின் குகைக்குள் தள்ளப்பட்டார் ஆனால் கடவுள் அவரை காப்பற்றுகிறார்.
புத்தகத்தின் அபோகாலிப்டிக் பகுதிகளில், கனவுகள் & தரிசனங்கள் பாபிலோனிய சிறைப்பிடிக்கப்பட்ட காலத்திலிருந்து கடவுளின் ராஜ்ஜியத்தை நிறுவுவது வரை நாடுகளின் எழுச்சி & வீழ்ச்சி பற்றிய கணிப்புகளாக விளக்கப்படுகின்றன ஒரு அத்தியாயத்தில், மன்னர் நேபுகாத்நேச்சரின் கனவைப் பற்றி கூறப்பட்டுள்ளது
இந்த Daniel யார்?

கிமு 587 இல் மன்னர் Nebuchadnezzar ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு, வழக்கம் போல ஜெருசலேம் கோவிலை சூறையாடினர். பின்னர், யூதா நாட்டில் இருந்த புத்திசாலியான வலிமையான இளைஞர்களை Babylon க்கு நாடு கடத்தி அங்கு அரண்மனையில் வேலை பார்க்கும்படி ஆணையிட்டார்.
பல கடவுள்களை வழிபடும் Babylon தேசத்திற்கு ஒரு இளைஞனாக டேனியல் நாடு கடத்தப்பட்டார், அவர் பாபிலோன் அரசர்களுக்கு சேவை செய்த போதிலும், Jehovah வை தவிர வேறு தெய்வங்களை வழிபடவில்லை.
அவரது 3 நெருங்கிய நண்பர்களுடன் (Shadrach, Meshach & Abednego), டேனியல் ஆரம்பத்தில் Nebuchadnezzar அரசவையில் பயிற்சியாளராக பணியாற்றினார்.

பின்னர் அவருக்கு நேபுகாத்நேச்சர் மற்றும் பின்னர் வந்த அரசர்கள் பெல்ஷாசர், சைரஸ் & டேரியஸ் ஆகியோரின் கீழ் முன்னணி அரசாங்க பதவிகள் வழங்கப்பட்டன.
பாபிலோனில் உள்ள தலைமை அதிகாரி டேனியலுக்கு Belteshazzar பெயரைக் கொடுத்தார், அதாவது "Beltis, protect the king."
டேனியலுக்குப் பிறகான 600 ஆண்டுகளைப் பற்றி கனவு பேசுகிறது, எனவே கிபி 70 வரை. வெறும் இஸ்ரேலைச் சுற்றியுள்ள நாடுகளை பற்றியும் ராஜ்ஜியங்களை பற்றியுமே இந்த கனவு தீர்க்கதரிசனமாக சொல்கிறது.  இந்தியா, சீனா போன்ற நாடுகளை காணோம்.
கனவில் குறிப்பிடப்பட்ட நான்கு பேரரசுகள்:
1. தங்கத் தலை நேபுகாத்நேசரின் பேரரசு, பாபிலோனியப் பேரரசு என்று கூறப்படுகிறது.
தங்க தலை - பாபிலோன் (கிமு 626-539)
பாபிலோன் எவ்வளவு பிரம்மாண்டமாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தாலும், அது எப்போதும் அதிகாரத்தில் நிலைத்திருக்காது.
ஒரு பலவீனமான ராஜ்யம் (v.39) எழுந்து அதை அழிக்கும்.
2. வெள்ளி மார்பகம் மற்றும் கைகள் Medo-Persiaவின் வலுவான Achaemenid பேரரசு (கிமு 539-331).

மேதியர்கள் & பாரசீகர்களின் ஒருங்கிணைந்த சக்தியாகும். பலவீனமானது, ஆனால் கிமு539 இல் பாபிலோனை வென்றது. அது நடந்தபோது டேனியல் அங்கு இருந்தார்
3. வெண்கல தொடைகள் Macedonian Greek பேரரசு .

வெண்கலத்தின் தொடை-கிரீஸ் (கிமு 331-168). அர்பேலா போரில், கிரேட் அலெக்ஸாண்டர் கிரேக்கத்தை உலக வல்லரசின் பீடத்தில் நிறுத்தி பெர்சியர்களை வென்றார்.
4. இரும்பு மற்றும் களிமண் கால்கள் ரோமானியப் பேரரசு (கிமு 168 - கிமு 476)

பிட்னா போர் கிரேக்க ஆட்சியின் முடிவையும் சீசர்களின் கீழ் ரோமின் அதிகாரத்தின் விடியலையும் கொண்டு வந்தது.
5. கலப்பு இரும்பு மற்றும் களிமண் அடிகள் - பிரிக்கப்பட்ட ரோம் (கிமு 476)

6. பின்னர் எந்த கையாலும் வெட்டப்படாத வேகமான பாறையால் இது அழிக்கப்படுகிறது. அதுதான் கிறிஸ்து. அவரது ஆட்சி பூமி முழுவதும் பரவுகிறது. அதுதான் உலகம் முழுவதும் மலை குவியல்களாக இருக்கிறது.
இந்த பேரரசுகளின் பெயர்களை டேனியல் சொல்லவில்லை மாறாக உமக்கு பின்னால் வரும் அரசுகள் என்று பொதுவாக சொல்கிறார். இந்த பேரரசுகளின் பெயர்கள் பின்னாளில் இதுவாக தான் இருக்கும் என்று கிறிஸ்தவர்களால் கொடுக்கப்பட்ட விளக்கம்.
ராஜாவை முகஸ்துதி செய்வது போல நீ தான் தங்க தலை என்று எல்லாம் டேனியல் கொஞ்சம் அளந்து விட்டு அதன் பின்னர் வஞ்சப்புகழ்ச்சி அணி போல என்ன தான் நீ பெரிய ஆளாக இருந்தாலும் உன்ன விட பலவீனமான அரசன் உன்னை வீழ்த்தி சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவான் என்கிறார்.
Ark of covenant கும் நெபுச்சட்னேசர் கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அதை master ji சொல்லுவாங்க @HilaalAlam . நேபுகாத்நேச்சார் கனவு ஒரு அபோகாலிப்டிக் தீர்க்கதரிசனம். நேபுகாத்நேச்சார் ஜெருசலேம் கோயிலை எரித்து அதன் செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது.
Ark of covenant ல இருக்கிற gold எல்லாம் எடுத்துட்டு மரப்பெட்டியை தூக்கி கடாசி இருப்பாரு. logical explanation. Ark of covenant சொர்க்கத்திற்கு அப்படியே பறந்து போய்டுச்சு ன்னு சிலர் சொல்லுவாங்க ஆனா பைபிள் ல அப்படி இல்ல.
ஜெருசலேமை அழித்த அப்புறம் Ark of covenant இன் தலைவிதி தெரியவில்லை. சிலர் இது சாலமன் மற்றும் ஷீபாவின் illegitimate மகனால் திருடப்பட்டு எத்தியோப்பியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அக்ஸூமில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைக்க பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். எல்லாமே வெறும் conspiracy தான்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

7 Sep
Lucifer யார்?
சாத்தன் (Satan) என்கிற Hebrew வார்த்தைக்கு கேள்வி கேட்பவன் என்று பொருள். Diabolos என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து தான் devil என்கிற வார்த்தை வந்து இருக்கக்கூடும் என்கிறார்கள். Diabolos என்றால் குற்றம் சாட்டுபவன் என்று பொருள்.
"Devil's advocate" என்கிற சொல்லாடலை கேள்விப்பட்டு இருப்பீர்கள். Mock Trial லில் வக்கீல்கள் அவர்களது வழக்கு கோர்ட்க்கு சென்றால் அங்கு எதிர் தரப்பு என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்? என்னென்ன ஓட்டைகள் இவர்களது வாதத்தில் இருக்கிறது என்று இவர்களுக்குள் விவாதித்து கொள்வார்கள்.
அதாவது, எதிர் தரப்பின் கருத்தை ஆதரிக்கவில்லை ஆனால் அந்த எதிர்தரப்பின் சார்பாக கேள்விகள் கேட்டு நமது தரப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது. இப்படி எதிர் தரப்பு சார்பாக கடினமான கேள்விகள் கேட்பவர் Devil's advocate எனப்படுகிறார்.
Read 27 tweets
5 Sep
பழிவாங்கத் துடிக்கும் ஆண் தமிழ்ச்சமூகத்தில் வீரனாகவும் தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறான். சுடலைமாடன், கருப்பசாமி, காத்தவராயன் என ஆண் தெய்வங்களின் வரலாறெல்லாம் அவைதாம். மறுதலையாக, பழிவாங்கத் துடிக்கும் பெண் எந்தச் சமயவாதியாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவளாகிறாள்.
தமிழ் நாட்டார் மரபில் பெண்கள் நீலியின் கதையைப் பேணி வந்திருக்கிறார்கள். பலதார மணம் என்பது தமிழ்ச் சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இயல்பாக இருந்திருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு பெண்ணுக்குக் கணவனின் தங்கை கொடியவளாகவே தோற்றமளிக்கிறாள்.
அது போலவே மறுமணம் செய்துகொண்ட கணவனும் மாற்றாளும் (சகக்களத்தியும்) மனித மதிப்புக் குறைந்தவர்களாவார்கள். பாலியல் பொறாமையும் சொத்துரிமை மறுப்பும் பெண்களைப் பெண்களே எதிரிகளாக நினைக்கும் சமூக உளவியலை உருவாக்கி வைத்துள்ளன.
Read 7 tweets
3 Sep
கடவுளும் paradox களும்:

time travel ல என்னென்ன paradox இருக்குன்னு முன்னாடி பார்த்தோம் இல்லையா? இப்போ கடவுள் என்று ஒருவர் இருந்தால் அதில் என்னென்ன paradox இருக்குன்னு பார்க்கலாம் அதாவது லாஜிக் மீறல்கள்.
1. Paradox of Omnibenevolent God (கடவுள் கருணையே வடிவானவர்):
கடவுள் கருணையே வடிவானவராக இருந்தால் Hitler போன்ற ஆட்களை படைத்து இருக்க கூடாது. தெய்வத்திற்கு சமமான பசுவை கொன்று உண்ணும் புலியை படைத்து இருக்க கூடாது.
11 வயது சின்ன பெண்ணை ஒருவன் கொடூரமாக கற்பழிப்பான் என்று தெரிந்தும் அவனை படைத்து இருக்க கூடாது. ஒருவேளை free will காரணமாக அவன் என்ன செய்வான் என்று முன்கூட்டியே தெரியாமல் போனாலும், அவன் அந்த செயலில் ஈடுபடும்போது அதை தடுத்து இருக்க வேண்டும்.
Read 10 tweets
1 Sep
கடவுள் நம்பிக்கையை வலியுறுத்த பொதுவாக சொல்லப்படுவது, “X என்னும் விஷயம் ஏன் நடந்தது எப்படி நடந்தது என்று தெரியவில்லை எனவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவர் தான் நிகழ்த்தி இருக்க கூடும்.”
“ஏன் நைல் நதியில் வெள்ளம் வந்தது என்று தெரியவில்லை, ஆகையால் Hapi என்னும் தெய்வம் தான் அதற்கு காரணம்!”

“நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது என்று தெரியவில்லை, எனவே Poseidon!”

“இடி மின்னலுக்கு காரணம் புரியவில்லை, ஆகையால் Thor!”
இப்படியே பல நூற்றாண்டுகளாக விளக்க முடியாத பலவற்றுக்கு ஒரு கடவுளை பதிலாக முன்னிறுத்துகிறார்கள், மக்களும் அதற்கு பழகிவிட்டார்கள்.

ஒவ்வொரு முறையும் அவர்கள் கூற்று தவறு என்று அறிவியல் உண்மையான காரணத்தை கண்டுபிடித்து விளக்கி கொண்டு இருக்கிறது.
Read 14 tweets
15 Aug
காபூலை ஆக்ரமித்துக் கொன்ட தாலிபான்கள் ஆப்கான் நாட்டு அதிபதிகளாக தம்மை அறிவித்துக் கொண்டார்கள். ஆனால் உலகத்தில் எந்த நாடும் அவர்களை அதிகாரப் பிரதிநிதிகளாக பொருட்படுத்தவில்லை. 3 நாடுகள் மட்டும் அவர்களை ஏற்று கொண்டது. அதில் முக்கியமானது பாகிஸ்தான் அந்த விதமாக அது தனித்து விடப்பட்டது
ஆனால் தாலிபான்கள் புத்திசாலிகள். புத்திசாலிகள் என்று சொல்வதைவிட குள்ளநரித்தனம் அதிகம் என்று சொல்வது சரியாக இருக்கும். அமெரிக்காவுடன் நட்பு வைத்து கொள்ளவில்லை என்றால் வாழ முடியாது என்று தெரியும். அதேபோல இந்தியாவுடன் சந்தி செய்து கொள்ளவது போல செய்தி அனுப்பியது.
ஆஃப்கனில் திருட்டுத்தனமாக வளர்க்கும் கஞ்சா செடிகளை நாசமாக்குவோம் என்றும், தீவிரவாதிகளை அடக்குவோம் என்றும் அமெரிக்காவுக்கு செய்தியை அனுப்பியது. தன்னுடைய நேர்மையை நிரூபிப்பதற்காக அயிமல்கான்ஸீ என்ற தீவிரவாதியை 1997ல் அமெரிக்காவிடம் ஒப்படைத்தது.
Read 25 tweets
15 Aug
ஆஃப்கனிஸ்தானில் தாலிபான்களுக்கும், முஜஹிதீன்களுக்கும் நடுவில் போர் தொடங்கியது. 50,000 பேர் காபூலை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். லட்சக் கணக்கானவர்கள் ஆதரவின்றி தவித்தார்கள். தாலிபான்கள் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டு
மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.
இஸ்லாம் சட்டங்களை கடுமையாக திணிக்கச் செய்து, எதிர்த்தவர்கள் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். பெண்களையும் விட்டு வைக்கவில்லை. பெரிய பெரிய புத்தரின் சிற்பங்களை சிதைத்தார்கள். உலக நாடுகள் பெரும் அளவில் எதிர்ப்பு தெரிவித்தன. உள்நாட்டு பிரச்சனையில் மூழ்கி இருந்தது ரஷ்யா.
பாகிஸ்தானின் நிலைமை பாக்குவெட்டியில் அகப்பட்டுக் கொண்டதுபோல் ஆயிற்று. தாலிபான்களை சப்போர்ட் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் இந்தியாவை சப்போர்ட் செய்யும் கட்சி அதிகாரத்திற்கு வரும் ஆபத்து இருந்தது. தன்னை இந்த சங்கடமான நிலையில் இருந்து மீட்க வேண்டும் என
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(