Lucifer யார்?
சாத்தன் (Satan) என்கிற Hebrew வார்த்தைக்கு கேள்வி கேட்பவன் என்று பொருள். Diabolos என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து தான் devil என்கிற வார்த்தை வந்து இருக்கக்கூடும் என்கிறார்கள். Diabolos என்றால் குற்றம் சாட்டுபவன் என்று பொருள்.
"Devil's advocate" என்கிற சொல்லாடலை கேள்விப்பட்டு இருப்பீர்கள். Mock Trial லில் வக்கீல்கள் அவர்களது வழக்கு கோர்ட்க்கு சென்றால் அங்கு எதிர் தரப்பு என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்? என்னென்ன ஓட்டைகள் இவர்களது வாதத்தில் இருக்கிறது என்று இவர்களுக்குள் விவாதித்து கொள்வார்கள்.
அதாவது, எதிர் தரப்பின் கருத்தை ஆதரிக்கவில்லை ஆனால் அந்த எதிர்தரப்பின் சார்பாக கேள்விகள் கேட்டு நமது தரப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது. இப்படி எதிர் தரப்பு சார்பாக கடினமான கேள்விகள் கேட்பவர் Devil's advocate எனப்படுகிறார்.
கத்தோலிக்க திருச்சபை ஒருவருக்கு புனிதர் பட்டம் குடுக்கும்முன் அவருக்கு ஏன் குடுக்க கூடாது என்று வாதிட ஒருவரை நியமிக்கும் அவர் Devil's advocate எனப்படுவார். அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் ஏன் குடுக்க கூடாது என்று Devil's advocate ஆக வாதாடியவர் Christopher Hitchens.
நானும் பலமுறை Devil's advocate ஆக இருப்பேன். நான் ஆதரிக்கும் கருத்தையே இன்னொருவர் ஆதரிக்கும்போது அவரிடம் எதிர் கேள்விகள் கேட்டு எனது தரப்பை வலுப்படுத்திக்கொள்வேன்.
Daimon என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது demon என்கிற சொல். Daimon என்றால் அறிவு என்று பொருள். மொத்தத்தில் சாத்தான் என்பவன் அறிவானவன், கேள்வி கேட்பவன், குற்றம் சாட்டுபவன்.
யூத மதத்தில் சாத்தானும் நரகமும் இல்லை. இவை இரண்டும் பின்னாளில் கிரேக்க மற்றும் ரோமனிய மதங்களில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு வந்தவை. Torah வில் வரும் sheol என்கிற வார்த்தை நரகத்தை சொல்லுவதாக சொல்லுவார்கள் ஆனால் sheol என்கிற வார்த்தையின் அர்த்தம் கல்லறை.
கிரேக்க மொழியில் Torah வை மொழிமாற்றம் செய்கையில் இது hades என்று மாற்றப்பட்டது அதற்கும் கல்லறை என்று தான் அர்த்தம்.
ஏவாளிடம் ஆப்பிளை சாப்பிட சொல்லிய பாம்பை வெறும் சர்ப்பம் என்றும், விலங்குகளில் அது மிகவும் தந்திரமுள்ளது என்றுதான் Torah குறிப்பிடுகிறதே ஒழிய அது சாத்தான் என்று குறிப்பிடவில்லை. அந்த பாம்பு தான் சாத்தான் என்பது பின்னாளில் கிறிஸ்துவ மதத்தில் ஏற்பட்ட நம்பிக்கை.
Lucifer என்பது உண்மையில் ஒரு மொழிபெயர்ப்பு தவறு. Lucifer என்றால் சாத்தான் இல்லை. Lucifer என்கிற லத்தீன் வார்த்தைக்கு அர்த்தம் விடிவெள்ளி அதாவது Venus. லூசிபர் என்ற பெயர் எபிரேய பைபிளில் இல்லை. Jerome எழுதிய லத்தீன் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஏற்பட்ட தவறு இது.
King James Bible தான் ஆங்கில மொழியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பைபிள். உலகெங்கும் அதிக மக்கள் King James Bible தான் இன்றளவும் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பதிப்பில் லூசிஃபர் என்ற பெயர் சரியாக ஒரு முறை, ஒரே ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏசாயா 14:12
"How art thou fallen from heaven, O Lucifer, son of the morning! how art thou cut down to the ground, which didst weaken the nations!"
King James Bible ஹீப்ரூ மொழியில் இருந்து மொழிபெயர்க்க பட்டதல்ல மாறாக, 400 CE இல் Jerome என்பவரால் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட Latin Vulgate இல் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
"Quomodo cecidisti de caelo lucifer qui mane oriebaris? corruisti in terram, qui vulnerabas gentes?"
இதனுடைய மொழிபெயர்ப்பு தமிழ் பைபிளில் சரியாக இருக்கிறது.
"அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!"
லத்தின் மொழியில் விடி வெள்ளிக்கு Lucifer என்று பெயர். லத்தின் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்கையில் morning star என்று மாற்றாமல் Lucifer என்றே வைத்தது தவறாகி போனது.
சரி அப்படியே Lucifer என்று தவறாக வைத்தாலும் எப்படி அது சாத்தான் என்று ஆனது? அது அடுத்த கதை.
ஏசாயா 14:12 ஒரு உருவகமாக எழுதப்பட்டது. 'விடி வெள்ளி' என்பது பாபிலோனிய அரசன் Nebuchadnezzar II ஐக் குறிக்கிறது, அவர் கிமு 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்-6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இன்றைய மத்திய கிழக்கின் பெரும்பகுதியை வென்றார்.
ஜெருசலேமில் மீண்டும் மீண்டும் அவருக்கு எதிரான போராட்டங்கள் வந்து கொண்டே இருந்ததை அடுத்து, Nebuchadnezzar அவருக்கு எதிரான முக்கியமான யூதக் குடும்பங்களை கிமு 597 இல் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக பாபிலோனிய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தார்.
இந்த சிறையில்தான் தோரா விற்கு final touch கிடைத்தது. ஏசாயா 14 இல் பெரும்பாலானவை பாபிலோனிய நாடு எப்படி Jehovah வை விட்டு வேறு தெய்வங்களை வழிபடுகின்றன இவை எவ்வாறு பாபிலோனிய நாட்டின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதைப் பற்றி பேசுகின்றன.
இது சாத்தானைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் சில கிறிஸ்தவர்கள் சாத்தான் Nebuchadnezzar மூலம் வேலை செய்கிறார் என்று வாதிட்டாலும், பைபிளில் நேரடியாக அப்படி ஒன்றும் இல்லை.
Nebuchadnezzar ஜெருசலேம் முதற்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளை கைப்பற்றினாலும் ஆண்டவர் எப்படி இறுதியில் Nebuchadnezzar ஐ வீழ்த்தி யூதர்களை காப்பாற்றுவார் என்பதை ஏசாயா சொல்கிறது.
ஏசாயா 14:12 இல் உள்ள தவறாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு வரி, எப்படி Lucifer என்றால் Satan என்று ஆனது?
மக்கள் லத்தீன் பயன்படுத்துவதை நிறுத்தியதால், வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள அர்த்தத்தை அவர்கள் அறிந்து இருக்கவில்லை. லூசிஃபர் என்ற வார்த்தையை ஒரு தனி நபரின் பெயராக புரிந்து கொள்ளத் தொடங்கினர்.
1320 இல் Dante, Divine Comedyஎன்னும் கவிதையை எழுதியபோது, நரகத்தின் 9 வது வளையத்தில் லூசிஃபர் அமர்ந்து இருக்கிறான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். 1654 ஆம் ஆண்டில், Joost van den Vondel என்பவர் லூசிஃப்பரை சாத்தான் என்று விவரித்து ஒரு கவிதை நாடகம் இயற்றினார்.
1667 இல், Miltonனின் Paradise Lost என்னும் கவிதை லூசிபர் எப்படி தேவதையாக சொர்க்கத்தில் இருந்தது பின்னர் எப்படி தனது கர்வத்தால் நரகத்திற்கு தள்ளப்பட்டது என்பதை விவரிக்கிறது. காலப்போக்கில், இந்த படைப்புகள் கிறிஸ்தவ கதைகளில் கலந்தன, Lucifer என்றால் சாத்தான் என்றும் நிலைத்துவிட்டது.
லூசிபர் ஒரு தேவதை என்றால், தேவதைகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் மனிதர்களுக்கு தேர்வு சுதந்திரம் (free will) உள்ளது. தேவதைகளுக்கு அது கிடையாது. அதாவது ரோபோ போல கடவுள் சொல்வதை மட்டும் செய்யும்.
அப்படி இருக்க free will இல்லாத தன்னிச்சையாக சிந்திக்க தெரியாத லூசிபர் எப்படி கடவுளுக்கு எதிராக கலகம் செய்ய முடியும்? எப்படி சம உரிமை கோர முடியும்? free will இருந்தும், அறிவும் இருந்துமே மனிதர்களால் சமஉரிமை கருத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
தேவதை என்னும் பெயரில் இருக்கும் ஒரு ரோபோவுக்கு எப்படி புரியும்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு, Judas தன்னை காட்டிகொடுப்பன் என்று முன்னரே ஏசுவுக்கு தெரிந்தது போல, லூசிபர் தன்னை எதிர்த்து கலகம் செய்வான் என்பதும் முன்கூட்டியே தெரிந்து இருக்கும்.
அப்படி இருக்க அதை ஏன் தடுக்கவில்லை? தனக்கு எதிராக ஒரு எதிரியை தானே உருவாக்கிவிட்டு அவனை அடக்க முடியாமல் திணறும் கையாலாகாத தன்மையை என்னவென்று சொல்வது?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்த பைபிள் ல கால்வாசி கதைகள் apocalyptic கதைகள் தான். Daniel, Revelation, 1 Enoch, 2 and 3 Baruch, 4 Ezra, Apocalypse of Abraham, Shepherd of Hermas, Apocalypse of Peter, Joel, Zechariah, Isaiah இப்படி நிறைய...
அதாவது கெட்டவர்கள் அதிகமாகி அவங்க அட்டகாசம் தாங்க முடியாம கடவுள் உலகத்தை அழிச்சுருவாரு. அப்புறம் மறுபடி புதுசா ஒரு சொர்க்க உலகத்தை படைப்பார் என்கிற கதை. எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து உலகத்தை படைக்கறேன் அப்படிங்கற மாதிரி. ஏன் இப்படி apocalyptic கதைகள் இருக்கு?!
தலைமுறை தலைமுறையாக இந்த ஹீப்ரு மக்களின் கஷ்டம் அதாவது யூத மக்கள் கஷ்டம் அதிகரித்து கொண்டே வருது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ரோமானியர்கள் இப்படி யாராவது ஒருத்தர் யூத மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வருகிறார்கள்.
பழிவாங்கத் துடிக்கும் ஆண் தமிழ்ச்சமூகத்தில் வீரனாகவும் தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறான். சுடலைமாடன், கருப்பசாமி, காத்தவராயன் என ஆண் தெய்வங்களின் வரலாறெல்லாம் அவைதாம். மறுதலையாக, பழிவாங்கத் துடிக்கும் பெண் எந்தச் சமயவாதியாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவளாகிறாள்.
தமிழ் நாட்டார் மரபில் பெண்கள் நீலியின் கதையைப் பேணி வந்திருக்கிறார்கள். பலதார மணம் என்பது தமிழ்ச் சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இயல்பாக இருந்திருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு பெண்ணுக்குக் கணவனின் தங்கை கொடியவளாகவே தோற்றமளிக்கிறாள்.
அது போலவே மறுமணம் செய்துகொண்ட கணவனும் மாற்றாளும் (சகக்களத்தியும்) மனித மதிப்புக் குறைந்தவர்களாவார்கள். பாலியல் பொறாமையும் சொத்துரிமை மறுப்பும் பெண்களைப் பெண்களே எதிரிகளாக நினைக்கும் சமூக உளவியலை உருவாக்கி வைத்துள்ளன.
time travel ல என்னென்ன paradox இருக்குன்னு முன்னாடி பார்த்தோம் இல்லையா? இப்போ கடவுள் என்று ஒருவர் இருந்தால் அதில் என்னென்ன paradox இருக்குன்னு பார்க்கலாம் அதாவது லாஜிக் மீறல்கள்.
1. Paradox of Omnibenevolent God (கடவுள் கருணையே வடிவானவர்):
கடவுள் கருணையே வடிவானவராக இருந்தால் Hitler போன்ற ஆட்களை படைத்து இருக்க கூடாது. தெய்வத்திற்கு சமமான பசுவை கொன்று உண்ணும் புலியை படைத்து இருக்க கூடாது.
11 வயது சின்ன பெண்ணை ஒருவன் கொடூரமாக கற்பழிப்பான் என்று தெரிந்தும் அவனை படைத்து இருக்க கூடாது. ஒருவேளை free will காரணமாக அவன் என்ன செய்வான் என்று முன்கூட்டியே தெரியாமல் போனாலும், அவன் அந்த செயலில் ஈடுபடும்போது அதை தடுத்து இருக்க வேண்டும்.
கடவுள் நம்பிக்கையை வலியுறுத்த பொதுவாக சொல்லப்படுவது, “X என்னும் விஷயம் ஏன் நடந்தது எப்படி நடந்தது என்று தெரியவில்லை எனவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவர் தான் நிகழ்த்தி இருக்க கூடும்.”
“ஏன் நைல் நதியில் வெள்ளம் வந்தது என்று தெரியவில்லை, ஆகையால் Hapi என்னும் தெய்வம் தான் அதற்கு காரணம்!”
“நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது என்று தெரியவில்லை, எனவே Poseidon!”
“இடி மின்னலுக்கு காரணம் புரியவில்லை, ஆகையால் Thor!”
இப்படியே பல நூற்றாண்டுகளாக விளக்க முடியாத பலவற்றுக்கு ஒரு கடவுளை பதிலாக முன்னிறுத்துகிறார்கள், மக்களும் அதற்கு பழகிவிட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் அவர்கள் கூற்று தவறு என்று அறிவியல் உண்மையான காரணத்தை கண்டுபிடித்து விளக்கி கொண்டு இருக்கிறது.
காபூலை ஆக்ரமித்துக் கொன்ட தாலிபான்கள் ஆப்கான் நாட்டு அதிபதிகளாக தம்மை அறிவித்துக் கொண்டார்கள். ஆனால் உலகத்தில் எந்த நாடும் அவர்களை அதிகாரப் பிரதிநிதிகளாக பொருட்படுத்தவில்லை. 3 நாடுகள் மட்டும் அவர்களை ஏற்று கொண்டது. அதில் முக்கியமானது பாகிஸ்தான் அந்த விதமாக அது தனித்து விடப்பட்டது
ஆனால் தாலிபான்கள் புத்திசாலிகள். புத்திசாலிகள் என்று சொல்வதைவிட குள்ளநரித்தனம் அதிகம் என்று சொல்வது சரியாக இருக்கும். அமெரிக்காவுடன் நட்பு வைத்து கொள்ளவில்லை என்றால் வாழ முடியாது என்று தெரியும். அதேபோல இந்தியாவுடன் சந்தி செய்து கொள்ளவது போல செய்தி அனுப்பியது.
ஆஃப்கனில் திருட்டுத்தனமாக வளர்க்கும் கஞ்சா செடிகளை நாசமாக்குவோம் என்றும், தீவிரவாதிகளை அடக்குவோம் என்றும் அமெரிக்காவுக்கு செய்தியை அனுப்பியது. தன்னுடைய நேர்மையை நிரூபிப்பதற்காக அயிமல்கான்ஸீ என்ற தீவிரவாதியை 1997ல் அமெரிக்காவிடம் ஒப்படைத்தது.
ஆஃப்கனிஸ்தானில் தாலிபான்களுக்கும், முஜஹிதீன்களுக்கும் நடுவில் போர் தொடங்கியது. 50,000 பேர் காபூலை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். லட்சக் கணக்கானவர்கள் ஆதரவின்றி தவித்தார்கள். தாலிபான்கள் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டு
மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.
இஸ்லாம் சட்டங்களை கடுமையாக திணிக்கச் செய்து, எதிர்த்தவர்கள் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். பெண்களையும் விட்டு வைக்கவில்லை. பெரிய பெரிய புத்தரின் சிற்பங்களை சிதைத்தார்கள். உலக நாடுகள் பெரும் அளவில் எதிர்ப்பு தெரிவித்தன. உள்நாட்டு பிரச்சனையில் மூழ்கி இருந்தது ரஷ்யா.
பாகிஸ்தானின் நிலைமை பாக்குவெட்டியில் அகப்பட்டுக் கொண்டதுபோல் ஆயிற்று. தாலிபான்களை சப்போர்ட் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் இந்தியாவை சப்போர்ட் செய்யும் கட்சி அதிகாரத்திற்கு வரும் ஆபத்து இருந்தது. தன்னை இந்த சங்கடமான நிலையில் இருந்து மீட்க வேண்டும் என