#KodiyilOruvan #PCMreview ஆபாச காட்சிகள் இல்லை.லிங்க் - தியேட்டர்.கதை சுருக்கம்:ஹீரோ விஜய் ஆண்டனியின் அம்மா ஒரு அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்கிறார்.அவர் சார்ந்த பஞ்சாயத்து தேர்தல் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.இதனால் அந்த அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை தேர்தலில் நிற்க Image
சொல்கிறார். தன் ஊருக்கு நல்லது நடக்கும் என்று நம்பி அவரும் நின்று வெற்றி பெறுகிறார்.ஆனால் ஊழல் செய்ய அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை கட்டயாப்படுத்துவதால் மறுக்கிறார்.இதனால் ஆத்திரமடையும் அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை பெட்ரோல் ஊத்தி கொழுத்துகிறார்.எப்படியோ உயிர் பிழைக்கும் ஹீரோவின்
அம்மா ஹீரோவை பெற்றெடுக்கிறார். தன் அம்மாவிற்கு தான் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று ஆசை கொள்வதால் எப்படியாக ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வருகிறார் ஹீரோ.அங்கு சேரியில் இருக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார்.இது அங்கு இருக்கும் ரவுடிகளுக்கு பிடிக்காமல் போக
இவரை தொந்தரவு செய்கிறார்கள்.இதை எல்லாம் தாண்டி ஹீரோ ஐ ஏ எஸ் ஆனாரா? தன் அம்மாவின் கனவை நிறைவேற்றினாரா?என்பதே மீதிக்கதை.படத்தின் டிரெய்லர் வெளியான போது படம் கண்டிப்பாக ஓடாது என்று தான் நினைத்தேன்.ஆனால் அதை அப்படியே மாற்றி ஒரு தரமான படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.ஹீரோவாக விஜய்
ஆன்டனி கலக்கியிருக்கிறார்.இவர் பேசும் வசனங்கள் அனல் பறக்கிறது.முக்கியமாக நகராட்சி அலுவலகத்தில் பேசும் காட்சி தரமாக இருக்கிறது.சண்டை காட்சிகளிலும் மிரட்டுகிறார்.நடிப்பிலும் நன்றாகவே மதிப்பெண் வாங்குகிறார்.ஹீரோயின் ஆத்மிகா படத்திற்கு ஹீரோயின் வேண்டும் என்பதற்காக இருக்கிறார்.இவர்
இல்லையென்றாலும் படத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.வில்லனாக ஸ்டண்ட் இயக்குனர் சூப்பர் சுப்பராயன் மற்றும் கே ஜி எப் பட வில்லன் ராமச்சந்திர ராஜு நடித்திருக்கிறார்கள்.இருவரும் கொடுத்த கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்கள்.படத்தின் மேக்கிங் நன்றாகவே இருந்தது.சேரியில் வரும்
காட்சிகள் அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.பாடல்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் இருக்கிறது."நேர்மையாக இருப்பது தவறு என்றால் அந்த தவறை நான் மறுபடி மறுபடி செய்வேன்"."அரசியல்வாதிகள் வளர்ச்சி பெறுவதே ரவுடிகளால் தான்.நாங்கள் இல்லையென்றால் அவர்கள்
ஒன்றுமே இல்லை" என்பன போன்ற வசனங்கள் கைத்தட்டல் பெறுகின்றன.மக்களை அரசியல்வாதிகள் எவ்வளவு முட்டாளாக வைத்திருக்கிறார்கள்,ஒரு வார்டு கவுன்சிலரின் அதிகாரம் என்ன,அவர் நினைத்தால் மக்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என பல செய்திகளை நமக்கு கூறியிருக்கிறார்கள்.மக்களுக்கு நல்லதை உடனே
செய்துவிட்டால் பின்பு அரசியல் செய்ய அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் என்று ஹீரோ பேசும் காட்சிகளில்,நிகழ்கால அரசியலை தோலுரித்து காட்டுகிறது.விஜய் ஆண்டனியின் படங்களில் அம்மா சென்டிமென்ட் மக்களிடம் வெகுவாக சென்று சேர்கிறது.இப்படத்திலும் இவருக்கு இது வெகுவாக கை கொடுக்கிறது.இவர் நமக்கு
கருத்து சொல்லினாலும் அதை ரசிக்கும்படி சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.முதல் பாதி ஜெட் வேகத்தில் செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் சற்று மெதுவாக செல்கிறது.கிளைமாக்ஸ் காட்சி நம்பும்பபடியாக இல்லாவிட்டாலும் நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.மொத்தத்தில் உங்களை ஏமாற்றாத
படம் என்றே கூறலாம்.சமீபத்தில் பல மொக்கை படங்கள் வர,இந்த படம் விதிவிலக்காக இருக்கிறது.மீண்டும் விஜய் ஆன்டனி வெற்றி பாதைக்கு திரும்பியிருக்கிறார்.கண்டிப்பாக பார்க்கலாம்.அருமையான படம்.எனக்கு மிகவும் பிடித்திருந்தது.திரையரங்கில் சென்று பார்க்க கூடிய அளவிற்கு ஒரு நல்ல படம்.4/5.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மதுசூதனன் பி சா

மதுசூதனன் பி சா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Madhusoodananpc

18 Sep
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள்:பாகம் 4".இன்று நாம் பார்க்க போவது 86 ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கு பற்றி தான்."ஜனவரி 2,1935ஆம் ஆண்டு மதியம் 1:20 மணியளவில் அமெரிக்க நாட்டின் கான்சாஸ் நகரத்தில் இருக்கும் பிரஸிடென்ட் ஹோட்டலுக்கு ரோலண்ட்.டி.ஓவன் Image
என்ற நபர் நுழைகிறார்.10ஆவது மாடியில் தனக்கு ஒரு அறை வேண்டும் என்று கேட்டு வாங்கி மேலே செல்கிறார்.உடன் பெல்பாய்(ரூம்பாய்) ரேன்டால்ப் பிராப்ஸ்ட் செல்கிறார்.அறையை காட்டிவிட்டு வந்துவிடுகிறார்.பணிப்பெண் மேரி சோப்டிக் அறையை சுத்தம் செய்ய செல்லும் போது,ஓவன்"அறையை சுத்தம் செய்துவிட்டு Image
கதவை அப்படியே விட்டுவிடுங்கள்.எனது நண்பர் வர போகிறார்"என்று கூறுகிறார்.பணிப்பெண் வேலையை முடித்து அறையில் இருக்கும் துண்டை எடுத்து செல்கையில் அறை மிகவும் இருட்டாக டேபிள் லாம்ப் ஒளி மட்டும் இருந்ததை கவனிக்கிறார்.மேரி மாலை 4 மணிக்கு புது துண்டை அறைக்குள் வைக்க வருகையில் கதவு பூட்ட Image
Read 25 tweets
15 Sep
#vivonetflix #PCMreview "குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய அருமையான படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - Netflix. டெலிகிராம் - பயோ/DM.இசையில் வல்லுவரான ஒரு தாத்தா மற்றும் அவருடன் இருக்கும் ஒரு குட்டி குரங்கு இருவரும் தெருவில் பாடி பணம் சம்பாதிக்கிறார்கள்.சில நிமிடங்கள்
கழித்து தாத்தாவுக்கு ஒரு கடிதம் வருகிறது.அதில் அவரது பழைய கால தோழி இவரை அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.இவரும் செல்லலாம் என்று நினைக்கிறார்.ஆனால் அந்த குட்டி குரங்கிற்கு இது பிடிப்பதில்லை.திடீரென தாத்தா இறந்து போக,இசை நிகழ்ச்சிக்கு சென்று பாட வேண்டிய
பாடல் வரிகள் அடங்கிய காகிதம் மற்றும் பழைய புகைப்படங்கள் ஆகியவை அங்கு இருப்பதை குரங்கு பார்க்கிறது.தாத்தாவின் கனவை நிறைவேற்ற குரங்கு பயணம் மேற்கொள்கிறது.அங்கு சென்றதா?பாடலை பாடியதா?என்பதே மீதிக்கதை.கிகான்ஜோ என்ற குட்டி குரங்குடன் ஒரு சிறுமியும் பயணம் செய்வாள்.இருவரின் உரையாடல்
Read 7 tweets
14 Sep
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 3".இன்று நாம் பார்க்க போவது 62 ஆண்டுகளாகியும் இன்னும் மர்மமாக நீடிக்கும் 9 பேர் மரணம் அடைந்த "டயட்லோவ் பாஸ்"நிகழ்வு பற்றி தான்.ஜனவரி 23,1959 அன்று Ural Polytechnic Institute கல்லூரியை சேர்ந்த 10 பேர் ரஷ்ய நாட்டில் Image
இருக்கும் Sverdlovsk Oblast பகுதியில் வடக்கு Ural மலை தொடர்ச்சியில் இருக்கும் kholat Syakhl என்ற மலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் மலையேறுதலில் கிரேடு 2 சான்றிதழ் பெற்றவர்கள்.கிரேடு 3 சான்றிதல் பெற 300 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.எனவே அச்சான்றிதலை Image
பெற Sverdlovsk பகுதி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி மிகவும் கடினமான 10 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையாக இருக்கும் Oterten என்ற இடத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்கள். இக்குழுவிற்கு இகோர் டயட்லோவ் (23) என்ற மாணவர் தலைமை தாங்குகிறார்.ஜனவரி 25 ஆம் தேதி ரயில் மூலம் இவ்டேல் என்ற இடத்தை ImageImageImageImage
Read 25 tweets
12 Sep
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியாத மர்மங்கள் பகுதியில் இரண்டாவதாக நாம் இன்று பார்க்கப்போவது 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய மர்மம் தான்".மார்ச் 8,2014 ஆம் ஆண்டு இரவு 12.42 மணிக்கு போயிங் 777 ER 200 ரக விமானமான MH370 விமானம் மலேசியாவின் கோலாலம்பூர்
விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு புறப்படுகிறது. விமானத்தில் 227 பயணிகள்,10 கேபின் குழுவினர்,2 பைலட்டுகள் என மொத்தம் 239 நபர்கள் பயணிக்கிறார்கள்.பயணம் தூரம் 5.30 மணி நேரம்.விமானத்தை 53 வயதான ஜஹாரி அகமத் என்ற முதல் பைலட்டும் 27 வயதான ஃபரிக் ஹமீத் என்ற
இரண்டாம் பைலட்டும் ஓட்டுகிறார்கள்.சரியாக இரவு 1:08 மணிக்கு விமானம் தெற்கு சீன கடல் பகுதியில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்று விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.மலேசிய கட்டுப்பாட்டு அறை விமானியை தொடர்பு கொண்டு "நீங்கள் இன்னும் ஒரு நிமிடத்தில்
Read 25 tweets
11 Sep
#ThuglaqDarbar #PCMreview "அரசியல் டிராமா" ஆபாச காட்சிகள் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ விஜய் சேதுபதி தனி ஒருவன் படத்தில் வருவது ஒரு அரசியல் கூட்டத்தில் பிறக்கிறார்.அந்த படத்தில் வருவது போல் இதிலும் அரசியல் கட்சி தலைவரான பார்த்திபன் ஹீரோவுக்கு சிங்காரவேலன்
என்று பெயர் சூட்டுகிறார்.இதனால் சிறுவயதில் இருந்தே அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று முடிவு செய்கிறார்.இவரின் தங்கச்சியான மஞ்சிமா மோகன் பிறந்த உடனே தன்னுடைய அம்மா இறந்து விடுவதால் ஹீரோ விஜய் சேதுபதி மஞ்சிமா மோகனுடன் பேசுவதில்லை.பெரிய அரசியல் கட்சி தலைவரான பார்த்திபனிடம்
சேர்ந்து அப்படியே படிப்படியாக முன்னேற முடிவு செய்கிறார்.இதற்கு இவர் என்னவெல்லாம் செய்தார்,யாருடைய பகையை சம்பாதித்தார்? இவருக்குள் ஏற்படும் பிரச்சனை என்ன?இவரின் எண்ணம் நிறைவேறியதா?என்பதே மீதிக்கதை.விஜய் சேதுபதி வழக்கம் போல் நடிப்பில் அசத்திவிட்டார்.படத்தின் கதைக்களம் சத்யராஜ்
Read 10 tweets
11 Sep
#MalignantMovie #PCMreview "வித்தியாசமான மற்றும் தரமான ஹாரர் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை (திரையரங்கில் தமிழ் டப்பிங்குடன் ஓடுகிறது).கண்டிப்பாக (18+).OTT - HBO Max. டெலிகிராம் - பயோ/DM.ஹீரோயினுக்கு கனவில் பலர் கொல்லப்படுவதை போல் கனவு வருகிறது.அடுத்த நாள் காலை தான் தெரிகிறது
இவர் கண்டது கனவு அல்ல,நிஜம் என்று.ஒரு மர்மமான உருவம் ஹீரோயினை கனவில் இருப்பதை போல் நிகழ்த்தி கொலை நடக்கும் இடத்திற்கு கனவின் வழியே அழைத்து சென்று தான் செய்யும் கொலையை ஹீரோயினை நேரில் பார்க்க வைக்கிறது.அதன் அடிப்படையில் முதல் கொலையாக ஹீரோயினின் கணவர் கொல்லப்படுகிறார்.காவல்துறை
ஹீரோயின் வீட்டிற்க்கு வந்து விசாரிக்க,ஹீரோயின் மேல் சந்தேகப்படுகிறது போலீஸ்.இப்படி தொடர்ச்சியாக கொலை நிகழ,ஹீரோயின் மீது சந்தேகம் வழுவாகிறது.இதில் இருந்து ஹீரோயின் தப்பித்தாரா?கொலை செய்யும் அந்த மர்மமான உருவம் எது?ஏன் கொலை செய்கிறது?ஏன் ஹீரோயினுக்கு இவ்வாறு நிகழ்கிறது?என்ற பல
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(