#unsolvedmysteries#PCMreview "விடை தெரியா மர்மங்கள்:பாகம் 4".இன்று நாம் பார்க்க போவது 86 ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கு பற்றி தான்."ஜனவரி 2,1935ஆம் ஆண்டு மதியம் 1:20 மணியளவில் அமெரிக்க நாட்டின் கான்சாஸ் நகரத்தில் இருக்கும் பிரஸிடென்ட் ஹோட்டலுக்கு ரோலண்ட்.டி.ஓவன்
என்ற நபர் நுழைகிறார்.10ஆவது மாடியில் தனக்கு ஒரு அறை வேண்டும் என்று கேட்டு வாங்கி மேலே செல்கிறார்.உடன் பெல்பாய்(ரூம்பாய்) ரேன்டால்ப் பிராப்ஸ்ட் செல்கிறார்.அறையை காட்டிவிட்டு வந்துவிடுகிறார்.பணிப்பெண் மேரி சோப்டிக் அறையை சுத்தம் செய்ய செல்லும் போது,ஓவன்"அறையை சுத்தம் செய்துவிட்டு
கதவை அப்படியே விட்டுவிடுங்கள்.எனது நண்பர் வர போகிறார்"என்று கூறுகிறார்.பணிப்பெண் வேலையை முடித்து அறையில் இருக்கும் துண்டை எடுத்து செல்கையில் அறை மிகவும் இருட்டாக டேபிள் லாம்ப் ஒளி மட்டும் இருந்ததை கவனிக்கிறார்.மேரி மாலை 4 மணிக்கு புது துண்டை அறைக்குள் வைக்க வருகையில் கதவு பூட்ட
படாமல் திறந்திருக்கிறது.ஓவன் மெத்தையில் படுத்திருக்கிறார்.பக்கத்தில் ஒரு பேப்பரில்"டான்,நான் 15 நிமிடத்தில் வருகிறேன்.காத்திரு"என்று எழுதியிருக்கிறது.அடுத்த நாள் ஜனவரி 3ஆம் தேதி மேரி அறையை சுத்தம் செய்ய வருகிறார்.அறை வெளியே பூட்டப்பட்டிருக்கிறது.ஓவன் எங்கேயோ சென்றிருக்கிறார்
என்று எண்ணி தன்னிடம் இருக்கும் மாஸ்டர் கீயை வைத்து திறந்து உள்ளே சென்றால் அறையின் மூலையில் ஓவன் அமர்ந்திருக்கிறார்.உடனே தொலைபேசி அழைப்பு வர,ஓவன் எடுத்து"இல்லை டான்,எனக்கு பசிக்கவில்லை.காலை உணவு உண்டேன்.எனக்கு பசிக்கவில்லை"என்று கூறி வைக்கிறார்.மீண்டும் 4 மணிக்கு மேரி புதிய துண்டை
வைக்க வர,உள்ளே இரண்டு ஆண்கள் சத்தமாக பேசும் சத்தம் மேரிக்கு கேட்கிறது.கதவை தட்டுகிறார்.ஒரு ஆண் குரல்"யாரது?"என்று கேட்கிறது.புதிய துண்டை வைக்க வந்திருக்கிறேன் என்று கூற,"போதுமான துண்டுகள் இருக்கிறது.புதிய துண்டுகள் தேவையில்லை"என்று அந்த குரல் கூறுகிறது.ஆனால் காலையே துண்டுகளை மேரி
எடுத்துவந்துவிட,ஏன் இப்படி சொல்கிறார் என்ற குழப்பத்தோடு மேரி செல்கிறார்.அதே சமயம் 1048 இல் தங்கியிருக்கும் பெண் தனக்கு பெண்கள் மற்றும் ஆண்கள் ஒருவரை ஒருவர் திட்டிகொள்வது போன்ற சத்தம் கேட்டதாக வரவேற்பறையில் கூறுகிறார்.ஆனால் 1055இல் அன்று பார்ட்டி நடந்ததால்,வரவேற்பறையில் இருந்தவர்
இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.ஜனவரி 4,காலை 7 மணிக்கு ஓவன் அறையில் இருக்கும் தொலைபேசி யாரும் பேசாமல் எடுத்துவைத்திருப்பது தெரியவர,ரூம்பாய் பிராப்ஸ்ட்டை அனுப்பி பார்க்க சொல்கிறார் வரவேற்பாளர்.இவர் அங்கு சென்று பார்க்க,தொல்லை செய்யவேண்டாம் என்ற பலகை அறையின் கதவில் தொங்குகிறது.
உடனே கதவை தட்டுகிறார் ரூம்பாய்."உள்ளே வந்து விளக்கை ஏற்று"என்ற குரல் கேட்கிறது. ரூம்பாய் கதவை தள்ள,அது உள்ளே பூட்டப்பட்டிருப்பது தெரியவர குடி போதையில் இருப்பார் போல என்று எண்ணி"தொலைபேசியை ஒழுங்காக வைக்கவும்"என்று கூறிவிட்டு ரூம்பாய் சென்றுவிடுகிறார்.மீண்டும் காலை 8:30 மணிக்கு
தொலைபேசி பழையபடி இருப்பது தெரியவர,இன்னொரு ரூம்பாய் ஹரால்ட்,ஓவன் அறைக்கு செல்ல,அங்கு இருட்டான அறையில் நிர்வாணமாக மெத்தையில் படுத்திருக்கிறார். தொலைப்பேசியை சரியாக வைத்துவிட்டு திரும்பி விடுகிறார்.காலை 10.45 மணிக்கு தொலைபேசி பழையபடி இருக்க, பிராப்ஸ்ட் மேலே செல்கிறார்.அறைக்குள்
சென்றவுடன் இவர் கண்ட காட்சி இவரை அதிர்ச்சியடைய வைக்கிறது."முட்டி போட்டு கொண்டு தன்னுடைய தலையை கைகளால் தாங்கி இருக்க,அறையின் சுவர்,பாத்ரூம்,தரை என அறை முழுவதும் இரத்த ஆறு ஓடுகிறது. கழுத்து,மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் கயிரால் கட்டப்பட்டு,கொடூரமாக சித்ரவதை செய்யபட்டிருப்பதை ரூம்பாய்
பார்க்கிறார்.சிறிது உயிரோடு இருக்க,காவல்துறை வந்து இவரிடம் "அறையில் வேறு யார் இருந்தது"என்று கேட்க "யாருமில்லை"என்று கூறி மயக்கமடைகிறார் ஓவன்.உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட,சிறிது நேரத்தில் உயிரிழக்கிறார் ஓவன். உடற்கூறாய்வு முடிவில்"தலையில் பலமாக தாக்கப்பட்டு,நெஞ்சில்
கத்தியால் குத்தப்பட,6 to 7 மணி நேரத்திற்கு முன்பு இறந்திருக்கிறார் என்று மருத்துவர் கூறுகிறார்.அறை முழுவதும் சல்லடை போட்டு தேட,கொலைக்கான ஆயுதம் எதுவும் கிடைப்பதில்லை.ஓவன் அறைக்கு வந்த பொழுது அவர் கொண்டு வந்த சீப்பு,டூத்பேஸ்ட், ப்ரஷ் ஆகியவையும் காணாமல் போகிறது.தொலைபேசியில் 4 வித
கைரேகை கிடைக்கிறது.அதை ஆராய்ந்தும் எதுவும் தெரிவதில்லை.ஓவன் பற்றி விசாரிக்கையில் "ரோலாண்ட்.டி.ஓவன் என்ற பெயரில் யாரும் இல்லை" என்பது தெரியவருகிறது.இவரது மரணத்தை கேள்விபட்டு காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினராக இருப்பாரோ என்று பலரும் வந்து பார்க்கிறார்கள்.ஆனால் யாருக்கும் இவரை
தெரிவதில்லை.டான் என்ற நபரை தேடி வழக்கு நகர,அவர் யாரென்றே கண்டுபிடிக்க முடிவதில்லை.பின் மார்ச் 23ஆம் தேதி இவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று கான்ஸாஸ் நிர்வாகம் அறிவிக்கிறது.அறிவித்த சில மணிநேரத்தில் இவர் புதைக்கப்படும் மெலோடி மெக்கில்லி மயானத்திற்கு ஒரு அழைப்பு வருகிறது.அதில்
பேசும் நபர்"உடலடக்கம் செய்ய ஆகும் அனைத்து செலவையும் நான் அனுப்பி வைக்கிறேன்"என்று கூறி இணைப்பு துண்டிக்கப்படுகிறது.சரியாக 23ஆம் தேதி "செய்தித்தாளில் பணக்கட்டு,பூக்கள் மற்றும் ஒரு கடிதம் வருகிறது.அந்த கடிதத்தில் "என்றும் காதலுடன் லூயிஸ்"என்ற எழுதியிருக்கிறது.இவர் யார் என்று
காவல்துறை கண்டுபிடிக்க முயல,அதுவும் தோல்வியில் முடிகிறது.ஒன்றரை ஆண்டு கழித்து கான்சாஸ் நிர்வாகத்திற்கு ஒரு அழைப்பு வருகிறது."என் பெயர் ரூபி ஒகுள்ட்ரீ.கொலைசெய்யப்பட்ட ஓவன் என்பவனின் தாயார் நான்.அவனின் நிஜ பெயர்"ஆர்ட்டிமிஸ் ஒகுள்ட்ரீ".17 வயது இருக்கும் போது வீட்டை விட்டு ஓடி
விட்டான்.செய்தித்தாளில் வந்த செய்தியை பார்த்து அழைத்திருக்கிறேன்"என்று கூறுகிறார்.தனக்கு மூன்று கடிதங்கள் தன் மகன் அனுப்பியதாகவும் அது தட்டச்சு செய்து வந்தது என்று கூறுகிறார்.ஆனால் தன் மகனுக்கு தட்டச்சு செய்ய தெரியாது என்றும் கூறுகிறார்.அப்படியென்றால் கடிதத்தை அனுப்பியது டானாக
இருக்குமோ என்று காவல்துறை எண்ணுகிறது.விசாரணை இன்னும் ஆழமாக செல்ல,ஓவன் என்கிற ஆர்டிமிஸ் அதே பகுதியில் வேறொரு ஹோட்டலில் தங்கியிருந்தார் என்று தெரியவருகிறது.அங்கு சென்று விசாரிக்கையில் "ஆமாம்,இங்கு இன்னொரு ஆணுடன் அவர் தங்கியிருந்தார்"என்று ஹோட்டல் நிர்வாகம் கூறுகிறது.அது டானாக
இருக்க வாய்ப்பிருக்கிறது என்று காவல்துறை எண்ணுகிறது.வழக்கு அப்படியே கிடப்பில் போடப்படுகிறது.இறுதியாக 2000ஆம் ஆண்டு இந்த கொலையை பற்றி புத்தகம் எழுதிய ஜான் ஹார்னர் என்பவருக்கு ஒரு அழைப்பு வருகிறது."ஓவன் பற்றி செய்தி அடங்கிய பல செய்தித்தாள்கள் அடங்கிய ஒரு பெட்டியை ஒரு மயானத்தில்
கண்டெடுத்ததாகவும்,செய்தியில் குறிப்பிட்ட ஒரு பொருளும் அதில் இருக்கிறது"என்று கூறி அது எந்த பொருள் என்று கூறாமல் அழைப்பை துண்டிக்கிறது அந்த குரல்.டான் கொலை செய்திருக்கலாம்,ஓவனின் வருங்கால மனைவி கொலை செய்திருக்கலாம்,கொலை நடந்த அன்று ஒரு பெண் 1026 ஆம் அறையில் ஒரு ஆணை தேடி வந்தார்
எனவும்,பல மணிநேரம் தேடி கிடைக்காமல் திரும்பி சென்றார் எனவும்,அந்த பெண் ஒரு ஆணுடன் 9ஆம் மாடியில் இருந்ததை லிஃப்ட் ஆபரேட்டர் உறுதி படுத்தியிருக்கிறார்.அந்த ஆண் டானாகவும்,பெண் இவருக்கு தெரிந்தவராகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.இவர்கள் கொன்றிருக்கலாம் என்றும் பல கதைகள் நம்பப்படுகிறது.
டான் என்பவர் யார்?அந்த பெண் யார்?யார் கொலை செய்தது? ஒவனின் அறையை வெளியே பூட்டியது யார்?மயானத்திற்கு அழைத்து பணத்தை அனுப்பியது யார்?புத்தகம் எழுதியவரை அழைத்தது யார்?இவர் கொண்டு வந்த பொருட்கள் எங்கே சென்றது?யாருக்கும் தெரியாமல் கொலையாளி தப்பித்தது எப்படி? போன்ற கேள்விகளுக்கு இன்று
#KodiyilOruvan#PCMreview ஆபாச காட்சிகள் இல்லை.லிங்க் - தியேட்டர்.கதை சுருக்கம்:ஹீரோ விஜய் ஆண்டனியின் அம்மா ஒரு அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்கிறார்.அவர் சார்ந்த பஞ்சாயத்து தேர்தல் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.இதனால் அந்த அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை தேர்தலில் நிற்க
சொல்கிறார். தன் ஊருக்கு நல்லது நடக்கும் என்று நம்பி அவரும் நின்று வெற்றி பெறுகிறார்.ஆனால் ஊழல் செய்ய அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை கட்டயாப்படுத்துவதால் மறுக்கிறார்.இதனால் ஆத்திரமடையும் அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை பெட்ரோல் ஊத்தி கொழுத்துகிறார்.எப்படியோ உயிர் பிழைக்கும் ஹீரோவின்
அம்மா ஹீரோவை பெற்றெடுக்கிறார். தன் அம்மாவிற்கு தான் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று ஆசை கொள்வதால் எப்படியாக ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வருகிறார் ஹீரோ.அங்கு சேரியில் இருக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார்.இது அங்கு இருக்கும் ரவுடிகளுக்கு பிடிக்காமல் போக
#vivonetflix#PCMreview "குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய அருமையான படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - Netflix. டெலிகிராம் - பயோ/DM.இசையில் வல்லுவரான ஒரு தாத்தா மற்றும் அவருடன் இருக்கும் ஒரு குட்டி குரங்கு இருவரும் தெருவில் பாடி பணம் சம்பாதிக்கிறார்கள்.சில நிமிடங்கள்
கழித்து தாத்தாவுக்கு ஒரு கடிதம் வருகிறது.அதில் அவரது பழைய கால தோழி இவரை அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.இவரும் செல்லலாம் என்று நினைக்கிறார்.ஆனால் அந்த குட்டி குரங்கிற்கு இது பிடிப்பதில்லை.திடீரென தாத்தா இறந்து போக,இசை நிகழ்ச்சிக்கு சென்று பாட வேண்டிய
பாடல் வரிகள் அடங்கிய காகிதம் மற்றும் பழைய புகைப்படங்கள் ஆகியவை அங்கு இருப்பதை குரங்கு பார்க்கிறது.தாத்தாவின் கனவை நிறைவேற்ற குரங்கு பயணம் மேற்கொள்கிறது.அங்கு சென்றதா?பாடலை பாடியதா?என்பதே மீதிக்கதை.கிகான்ஜோ என்ற குட்டி குரங்குடன் ஒரு சிறுமியும் பயணம் செய்வாள்.இருவரின் உரையாடல்
#unsolvedmysteries#PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 3".இன்று நாம் பார்க்க போவது 62 ஆண்டுகளாகியும் இன்னும் மர்மமாக நீடிக்கும் 9 பேர் மரணம் அடைந்த "டயட்லோவ் பாஸ்"நிகழ்வு பற்றி தான்.ஜனவரி 23,1959 அன்று Ural Polytechnic Institute கல்லூரியை சேர்ந்த 10 பேர் ரஷ்ய நாட்டில்
இருக்கும் Sverdlovsk Oblast பகுதியில் வடக்கு Ural மலை தொடர்ச்சியில் இருக்கும் kholat Syakhl என்ற மலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் மலையேறுதலில் கிரேடு 2 சான்றிதழ் பெற்றவர்கள்.கிரேடு 3 சான்றிதல் பெற 300 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.எனவே அச்சான்றிதலை
பெற Sverdlovsk பகுதி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி மிகவும் கடினமான 10 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையாக இருக்கும் Oterten என்ற இடத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்கள். இக்குழுவிற்கு இகோர் டயட்லோவ் (23) என்ற மாணவர் தலைமை தாங்குகிறார்.ஜனவரி 25 ஆம் தேதி ரயில் மூலம் இவ்டேல் என்ற இடத்தை
#unsolvedmysteries#PCMreview "விடை தெரியாத மர்மங்கள் பகுதியில் இரண்டாவதாக நாம் இன்று பார்க்கப்போவது 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய மர்மம் தான்".மார்ச் 8,2014 ஆம் ஆண்டு இரவு 12.42 மணிக்கு போயிங் 777 ER 200 ரக விமானமான MH370 விமானம் மலேசியாவின் கோலாலம்பூர்
விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு புறப்படுகிறது. விமானத்தில் 227 பயணிகள்,10 கேபின் குழுவினர்,2 பைலட்டுகள் என மொத்தம் 239 நபர்கள் பயணிக்கிறார்கள்.பயணம் தூரம் 5.30 மணி நேரம்.விமானத்தை 53 வயதான ஜஹாரி அகமத் என்ற முதல் பைலட்டும் 27 வயதான ஃபரிக் ஹமீத் என்ற
இரண்டாம் பைலட்டும் ஓட்டுகிறார்கள்.சரியாக இரவு 1:08 மணிக்கு விமானம் தெற்கு சீன கடல் பகுதியில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்று விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.மலேசிய கட்டுப்பாட்டு அறை விமானியை தொடர்பு கொண்டு "நீங்கள் இன்னும் ஒரு நிமிடத்தில்
#ThuglaqDarbar#PCMreview "அரசியல் டிராமா" ஆபாச காட்சிகள் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ விஜய் சேதுபதி தனி ஒருவன் படத்தில் வருவது ஒரு அரசியல் கூட்டத்தில் பிறக்கிறார்.அந்த படத்தில் வருவது போல் இதிலும் அரசியல் கட்சி தலைவரான பார்த்திபன் ஹீரோவுக்கு சிங்காரவேலன்
என்று பெயர் சூட்டுகிறார்.இதனால் சிறுவயதில் இருந்தே அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று முடிவு செய்கிறார்.இவரின் தங்கச்சியான மஞ்சிமா மோகன் பிறந்த உடனே தன்னுடைய அம்மா இறந்து விடுவதால் ஹீரோ விஜய் சேதுபதி மஞ்சிமா மோகனுடன் பேசுவதில்லை.பெரிய அரசியல் கட்சி தலைவரான பார்த்திபனிடம்
சேர்ந்து அப்படியே படிப்படியாக முன்னேற முடிவு செய்கிறார்.இதற்கு இவர் என்னவெல்லாம் செய்தார்,யாருடைய பகையை சம்பாதித்தார்? இவருக்குள் ஏற்படும் பிரச்சனை என்ன?இவரின் எண்ணம் நிறைவேறியதா?என்பதே மீதிக்கதை.விஜய் சேதுபதி வழக்கம் போல் நடிப்பில் அசத்திவிட்டார்.படத்தின் கதைக்களம் சத்யராஜ்
#MalignantMovie#PCMreview "வித்தியாசமான மற்றும் தரமான ஹாரர் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை (திரையரங்கில் தமிழ் டப்பிங்குடன் ஓடுகிறது).கண்டிப்பாக (18+).OTT - HBO Max. டெலிகிராம் - பயோ/DM.ஹீரோயினுக்கு கனவில் பலர் கொல்லப்படுவதை போல் கனவு வருகிறது.அடுத்த நாள் காலை தான் தெரிகிறது
இவர் கண்டது கனவு அல்ல,நிஜம் என்று.ஒரு மர்மமான உருவம் ஹீரோயினை கனவில் இருப்பதை போல் நிகழ்த்தி கொலை நடக்கும் இடத்திற்கு கனவின் வழியே அழைத்து சென்று தான் செய்யும் கொலையை ஹீரோயினை நேரில் பார்க்க வைக்கிறது.அதன் அடிப்படையில் முதல் கொலையாக ஹீரோயினின் கணவர் கொல்லப்படுகிறார்.காவல்துறை
ஹீரோயின் வீட்டிற்க்கு வந்து விசாரிக்க,ஹீரோயின் மேல் சந்தேகப்படுகிறது போலீஸ்.இப்படி தொடர்ச்சியாக கொலை நிகழ,ஹீரோயின் மீது சந்தேகம் வழுவாகிறது.இதில் இருந்து ஹீரோயின் தப்பித்தாரா?கொலை செய்யும் அந்த மர்மமான உருவம் எது?ஏன் கொலை செய்கிறது?ஏன் ஹீரோயினுக்கு இவ்வாறு நிகழ்கிறது?என்ற பல