சனி பிரதோஷத்தன்று, மாலை வேளை சூரிய அஸ்தமனத்திற்கு முன் 24 நிமிடங்களும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் 24 நிமிடங்களு ம் உள்ள 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும் இந்த நேரத்தில் வழிபாடு செய்வது
சாலச்சிறந்தது.
விரத முறை :
வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.
பிரதோஷ நேரத்தில் தேவியும் சந்திரசேகரும் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும்
மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.
பிரதோஷ தின பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக்கொண்டு சிவனை அபிஷேகம் செய்து சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெ றும். வறுமை நீங்கி செல்வம் பெருகும் மேலும் தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும்.
போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும்.
மேலும், பிரதோஷத்தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலன் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.
சனி பிரதோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன்தரக் கூடியது ஆகும்.
சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தி பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
அன்றைய தினம் நந்திக்கும், சிவபெருமானுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவி ப்பது நற்பலன்களை தரும்.
இந்த குறிப்புகளை நெஞ்சில் நிறுத்தி பக்தி சிரத்தையுடன், நேர்மையாகவும் உள்ளப்பூர்வமாக சிவபெருமானை வணங்கி வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுங்கள்.
நானும் நீயும் 18 வயதில் வீட்டிலிருந்து வெளியே வந்தோம்.
நீ JEE பரிட்சையில் வெற்றி பெற்றாய். நான் ராணுவத்தில் சேர்வதற்கு பரிட்சையில் வெற்றி பெற்றேன்.
நீ Indian Institute of Technology(IIT) யில் படிக்க சென்றாய். நான் National Defence Academy (NDA) வில் பயிற்சிக்கு சென்றேன்.
உனக்கு பொறியியல் வல்லுனன் ஆவதற்கு பட்டம் கிடைத்தது. எனக்கு மிகவும் கடினமான பயிற்சி கிடைத்தது.
உன்னுடைய நாள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிகிறது. என்னுடைய நாள் காலை 4 மணிக்கு துவங்கும். இரவு 9 மணிக்கு முடியும். பல நாட்கள் இரவிலும் பயிற்சி தொடரும்.
உனக்கு படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடந்தது. எனக்கு பயிற்சி முடிந்தவுடன் தேர்வு பெற்றோர் வழியனுப்பு பரேட் (Passing Out Parade) நடந்தது.
உனக்கு வேலை கிடைத்தது. எனக்கு வாழ்க்கை முறை கிடைத்தது.உனக்கு உன் பெற்றோர்களை பார்க்க அடிக்கடி வாய்ப்பு கிடைத்தது.
உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை. 260 கோடி வயது.
திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.
திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார்.
குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார்.
குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் குணசீலரின் குரு தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார்
முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.
தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லி தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன.
அவற்றில் ஒரு கோயில்தான் இந்த முருகன் கோயில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக இந்த கோயில் எந்தவித சேதமும் இன்றி நிலைத்து நிற்பதன் அதிசயத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி பகுதியில் உள்ள துணைக்காயம் எனும் இடம்வரை பயணிக்கிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள இந்த முருகன் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தென்னாடுடையசிவனேபோறி
காஞ்சிபுரம்_மாவட்டத்திலுள்ள 108_சிவாலயங்கள்
இந்துக்களுக்கு வட நாட்டு புனித தலங்களில் பிரதானமானது காசி. அதை போலவே தென்னாட்டு புனித தலங்களில் பிரதானமானது காஞ்சிபுரம். சைவர் வைணவர், சமணர் மற்றும் பெளத்தர் போற்றும் ஒரே புனித தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு 1008 சிவ தலங்களும், 108 வைணவ தலங்களும் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சொற்ப அளவிலானவை தான் இன்று உள்ளன என்றாலும், பல தொன்மையான, பாடல் பெற்ற கோயில்கள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ளன. இவற்றில் 108 சிவாலயங்களை இங்கே காணலாம்