#தென்னாடுடைய_சிவனே_போற்றி

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை. 260 கோடி வயது.
திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.
இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது.
மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில்.
குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர் தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள் இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்
ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார்.
அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக,
பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள
தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.
தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள்,
ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது.
கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும்.
இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.
நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.
தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத
நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர்.
எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர். ஓம் நமச்சிவாய 🙏🙏 @Pvd5888

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

20 Sep
நானும் நீயும் 18 வயதில் வீட்டிலிருந்து வெளியே வந்தோம்.

நீ JEE பரிட்சையில் வெற்றி பெற்றாய். நான் ராணுவத்தில் சேர்வதற்கு பரிட்சையில் வெற்றி பெற்றேன்.

நீ Indian Institute of Technology(IIT) யில் படிக்க சென்றாய். நான் National Defence Academy (NDA) வில் பயிற்சிக்கு சென்றேன்.
உனக்கு பொறியியல் வல்லுனன் ஆவதற்கு பட்டம் கிடைத்தது. எனக்கு மிகவும் கடினமான பயிற்சி கிடைத்தது.

உன்னுடைய நாள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிகிறது. என்னுடைய நாள் காலை 4 மணிக்கு துவங்கும். இரவு 9 மணிக்கு முடியும். பல நாட்கள் இரவிலும் பயிற்சி தொடரும்.
உனக்கு படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடந்தது. எனக்கு பயிற்சி முடிந்தவுடன் தேர்வு பெற்றோர் வழியனுப்பு பரேட் (Passing Out Parade) நடந்தது.

உனக்கு வேலை கிடைத்தது. எனக்கு வாழ்க்கை முறை கிடைத்தது.உனக்கு உன் பெற்றோர்களை பார்க்க அடிக்கடி வாய்ப்பு கிடைத்தது.
Read 11 tweets
19 Sep
#குணசீலம்_பிரசன்ன
#வெங்கடாஜலபதி_பெருமாள்
#திருக்கோயில்

மனநோய் தீர்த்து, மன அமைதி தரும் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்.

திருச்சி- சேலம் ரோட்டில் திருச்சியில் இருந்து 24 கி.மீ தூரத்தில் குணசீலம் என்ற இடத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில். Image
மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி.
உற்சவர் ஸ்ரீனிவாசர்.

#தல_வரலாறு

திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். Image
குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார்.
குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் குணசீலரின் குரு தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார் Image
Read 12 tweets
18 Sep
சனி பிரதோஷம்....(18/09/2021)

சனி பிரதோஷத்தன்று, மாலை வேளை சூரிய அஸ்தமனத்திற்கு முன் 24 நிமிடங்களும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் 24 நிமிடங்களு ம் உள்ள 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும் இந்த நேரத்தில் வழிபாடு செய்வது
சாலச்சிறந்தது.
விரத முறை :

வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.
பிரதோஷ நேரத்தில் தேவியும் சந்திரசேகரும் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும்
Read 11 tweets
13 Sep
குறுக்குத்துறை முருகன் கோயில்..

முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லி தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன.
அவற்றில் ஒரு கோயில்தான் இந்த முருகன் கோயில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக இந்த கோயில் எந்தவித சேதமும் இன்றி நிலைத்து நிற்பதன் அதிசயத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி பகுதியில் உள்ள துணைக்காயம் எனும் இடம்வரை பயணிக்கிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள இந்த முருகன் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Read 10 tweets
12 Sep
தென்னாடுடையசிவனேபோறி
காஞ்சிபுரம்_மாவட்டத்திலுள்ள 108_சிவாலயங்கள்
இந்துக்களுக்கு வட நாட்டு புனித தலங்களில் பிரதானமானது காசி. அதை போலவே தென்னாட்டு புனித தலங்களில் பிரதானமானது காஞ்சிபுரம். சைவர் வைணவர், சமணர் மற்றும் பெளத்தர் போற்றும் ஒரே புனித தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு 1008 சிவ தலங்களும், 108 வைணவ தலங்களும் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சொற்ப அளவிலானவை தான் இன்று உள்ளன என்றாலும், பல தொன்மையான, பாடல் பெற்ற கோயில்கள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ளன. இவற்றில் 108 சிவாலயங்களை இங்கே காணலாம்
01. பிரம்மபுரீஸ்வரர்
02. வேதவநேஸ்வரர்
03. புன்னியகொட்டீஸ்வரர்
04. மணிகண்டீஸ்வரர்
05. மார்கண்டேஸ்வரர்
06. பணாமணிஸ்வரர்
07. கணிகண்டீஸ்வரர்
08. பணாமணிஸ்வரர்
09. அத்தீஸ்வரர்
10. குச்சிஸ்வரர்
11. காசிபேஸ்வரர்
12. ஆங்கீரீஸ்வரர்
13. சாந்தாலிஸ்வரர்
14. வசிட்டேஸ்வரர்
15. லட்சுமி ஈஸ்வரர்
Read 10 tweets
11 Sep
#ஓம்_சரவணபவ

ஈரோடு மாவட்டம் பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

மூலவர் : சுப்பிரமணிய சுவாமி
உற்சவர் :
அம்மன்/தாயார் : வள்ளி தெய்வயானை
தல விருட்சம் : கடம்பம்
தீர்த்தம் : சரவணதீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் Image
புராண பெயர் : -
ஊர் : பச்சைமலை
மாவட்டம் : ஈரோடு
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா

பிரதோஷம் தேய்பிறை அஷ்டமி கிருத்திகை சஷ்டி, விசாகம், அமாவாசை ஆகிய நாட்களில் அந்தந்த தெய்வங்களுக்கு சிறப்பு. அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. Image
இத்தலத்தில் முருகனுக்குகந்த விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தை மற்றும் ஆடிக் கிருத்திகை நாட்களில் சத்ரு சம்ஹார ஹோமம், முருகனின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று லட்சார்ச்சனை, பவுர்ணமி அன்று கல்யாண சுப்ரமணியசுவாமி தம்தேவியருடன் திருவீதி Image
Read 35 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(