*"கட்டெறும்பு, காசிக்குப் போய் முக்தி பெற முடியுமா?'* கதை சொல்ல துவங்கினார் சூதமா முனிவர்... ஒரு கிராமத்தில், ஒரு பாட்டி இருந்தார். கடைசி காலத்தில், காசிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று புறப்பட்டாள்.
வழியில் சாப்பிடுவதற்காக, ஒரு மடி சஞ்சியில் சில பட்சணங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அந்த மடி சஞ்சியில் எப்படியோ ஒரு கட்டெறும்பு புகுந்து, அதுவும் காசிக்கு போய்ச் சேர்ந்தது. பாட்டி காசிக்குப் போனதும், மடி சஞ்சியை எடுத்து உதறினாள்.
அதிலிருந்து, கட்டெறும்பு கீழே விழுந்தது. பாட்டி கட்டெறும்பைப் பார்த்ததும், தன் காலால் ஒரு மிதி மிதித்து, ஒரு தேய்ப்பு தேய்த்தாள். உருக்குலைந்து மரணமடைந்தது கட்டெறும்பு.
எறும்பு, காசி ஷேத்திரத்தில் மரணமடைந்ததால், சிவகணங்கள் வந்து, அந்த ஜீவனை, சகல மரியாதைகளுடன் கைலாசத்துக்கு அழைத்துச் சென்றன.
காசியில் மரித்ததால் கைலாச வாசம் கிடைத்தது கட்டெறும்புக்கு. இப்படிப்பட்ட காசி ஷேத்திரத்தின் மகிமை, சொல்லில் அடங்காது என்று சொல்லி, கதையை முடித்தார் சூதமா முனிவர்.
எல்லா முனிவர்களும், "ஆஹா... இன்று ஒரு நல்ல கதையைக் கேட்டோம்...' என்று சந்தோஷத்துடன் சாயங்கால அநுஷ்டானத்துக்குச் சென்றனர்.
அதாவது, தினம் ஏதாவதொரு புண்ணிய சரித்திரம், புண்ணிய தேசங்கள், மகான்களின் சரித்திரம் போன்ற ஆன்மிக விஷயங்களில் பொழுதை கழிக்க வேண்டும். புண்ணிய ஷேத்திரங்கள், புண்ணிய நதி தீரங்களில் வாசம் செய்து, பகவானையே தியானம் செய்து கொண்டிருந்தால், கடைசியில் புண்ணிய லோகத்தை அடையலாம்.
வெட்டிப் பேச்சிலும், வேண்டாத விவகாரங்களிலும் ஈடுபட்டால், புண்ணிய லோகத்தை எட்டிக்கூட பார்க்க முடியாது. பிறகு, கைலாசம், வைகுண்டம் என்பதெல்லாம், பேச்சளவில் தான் இருக்கும். நல்ல ஜென்மாவை நல்ல வழியில் கழிக்கலாமே!
ஜெய ஜெய சங்கர 🇮🇳🙏
ஹர ஹர சங்கர 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மாநில அரசை எச்சரிக்கிறார் பிஷப்; தவறேதுமில்லை! சொல்கிறார் மத்திய இணை அமைச்சர்
திருவனந்தபுரம்:வெளியுறவுத் துறை இணையமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான முரளீதரன், ''மக்களின் உணர்வுகளை துாண்டும் வகையில் பிஷப் பேசவில்லை.
''இந்த சமூகத்துக்கும், மாநிலத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. இது மிக தீவிரமான பிரச்னை. மாநில அரசு உடனடியாக தலையிட்டு, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்,'' என்றார்.
கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பிஷப், 'மாநிலத்தில் லவ் ஜிகாத், போதைப் பொருள் ஜிகாத் மூலம் இளம் பெண்களை வேட்டையாடி வருகின்றனர்' என பேசியது, பெரும் பிரச்னையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ., மிக தீவிரமாக செயல்படுவதால், கேரள அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மகாபலி சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டார். மூன்றடி மண் கேட்பது இறைவன் என்பதை அறியாத மன்னர் மகாபலி சக்கரவர்த்தி தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறார். 🙏🇮🇳1
ஆனால், மகாபலி சக்கரவர்த்தியிடம் வரம் கேட்க வந்திருப்பது மாகவிஷ்ணு என்பதை அறிந்த அசுர குல குரு சுக்கிராச்சாரியார், மன்னர் தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார்.
🙏🇮🇳2
குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த, சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழந்து விடுகிறார்.
லக்னோ: ‛‛கடந்த 4.5 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில் உ.பி.,யில் மதக்கலவரம் ஏதும் நடக்கவில்லை'', என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உ.பி.,யில் பா.ஜ., ஆட்சி அமைந்து 4.5 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நிருபர்களை சந்தித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: கடந்த 4.5 ஆண்டுகளை நல்ல நிர்வாகத்திற்காக அர்ப்பணித்தது மறக்க முடியாதது.
கிரிமினல்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 4.5 ஆண்டுகளில், உ.பி.,யில் மதக்கலவரம் நடக்கவில்லை.
'நீட்' என்ற, தேசிய அளவிலான தகுதி நுழைவுத் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாத ஒன்று' என்று ஒரு தமிழக அமைச்சர், நீட் தேர்வு நாளின் போது 'டிவி'க்கு பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது,
பின்னணியில், 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற பாடல் வரிகள் ஒலித்து கொண்டு இருந்தன.
இந்த நீட் அரசியல், தமிழகத்தில் அனிதாவில் ஆரம்பித்து, இந்த ஆண்டு சவுந்தர்யா வரை, 13 பிள்ளைகளுக்கும் மேலாக காவு வாங்கியுள்ளதை, கண்கள் பனிக்க, இதயம் கனக்க கடந்து போக முடியவில்லை.
'நீட் சமூக நீதிக்கு எதிரானது; கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எதிரானது; பின்தங்கிய, பட்டியல் இன மக்களை மேலே வர விடாமல் தடுப்பது...' என தொடர்ந்து கூறி, கிராமப்புற, அரசுப்பள்ளி மற்றும் பட்டியலின மக்களை, நீட்டிற்கு எதிராக திருப்ப அரசு நினைக்கிறது.