அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர்
பெரிய லிங்கம்:
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. 🙏🇮🇳1
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். 🙏🇮🇳2
ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.
🙏🇮🇳3
தினமும் சூரிய தரிசனம் :
இங்குள்ள நந்தியும் தஞ்சாவூரை விட பெரியது. தஞ்சாவூரில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டு உயரமான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. 🙏🇮🇳4
தஞ்சாவூரில் மூலஸ்தானத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நந்தி உள்ளது. இங்கு 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. 🙏🇮🇳5
மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.
🙏🇮🇳6
சந்திரகாந்த கல் :
கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்ன வென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். 🙏🇮🇳7
இந்த அனுபவத்தை பல தலைமுறைகளாக இருந்து வரும் குருக்குள் தங்கள் சந்ததியினருக்கு கூறி வருகிறார்கள். இந்த வகை கல் வேறு எந்தக் கோயிலிலும் இருப்பதாக தெரியவில்லை.
🙏🇮🇳8
அன்னாபிஷேகம் :
காஞ்சிமடத்தின் சார்பில், ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான மூடை அரிசியை வேகவைத்து மூலவராக இருக்கும் பிரமாண்டமான லிங்கம் மூடும் அளவிற்கு சாதத்தினால் அபிஷேகம் செய்வார்கள். 🙏🇮🇳9
அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அபிஷேகம் நடக்கும். அத்துடன் காய்கறி, கனி வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, சிறப்பு பூஜை நடக்கும். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பக்தர்கள் அன்னாபிஷேக லிங்கத்தை தரிசிப்பார்கள்.
🙏🇮🇳10
அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பொதுவாக ஓடும் நீரில் விடுவது வழக்கம். குறிப்பாக பாணத்தின் மீது இருக்கும் அன்னத்தில் கதிர்கள் ஊடுருவி இருக்கும். அதை சாப்பிட்டால் அதன் சக்தியை தாங்கும் வலிமை நமக்கு கிடையாது. 🙏🇮🇳11
எனவே ஆவுடைப்பகுதியில் உள்ள அன்னத்தில்,தயிர் கலந்து தயிர் சாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடுகிறார்கள்.
🙏🇮🇳12
பெரிய நாயகி :
பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அம்மன் அருள்பாலிக்கிறாள். நிமிர்ந்து பார்த்து தான் வணங்க வேண்டும். இவளது பாதத்தில் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார். 🙏🇮🇳13
அதன் பிறகு தான் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சுற்றமுடியாத நவக்கிரக மண்டபம் :
இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
🙏🇮🇳14
சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. 🙏🇮🇳15
நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாத படி மண்டப அமைப்பு உள்ளது.
🙏🇮🇳16
குழந்தை வடிவில் துர்க்கை :
இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். 🙏🇮🇳17
இவளை மங்கள சண்டி என்று அழைக்கிறார்கள். திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை நடக்கிறது. 🙏🇮🇳18
ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். 🙏🇮🇳19
இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.
🙏🇮🇳20
கணக்கு விநாயகர் :
ஒருமுறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரை அழைத்து பெரிய கோயில் கட்டியதற்கு இது வரை எவ்வளவு செலவாகி உள்ளது? என கேட்டான். அமைச்சருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரை வணங்கினார். 🙏🇮🇳21
காவிக்கல் 8 ஆயிரம் செம்புகாசு, காவிநூல் 8 ஆயிரம் செம்பு காசு என நினைவு வந்தது. எனவே கணக்கு விநாயகர் என்று அழைக்கப்பட்டார். தற்போது கனக விநாயகர் எனப்படுகிறார். இவர் தன் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார்.
🙏🇮🇳22
கோபுர அமைப்பு:
இங்குள்ள கோபுரம் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தஞ்சாவூரைப் போலவே இங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 🙏🇮🇳23
216 அடி உயரமுள்ள தஞ்சாவூர் கோபுரம் கீழிருந்து மேல் ஒரே சீராக கட்டப்பட்டிருக்கும். ஆனால் 180 அடி உயரம், 100 அடி அகலமுள்ள இக்கோயில் கோபுரம், கீழிருந்து 100 அடி உயரம் வரை அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது. 🙏🇮🇳24
கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக இக்கோயில் விமானம் தான் தமிழகத்தில் பெரிய விமானம் ஆகும்.
🙏🇮🇳25
சிறப்பம்சங்கள் :
கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 🙏🇮🇳26
இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும்.
🙏🇮🇳27
இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. 🙏🇮🇳28
மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.
தமிழக மாணவ – மாணவியர்களுக்கு… ஹீரோவா..? வில்லனா..?
நீட் – மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு..
சமீபகாலமாக தமிழக மாணவர்களுக்கு, “நீட்” தேர்வு வில்லனாக சித்தரிக்கப் படுகின்றது.
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஒவ்வொரு மாணவரும், நீட் தேர்வு எழுதி, தேர்வு பெற்று தான் செல்ல வேண்டும் என்ற நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி இந்த சட்டம் இயற்றப்பட்டது.
மருத்துவ படிப்பு படிப்பதற்கு, நீட் கட்டாயம் என்று சொன்ன நாள் முதல், தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், தமிழகத்தில் மிகவும் வில்லனாகவே சித்தரிக்கப்படுகின்றது இந்த நீட் தேர்வு.
பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம்: 12 போ் குழுவை அமைத்தது மத்திய கல்வி அமைச்சகம்
புதுடில்லி: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட வரைவுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும் - உண்மை நிலை என்ன?? - ஒரு அலசல்
1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.
2. நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள் (MBBS) -29925.
3. இந்த 29925 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்து MBBS இடங்கள் வாங்கியவர்கள் 213. சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும்.
பைடன் - மோடி முதல் சந்திப்பு இருதரப்பு உறவை மேம்படுத்தும்
வாஷிங்டன் :'அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான முதல் நேரடி சந்திப்பு, இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்தும்' என, அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐ.நா., பொது சபை கூட்டம், 'குவாட்' அமைப்பின் மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அமைதியான சூழல்
வரும் 24ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச உள்ளார்.இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளதாவது:இரு தலைவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பங்கேற்றுள்ளனர்.
இது உங்கள் இடம்: ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா? என்னங்க அரசின் நியாயம்?
எம்.கே.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஆயுள் முழுவதும் நாத்திகம் பேசி, பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவாக பேசி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வ உருவங்களை மட்டும் நிந்தித்து வாழ்ந்து,
மறைந்தவர், 'நாத்திக பேரொளி'யான தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி. அதாவது அவரை பொறுத்தவரையில் ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகம். மற்ற மதங்களை ஆதரிப்பார்.
கருணாநிதி வழியில் வந்த அவரது மகன் முதல்வர் ஸ்டாலினும், அதே கொள்கையை தான் கடைப்பிடிக்கிறார். முதல்வரானதும், கோவில்களில் மட்டும் தமிழில் அர்ச்சனை செய்யும்படியும், தமிழே சரியாக உச்சரிக்க தெரியாதோரை அர்ச்சகராக நியமித்தும் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பெயர் தான் மதசார்பின்மையா?
ரூ.21,000 கோடி ஹெராயின் கடத்தல்! முக பவுடர் எனச் சொல்லி நாடகமாடிய ஆந்திர ஜோடி கைது
புதுடில்லி :'முக பவுடர்' என்ற பெயரில் 3,000 கிலோ எடையுள்ள 21 ஆயிரம் கோடி மதிப்பு ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக ஆந்திர ஜோடி, சென்னையில் கைது செய்யப்பட்டது.
சென்னை, ஆந்திராவில் இவர்கள் பெரிய இறக்குமதி நிறுவனங்களை நடத்தி வருவது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகள் அனுப்பி வைத்துள்ள இந்த போதைப் பொருள், குஜராத் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஆமதாபாத், டில்லி, மும்பையில் பலர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தலிபானுக்கு நம் அண்டை நாடான பாக்.,கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.