#அருள்மிகு_உத்தமர்_கோயில்
#திருச்சிராப்பள்ளி

ஏழு குருபகவான்களை கொண்ட
ஒரே ஸ்தலம்

மூலவர் : புருஷோத்தமன்
உற்சவர் : –
அம்மன்/தாயார் : பூர்ணவல்லி, அம்பாள்: சவுந்தர்ய பார்வதி
தல விருட்சம் : கதலி (வாழை)மரம்
தீர்த்தம் : கதம்ப தீர்த்தம்
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 1000-2000 Image
வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர்
ஊர் : உத்தமர் கோவில்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:

#மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை Image
முத்திலங்கு காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே

திருமங்கையாழ்வார்.
திருவிழா:

சித்திரையில் பெருமாளுக்கும், வைகாசியில் சிவனுக்கும் தேர்த்திருவிழா

#தல_சிறப்பு:

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம். Image
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய தேசம்

#திறக்கும்_நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

#முகவரி:

அருள்மிகு உத்தமர் திருக்கோயில், திருக்கரம்பனூர், பிச்சாண்டார் கோயில் – 621 216. Image
மணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம்.
போன்:
+91- 431 – 2591 466, 2591 040.
#பொது_தகவல்:
சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் “பிச்சாண்டார் கோயில்’ என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் Image
“கதம்பனூர்’ என்றும் “கரம்பனூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லறவாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக் கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்த லத்தை “உத்தமர் கோயில்’ Image
என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

சிவன்-பெருமாள் வீதி உலா!

பக்தர் ஒருவருக்காக பிரம்மா, சிவன், திருமால் என மூன்று தெய்வங்களும் காட்சித் தந்த தலம், உத்தமர் கோயில். தன் மனைவி சரஸ்வதியுடன் Image
பிரம்மா அருள்பாலிக்கும் இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகைத் திருநாளன்று சிவனும், பெருமாளும் சேர்ந்து வீதி உலா வருவது தனிச் சிறப்பு.

#பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, வேண்டிக்கொள்ளலாம். Image
#நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, நிவேதனம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

#தலபெருமை:

பிரம்மன் சன்னதி: படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. Image
எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். Image
அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, “நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்’ என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது. Image
பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், Image
தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

மும்மூர்த்திகள் தலம்: விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக Image
விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. Image
பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். Image
ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. Image
சிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர்.
குருப்பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் “சப்தகுரு தலம்’ எனப்படுகிறது.

ஏழு குருபகவான்

1. பிரம்மகுரு

2. விஷ்ணுகுரு

3. சிவகுரு

4. சக்திகுரு

5. சுப்ரமணியகுரு

6. தேவகுரு பிரஹஸ்பதி

7. அசுரகுரு சுக்ராச்சார்யார்
ஆகிய ஏழு குருபகவான்கள் இத்தலத்தில் வீற்றிருக்கின்றனர். தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னிதியில் பிரம்மா அருளும் தலமாகவும் விளங்குகிறது. மேலும் பிரம்மாவின் இடதுபுறம் தனி சன்னிதியில் ஞான சரஸ்வதி அருள்பாலிக்கும் தலமாகவும் அமைந்திருக்கிறது.
#ஸ்தல_வரலாறு:

சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார்.
இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது.
எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார்.
அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் “பூரணவல்லி’ என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்

#சிறப்பம்சம்:

கல்யாணம் ஆகாதவர்களின் ஜாதகத்தை இங்கே ஒரு சன்னதியில் வைத்து பூஜித்தால் அவர்களுக்கு
திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது ஒரு பூரண நம்பிக்கை மட்டும் அல்ல, பலருக்கு நடந்திருக்கிறது எனபதே உண்மை. ஓம் நமச்சிவாய 🙏🙏 நன்றி அண்ணா @Pvd5888

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

23 Sep
🔴🟠🟡🟢🔵🟣⚫️⚪️🟤🔴🟠🟡🟢🔵🟣⚫️⚪️
நாகலிங்கப்பூ விசேஷங்கள் !

நாகலிங்கப்பூ.
இதுவே கடவுள்.

இந்தப் பூவுக்குள்ளே இறைவன் தானே இறங்கி வந்து குடியிருக்கிறான்.

அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.

நாகமுமிருக்கிறது …………..உள்ளே 🌹லிங்கமும் இருக்கிறது. Image
சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன.

உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு 🌹மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும்.

ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும்
சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் ..

உடல் சிலிர்க்கும்.
உள்ளம் அமைதி பெறும்.
கயிலாயம் கண்ணுக்குள் விரியும்

சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெறவில்லை.

பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய
Read 10 tweets
23 Sep
*இன்றைய கோபுர தரிசனம்....*
தமிழ்நாட்டின் *தூத்துக்குடி* *மாவட்டத்தில்*
திருநெல்வேலி-- திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியில்
இருந்து சுமார் 30 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
*ஸ்ரீவைகுண்டம்*
*வைகுண்டநாதர்* ; *கோயில்* .
.இக் கோயில்
ராஜகோபுரம் Image
9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது
வைகுண்டநாதர்; சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் *நின்ற கோலத்தில்* *கிழக்கு நோக்கி* காட்சி தருகிறார். Image
இக் கோவில்,
108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் *சூரியனுக்குரியது* .
உற்சவர்:
கள்ளபிரான் ,
ஸ்ரீசோரநாதர் Image
Read 14 tweets
22 Sep
#ஓதிமலை_உத்தண்ட
#வேலாயுதன்_திருத்தலம்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஊதியூர் வேலாயுதசுவாமி திருத்தலம்.

கொங்கண சித்தர் தவம் இயற்றி முருகன் சிலை வடித்த தலம், திருப்புகழ் பாடல்பெற்ற தலம், Image
இயற்கையான சூழலில் அரிய மூலிகைகள் கொண்ட மலை என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது.

ஊதியூர் என இவ்வூர் அறியப்பட்டாலும், இதன் பழமையான பெயர் ‘பொன்னூதி மலை’ ஆகும். காரணம், மேலைக்கொங்கு நாட்டினை ஆட்சி செய்த,உதியர்கள் குலச்சின்னமாக ‘உதி’ என்ற மரம் விளங்கியது. Image
இம்மரத்திற்கு ஒதி, ஓதி என்ற பெயர்களும் உண்டு. மேலும், இந்த உதி மரத்தில் பூக்கும் பூக்கள், பொன்னிறமாய் மின்னுமாம். இம்மரங்கள், இம்மலைகளில் நிறைந்திருந்தன.அதனால் ‘பொன் ஒதி மலை’ என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. அதுவே மருவி ‘பொன்னூதி மலை’யானதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Image
Read 14 tweets
22 Sep
🌹சமயபுரம்_மாரியம்மன்🌹
திருக்கோயில் 50 அறிய தகவல்

1. மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி
தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை
நாகம் படம் விரித்த நிலையில் காட்சி
தருகிறது. நெற்றி நிறைய திருநீறு,
குங்குமம் அணிந்துள்ளாள்.
2. அன்னை இடது கால் மடித்து, வலது
கால் தொங்க விட்டு அமர்ந்துள்ளாள்.
பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை
காணப்படுகின்றன. இவை ஆணவம்,
கன்மம், மாயை குறிக்கிறது.

3. எட்டுத் திருக்கரங்களில் முறையே
கத்தி, கபாலம், சூலம், மணிமாலை,
வில், அம்பு, உடுக்கை, பாசம்
ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.
ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி
அணிந்துள்ளாள்.

4. நட்சத்திரங்கள் 27 ஆதிக்கங்களை
தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக
திருமேனி பிரதிஷ்டையில் இங்கு
அருள்புரிகிறாள் சமயபுரத்தாள்.

5. வசுதேவர் தேவகி தம்பதியின்
8வது குழந்தையான கிருஷ்ணர்,
நந்தகோபன் யசோதையின்
Read 30 tweets
20 Sep
நானும் நீயும் 18 வயதில் வீட்டிலிருந்து வெளியே வந்தோம்.

நீ JEE பரிட்சையில் வெற்றி பெற்றாய். நான் ராணுவத்தில் சேர்வதற்கு பரிட்சையில் வெற்றி பெற்றேன்.

நீ Indian Institute of Technology(IIT) யில் படிக்க சென்றாய். நான் National Defence Academy (NDA) வில் பயிற்சிக்கு சென்றேன்.
உனக்கு பொறியியல் வல்லுனன் ஆவதற்கு பட்டம் கிடைத்தது. எனக்கு மிகவும் கடினமான பயிற்சி கிடைத்தது.

உன்னுடைய நாள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிகிறது. என்னுடைய நாள் காலை 4 மணிக்கு துவங்கும். இரவு 9 மணிக்கு முடியும். பல நாட்கள் இரவிலும் பயிற்சி தொடரும்.
உனக்கு படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடந்தது. எனக்கு பயிற்சி முடிந்தவுடன் தேர்வு பெற்றோர் வழியனுப்பு பரேட் (Passing Out Parade) நடந்தது.

உனக்கு வேலை கிடைத்தது. எனக்கு வாழ்க்கை முறை கிடைத்தது.உனக்கு உன் பெற்றோர்களை பார்க்க அடிக்கடி வாய்ப்பு கிடைத்தது.
Read 11 tweets
20 Sep
#தென்னாடுடைய_சிவனே_போற்றி

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை. 260 கோடி வயது.
திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(