*இன்றைய கோபுர தரிசனம்....*
தமிழ்நாட்டின் *தூத்துக்குடி* *மாவட்டத்தில்*
திருநெல்வேலி-- திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியில்
இருந்து சுமார் 30 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
*ஸ்ரீவைகுண்டம்*
*வைகுண்டநாதர்* ; *கோயில்* .
.இக் கோயில்
ராஜகோபுரம்
9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது
வைகுண்டநாதர்; சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் *நின்ற கோலத்தில்* *கிழக்கு நோக்கி* காட்சி தருகிறார்.
இக் கோவில்,
108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் *சூரியனுக்குரியது* .
உற்சவர்:
கள்ளபிரான் ,
ஸ்ரீசோரநாதர்
தாயார்:
வைகுண்டவல்லி, பூதேவி
உற்சவர் தாயார்:
ஸ்ரீசோரநாயகி
தீர்த்தம்:
பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி
ஆகமம்:
பாஞ்சராத்ரம்
மங்களாசாசனம்
பாடல் வகை:
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:
நம்மாழ்வார் மணவாள மா முனிவ.ரும் இத் தல பெ.ருமாளைப் பாடியுள்ளா
: .உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார்; தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதியும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளன.
தலவிருட்சம் பவளமல்லி.
பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய,
நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.
உற்சவர் சோரநாதன், கள்ளபிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தியும் உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் நகரில் திருட்டுத் தொழில் செய்துவந்த காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாயகரை வழிபட்டுப் பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும்
தானம் செய்து வந்தான். ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்றபோது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிட்டான். அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான். காலதூஷகன் வைகுண்டநாதரிடம் வேண்ட அவனுக்காகப் பெருமாள், காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார்.
அரசனிடம், அவன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறியதை உணர்த்தி, *அரசனுக்கும்* *காலதூஷகனுக்கும் காட்சிதந்து* *அருளினார்* . திருடனாக வந்தமையால் பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இக் கோயிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை , ஐப்பசி மாதங்களில் 6 ஆம் நாளன்று *சூரிய ஒளி* *வைகுண்டநாதர்* *மீது* *விழுகின்றது* . அதற்கு ஏற்றாற்போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது.
ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோவில் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.
இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும். இவ்விழா தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
விழாவில் நவதிருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளுவதைக் காணலாம். நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச் சிலை அன்னவாகனத்தில் ஒவ்வொரு நவதிருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த தலங்களில்,
அந்தந்த தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும்.
பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஊதியூர் வேலாயுதசுவாமி திருத்தலம்.
கொங்கண சித்தர் தவம் இயற்றி முருகன் சிலை வடித்த தலம், திருப்புகழ் பாடல்பெற்ற தலம்,
இயற்கையான சூழலில் அரிய மூலிகைகள் கொண்ட மலை என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது.
ஊதியூர் என இவ்வூர் அறியப்பட்டாலும், இதன் பழமையான பெயர் ‘பொன்னூதி மலை’ ஆகும். காரணம், மேலைக்கொங்கு நாட்டினை ஆட்சி செய்த,உதியர்கள் குலச்சின்னமாக ‘உதி’ என்ற மரம் விளங்கியது.
இம்மரத்திற்கு ஒதி, ஓதி என்ற பெயர்களும் உண்டு. மேலும், இந்த உதி மரத்தில் பூக்கும் பூக்கள், பொன்னிறமாய் மின்னுமாம். இம்மரங்கள், இம்மலைகளில் நிறைந்திருந்தன.அதனால் ‘பொன் ஒதி மலை’ என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. அதுவே மருவி ‘பொன்னூதி மலை’யானதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1. மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி
தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை
நாகம் படம் விரித்த நிலையில் காட்சி
தருகிறது. நெற்றி நிறைய திருநீறு,
குங்குமம் அணிந்துள்ளாள்.
2. அன்னை இடது கால் மடித்து, வலது
கால் தொங்க விட்டு அமர்ந்துள்ளாள்.
பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை
காணப்படுகின்றன. இவை ஆணவம்,
கன்மம், மாயை குறிக்கிறது.
3. எட்டுத் திருக்கரங்களில் முறையே
கத்தி, கபாலம், சூலம், மணிமாலை,
வில், அம்பு, உடுக்கை, பாசம்
ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.
வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர்
ஊர் : உத்தமர் கோவில்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
நானும் நீயும் 18 வயதில் வீட்டிலிருந்து வெளியே வந்தோம்.
நீ JEE பரிட்சையில் வெற்றி பெற்றாய். நான் ராணுவத்தில் சேர்வதற்கு பரிட்சையில் வெற்றி பெற்றேன்.
நீ Indian Institute of Technology(IIT) யில் படிக்க சென்றாய். நான் National Defence Academy (NDA) வில் பயிற்சிக்கு சென்றேன்.
உனக்கு பொறியியல் வல்லுனன் ஆவதற்கு பட்டம் கிடைத்தது. எனக்கு மிகவும் கடினமான பயிற்சி கிடைத்தது.
உன்னுடைய நாள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிகிறது. என்னுடைய நாள் காலை 4 மணிக்கு துவங்கும். இரவு 9 மணிக்கு முடியும். பல நாட்கள் இரவிலும் பயிற்சி தொடரும்.
உனக்கு படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடந்தது. எனக்கு பயிற்சி முடிந்தவுடன் தேர்வு பெற்றோர் வழியனுப்பு பரேட் (Passing Out Parade) நடந்தது.
உனக்கு வேலை கிடைத்தது. எனக்கு வாழ்க்கை முறை கிடைத்தது.உனக்கு உன் பெற்றோர்களை பார்க்க அடிக்கடி வாய்ப்பு கிடைத்தது.
உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை. 260 கோடி வயது.
திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.