இளையராஜாவின் இறைநம்பிக்கை, இந்துமத பற்று ஒரு பகுத்தறிவாளன் என்கிற முறையில் உங்களுக்கு தவறாகவோ, ஆபத்தானதாகவோ தெரியவில்லையா?
பெரியாருக்கு எதிராகவும், மிகத் தீவிரமாக இயங்கினார் முத்துராமலிங்கத் தேவர். பெரியாரை மிகக் கேவலமான வார்த்தைகளால் ஏசி இருக்கிறார் என்று தெரிந்தும், ஜாதி உணர்வைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்கும் அல்லாமல், அவர் மீது பாசமாக இருக்கும்
‘தேவர் பெரியாரிஸ்ட்’டின் ‘பார்ப்பனரல்லாத’ உணர்வு,
பாமக போன்ற ஜாதிக்கட்சி என்ன தவறு செய்தாலும், அதை விமர்சிக்க மறுக்கிற, ஏதோ ஒரு வகையில் பாமக மீது பாசமாக இருக்கிற வன்னிய பெரியாரிஸ்ட்டுகளின் ‘வன்னியப் பகுத்தறிவு’,
‘அண்ணாதுரை முதலியாரின் மறைவுக்குப் பிறகு முதல்வராகும் தகுதி நெடுஞ்செழியன் முதலியாருக்கும், அன்பழகன் முதலியாருக்கும்தான் இருந்தது. அதை கருணாநிதி தட்டிப் பறித்துவிட்டார்’ என்கிற பொய்யான காரணத்தை உண்மையாக நம்பி, அதை உள் அரசியலாக வைத்து, வெளியில் ‘கருணாநிதி தமிழன விரோதி,
திராவிட இயக்க கொள்கையையே குழிதோண்டி புதைத்துவிட்டார்’ என்று முற்போக்காக குற்றம் சாட்டி, திராவிட இயக்க எதிர்ப்பாளர்களான பழ. நெடுமாறனையும், ராமதாஸையும் – கருணாநிதி எதி்ர்ப்பிற்காகவே ஆதரிக்கும், முதலியார் பெரியாரிஸ்ட்டுகளின் திராவிட இயக்க ‘பாசம்’,
தலித் அரசியல் என்று பொதுவாக பேசினாலும், தன் ஜாதித் தலைவரை மட்டும் ஆதரிக்கிற, சில நேரங்களில் தலித் விரோத ஆதிக்க ஜாதி தலைவர்களை ஆதரித்தாலும்கூட, உட்ப்பிரிவு தலித் ஜாதி தலைவர்களை ஒப்புக்குக்கூடஆதரிக்க விரும்பாத, தலித் ‘ஒற்றுமை’ அரசியல் பேசுகிற தலித் ‘அறிவுஜீவி’,
மார்க்சிய இயக்கத்தில்கூட தன் ஜாதிக்காரன் இருக்கிறானா எனறு தேடிப் பார்த்து ‘இயங்கியல்’ அடிப்படையில் தொடர்பு வைத்துக் கொள்கிற, பார்ப்பன மார்க்சிஸ்டின் ‘வர்க்க’ உணர்வு,
நவீன அறிவியல் வளர்ச்சியை அவ்வப்போது, ‘அப்டேட்’ செய்து கொண்டு ஒரு விஞ்ஞானியைப்போல் பேசி,
தன்னை இறை மறுப்பாளராக, பகுத்தறிவாளராக அறிமுகப்படுத்திக்கொள்ளும் வைரமுத்து போன்ற பல திரைமுற்போக்காளர்களின் சுயஜாதி பாசம்,
‘தமிழ்மண், தமிழனின் மண்’ என்று நீட்டி முழங்கிவிட்டு, தேவர் ஜெயந்தியின்போது , ‘போற்றிப் பாடடிப் பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ எனறு சுருதி கூட்டுகிற சில தமிழ்த்தேசியவாதிகள்,
பகுத்தறிவாளர்களில் யார் ‘நம்மாளு’? என்று பகுத்து அறிகிற இந்த முற்போக்காளர்களின் சுயஜாதி உணர்வு,
பார்ப்பன ஜாதியைத் தவிர மற்ற ஆதிக்க ஜாதிகளை ஆதரிக்கிற அல்லது விமர்சிக்க மறுக்கிற தன்மை, அறியாமையால் ஆனதல்ல. மிகச் சரியாக திட்டமிடப்பட்டது. அது அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் லாபமாக இருக்கிறது. ஓட்டாகவோ, பணமாகவோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களின் செல்வாக்கை
பெறுவதற்கான வழியாகவோ இருக்கிறது. அல்லது அந்த ஜாதியை விமர்சித்தால், தன் கட்சியில் இருக்கிற ‘அந்த’ஜாதிமுற்போக்காளர்களின் மனம் புண்பட்டு, அவர் வேறுகட்சிக்கோ, அமைப்பிற்கோ போய் விடக் கூடாது என்கிற முன் எச்சரிக்கை உணர்வும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால் இசைஞானி இளையராஜாவின் இந்துமத இறைநம்பிக்கை இதுபோல் ஆனதல்ல. ஒரு எளிய பக்தனுக்கு இருப்பதுபோல், முழுமையான அறியாமையால் ஆனது.
இந்துமதம் என்பதே ஜாதிதான். இறைநம்பிக்கையைவிட ஜாதி நம்பிக்கைதான் ஆபத்தானது. அதுஒன்றுதான் இந்து மதத்தை பாதுகாப்பது. ‘ஜாதியை பாதுகாக்கிறது’
என்பதற்காகத்தான் தந்தை பெரியார் இந்துமத்தையே எதிர்த்தார். ஆனால் ‘நம்மாளுகளில்’ பலர் இந்து மதத்தையும் கடவுளையும் எதிர்த்துவிட்டு ஜாதியை பாதுக்காக்கிறார்கள்.
ஆக, இந்த ‘பகுத்தறிவாளர்களின்’ சுயஜாதி உணர்வைவிட, பக்திமானான சுயஜாதி உணர்வற்ற இசைஞானி இளையராஜாவின் இறைஉணர்வு ஆபத்தானதல்ல. அறியாமையால் ஆனது. அப்பாவித்தனமானது.
1925 முதல் 1933 வரை பெரியாருக்கு உற்ற தோழராக இராமநாதபுரம் ஜில்லா பகுதிகளில் பெரியார் கருத்துக்களை மிகச் துணிச்சலுடன் பரப்பும் பிரச்சார பீரங்கியாக செயல்வீரராகத் திகழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திர சேர்வை ஆவார். திருநெல்வேலி சுயமரியாதை
இயக்க மாநாட்டை அவரது தலைமையில்தான் பெரியார் நடத்தினார். சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு தென்மாவட்டங்களில் எங்கு தடை என்றாலும் துப்பாக்கியுடன் களத்தில் நிற்கும் தோழனாகத் திகழ்ந்தார்.
1933 இல் அவர் மறையும் வரை பெரியாருடன் அவரும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் சுயமரியாதை இயக்கத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். குற்றப் பரம்பரைச் சட்டத்தில் கொடுமைப்பட்ட மக்களை மீட்டது திராவிடர் இயக்கமும் பெரியாரும் தான் என்பது
தமிழ்நாடு பிரிவினையில் தேவரும் பெரியாரும்!-தட்சன பிரதேசம்
1956 இல் நேரு தட்சிணப் பிரதேசம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை ஒன்றிணைந்த மண்டலமாக அது அமைய இருந்தது. தமிழ் தேசியர்கள் பார்வையில் அது திராவிட நாடு.
அதை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்றார். ‘தென்மாநிலக் கூட்டமைப்பாக’ நான்கு மாநிலங்களும் இணைந்த பகுதியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் தேவர். பி.டி. இராஜன் தலைமையில் அறிஞர் அண்ணா, ம.பொ.சிவஞானம், நாம் தமிழர் ஆதித்தனார்,
கம்யூனிஸ்ட்டுகள் உட்பட தமிழ்நாட்டின் 20அரசியல் கட்சிகளும் எதிர்த்த தட்சிணப்பிரதேசத் திட்டத்தை முத்துராமலிங்கத் தேவர் ஆதரித்தார். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிவதை எதிர்த்தார். ஆனால் பெரியார் மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்றார்.
முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு சீனிவாச அய்யங்கார் என்னும் பார்ப்பான். மற்றொருவர் சத்தியமூர்த்தி அய்யர். கைரேகை சட்டம் மட்டுமல்லாது கடுமையான பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தியபோது
அவற்றை எதிர்க்காமல் ஆங்கிலேயே அரசுக்கு ஆதரவாக இருந்தது காங்கிரஸ் கட்சி. பார்வர்டு பிளாக் தொடங்கும் வரை அந்தக் காங்கிரஸ் கட்சியின் தொண்டராகத்தான் தேவர் இருந்தார்.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் முற்றாக ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
நோயை சரிசெய்ய வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்த போது, இறைவன் கொடுத்த உடம்பில் இறைவனே அளித்த நோயை மனிதர் சரிசெய்வதா என்று கூறி அதற்காக ஆபரேஷனே செய்துகொள்ளாமல் செத்தவர்தான் தேவர் திருமகன்.
90களில் ஜெயா சசி கும்பல் ஆட்டம் போட்ட காலம் முதல் தேவர் சாதி வெறி அதிகார அமைப்புகளிலும், அரசியலிலும் வெகுவாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் இந்த தேவர் சாதி வெறியின் மூலம் சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தேவர்களுக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது?
தேவர் சாதியினர் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில் தேவர் சாதி மக்களுக்கு இலவச கல்வி வழங்ப்படுகிறதா? ஆம்னி பேருந்துகளில் ஐம்பது சதம் தள்ளுபடி தரப்படுகிறதா? தேவர் சாதியினர் கந்து வட்டித் தேவர்களிடம் கடன் வாங்கினால் வட்டியில்லாமல் அனுமதிக்கப்படுகிறதா?
”ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை”
எஸ்.பி.பி Vs இளையராஜா என்பது போன்ற இசை சார்ந்த இணையப்போர் ஒருசில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த கலவரங்களையெல்லாம் கவனிக்கையில், 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
’இதய கோவில்’ என்ற படத்தில், ”இதயம் ஒரு கோவில்; அதில் உதயம் ஒரு பாடல்” என்ற ஒரு பாடலை ’இசை ஞானி’ இளையராஜாவே எழுதி, இசையமைத்து அவரே பாடியும் இருப்பார். அந்த பாடலிலுள்ள சில வரிகள், தற்போதைய சூழலில் உண்மைக்கு அருகில் இருப்பதாக தோன்றுகிறது.