தமிழ்நாடு பிரிவினையில் தேவரும் பெரியாரும்!-தட்சன பிரதேசம்
1956 இல் நேரு தட்சிணப் பிரதேசம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை ஒன்றிணைந்த மண்டலமாக அது அமைய இருந்தது. தமிழ் தேசியர்கள் பார்வையில் அது திராவிட நாடு.
அதை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்றார். ‘தென்மாநிலக் கூட்டமைப்பாக’ நான்கு மாநிலங்களும் இணைந்த பகுதியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் தேவர். பி.டி. இராஜன் தலைமையில் அறிஞர் அண்ணா, ம.பொ.சிவஞானம், நாம் தமிழர் ஆதித்தனார்,
கம்யூனிஸ்ட்டுகள் உட்பட தமிழ்நாட்டின் 20அரசியல் கட்சிகளும் எதிர்த்த தட்சிணப்பிரதேசத் திட்டத்தை முத்துராமலிங்கத் தேவர் ஆதரித்தார். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிவதை எதிர்த்தார். ஆனால் பெரியார் மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்றார்.
தட்சிணப் பிரதேச திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். பெரியாரது அறிக்கையில்,
“பொதுவாக ஆந்திரா பிரிந்தத்திலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் -
சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது.
சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூட நம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. ஆகவே,
இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.
மூன்றாவது - இவர்கள் இரு நாட்டவர்களும் பெயரளவில் இரு நாட்டவர்கள். ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்)
இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள். அப்படி 14 இல் 7 இல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்யோகம் முதலியவைகளில் 3 இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு,
இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறேன்.
ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்” - என முழங்கினார்.
தட்சிணப் பிரதேச எதிர்ப்புப் போராட்டக் குழுவில் பெரியார் வைத்த கருத்துக்கள் மிக முக்கியமானவை. மொழிவாரி மாகாண பிரிப்பு மட்டும் போதாது.
1. மத்திய அரசுக்கு படை, போக்குவரத்து, வெளியுறவு ஆகிய துறைகளைத் தவிர மீதமுள்ள அனைத்துத் துறைகளும் பிரியப்போகும் மொழி வாரி மாகாணங்களுக்கே இருக்க வேண்டும்.
2. பிரியப் போகும் சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும்.
என இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்தார். இந்தக் கருத்துக்களுக்கு அப்போதைய நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா. ஆதித்தனார், தமிழரசுக் கழகம் ம.பொ.சிவஞானம், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட
குழுவினர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே பெரியார் இக்குழுவில் சேராமல் தனியே போராடினார்.
“திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு,
தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.
இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனானாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கெண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.
தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ,
என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை.”
என்பதுதான் அப்போது பெரியாருடைய நிலைப்பாடு. எல்லோரும் அப்போது வெறும் பிரிவினைக்காக மட்டும் போராடியபோது பிரிவினையோடு உரிமைக்காகவும் போராடியவர் பெரியார்.
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பிற்படுத்தப்பட்டோர் நலனாகட்டும், தாழ்த்தப்பட்டோர் நலனாகட்டும், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, பொதுவுடைமை, தேசிய இன விடுதலை,
பகுத்தறிவு, மாற்று வாழ்வியல் என எந்த இலக்கை எடுத்துக் கொண்டாலும் அந்த இலக்குகளுக்காகப் போராடுபவர்களுக்கு அடிப்படைப் பாடம் பெரியாரியல், அனைத்துத் தளங்களிலும் போராடுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி, ஒரு முன்னோடி பெரியார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1925 முதல் 1933 வரை பெரியாருக்கு உற்ற தோழராக இராமநாதபுரம் ஜில்லா பகுதிகளில் பெரியார் கருத்துக்களை மிகச் துணிச்சலுடன் பரப்பும் பிரச்சார பீரங்கியாக செயல்வீரராகத் திகழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திர சேர்வை ஆவார். திருநெல்வேலி சுயமரியாதை
இயக்க மாநாட்டை அவரது தலைமையில்தான் பெரியார் நடத்தினார். சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு தென்மாவட்டங்களில் எங்கு தடை என்றாலும் துப்பாக்கியுடன் களத்தில் நிற்கும் தோழனாகத் திகழ்ந்தார்.
1933 இல் அவர் மறையும் வரை பெரியாருடன் அவரும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் சுயமரியாதை இயக்கத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். குற்றப் பரம்பரைச் சட்டத்தில் கொடுமைப்பட்ட மக்களை மீட்டது திராவிடர் இயக்கமும் பெரியாரும் தான் என்பது
முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு சீனிவாச அய்யங்கார் என்னும் பார்ப்பான். மற்றொருவர் சத்தியமூர்த்தி அய்யர். கைரேகை சட்டம் மட்டுமல்லாது கடுமையான பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தியபோது
அவற்றை எதிர்க்காமல் ஆங்கிலேயே அரசுக்கு ஆதரவாக இருந்தது காங்கிரஸ் கட்சி. பார்வர்டு பிளாக் தொடங்கும் வரை அந்தக் காங்கிரஸ் கட்சியின் தொண்டராகத்தான் தேவர் இருந்தார்.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் முற்றாக ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
நோயை சரிசெய்ய வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்த போது, இறைவன் கொடுத்த உடம்பில் இறைவனே அளித்த நோயை மனிதர் சரிசெய்வதா என்று கூறி அதற்காக ஆபரேஷனே செய்துகொள்ளாமல் செத்தவர்தான் தேவர் திருமகன்.
90களில் ஜெயா சசி கும்பல் ஆட்டம் போட்ட காலம் முதல் தேவர் சாதி வெறி அதிகார அமைப்புகளிலும், அரசியலிலும் வெகுவாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் இந்த தேவர் சாதி வெறியின் மூலம் சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தேவர்களுக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது?
தேவர் சாதியினர் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில் தேவர் சாதி மக்களுக்கு இலவச கல்வி வழங்ப்படுகிறதா? ஆம்னி பேருந்துகளில் ஐம்பது சதம் தள்ளுபடி தரப்படுகிறதா? தேவர் சாதியினர் கந்து வட்டித் தேவர்களிடம் கடன் வாங்கினால் வட்டியில்லாமல் அனுமதிக்கப்படுகிறதா?
”ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை”
எஸ்.பி.பி Vs இளையராஜா என்பது போன்ற இசை சார்ந்த இணையப்போர் ஒருசில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த கலவரங்களையெல்லாம் கவனிக்கையில், 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
’இதய கோவில்’ என்ற படத்தில், ”இதயம் ஒரு கோவில்; அதில் உதயம் ஒரு பாடல்” என்ற ஒரு பாடலை ’இசை ஞானி’ இளையராஜாவே எழுதி, இசையமைத்து அவரே பாடியும் இருப்பார். அந்த பாடலிலுள்ள சில வரிகள், தற்போதைய சூழலில் உண்மைக்கு அருகில் இருப்பதாக தோன்றுகிறது.
இளையராஜாவின் இறைநம்பிக்கை, இந்துமத பற்று ஒரு பகுத்தறிவாளன் என்கிற முறையில் உங்களுக்கு தவறாகவோ, ஆபத்தானதாகவோ தெரியவில்லையா?
பெரியாருக்கு எதிராகவும், மிகத் தீவிரமாக இயங்கினார் முத்துராமலிங்கத் தேவர். பெரியாரை மிகக் கேவலமான வார்த்தைகளால் ஏசி இருக்கிறார் என்று தெரிந்தும், ஜாதி உணர்வைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்கும் அல்லாமல், அவர் மீது பாசமாக இருக்கும்
‘தேவர் பெரியாரிஸ்ட்’டின் ‘பார்ப்பனரல்லாத’ உணர்வு,
பாமக போன்ற ஜாதிக்கட்சி என்ன தவறு செய்தாலும், அதை விமர்சிக்க மறுக்கிற, ஏதோ ஒரு வகையில் பாமக மீது பாசமாக இருக்கிற வன்னிய பெரியாரிஸ்ட்டுகளின் ‘வன்னியப் பகுத்தறிவு’,