மீண்டும் செட்டிங் டெண்டர் !
கடந்த ஆட்சியில் 4 வருடங்கள் ரேஷன் டெண்டர்களை செட்டிங் செய்து  2028 கோடி முறைகேடு செய்த கிறிஸ்டி நிறுவனம் மீண்டும் செட்டிங் செய்ய செய்த முயற்சி அறப்போர் இயக்கத்தின் புகாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இனியாவது கிறிஸ்டி தடை செய்யப்படுமா?  @r_sakkarapani
1) 4 வருடங்களாக ரேஷன் டெண்டர்களில் கிறிஸ்டி நிறுவனங்கள் 2028 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் DVACல் ஆதாரங்களுடன் புகார் அளித்து, கிறிஸ்டி நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு துணை போன அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது.
2) முறைகேட்டில் ஈடுபட்ட கிறிஸ்டி நிறுவனங்களை டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது.

ஆனால் இந்த கோரிக்கைகள் குறித்து எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. @r_sakkarapani
3) கடந்த ஆட்சியில் நடந்த ரேஷன் டெண்டர் முறைகேடுகளை தடுத்து எங்கள் ஆட்சியில் அரசுக்கு 80 கோடி ரூபாய் சேமித்து விட்டோம் என்று சட்டசபையில் பெருமையாக பேசிய அமைச்சர் சக்கரபாணி அந்த டெண்டர் முறைகேடுகளை செய்த நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று இது வரை வாய் திறக்கவில்லை.
4) இந்த நிலையில் கடந்த ஆட்சியில் 2028 கோடி முறைகேடுகள் செய்த கிறிஸ்டி நிறுவனம் தற்பொழுது ரேஷன் துறை அதிகாரிகள் துணையுடன் மீண்டும் டெண்டர்களை செட்டிங் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
5) ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் டெண்டர்களில் போட்டியை உருவாக்க அதிக நிறுவனங்களை பங்கேற்க வைத்ததால் சந்தை விலையை விட குறைவாக டெண்டர்கள் எடுக்கப்பட்டன. ஆனால் இது வரை போட்டி போட்ட நிறுவனங்களை பல்வேறு காரணங்களை கூறி தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
6) இந்த போட்டி நிறுவனங்களை தகுதி நீக்கம் செய்வதன் மூலம் கிறிஸ்டி நிறுவனங்களுக்கு போட்டியே இல்லாத நிலையை ஏற்படுத்தி, அவர்கள் சந்தை விலையை விட அதிக விலைக்கு டெண்டர்களை செட்டிங் செய்ய உதவும் இந்த முயற்சி குறித்து அறப்போர் இயக்கம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியது.
7) உயர் அதிகாரிகள் தலையீட்டால் அந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு தற்பொழுது மீண்டும் புதிய டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கு பிறகும் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி இந்த விஷயத்தில் அமைதியாக இருந்தால் அவர் மீது தான் சந்தேகம் பார்வை திரும்பும்.
8) ஏற்கனவே முறைகேடுகள் செய்த, மீண்டும் முறைகேடு செய்ய முயற்சி செய்த கிறிஸ்டியை அமைச்சர் பாதுகாக்கிறாரா என்ற கேள்வி எழும். என்ன செய்ய போகிறார் அமைச்சர் சக்கரபாணி? தமிழக முதல்வர் ஸ்டாலின் @mkstalin இந்த விஷயத்தில் தலையிடுவாரா?
#WakeUpSakkarapani #BlacklistChristy #Arappor

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Arappor Iyakkam

Arappor Iyakkam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Arappor

1 Sep
மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மக்களுக்கு அதிகாரம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வர இருக்கும் சேவை உரிமை சட்டத்தின் மூலம் அரசு அலுவலங்களில் அரசின் சேவைகளுக்காக பொது மக்கள் கெஞ்சி காத்திருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும்.
இவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த மாதிரி சட்ட வரைவு.
முழுமையாக படிக்க: arappor.org/RTS

இந்த மாதிரி சட்டத்தின் முக்கிய அம்சங்களை கீழே விளக்கி உள்ளோம்.
1.இந்த சட்டம், அரசு சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் ,குறிப்பிட்ட கால அவகாசத்தில் அச்சேவைகளைப் பெறுவது அவர்களின் உரிமை என உறுதியளிக்கிறது.
Read 19 tweets
22 Jul
#PunishTheCorrupt #Tangedco #Viswanathan #Thangamani
1) தமிழ்நாடு அரசாங்கத்தின் மின் உற்பத்தியை குறைத்து, மத்திய பங்கீட்டில் இருந்து மாநிலத்துக்கு கிடைக்கும் மின்சாரத்தை முறையாக பயன்படுத்தாமல், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க 2013ம் வருடம் ஜெயலலிதா தலைமையிலான
2) அதிமுக அரசு 15 வருட காலத்திற்கு டெண்டர் போடுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தின் சந்தை விலை ரூபாய் 2.50 முதல் ரூபாய் 3.50 என்று இருக்க அன்றைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூபாய் 4.90 முதல் ரூபாய் 6.00 வரை அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடுகிறார்.
3) இதனால் சராசரியாக ஒரு வருடத்திற்கு மின்சார வாரியத்துக்கு 6000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அடுத்து மின்துறை அமைச்சராக பதவி ஏற்ற தங்கமணி அவர்களும் இந்த டெண்டர் மூலம் மின்சாரம் வாங்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்துகிறார். இது வரை கிட்டத்தட்ட 54000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
Read 5 tweets
16 Jul
1) கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அதே காட்சிகள் தற்பொழுது சென்னை மாநகராட்சியில் அரங்கேற துவங்கிவிட்டன. ஆன்லைன் மூலம் EMD (டெண்டர் வைப்புத்தொகை) செலுத்த வழிவகை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் மணலியில் டெண்டர் விண்ணப்பிக்க..
2) EMD செலுத்த வந்தவர்களை பெட்டியில போடவிடாமல் குண்டர்களை வைத்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதையும் மீறி EMDஐ பெட்டியில் போட்ட ஒருவரின் டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EMD செலுத்தவில்லை என்று காரணம் கூறி மற்ற டெண்டர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
3) இந்த குண்டர்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுப்பியது யார்? திருவற்றியூர் திமுக MLA திரு.சங்கர் @KPShankarMLA பதில் சொல்வாரா? உள்ளாட்சி அமைச்சர் @KN_NEHRU இது குறித்து விசாரணை நடத்துவாரா? சென்னை மாநகராட்சி ஆணையர் ஆன்லைன் மூலம் EMD செலுத்தும் முறையை உடனடியாக கொண்டு வருவாரா?
Read 4 tweets
15 Jul
#PunishTheCorrupt #Viswanathan
1 தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. சந்தை விலையை விட அதிகமாக விலை நிர்ணயம் செய்து டெண்டர் செட்டிங் செய்யப்படுகிறது. அப்பொழுது மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். Image
2 வாங்கப்பட்ட நிலக்கரியில் 50% பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானியிடம் வாங்கப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து CAG அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படுத்திய
3 முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மின்சார துறை அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புதுறையில் கொடுத்த புகார் விசாரிக்கப்படுமா?

சட்டம் தன் கடமையை செய்யுமா?
Read 4 tweets
11 May 20
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவர்களும், ஊழியர்களும் கடந்த 8ம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கல்லூரி வளாகத்தின் உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
1. அவசர சிகிச்சை பிரிவையும்,கொரோனா காய்ச்சல் பிரிவையும் இடைவெளி விட்டு தனித்து அமைக்க வேண்டும்.

2. கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் தொடர்புகள் அனைவருக்கும், உடனடியாக கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும்.
3. சுகாதார ஊழியர்களின் கொரோனா சோதனை அறிக்கையை, சோதனை செய்யப்பட்ட தினமே முன்னுரிமை கொடுத்து வெளிப்படைத்தன்மையோடு வழங்க வேண்டும்.

4. தங்கும் விடுதிகளையும், சாப்பாடு இடங்களையும் சரிவர தூய்மைப்படுத்த வேண்டும்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(