#ரவா_லாடு #சாப்பிடுவது_எப்படி?

என் சிறுவயதில் பாட்டி சொல்லிக் கொடுத்ததை கொஞ்சம் ரசிச்சு ருசிச்சு எழுதி இருக்கேன்.

ரவா லாடு/ரவா லட்டு ஒரு சாந்த சொரூபமான இனிப்புப் பண்டம்

ஃபிலிம் காமிக்கற ஸ்வீட்டுகளுக்கு மத்தியில், அமைதியாக அப்பிராணியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் நம்ப ரவா லாடு
இலுப்பச்சட்டியில் கம்பிப் பதம் வந்து கரண்டியில் புரண்டு நெய் கக்கி டால்டா முழுங்கி பொளுக் பொளுக் என்று கொப்பளம் வந்து டிரேயில் விரிந்து வில்லை வில்லையாகும் பல ஸ்வீட்களைப் போல் இல்லாமல்....

ரவா லட்டு செய்வது மிக மிக சுலபம்.
வெறும் சர்க்கரைப்பொடியும் அதிர்ஷ்டவசமாக அகப்படும் முந்திரிப்பருப்பின் சுவை மட்டும் மேலோங்கி, நாக்கில் இன்ஸ்டண்டாக கரையும் *ரவாலாடு*

அரை பத்தி கூடத் தாண்டாத இந்த ப்ரிபரேஷனை பத்தி தெரியாதவாளுக்கு ருக்குவிடம் கேட்டு பிறகு பதிவு செய்கிறேன். படித்து செய்து பார்க்கவும்.
இப்போ ரவா லாடு* #எப்படி_திங்கணும்னு பாக்கலாமா?

ஏண்டா அபிஷ்டு... செய்றதுக்கு வேணுன்னா class நடத்தலாம்.

திங்கறதுக்கு கூடவா சொல்லித் தரணும்???

*On the contrary, மற்ற இனிப்புகளை மாதிரி இல்லாமல் "ரவா லாடு" சாப்பிட சில ப்ரோட்டோகால்கள் (protocols) உண்டு.*
விருந்தினர் வீட்டுக்குச் சென்று அவர்கள் தரும் இனிப்புப் பண்டங்களை நுனிப்புல் மேய்வது போல

மைசூர்பாக்கின் ஒரு மூலையை விண்டு,

பாதுஷாவை பாதியாகப் பிளந்து,

ஸ்பூனால் குலாப் ஜாமூனை குரூரமாக வெட்டி பாக்கியை அப்படியே தட்டில் மீதம் வைப்பவர்களுக்கு

ரவா லாடு ஒரு சேலஞ்ச்

ஏன் தெரியுமா?
பிடிப்பவர்களின் கைவாகுக்கு ஏத்த மாதிரி ரவா லாடோட உருண்டை வடிவம் வேறுபடும்.

*சில பேர் உப்பு கொழுக்கட்டை பிடிப்பது போல பிடித்து வைத்து, பார்ப்பதற்கு ஏண்ட்ரோமீடாவின் ஏலியன் ஷிப் போல காட்சி தரும்.*

*தட்டிலிருந்து எடுக்கும் போதே இவைகளெல்லாம் பொல பொலன்னு உடைஞ்சிடும். ஜாக்கிரதை.*
சரி.. தட்டில் எப்படி வைத்தார்கள் என்பதெல்லாம்... out of scope.

*தட்டிலிருந்து ஒரு முழுமையான ரவா லட்டை எப்படி எடுப்பது???*

இனிமே தான் நீங்க ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். உங்க கான்சென்ட்ரேஷன் எல்லாம் நம்ப *ரவா லாடு* மேல தான் இருக்கணும்.

So TVய ம்யூட்ல வச்சுடுங்கோ...
உங்க வலது கைல கொஞ்சம் கூட ஈரப்பதம் இருக்கக்கூடாது.

இப்போ....

வலதுகை விரல்களை விரித்து உள்ளங்கையை முறைத்துப் பார்க்கவும்.

சுண்டு விரலையும் மோதிர விரலையும் முழுவதுமாக மடக்கவும். (இதுக்காக நான் சுந்து uncleஐ தேடி எங்கே போறது???)
அம்மாடி.... அது சுண்டு விரல்... அதாவது little finger. அதே மாதிரி மோதிர விரல்னா.... ring finger. புரிஞ்சுதோ.... இந்த காலத்து கோந்தேளுக்கு எல்லாத்தயும் englishல எக்ஸ்ப்ளென் பண்ண வேண்டிருக்கு....

*நம்ப ரவா லாடுக்கு வருவோம்.*
நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் ஒரே விரலாக பாவித்து .. ரவாலாடின் தலையின் நடு மண்டையில் லேசாக படும்படி வைக்கவும்

கட்டை விரலை முடிந்த அளவு அடிப்பாகத்தில் வைத்து இலகுவாக தூக்கணும்.

அதுக்கு முன்னாடி கொஞ்சம் இருங்கோ.

*மூன்று விரல்களில் கொடுக்கும் ப்ரெஷர் ரொம்ப ரொம்ப முக்கியம்.*
அதிகமா கொடுத்தேள்னா, தொலஞ்சீங்க.

அழுத்தம் கொஞ்சம் ஜாஸ்தியா ஆயிடுத்துனா... *ரவா லாடு* ஒரு *சூசைட் பாமாக மாறி சிதறி தட்டைத் தவிர பாக்கி இடங்களில் விழுந்துடும்.*

So.... *பிறந்த குழந்தையின் கைவிரல்களை எப்படி வருடிப் பார்ப்போமோ, அந்த அளவு ப்ரெஷர் கொடுத்து....*
*வாயின் வாசல் வரை, கண்டெயினர் தூக்கும் க்ரேன் மாதிரி எடுத்துண்டு போகணும்*

*இனிமேல் தான் க்ளைமேக்ஸ்.*

உங்கள் பல்வரிசை எப்படி ?

முன்னம் பற்கள் இரண்டும் விடைப்பாக இல்லை என்றால், *ரவா லாடு* உங்களுக்கான பலகாரம் இல்லை.

அமைதியாக திரும்பவும் தட்டில் வைத்து விடவும்.
"நேக்கு அவ்வளவா ஸ்வீட் புடிக்காது" என்று வழிந்து கொள்ளவும்.

*பாக்கிபேர், வாயை அகலமாக திறக்கவும்.*

*உருண்டையின் கால்பாகத்து மேல் வாயில் நுழைந்ததும், மேல் பற்கள் இரண்டினால் மிக மிக லேசாகக் கடிக்கவும்.*

*அவ்வளவுதான் ! சூப்பர்.*

இனிமேல் ரவா லட்டு பார்த்துக்கொள்ளும்.
*அழகாக ஒரு பகுதி தானாக விண்டு உங்கள் நாக்கில் விழுந்து நீங்கள் உணரும் முன்னர் கரைய ஆரம்பிச்சிடும்.*

இதுவரை நீங்கள் சரியாக செய்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு *ரவா லாடின்* முந்திரிப்பருப்பு ஆசிர்வாதம் உண்டு.
கண்களை மூடிக்கொண்டு கையில் பாக்கி ரவா லாடை ஆட்டிக்கொண்டு, *குணா கமலஹாசன் மாதிரி பரவச நிலைக்கு* நீங்கள் சென்றால் வியப்பில்லை.

நான் சொன்ன மாதிரி சாப்பிடும் போது... யாரையாவது விட்டு ஃபோட்டோ எடுக்கச் சொல்லி அனுப்புங்கோ. இந்த பதிவின் இல்லஸ்ட்ரேஷனாக போட்டுடுவோம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

3 Oct
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்

#கதை_சொல்வது_எழுதுவது_எப்படி???? வரிசையில் இன்று...

#ருசிகர_ருக்மணி

தெரியாத்தனமாக நான் ட்விட்டரில் இருப்பதையும் நானே எதிர்பார்க்காத அளவுக்குக் குறுகிய காலத்திலேயே....
என்னையும் சகபதிவாளர்கள் ஆட்டத்துலே சேர்த்துக்கிட்டாங்கங்கிறதையும் நான் என் பாரியாள்ட்ட சொல்லிட்டேன்.

அவுங்க பேரு ருக்மணி! எங்க குடும்பத்தில் அவங்களை எல்லாரும் #ருசிகர_ருக்மணி ன்னு தான் கூப்பிடுவாங்க
சீனி உன்னோட பதிவுகள் எல்லாம் ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓகே ரகம்தான் என்று சொல்லிவிட்டு ரொம்ப யோசனையில் இருந்தாள்....
Read 31 tweets
3 Oct
எச்சரிக்கை... விழிப்புணர்வு பதிவு
(Forwarded as received)

#மூன்றாவது_அலை_வரக்கூடாது

இவர்கள் நினைப்பது நடக்கக்கூடாது

ஒரு சாதாரண Surgical Trader கூட 3 வது அலையை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி Godownல் குவித்துள்ளான்
செப்டம்பரில் 3 வது அலை வரும் என்று கணித்தார்கள்.

#ஆனால்_அது_வரவில்லை

இதில் கொடுமை என்னவெனில் 2 ஆம் அலை முடிந்ததும் பல உற்பத்தியாளர்களும் ஜூலை மாதத்தில், தங்களிடம் உள்ள பொருட்களை Clearance Sale, Great Deal என்ற அடைமொழி வைத்து...
தங்களிடம் இருந்த Mask, Sanitizer, Gloves, Pulse Oxymeter என்று அனைத்து Surgical & Pharma Traders தலையில் கட்டிவிட்டார்கள்.

ஜூன் மாதம் 560/- ரூபாய் வரை விற்ற Latex Examination Gloves Box, தற்போது 270 ரூபாய்களுக்கே கிடைக்கிறது. ( 2019 ல் இதன் விலை வெறும் ரூபாய் 130/- மட்டுமே).
Read 10 tweets
2 Oct
#ஓரு_ஊர்ல_ஒரு_ராஜா...

*Once upon a time there lived a king*

இப்படி ஆரம்பித்து சொன்ன கதைகள் எல்லாம் என்னாயிற்று?

கனவுகளாக... கற்பனைகளாக... காற்றோடு கரைந்து போயிற்றா?

விளையாட்டுச் சாமான்கள் அலமாரிக்குள் ஓய்வெடுக்க

#நீள்செவ்வக_சிறைபேசிக்குள்_விரலும்_மனமும்_தேயத்தேய
*மண் தொடாத பிஞ்சுப்பாதங்கள் மறந்தே விட்டது வீதிக் கொண்டாட்டங்களை!!!*

பம்பரக்கட்டைகளுக்காய் உயிர்விட்ட மரங்களின் சாபமோ என்னவோ😢😢😢...

சுழலுவதேயில்லை இவை இப்பொழுதெல்லாம்?!?!

ஒருவேளை சாட்டைக்கயிற்றில் தற்கொலை செய்து கொண்டதோ???
ஒழுகும் வேர்வையை சட்டையில் துடைத்தபடி குதூகலமாய் ஏறிக்கொள்ளும்

பஞ்சுமிட்டாய் கண்ணம்மாக்களின் தாமதமாகும் வருகையை நினைத்தபடி...

ராட்டினங்கள் ஏங்கித் தான் போகின்றன...😢😢😢

விடிந்ததும் ஆழியோர வளைவிலிருந்து இரைதேட வரும் நண்டுகள்.....
Read 10 tweets
2 Oct
#Lal_Bahadur_Shastri

#Shastri ji: The man who took a charkha as dowry

#Shastri ji: The man who after loosing his father at the age of 2, walked miles barefoot to school and college.
#Shastri ji: The man who used to tie his books on his head and swim across the river twice to reach school.

#Shastri ji: The man who resigned as Railway Minister, when many people lost their lives in a rail accident, as he held himself responsible
#Shastri ji: The man who walked home everyday, so that he could save the hutments of poor people , which were coming in the way of road widening work.

#Shastri ji: The man who first stood up to Pakistan and came up with Jai Jawan Jai Kisan term.
Read 7 tweets
30 Sep
A thought to share during this Mahalayapaksham

#Parents_Don’t_Die,
#We_put_them_to_Death..

People say that when parents die, the world comes to an end.

The house looks empty.

But I feel that parents live forever and they stay with us.

It's us who forget them.
The matter of the fact is that a brother has eyes of his beloved father,

a sister has the pretty face
like the compassionate mother,

a sibling smiles like dad or
a sister cooks like mom.

Parents don't die.
They never leave us.
They live among us.
They live in us.
We are the reflections of our parents.

Despite their physical absence, they continue to live in us.

When you want to remember parents,

when you want to see them,

when you want to be with them,

#simply_gather_your_siblings_around_you.
Read 9 tweets
30 Sep
For those of you interested in Carnatic Music here is a treasure

ramanarunachalam.github.io/Music/Carnatic…

This is a directory of 37,000 Youtube videos of Carnatic Music, searchable by Raga/Artiste/Composer/Kriti. A Bangalorean has aggregated this by crawling though Youtube.
Some interesting data from him on this collection :

Total : 17536 hours
M. Balamurali Krishna : 443 hours
T. M. Krishna : 304 hours
Sanjay Subramanian : 265 hours
M. S. Subbulakshmi : 264 hours
Lalgudi Jayaraman : 233 hours
Semmangudi Srinivasa Iyer : 228 hours
M. D. Ramanathan : 221 hours
M. S. Gopalakrishnan : 174 hours
T. N. Seshagopalan : 170 hours
Sudha Raghunathan : 163 hours
M. L. Vasanthakumari : 163 hours
K. V. Narayanaswamy : 151 hours
Mandolin U. Srinivas : 147 hours
Maharajapuram Santhanam : 139 hours
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(