ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்

#கதை_சொல்வது_எழுதுவது_எப்படி???? வரிசையில் இன்று...

#ருசிகர_ருக்மணி

தெரியாத்தனமாக நான் ட்விட்டரில் இருப்பதையும் நானே எதிர்பார்க்காத அளவுக்குக் குறுகிய காலத்திலேயே....
என்னையும் சகபதிவாளர்கள் ஆட்டத்துலே சேர்த்துக்கிட்டாங்கங்கிறதையும் நான் என் பாரியாள்ட்ட சொல்லிட்டேன்.

அவுங்க பேரு ருக்மணி! எங்க குடும்பத்தில் அவங்களை எல்லாரும் #ருசிகர_ருக்மணி ன்னு தான் கூப்பிடுவாங்க
சீனி உன்னோட பதிவுகள் எல்லாம் ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓகே ரகம்தான் என்று சொல்லிவிட்டு ரொம்ப யோசனையில் இருந்தாள்....
இன்னிக்கு அம்மணி வூட்டுக்குப் போனதும் அவங்க புருஷன் (அதாங்க.... இந்த அடிமைதான்.... அடச்சட்.... இந்த typo வேற.... இந்த அடியேன் தான் என்று சொல்ல வந்தேன் 😪😪) துணையோட வலைப்பதிவு போட்டிருவாங்கன்னு பட்சி சொல்லிச்சு!
ருக்குவுக்கும் கணினிக்கும் ஏழாம் பொருத்தம்! அவ தினமும் மவுஸோட அல்லாடுறதைப் பார்த்தா அவ வேலை பார்க்கறாளா இல்லே தோசை வார்க்களான்னு சந்தேகமாயிருக்கும்

அதுனாலே அவங்க புருஷனோட... (அடியேனுடைய) தொழில்நுட்ப அறிவைப் (😢) பயன்படுத்தி ஒரு பதிவை ஆரம்பிச்சிருவாங்கன்னு என் மனசுக்குப் பட்டுது.
ருக்கு சொல்லச் சொல்ல... நான் கணினியில் பதிவு செய்த அந்தக் கண்கொள்ளாக்காட்சி எந்த விளம்பர இடைவேளையும் இல்லாம உங்களுக்கும் live telecast பண்றேன்.

அது மட்டுமா? அங்கங்கே மைன்ட் வாய்ஸும் கேட்கும்.... அது யாரோடதுன்னு யாரும் கேக்கப்படாது....
ஶ்ரீனி சார் அது உங்களோடது தானேனு யாராவது சத்தம் போட்டு கேட்டீங்க.... அவ்வளவு தான்... சொல்லிட்டேன் (பேராண்டி @Sri_Sri_yd
இது உனக்கு தான்)

அடியேன் நல்ல நாளிலேயே பேச மாட்டேன் (வீட்டில் எலி; வெளியே புலி)

போதாக்குறைக்கு இன்னிக்கு சிந்தாமணி #ஜலந்தர்_ஜவ்வரிசி_உப்புமா பண்ணியிருந்தா!
[அவ்வளவு தான் ரொம்ப காண்டா இருக்கற #உப்மா_எதிரிகள் எல்லாம்.... Please calm... Calm... இது நான் செய்யலீங்க.... அவ தான்]

மறுபடியும் live telecastக்கு வருவோம்

சாதாரண ஜவ்வரிசி உப்புமா தாங்க அது. பண்ணப் பண்ண உப்புமாவா, கூழா, களியான்னு புரியாம குழம்பிப்போயி
கடைசியிலே பழியை ஒரு பாவமும் அறியாத ஜலந்தர் மேலே போட்டுட்டாங்க.)

#ஜ_ஜ_உப்புமாவைச் சாப்பிட்டதுலேருந்து அடியேன் குசேலன் படத்துலே பசுபதி மாதிரி பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருந்தேன் (பாவம் ஶ்ரீனி)

"முதல்லே சிம்பிளா #ரவா_உப்புமா செய்வது எப்படீன்னு போடலாமா சீனி?"
"ம்" அதுக்கு மேலே ஶ்ரீனியாலே வாயைத் தொறக்க முடியலே! ஜ.ஜ.உப்புமாவோட ஜாலம்!

அம்மணிக்குத் தமிழிலே தட்டச்சு செய்ய முடியாதுன்னுறதுனாலே ஶ்ரீனி தான் பண்ணியாகணும். அவரு மனசுக்குள்ளே வாயிலே வந்தபடி திட்டிக்கிட்டே ருக்மணி சொல்லச் சொல்ல தட்டச்சு செய்ய ஆரம்பிச்சாரு!
"டைப் பண்ணுங்க! ரவா உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்...!"

"சாப்பிட ரெண்டு பேர்!" ஶ்ரீனி மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டாரு!

"ஏதாவது சொன்னீங்களா?" ருக்மணி கேக்கறா. சொல்லுற நிலைமையிலா அவரு இருக்காரு? ஊஹூமுன்னு தலையை மட்டும் ஆட்டுறாரு!
"சரி, அடுத்ததா ரவை உப்புமா செய்யத் தேவையான பாத்திரபண்டங்களைப் பற்றிப் பார்க்கலாமா?"

"ரொம்ப முக்கியம்...," இது ஶ்ரீனியோட மனசாட்சி.

"வாணலி...."

"----------"

"ஐயோ, வானொலி இல்லீங்க...வாணலி.! இலுப்புச்சட்டி...உங்க தலையை மாதிரி இருக்குமே...!"
இப்படியே கரண்டி, கத்தி, தட்டுன்னு எல்லாத் தட்டுமுட்டுச் சாமான் பெயரையும் அம்மணி சொல்லச் சொல்ல, இப்போ ஶ்ரீனி பில்கேட்ஸுக்கு சாபம் போட்டுக்கிட்டிருந்தாரு!

இருடீ, அடுத்தவாட்டி இந்தியா வா, வச்சிருக்கேன் உனக்கு!

ஒரு வழியா தேவையான பொருட்களுக்கு வந்தாங்க அம்மணி!

"பாம்பே ரவை!"
"போச்சுடா, பட்ட காலிலே படும்கிறது சரியாத் தானிருக்கு. பாம்பேக்கு இப்போ நேரமே சரியில்லை," இது ஶ்ரீனியின் மனசாட்சி. (ஏண்டி.... பாமா.... அந்த ஷாருக்கான் புள்ளைய ஏதோ கஞ்சா கேஸ்ல அரெஸ்ட் பண்ணிட்டாளாமே.... நெஜமா?)

"வெங்காயம்..."
நல்ல வேளை! இதை வெட்டுற ஆம்பிளைங்க எதுக்கு அழறாங்கன்னு யாருக்கும் தெரியாது."

"தக்காளி!"

"க்கும்..கொஞ்சம் விலை குறைஞ்சா போதுமே!"

"உருளைக்கிழங்கு..."

"இது எதுக்கு? விட்டா முட்டக்கோசையே முழுசாப் போட்டிருவா போலிருக்கே!"

"கேரட்!"

"அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்?"

"பட்டாணி!"
"ஆமா, இப்படிப் பண்டங்களை வேஸ்ட் பண்ணினா பட்டாணிகிட்டே போய்த் தான் கடன் வாங்கணும்."

"பச்சை மிளகாய்... இஞ்சி... கருவேப்பிலை..கொத்தமல்லி..."

"அட, சுக்கு, மிளகு, திப்பிலி எல்லாத்தையும் விட்டுட்டாளே!"

"தாளிக்கத் தேவைப்படும் பொருட்கள்!"
"கல்யாணம் ஆனதுலேருந்து தினமும் என்னைத் தாளிக்கறியே, போதாதா?"

"கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்...."

"இப்போ ஜீரகம் வரும் பாருங்க..!"

"ஜீரகம்....!"

"அதானே பார்த்தேன்!"

"ரீஃபைண்டு ஆயில்..."

"என்ன வெலை விக்குது தெரியுமா?"
"தேவையான அளவு உப்பு!"

#சொரணை_இருக்கிறவங்களுக்கு மட்டும்!"

"தண்ணீர்..."

#சாப்பிடறதுக்கு_முன்னாலேயும்_அப்புறமும்_அவங்கவங்க_தலையிலே_தெளிச்சுக்கணும். கடவுளாப் பார்த்துக் காப்பாத்தினாத் தானுண்டு."

"உப்புமா செய்வது மிகவும் சுலபம்"

"ஆமாமா, #சாப்பிடறதுதான்_கஷ்டம்."
"முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதன் மேல் வாணலியை வைக்கவும்....."

"ஆமா, மத்தவங்களெல்லாம் அடுப்பிலே வைக்காம வாணலியை அடகுலே வைக்குறாங்களாக்கும்....."

"கொஞ்சமாக எண்ணெய்யை விட்டு, ரவையைப் போட்டு வறுக்கவும்."

"புருஷனை வறுக்கிறா மாதிரி இல்லாம இருந்தா சரி..."
"இளஞ்சிவப்பாக ரவை மாறியதும் அதை ஒரு அகலமான தட்டில் ஆற வைக்கவும்...."

"அடுப்பை உங்க சித்தப்பாவா வந்து அணைக்கப்போறாரு?"

"வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்."

"இந்த நேரத்துலே ஆம்பிளைங்கெல்லாம் சந்தர்ப்பம் பார்த்து ஓடிப்போயிருங்க.....!"
"தக்காளியைத் துண்டுதுண்டாக வெட்டவும்..."

"கையிலே கத்தியைக் கொடுத்தாலே இப்படித்தான்...."

"பட்டாணியின் தோலை உரிக்கவும்...."

"இவளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்...."

"பச்சை மிளகாயைக் கீறவும்..."

"இதைச் செய்ய இவளுக்குக் கத்தியே வேண்டாம்...."

"இஞ்சியைப் பொடிப்பொடியாக நறுக்கவும்..."
#முதல்_பதிவுலேயே_இவ்வளவு_வயலன்ஸ்_தேவையா...?"

"கருவேப்பிலை, கொத்தமல்லியைக் கிள்ளி வைக்கவும்..."

"எதுக்கும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க! உங்களைக் கிள்ளிறப் போறாங்க....!"

"வாணலியிலே எண்ணெய்யை விட்டு....."

"திரும்ப முதல்லேயிருந்தா....? அவ்வ்வ்வ்வ்.....!"
"எண்ணை சூடானதும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், ஜீரகம் உப்பு எல்லாத்தையும் போட்டு..."

"நல்லாக் கிண்டுங்க! அதுதான் கை வந்த கலையாச்சே.!"

"பொன்னிறமானதும்."

"அதைக் கொண்டு போய் ஜிஆர்டிலே கொடுத்துப் புதுநகை வாங்கவும்....."
"உருளைக்கிழங்கையும், கேரட்டையும் போட்டு வதக்கவும்...."

"சும்மா சொல்லக்கூடாது. நல்ல மெமரி பவர்...ஆனா, அடிக்கடி வயசைத்தான் மறந்திடறா...."

"பட்டாணி, தக்காளியும் சேர்த்து வதக்கி, கொஞ்சம் பதம் வந்ததும் தண்ணீர் ஊற்றவும்..."

"ஆமா.அப்பத்தான் #உப்புமா_ரசம் மாதிரி தெளிவா இருக்கும்....."
"கருவேப்பிலை கொத்துமல்லியையும் சேர்த்து விடவும்...."

"இல்லியா பின்னே, அதுங்களை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்..?"

"ரவையை மெதுவாகக் கிளறிக்கிட்டே இருக்கணும்..."

"இந்த சமயத்துலே வைஷாலி (எங்க பொண்ணுங்க)க்கு போன் பண்ணிப் பேசிக்கிட்டே கிளறினா இன்னும் நல்லாக் கிண்டலாம்...."
"அடுப்பைக் குறைத்து ஒரு தட்டைப் போட்டு மூடவும்...."

"அப்பாடா! இது ஒண்ணு தான் எனக்குப் பிடிச்சிருக்கு...."

"ஆவியிலே கொஞ்ச நேரம் வேகவைத்து விட்டுப் பிறகு இறக்கவும்..."

"எதை? ஆவியையா....?"

"சூடான சுவையான உப்புமா தயார்!"
"யாரும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராதீங்க! #சூடா_இருக்குமுங்கிறத_வேண்ணா_ஒத்துக்கறேன். மத்ததைச் சாப்பிட்டுச் சொல்லுங்க!"

"உங்களுக்கு இந்தக் குறிப்பு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடவும்..."

"ஆமா, இவ பண்ணுற உப்புமாவுக்கு ஓட்டுப்போட்டு பார்லிமெண்டுக்கு அனுப்புவாங்க...."
"இது முதல் பதிவு என்பதால் வெறும் குறிப்போடு நிறுத்திக்கொள்கிறேன். அடுத்த பதிவிலே பதார்த்தத்தின் போட்டோவும் இடம்பெறும்."

"அதை அப்புறம் பார்க்கலாம். #இதைப்_படிச்சுப்_பார்த்திட்டு, #செஞ்சு_தின்னுப்புட்டு, நாளைக்கு பேப்பரிலே எத்தனை பேர் போட்டோ வரப்போவுதோ?"
ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துடா....
××××××××

இவ்வளவு தாங்க.... கதை அடிப்பது.... கதை அளப்பது என்பது ரொம்ப simpleனு தெரிஞ்சுச்சா???

இதுக்கு தான் நேத்திக்கே #சொல்லவா_கதை_சொல்லவான்னு ஒரு சோகப் பாட்டு போட்டேன் அப்போ மதிக்கலை இப்போ அனுபவிங்கோ (@aarjeekaykannan மைன்ட் வாய்ஸ் கேக்குது)
இன்னொரு பக்கம்....

இனிமே யாரையாவது நளமகாராஜா.... சக்கரவர்த்தினு புகழ்வே என்று கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு புலம்பிக் கொண்டு ஒரு மஹாப்ரபோ @rprabhu

என்னையும் தங்கள் சகாவாக ஏற்றுக் கொண்ட பலரில்....

@Radhiga_v @bullettuupandi @naturaize @raaga31280 @esan_shiv @revenge1967
@senthilbe23 @krishnananban55 @VasaviNarayanan @ungalnanbar @SivaRoobini555 மற்றும் பலர்.... எல்லோரும்

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

3 Oct
எச்சரிக்கை... விழிப்புணர்வு பதிவு
(Forwarded as received)

#மூன்றாவது_அலை_வரக்கூடாது

இவர்கள் நினைப்பது நடக்கக்கூடாது

ஒரு சாதாரண Surgical Trader கூட 3 வது அலையை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி Godownல் குவித்துள்ளான்
செப்டம்பரில் 3 வது அலை வரும் என்று கணித்தார்கள்.

#ஆனால்_அது_வரவில்லை

இதில் கொடுமை என்னவெனில் 2 ஆம் அலை முடிந்ததும் பல உற்பத்தியாளர்களும் ஜூலை மாதத்தில், தங்களிடம் உள்ள பொருட்களை Clearance Sale, Great Deal என்ற அடைமொழி வைத்து...
தங்களிடம் இருந்த Mask, Sanitizer, Gloves, Pulse Oxymeter என்று அனைத்து Surgical & Pharma Traders தலையில் கட்டிவிட்டார்கள்.

ஜூன் மாதம் 560/- ரூபாய் வரை விற்ற Latex Examination Gloves Box, தற்போது 270 ரூபாய்களுக்கே கிடைக்கிறது. ( 2019 ல் இதன் விலை வெறும் ரூபாய் 130/- மட்டுமே).
Read 10 tweets
2 Oct
#ரவா_லாடு #சாப்பிடுவது_எப்படி?

என் சிறுவயதில் பாட்டி சொல்லிக் கொடுத்ததை கொஞ்சம் ரசிச்சு ருசிச்சு எழுதி இருக்கேன்.

ரவா லாடு/ரவா லட்டு ஒரு சாந்த சொரூபமான இனிப்புப் பண்டம்

ஃபிலிம் காமிக்கற ஸ்வீட்டுகளுக்கு மத்தியில், அமைதியாக அப்பிராணியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் நம்ப ரவா லாடு
இலுப்பச்சட்டியில் கம்பிப் பதம் வந்து கரண்டியில் புரண்டு நெய் கக்கி டால்டா முழுங்கி பொளுக் பொளுக் என்று கொப்பளம் வந்து டிரேயில் விரிந்து வில்லை வில்லையாகும் பல ஸ்வீட்களைப் போல் இல்லாமல்....

ரவா லட்டு செய்வது மிக மிக சுலபம்.
வெறும் சர்க்கரைப்பொடியும் அதிர்ஷ்டவசமாக அகப்படும் முந்திரிப்பருப்பின் சுவை மட்டும் மேலோங்கி, நாக்கில் இன்ஸ்டண்டாக கரையும் *ரவாலாடு*

அரை பத்தி கூடத் தாண்டாத இந்த ப்ரிபரேஷனை பத்தி தெரியாதவாளுக்கு ருக்குவிடம் கேட்டு பிறகு பதிவு செய்கிறேன். படித்து செய்து பார்க்கவும்.
Read 15 tweets
2 Oct
#ஓரு_ஊர்ல_ஒரு_ராஜா...

*Once upon a time there lived a king*

இப்படி ஆரம்பித்து சொன்ன கதைகள் எல்லாம் என்னாயிற்று?

கனவுகளாக... கற்பனைகளாக... காற்றோடு கரைந்து போயிற்றா?

விளையாட்டுச் சாமான்கள் அலமாரிக்குள் ஓய்வெடுக்க

#நீள்செவ்வக_சிறைபேசிக்குள்_விரலும்_மனமும்_தேயத்தேய
*மண் தொடாத பிஞ்சுப்பாதங்கள் மறந்தே விட்டது வீதிக் கொண்டாட்டங்களை!!!*

பம்பரக்கட்டைகளுக்காய் உயிர்விட்ட மரங்களின் சாபமோ என்னவோ😢😢😢...

சுழலுவதேயில்லை இவை இப்பொழுதெல்லாம்?!?!

ஒருவேளை சாட்டைக்கயிற்றில் தற்கொலை செய்து கொண்டதோ???
ஒழுகும் வேர்வையை சட்டையில் துடைத்தபடி குதூகலமாய் ஏறிக்கொள்ளும்

பஞ்சுமிட்டாய் கண்ணம்மாக்களின் தாமதமாகும் வருகையை நினைத்தபடி...

ராட்டினங்கள் ஏங்கித் தான் போகின்றன...😢😢😢

விடிந்ததும் ஆழியோர வளைவிலிருந்து இரைதேட வரும் நண்டுகள்.....
Read 10 tweets
2 Oct
#Lal_Bahadur_Shastri

#Shastri ji: The man who took a charkha as dowry

#Shastri ji: The man who after loosing his father at the age of 2, walked miles barefoot to school and college.
#Shastri ji: The man who used to tie his books on his head and swim across the river twice to reach school.

#Shastri ji: The man who resigned as Railway Minister, when many people lost their lives in a rail accident, as he held himself responsible
#Shastri ji: The man who walked home everyday, so that he could save the hutments of poor people , which were coming in the way of road widening work.

#Shastri ji: The man who first stood up to Pakistan and came up with Jai Jawan Jai Kisan term.
Read 7 tweets
30 Sep
A thought to share during this Mahalayapaksham

#Parents_Don’t_Die,
#We_put_them_to_Death..

People say that when parents die, the world comes to an end.

The house looks empty.

But I feel that parents live forever and they stay with us.

It's us who forget them.
The matter of the fact is that a brother has eyes of his beloved father,

a sister has the pretty face
like the compassionate mother,

a sibling smiles like dad or
a sister cooks like mom.

Parents don't die.
They never leave us.
They live among us.
They live in us.
We are the reflections of our parents.

Despite their physical absence, they continue to live in us.

When you want to remember parents,

when you want to see them,

when you want to be with them,

#simply_gather_your_siblings_around_you.
Read 9 tweets
30 Sep
For those of you interested in Carnatic Music here is a treasure

ramanarunachalam.github.io/Music/Carnatic…

This is a directory of 37,000 Youtube videos of Carnatic Music, searchable by Raga/Artiste/Composer/Kriti. A Bangalorean has aggregated this by crawling though Youtube.
Some interesting data from him on this collection :

Total : 17536 hours
M. Balamurali Krishna : 443 hours
T. M. Krishna : 304 hours
Sanjay Subramanian : 265 hours
M. S. Subbulakshmi : 264 hours
Lalgudi Jayaraman : 233 hours
Semmangudi Srinivasa Iyer : 228 hours
M. D. Ramanathan : 221 hours
M. S. Gopalakrishnan : 174 hours
T. N. Seshagopalan : 170 hours
Sudha Raghunathan : 163 hours
M. L. Vasanthakumari : 163 hours
K. V. Narayanaswamy : 151 hours
Mandolin U. Srinivas : 147 hours
Maharajapuram Santhanam : 139 hours
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(