எச்சரிக்கை... விழிப்புணர்வு பதிவு
(Forwarded as received)

#மூன்றாவது_அலை_வரக்கூடாது

இவர்கள் நினைப்பது நடக்கக்கூடாது

ஒரு சாதாரண Surgical Trader கூட 3 வது அலையை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி Godownல் குவித்துள்ளான்
செப்டம்பரில் 3 வது அலை வரும் என்று கணித்தார்கள்.

#ஆனால்_அது_வரவில்லை

இதில் கொடுமை என்னவெனில் 2 ஆம் அலை முடிந்ததும் பல உற்பத்தியாளர்களும் ஜூலை மாதத்தில், தங்களிடம் உள்ள பொருட்களை Clearance Sale, Great Deal என்ற அடைமொழி வைத்து...
தங்களிடம் இருந்த Mask, Sanitizer, Gloves, Pulse Oxymeter என்று அனைத்து Surgical & Pharma Traders தலையில் கட்டிவிட்டார்கள்.

ஜூன் மாதம் 560/- ரூபாய் வரை விற்ற Latex Examination Gloves Box, தற்போது 270 ரூபாய்களுக்கே கிடைக்கிறது. ( 2019 ல் இதன் விலை வெறும் ரூபாய் 130/- மட்டுமே).
தற்போது மிகத்தரமான 3 Ply Mask எல்லாம் ரூபாய் 1.30 க்கு கிடைக்கிறது. இதை கடந்த ஜூன் - ஜூலையில் 2/- ரூபாய் கொடுத்து வாங்கினார்கள்

International Standard N95 எல்லாம் ரூபாய் 10/- க்கும் கீழே போய்விட்டது. வெறும் 5/- ரூபாய்க்கெல்லாம் ஓரளவு ஒத்துக்கொள்ளக்கூடிய தரத்திலே N95 கிடைக்கிறது.
தற்போது Pulse Oxymeter வெறும் 250/- ரூபாய்க்கும் கீழே சென்று, 2 மாதங்களுக்கு முன்பு 350/- ரூபாய் கொடுத்து வாங்கியவர்களை பரிகாசம் செய்கிறது.

உச்சகட்ட கொடுமை என்பது எல்லா Surgical ம், குறைந்தது ஒரு Oxygen Concentrator ஆவது கையிருப்பாக வைத்திருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்து இனி அது புதிதாய் யாருக்கும் தேவைப்படாது. மொத்தமாக ரூபாய். 50,000/- முதல் 75,000/- வரை முதலீடு செய்திருக்கிறார்கள்.

47 கிலோ ஆக்ஸிஜன் சிலிண்டர் ரூபாய் 13,000/- லிருந்து தற்போது வெறும் 9,000/- க்கு கீழே போய்விட்டது.
2 ஆம் அலை முடிந்ததில் இருந்து தற்போது வரையிலே, இவ்வளவு விலை குறைவு நடந்திருக்கிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் Importers அதிகமாகிவிட்டார்கள்.

3 ஆம் அலை மட்டும் வரவில்லையெனில், எங்கள் கதை கந்தலாகிவிடும் என்று வெளிப்படையாகவே புலம்புகிறார்கள்...
இப்படி எல்லோரும் Stock Maintenace என்கிற பெயரில் பெரும்பணத்தை பொருட்களின் மீது முடக்கியதால், மற்ற மருத்துவப்பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு Payment என்பது வருவதே அபூர்வமாகிவிட்டது. Liquid Cash என்பதே துடைத்து போட்ட மாதிரி இருக்கிறது.
அனைத்து வர்த்தகர்களும் மிகவும் நம்பியிருப்பது தசரா & தீபாவளி பண்டிகைகளைத்தான்

எல்லோரும் கும்பலாக ஒன்றாய் கூடுவார்கள், குறுக்கும், நெடுக்குமாய் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள்.
நம் ஊர் பண்டிகைகளால் மட்டுமே கொரோனாவை மீண்டும் கொண்டு வந்து தம்மை வாழ வைக்க முடியும் என்று தீவிரமாய் நம்புகிறார்கள்..*

*இதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது.*

#முகக்கவசம்_இல்லாமல்_வெளியில்_செல்லாதீர் இந்த 2021ஆண்டு இறுதிவரை!*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

3 Oct
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்

#கதை_சொல்வது_எழுதுவது_எப்படி???? வரிசையில் இன்று...

#ருசிகர_ருக்மணி

தெரியாத்தனமாக நான் ட்விட்டரில் இருப்பதையும் நானே எதிர்பார்க்காத அளவுக்குக் குறுகிய காலத்திலேயே....
என்னையும் சகபதிவாளர்கள் ஆட்டத்துலே சேர்த்துக்கிட்டாங்கங்கிறதையும் நான் என் பாரியாள்ட்ட சொல்லிட்டேன்.

அவுங்க பேரு ருக்மணி! எங்க குடும்பத்தில் அவங்களை எல்லாரும் #ருசிகர_ருக்மணி ன்னு தான் கூப்பிடுவாங்க
சீனி உன்னோட பதிவுகள் எல்லாம் ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓகே ரகம்தான் என்று சொல்லிவிட்டு ரொம்ப யோசனையில் இருந்தாள்....
Read 31 tweets
2 Oct
#ரவா_லாடு #சாப்பிடுவது_எப்படி?

என் சிறுவயதில் பாட்டி சொல்லிக் கொடுத்ததை கொஞ்சம் ரசிச்சு ருசிச்சு எழுதி இருக்கேன்.

ரவா லாடு/ரவா லட்டு ஒரு சாந்த சொரூபமான இனிப்புப் பண்டம்

ஃபிலிம் காமிக்கற ஸ்வீட்டுகளுக்கு மத்தியில், அமைதியாக அப்பிராணியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் நம்ப ரவா லாடு
இலுப்பச்சட்டியில் கம்பிப் பதம் வந்து கரண்டியில் புரண்டு நெய் கக்கி டால்டா முழுங்கி பொளுக் பொளுக் என்று கொப்பளம் வந்து டிரேயில் விரிந்து வில்லை வில்லையாகும் பல ஸ்வீட்களைப் போல் இல்லாமல்....

ரவா லட்டு செய்வது மிக மிக சுலபம்.
வெறும் சர்க்கரைப்பொடியும் அதிர்ஷ்டவசமாக அகப்படும் முந்திரிப்பருப்பின் சுவை மட்டும் மேலோங்கி, நாக்கில் இன்ஸ்டண்டாக கரையும் *ரவாலாடு*

அரை பத்தி கூடத் தாண்டாத இந்த ப்ரிபரேஷனை பத்தி தெரியாதவாளுக்கு ருக்குவிடம் கேட்டு பிறகு பதிவு செய்கிறேன். படித்து செய்து பார்க்கவும்.
Read 15 tweets
2 Oct
#ஓரு_ஊர்ல_ஒரு_ராஜா...

*Once upon a time there lived a king*

இப்படி ஆரம்பித்து சொன்ன கதைகள் எல்லாம் என்னாயிற்று?

கனவுகளாக... கற்பனைகளாக... காற்றோடு கரைந்து போயிற்றா?

விளையாட்டுச் சாமான்கள் அலமாரிக்குள் ஓய்வெடுக்க

#நீள்செவ்வக_சிறைபேசிக்குள்_விரலும்_மனமும்_தேயத்தேய
*மண் தொடாத பிஞ்சுப்பாதங்கள் மறந்தே விட்டது வீதிக் கொண்டாட்டங்களை!!!*

பம்பரக்கட்டைகளுக்காய் உயிர்விட்ட மரங்களின் சாபமோ என்னவோ😢😢😢...

சுழலுவதேயில்லை இவை இப்பொழுதெல்லாம்?!?!

ஒருவேளை சாட்டைக்கயிற்றில் தற்கொலை செய்து கொண்டதோ???
ஒழுகும் வேர்வையை சட்டையில் துடைத்தபடி குதூகலமாய் ஏறிக்கொள்ளும்

பஞ்சுமிட்டாய் கண்ணம்மாக்களின் தாமதமாகும் வருகையை நினைத்தபடி...

ராட்டினங்கள் ஏங்கித் தான் போகின்றன...😢😢😢

விடிந்ததும் ஆழியோர வளைவிலிருந்து இரைதேட வரும் நண்டுகள்.....
Read 10 tweets
2 Oct
#Lal_Bahadur_Shastri

#Shastri ji: The man who took a charkha as dowry

#Shastri ji: The man who after loosing his father at the age of 2, walked miles barefoot to school and college.
#Shastri ji: The man who used to tie his books on his head and swim across the river twice to reach school.

#Shastri ji: The man who resigned as Railway Minister, when many people lost their lives in a rail accident, as he held himself responsible
#Shastri ji: The man who walked home everyday, so that he could save the hutments of poor people , which were coming in the way of road widening work.

#Shastri ji: The man who first stood up to Pakistan and came up with Jai Jawan Jai Kisan term.
Read 7 tweets
30 Sep
A thought to share during this Mahalayapaksham

#Parents_Don’t_Die,
#We_put_them_to_Death..

People say that when parents die, the world comes to an end.

The house looks empty.

But I feel that parents live forever and they stay with us.

It's us who forget them.
The matter of the fact is that a brother has eyes of his beloved father,

a sister has the pretty face
like the compassionate mother,

a sibling smiles like dad or
a sister cooks like mom.

Parents don't die.
They never leave us.
They live among us.
They live in us.
We are the reflections of our parents.

Despite their physical absence, they continue to live in us.

When you want to remember parents,

when you want to see them,

when you want to be with them,

#simply_gather_your_siblings_around_you.
Read 9 tweets
30 Sep
For those of you interested in Carnatic Music here is a treasure

ramanarunachalam.github.io/Music/Carnatic…

This is a directory of 37,000 Youtube videos of Carnatic Music, searchable by Raga/Artiste/Composer/Kriti. A Bangalorean has aggregated this by crawling though Youtube.
Some interesting data from him on this collection :

Total : 17536 hours
M. Balamurali Krishna : 443 hours
T. M. Krishna : 304 hours
Sanjay Subramanian : 265 hours
M. S. Subbulakshmi : 264 hours
Lalgudi Jayaraman : 233 hours
Semmangudi Srinivasa Iyer : 228 hours
M. D. Ramanathan : 221 hours
M. S. Gopalakrishnan : 174 hours
T. N. Seshagopalan : 170 hours
Sudha Raghunathan : 163 hours
M. L. Vasanthakumari : 163 hours
K. V. Narayanaswamy : 151 hours
Mandolin U. Srinivas : 147 hours
Maharajapuram Santhanam : 139 hours
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(