#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மாரிமுத்து தேவி உபாசகர். ஒரு முறை செல்வந்தர் சேகரிடம் பணம் கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார். ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை. ஒரு நாள் மாரிமுத்து பூஜையறையில் அம்பிகையை
தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்த அக்கணம்
கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க மாரிமுத்து வெளியே வராததால் கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட ஆரம்பித்தார். அப்போது உள்ளிருந்து மாரிமுத்துவின் மனைவி வெளியே
வந்து அய்யா உங்களுக்கு பணம் தானே வேண்டும, கூச்சல் போடாதீர்கள். அரை நொடியில் பணத்துடன் வருகிறேன் என்று மிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தவள் அரை நொடியில் வந்தாள் ஒரு சிறு பை சகிதம். பின் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே அய்யா இதோ பாருங்கள் இந்த பையில்
நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான வட்டியும் உள்ளன. பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக் கொண்டு பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள். புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு அந்த அம்மாள் உள்ளே செல்ல செல்வந்தரும் பை, பத்திரம் சகிதம் வீட்டு
திண்ணையிலேயே அமர்ந்து கொண்டார். சற்றைக்கெல்லாம் பிரசாத தட்டுடன் வெளியே வந்த மாரிமுத்து அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்பு மேலிட
அடடே உங்களை கவனிக்க வில்லை மன்னியுங்கள்
பிரசாத தட்டை நீட்டியவாறு மெல்லிய குரலில் பேசியவரை பேச விடவில்லை அந்த செல்வந்தர். முதலில் இந்த
பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள்.
அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஏகத்துக்கு ஆச்சரியம். புருவம் முடிச்சிட
நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர் சேகர். உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு
பத்திரத்தையும் உங்களிடம் கொடுக்க சொன்னார்.
ஆச்சரியத்தில் ஆழ்ந்த மாரிமுத்து பின் மனைவியை அழைத்து நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே உண்மையா என்று வினவ அந்த அம்மையாரோ திகைப்புடன் அடடா நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன், இது எப்படி சாத்தியம் என்று அரற்றிய அக்கணம் பூஜை அறையில்
இருந்து ஒரு அசரீரி 'நான் தான் பணம் கொடுத்தேன்’ குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைய அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு எதுவும் இல்லை. இப்போது சகலமும் புரிந்து போயிற்று அந்த தேவி உபாசகருக்கு. கடனை அடைக்க தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில்
இப்போது தாரை தாரையாய் கண்ணீர்! அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி. உங்கள் மேன்மை தெரியாமல் தவறாக பேசி விட்டேன் மன்னியுங்கள் கண்கள் பனிக்க செல்வந்தர் சேகர் அவரின் கால்களில் விழுந்தார். அந்த தேவி உபாசகர் வேறு யாருமில்லை, லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய மாரிமுத்து எனும்
பாஸ்கரராயர் தான். அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது. தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர் இவர். தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் பாஸ்கரராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே உள்ளது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

4 Oct
The speech delivered by His Holiness Jagadguru Sri Sankaracharya of Kanchi Kamakoti Peetam at the Tiruppavai-Tiruvembavai Conference held at Kancheepuram on Sunday, January 31, 1960.
"Forty or fifty years ago, it was difficult to find even a single Nattukottai Chettiar without
smearing sacred ashes and without wearing a rudraksham around his neck. For that Sri Sundaraswamy, who was living on the banks of the Tambraparani, was responsible. He was a great devotee of Siva and had gained spirituality by his religious observance. There was none to equal
him in devotion and performing sacred services. He was responsible for the Kumbhabhishekam of seven temples in Tiruvarur on a single day. Several Gujaratis who had settled down in the Sowcarpet area of Madras were his disciples and they also used to wear Rudraksha round their
Read 22 tweets
4 Oct
"We must train our people from an early age to study the lives of great men who led an unattached life, free from debasing passions like lust, anger, greed and fear and, following their example, develop faith in God. This will help them to grow up into dutiful and honest citizens
disciplined to lead a moral and ethical life. If the Government also takes sufficient interest in making provision for teaching moral and spiritual values to children, it stands to gain much. For one thing, expenditure on police and law courts will get reduced. They will also be
free from the troubles arising from strikes and other forms of student indiscipline. On the ground that free India is a secular state, the Government failed to make provision for religious and moral instruction in educational institutions. One line of justification adopted for
Read 12 tweets
4 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு சிறுவன் தினமும் வந்து ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன்
வந்தான். அந்த மரம் மகிழ்ச்சியுடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது. என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மை வைத்திருக்கிறார்கள்.
ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை என்றான். கவலைப் படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று
கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள், என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது. அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான். மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது. இப்போது அவன் வளர்ந்திருந்தான்.
Read 12 tweets
2 Oct
#கொல்லூர்மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள் அம்பாள். இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது. இக்கோவிலின் கருவறை விமானம் முழுவதும் தங்கத் தட்டினால் வேயப்பட்டதாகும். அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா ஆனால் மூகாம்பிகை Image
அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது. அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஸ்வகர்மாவிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார். அந்த ஐம்பொன் விக்கிரகமே இன்றும் அலங்கார தேவதையாக ஆலயத்தில் Image
உள்ளது. அம்பாளின் கர்பக்கிரகம் கொடிக் கம்பத்தை ஒட்டியிருப்பது விளக்குத்தூண். ஒரே கல்லினால் ஆன அழகிய தூண் இது. இதில் ஆயிரம் விளக்குகள் ஏற்றலாம். கேரள கோவில்களில் ஆண்கள் கோவிலின் உள்ளே, சன்னதி அல்லது கருவறை அருகில் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு இங்கும் கடைப்பிடிக்கப்பட்டு Image
Read 24 tweets
2 Oct
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் காஞ்சிபூர்ணர் (திருக்கச்சி நம்பிகள்-ஸ்ரீஇராமனுஜரின் குரு) வரதராஜப் பெருமாளுடன் சகஜமாக பேசக் கூடியவர் என்பதால் ஊர் மக்கள் அவரை பகவானுக்கு மிகவும் நெருக்கமான பக்தர் என அழைப்பர். மக்கள் அவ்வப்போது அவரிடம் சென்று தாங்கள் எப்போது வைகுண்டம் செல்வோம் என்பதை பெருமாள் Image
கேட்டு சொல்லும்படி வற்புறுத்துவர். அவரும் பெருமாள் சொல்லும் செய்தியை மக்களிடம் தெரிவிப்பார். ஒருநாள் காஞ்சிபூர்ணர் தான் எப்போது வைகுண்டம் அடைவேன் என பெருமாளிடம் வினவினார். அதற்கு வரதராஜப் பெருமாளோ, நீர் எனக்கு பிரியமான பக்தன் என்றபோதிலும், தூய பக்தர்களுக்கு நீங்கள் சேவை செய்யாத Image
காரணத்தினால் இப்பிறவியில் என்னுடைய இடத்தை உங்களால் அடைய முடியாது என்றார். அதைக் கேட்ட காஞ்சிபூர்ணர் உடனடியாக திருவரங்கம் சென்று அங்கே திருகோஷ்டியூர் நம்பியின் மாட்டுக் கொட்டகையில் தம்மை பணிவான சேவையில் ஈடுபடுத்தி, வைகுண்ட லோகத்தை அடைவதற்கான முழு தகுதியையும் பெற்றார். இதிலிருந்து
Read 9 tweets
1 Oct
கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய பெற்றோர் பந்துக்களுக்குள்ளேயே முறைப் பையனைப் பார்த்து அவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்திருந்தார்கள். ஆனால் அந்தப் பெண், புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று Image
பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், உன் இஷ்டப்படியே போ என்று விட்டு விட்டார்கள். அந்தப் பெண், ‘புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். கல்யாணம் பண்ணிக்கொண்டால் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்று தீர்மானம் பண்ணிக் கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள். ஒரு
நாளைக்கு ராஜா பல்லக்கில் போய்க் கொண்டிருந்த போது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிக்கொண்டு போனான். இதை அந்தப் பெண் பார்த்தாள். அடடா ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(