#கொல்லூர்மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள் அம்பாள். இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது. இக்கோவிலின் கருவறை விமானம் முழுவதும் தங்கத் தட்டினால் வேயப்பட்டதாகும். அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா ஆனால் மூகாம்பிகை Image
அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது. அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஸ்வகர்மாவிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார். அந்த ஐம்பொன் விக்கிரகமே இன்றும் அலங்கார தேவதையாக ஆலயத்தில் Image
உள்ளது. அம்பாளின் கர்பக்கிரகம் கொடிக் கம்பத்தை ஒட்டியிருப்பது விளக்குத்தூண். ஒரே கல்லினால் ஆன அழகிய தூண் இது. இதில் ஆயிரம் விளக்குகள் ஏற்றலாம். கேரள கோவில்களில் ஆண்கள் கோவிலின் உள்ளே, சன்னதி அல்லது கருவறை அருகில் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு இங்கும் கடைப்பிடிக்கப்பட்டு Image
வருகிறது. வெளிப் பிராகாரத்தில் சரஸ்வதி மண்டபம் உள்ளது. ஆதி சங்கரர் ஸ்ரீமூகாம்பிகையை நோக்கி மனமுருகி #ஸௌந்தர்யலஹரி நூறு பாடல்களை எழுதி அரங்கேற்றி அருளிய இந்த சரஸ்வதி மண்டபம் கலா மண்டம் எனப் போற்றப்படுகிறது. மாபெரும் ஓவியர் ரவி வர்மா இங்கு சித்திரங்கள் வரைந்துள்ளார். நவராத்திரி Image
நாட்களில் இந்த சரஸ்வதி மண்டபம் தனி பொலிவு பெறும். விஜயதசமி அன்று இங்கு தங்கள் குழந்தைகளுக்கு #அட்சராப்பியாசம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம் ஆதிசங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்னும் சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. நவராத்திர
சமயத்தில் ஆதிசங்கரரின் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்பாளுக்கு துளசி மற்றும் பிச்சிப்பூவால் ஆன மாலையையும் அணிவிக்கிறார்கள். தமிழகத்தில் தேன்பூ என்று வழங்கப்படும் சிகப்பு நிறத்தில் கொத்து கொத்தாக உள்ள இந்த காட்டு மலர்களினால் ஆன ஆரத்தை விசேஷமானதாக அணிவிக்கிறார்கள்.
அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாக, உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாக இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாக பாவிக்கப்படுகிறாள். அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை போன்றவை மட்டுமே மூகாம்பிகைக்கு செய்யப்
படுகின்றன. அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் சுயம்பு லிங்கத்திற்கே பிரதானமாக செய்யப்படுகிறது. மூகாம்பிகை தனது இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு காட்சி அளிக்கிறாள். மேலும் இரண்டு கரங்களில் ஒரு கையில் அபயகரமும் மற்றொரு கையில் வரத கரம் தன் தாளை காட்டி பத்மாசனத்தில் கருவறையில்
வீற்றுள்ளாள். கருவறையில் அம்மையின் முன்னர் தரையோடு தரையாக சிவலிங்கம் உள்ளது. பொற் கோடால் இரு பிளவுபட்டு இடப்பாகம் பெரிதாகவும் அமையப் பெற்றுள்ளார். துவாபரயுகத்தில் கோலமுனி தவம் புரிந்த பொழுது இத்தலம் தோன்றியது. உச்சிப் பொழுதில் கண்ணாடியின் மூலமாக இந்த லிங்கத்தின் மீது பிரதிபலிக்க
செய்தால் அப்பொற்கோட்டைப் பார்க்கலாம். இடப்புறம் காளி, கலைமகள், அலைமகள் ஆகியோரை சுட்டுவதாக, வலப்புறம் அயன், அரன், அரி ஆகிய மூவரையும் சுட்டுவதாக லிங்கம் அமைந்துள்ளது. இயக்கமில்லானும், இயக்கமே உருவாய் உடையாளும் இச் சிவலிங்கத்தில் ஒன்றி உள்ளனர். இவ்வாக்கியத்தின் ஆதாரமாக அமைந்துள்ளதே
இப்பொற்கோடு ஆகும். ஆதி சங்கரரால் தனக்கு கிடைத்த காட்சிப்படி அமைக்கப் பெற்ற பஞ்சலோகத் திருவுருவ பிரதிஷ்டைக்கு முன் இங்கு சிவலிங்கமும் ஸ்ரீ சக்கரமும் மட்டுமே இருந்தது. கொல்லூர் கோவில் பூசாரிகளை புரோகிதர்கள் என்றே அழைக்கின்றனர். கோவிலின் அனைத்து தேவைகளும், சேவைகளும் இவர்களாலேயே நடை
பெறுகிறது. மூகாம்பிகையை பூஜிக்க பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப் படுவதில்லை. இந்த ஆலயத்தின் பூஜை முறைகள் சிருங்கேரி மடத்தை அனுசரித்துள்ளது. கிரகண நேரத்திலும் கருவறை திறக்கப்பட்டு இங்கு பூஜைகள் நடத்தப்படும். இத்தலத்தில் தேவிக்கு எடுக்கும் விழாவில் முருகனும் கொண்டாடப்படுகிறான். சரஸ்வதி
பூஜையன்று மூகாம்பிகையின் சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி கருவறையிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறாள். மூகாம்பிகை தேவி கலைமகள் அம்சமாகத் திகழ்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க அம்பிகையை பிரார்த்தனை செய்து கலாரோகணம் எனும் துதியை பாடுகிறார்கள். மூகாம்பிகை ஏவல்,
பில்லி, சூன்யம், துஷ்ட தேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள். மூகாம்பிகை தேவிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யபபடுகிறது. வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள 1008 தீபங்கள் கொண்ட மரவிளக்கு தீபங்கள்
ஏற்றப்படுகின்றன. மேலும் கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும். மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்வதால் நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எழுத்து குங்கும மகிமையால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. பூர்வ புண்ணியம் மேலோங்கப் பெற்றவர்கள்,
தம் வல்வினை நீங்கும் காலம் நெருங்கியவர்களே கொல்லூர் சென்று அங்கே கோலோச்சும் மூகாம்பிகையை தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. சத்ருவை அழித்த அன்னையின் சக்தி இங்கு மிகுந்திருப்பதால், சத்ருக்களால் எந்த ஆபத்தும் வராமல் இருக்க இங்கு ஏராளமானவர்கள் சண்டிஹோமம் செய்கிறார்கள்.
மூகாம்பிகை ஆலயத்தில் 2 விதமான பூஜைகள் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒன்று பலிபீட பூஜை. மற்றொன்று விஜய் யக்ஞ சாஸ்திர பூஜையாகும். அன்னைக்குப் போரில் உதவிபுரியப் படைக்கப்பட்ட வீரபத்திரர், இந்த சேத்திரத்திற்கு ரட்சாதிகாரியாக வழிபடப்படுகிறார். மூகாம்பிகை கோவிலில் தினசரி மதியம்,
இரவு இரு வேளைகளிலும் அன்னதானம் உண்டு. திருப்பதி, திருவண்ணாமலை தலங்களில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ள விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் கொல்லூர் மூகாம்பிகைக்கும் நிறைய செய்துள்ளார். மூகாம்பிகைக்கு தங்கத்தால் முகக்கவசம் செய்து கொடுத்தது அவர்தான். கொல்லூரில் புனித தீர்த்தமாக உள்ள
சவுபர்ணிகா நதியில் 62 வகை மூலிகைகள் கலந்து வருவதாக சொல்கிறார்கள். எனவே அந்த நதியில் நீராடினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சிப்பெறும். கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் பக்தர்கள் 64 விதமான, வித்தியாசமான பூஜைகள், சேவைகளில் பங்கேற்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி
கட்டணம் நிர்ணயித்துள்ளனர். தினமும் இத்தலத்தில் சண்டிஹோமம் நடத்தப் படுகிறது. கட்டணம் ரூ.8 ஆயிரம். கர்நாடகா மாநிலத்தில் உள்ள 7 முக்தி தலங்களில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஒன்றாக கருதப்படுகிறது. சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் மூகாம்பிகை ஆலயம் திறந்து இருக்கும். லிங்கத்துக்கு
சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்பிரகாரத்தில் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட பெரிய பாம்பு உருவம் சுவரில் பதிக்கப்பட்டு இருப்பதை காணலாம். அதை பக்தர்கள் தொட்டு வணங்கி செல்கிறார்கள். இந்த வழிபாடு ராகு-கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும
என்று நம்பப்படுகிறது. கொல்லூரில் தினமும் பக்தர்கள் எடைக்கு எடை பல்வேறு பொருட்களை தூலாபாரம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் வாழைத்தார்கள் தான் தூலாபாரம் கொடுக்கப்படுகிறது. பிரதான நுழைவு வாயிலில் இரண்டு பெரிய மணிகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. மூகாம்பிகைக்கு பூஜைகள் நடக்கும் போது
அந்த மணியை ஒலிக்கச் செய்கிறார்கள். அந்த சத்தம் பிரமாண்டமாக இருக்கிறது. கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் சார்பில் 9 கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. ஏழைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. கொல்லூர் ஆலயம் சார்பில் மிகப்பெரிய கோசாலை உள்ளது. அங்கு சுமார் 150 பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.
கொல்லூர் செல்வோம் மூகாம்பிகை அம்மனின் அருளை பெறுவோம்.
ஓம் ஸ்ரீ கொல்லூர் மூஒகாம்பிகையே துணை.🙏🏾🙏🏾 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

4 Oct
The speech delivered by His Holiness Jagadguru Sri Sankaracharya of Kanchi Kamakoti Peetam at the Tiruppavai-Tiruvembavai Conference held at Kancheepuram on Sunday, January 31, 1960.
"Forty or fifty years ago, it was difficult to find even a single Nattukottai Chettiar without Image
smearing sacred ashes and without wearing a rudraksham around his neck. For that Sri Sundaraswamy, who was living on the banks of the Tambraparani, was responsible. He was a great devotee of Siva and had gained spirituality by his religious observance. There was none to equal
him in devotion and performing sacred services. He was responsible for the Kumbhabhishekam of seven temples in Tiruvarur on a single day. Several Gujaratis who had settled down in the Sowcarpet area of Madras were his disciples and they also used to wear Rudraksha round their
Read 22 tweets
4 Oct
"We must train our people from an early age to study the lives of great men who led an unattached life, free from debasing passions like lust, anger, greed and fear and, following their example, develop faith in God. This will help them to grow up into dutiful and honest citizens Image
disciplined to lead a moral and ethical life. If the Government also takes sufficient interest in making provision for teaching moral and spiritual values to children, it stands to gain much. For one thing, expenditure on police and law courts will get reduced. They will also be
free from the troubles arising from strikes and other forms of student indiscipline. On the ground that free India is a secular state, the Government failed to make provision for religious and moral instruction in educational institutions. One line of justification adopted for
Read 12 tweets
4 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு சிறுவன் தினமும் வந்து ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் Image
வந்தான். அந்த மரம் மகிழ்ச்சியுடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது. என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மை வைத்திருக்கிறார்கள்.
ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை என்றான். கவலைப் படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று
கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள், என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது. அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான். மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது. இப்போது அவன் வளர்ந்திருந்தான்.
Read 12 tweets
3 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மாரிமுத்து தேவி உபாசகர். ஒரு முறை செல்வந்தர் சேகரிடம் பணம் கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார். ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை. ஒரு நாள் மாரிமுத்து பூஜையறையில் அம்பிகையை
தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்த அக்கணம்
கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க மாரிமுத்து வெளியே வராததால் கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட ஆரம்பித்தார். அப்போது உள்ளிருந்து மாரிமுத்துவின் மனைவி வெளியே
வந்து அய்யா உங்களுக்கு பணம் தானே வேண்டும, கூச்சல் போடாதீர்கள். அரை நொடியில் பணத்துடன் வருகிறேன் என்று மிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தவள் அரை நொடியில் வந்தாள் ஒரு சிறு பை சகிதம். பின் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே அய்யா இதோ பாருங்கள் இந்த பையில்
Read 11 tweets
2 Oct
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் காஞ்சிபூர்ணர் (திருக்கச்சி நம்பிகள்-ஸ்ரீஇராமனுஜரின் குரு) வரதராஜப் பெருமாளுடன் சகஜமாக பேசக் கூடியவர் என்பதால் ஊர் மக்கள் அவரை பகவானுக்கு மிகவும் நெருக்கமான பக்தர் என அழைப்பர். மக்கள் அவ்வப்போது அவரிடம் சென்று தாங்கள் எப்போது வைகுண்டம் செல்வோம் என்பதை பெருமாள் Image
கேட்டு சொல்லும்படி வற்புறுத்துவர். அவரும் பெருமாள் சொல்லும் செய்தியை மக்களிடம் தெரிவிப்பார். ஒருநாள் காஞ்சிபூர்ணர் தான் எப்போது வைகுண்டம் அடைவேன் என பெருமாளிடம் வினவினார். அதற்கு வரதராஜப் பெருமாளோ, நீர் எனக்கு பிரியமான பக்தன் என்றபோதிலும், தூய பக்தர்களுக்கு நீங்கள் சேவை செய்யாத Image
காரணத்தினால் இப்பிறவியில் என்னுடைய இடத்தை உங்களால் அடைய முடியாது என்றார். அதைக் கேட்ட காஞ்சிபூர்ணர் உடனடியாக திருவரங்கம் சென்று அங்கே திருகோஷ்டியூர் நம்பியின் மாட்டுக் கொட்டகையில் தம்மை பணிவான சேவையில் ஈடுபடுத்தி, வைகுண்ட லோகத்தை அடைவதற்கான முழு தகுதியையும் பெற்றார். இதிலிருந்து
Read 9 tweets
1 Oct
கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய பெற்றோர் பந்துக்களுக்குள்ளேயே முறைப் பையனைப் பார்த்து அவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்திருந்தார்கள். ஆனால் அந்தப் பெண், புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று Image
பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், உன் இஷ்டப்படியே போ என்று விட்டு விட்டார்கள். அந்தப் பெண், ‘புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். கல்யாணம் பண்ணிக்கொண்டால் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்று தீர்மானம் பண்ணிக் கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள். ஒரு
நாளைக்கு ராஜா பல்லக்கில் போய்க் கொண்டிருந்த போது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிக்கொண்டு போனான். இதை அந்தப் பெண் பார்த்தாள். அடடா ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(