அருள்மிகு சப்த கன்னியர் திருக்கோயில், கன்னிமார்பாளையம், திண்டுக்கல்
ஆலயத்தின் நுழைவாயிலைத் தொடர்ந்து மகாமண்டபம், அதையடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் கிழக்கு திசை நோக்கி சூல வடிவில் பெரியசாமி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳1
அடுத்துள்ள கருவறையில் சப்தகன்னியர் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தல விருட்சம் ஆவி எனப்படும் ஒரு வகை மரம். இம்மரம் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ளது. இம்மரத்தின் அடியில் விநாயகர் அருள்பாலிக்கிறார். மேற்குப் பிரகாரத்தில் அழிஞ்சி மரம் உள்ளது.
🙏🇮🇳2
ஆதியில் சப்த கன்னியரின் திருமேனிகள் இம்மரத்தின் அடியில்தான் இருந்தன. பின்னரே தனி ஆலயம் அமைத்து கருவறையில் சப்தகன்னியர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த அழிஞ்சி மரத்திற்கு ஊஞ்சல் மரம் என்ற பெயரும் உண்டு. கிழக்குப் பிரகாரத்தில் ஐம்பது ஆண்டுகள் பழமையான மின்னமரம் உள்ளது.🙏🇮🇳3
இதனடியில் புற்று ஒன்று உள்ளது. இரண்டு நாகதேவதை திருமேனிகளும் உள்ளன.
இந்த ஆலயத்தில் உள்ள சப்த கன்னியர் பலருக்கு குலதெய்வமாக விளங்குகிறாள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இங்கு திருவிழா நடைபெறுகிறது. 🙏🇮🇳4
சுற்று வட்டார மக்கள் அவர்களின் குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காதுகுத்துதல் போன்ற சுப காரியங்களை இந்த ஆலயத்தில் நடத்துவது வழக்கம். இங்கு அருள்பாலிக்கும் சப்த கன்னியரை ஆராதனை செய்து வணங்குவதால் தங்கள் குலம் தழைத்து நல்வாழ்வு பெற முடிகிறது என பக்தர்கள் நம்புகின்றனர்.
🙏🇮🇳5
சிறப்பம்சங்கள் :
சப்தகன்னியருக்கு தனி கோயில் அமைந்திருப்பது சிறப்பு.
கடந்த 20 ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் பயன் இல்லை: தலிபான்கள் அடாவடி
காபூல்: 'ஆப்கனில் கடந்த 2000 முதல் 2020ம் ஆண்டு வரை பள்ளி, கல்லூரி, பல்கலைகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை' என, தலிபான்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆப்கனில் இருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடன் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின் ஆண்கள் தாடியை குறைக்கவோ, மழிக்கவோ கூடாது என்றும்; பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் பல்வேறு அடாவடி உத்தரவுகளை தலிபான்கள் பிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலிபான்களின் கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது:
சோ ராமசாமி (Cho Ramaswamy, அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர்.
சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது.
சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும்,
'சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை, பதவிக்கு வந்த 142 நாட்களில் நிறைவேற்றி விட்டோம்.
இது மாதிரி மகத்தான சாதனைகளை, இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் செய்ததில்லை' என தம்பட்டம் அடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தி.மு.க.,வின் 'ஸ்பெஷாலிட்டி' என்ன தெரியுமோ?'சொன்னதையும் செய்தோம்; சொல்லாததையும் செய்தோம்' என, 'புருடா'க்களை அள்ளி விடுவது தான்!பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்பதாக சொன்னவர்கள், 3 ரூபாய் மட்டுமே குறைத்தனர். டீசல் விலையை 3 ரூபாய் குறைப்பதாக சொன்ன வாக்குறுதியை மறந்து விட்டனர்.
அருள்மிகு சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோயில், தோவாளை, கன்னியாகுமரி
🇮🇳🙏1
சஷ்டி விழாவின் போது முதல்நாள் பாலமுருகன் வடிவத்திலும், சிவபெருமான் வடிவத்திலும், இரண்டாவது நாள், மூன்றாவது நாள் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்திலும், 4-வது நாள் சங்கர நாராயணன் வடிவத்திலும், 5-வது நாள் சக்தியின் வடிவத்திலும், 🇮🇳🙏2
6-வது நாள் போர்க்கோல முருகன் வடிவத்திலும் மூலவர் அலங்காரம் செய்யப்படுவார். வேறு நாட்களில் பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப வேலன், வேடன், விருத்தன் ஆகிய கோலங்களில் மூலவரை அலங்கரிப்பதும் உண்டு. 🇮🇳🙏3
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், கன்னியாகுமரி
நம்மாழ்வாரின் தாயார் பிறந்ததலம் :
திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உரியது. 🙏🇮🇳1
குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது. 🙏🇮🇳2
பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியிலே நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர். 🙏🇮🇳3