பாமகவின் கனவை கனவாகவே நிறுத்திய திமுக.
திமுக இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக, பாமக, நாம் தமிழர், தேமுதிக என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் படுதோல்வியை சந்தித்துள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின்படி 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான
இடங்களில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 1381 ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் 1021 இடங்களில் திமுகவும், 195 இடங்களிலும் அதிமுகவும், 5 இடங்களிலும் அமமுகவும், 35 இடங்களில் பாமகாவும் முன்னிலை வகிக்கிறது.
பாமக கிட்டத்தட்ட ராஜதந்திரமாக செயல்பட்டுதான் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது. அதன்படி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி
ஆகிய 7 மாவட்டங்கள் வட மாவட்டங்கள். இந்த மாவட்டங்கள் எல்லாமே பாமக வலுவாக இருப்பதாக கருதப்படும் மாவட்டங்கள். அதிலும் கள்ளக்குறிச்சி எல்லாம் பாமக பாரம்பரியமாக வலுவாக இருக்கும் மாவட்டங்கள்.
இதனால்தான் பாமக தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது. ஆனால் கள்ளக்குறிச்சி உட்பட ஒரு மாவட்டத்தில் கூட பாமகவின் மாவட்ட கவுன்சில் வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. 9 மாவட்டங்களில் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியை கூட பாமக பெறவில்லை.
பாமக தான் எதிர்பார்த்த வன்னியர் வாக்குகளும் பாமகவிற்கு கிடைக்கவில்லை. உள்ளூரில் பாமக செல்வாக்கை இழந்துள்ளது
ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் பாமக 35 இடங்கள் வர வென்றுள்ளது. ஆனாலும் எந்த மாவட்டத்திலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மொத்தமாக பாமக ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பெறவில்லை. இதே வட மாவட்டங்களில்தான் தற்போது மாவட்ட கவுன்சிலர்,
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை திமுக அள்ளி இருக்கிறது. அதாவது பாமக வலுவான கட்சியாக இருக்கும் என்று கருதப்பட்ட அதே வடமாவட்டங்களில் திமுக எழுச்சி பெற்றுள்ளது.
காஞ்சிபுரத்தில் 11 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. வேலூரில் உள்ள அனைத்து 14 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. திருப்பத்தூரில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும்
திமுக முன்னிலை வகிக்கிறது. ராணிப்பேட்டையில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. பாமக வலுவாக இருக்கும் என்று கருதப்பட்ட கள்ளக்குறிச்சியில் உள்ள 19 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
செங்கல்பட்டில் 16 மாவட்ட கவுன்சிலர் பதவியில் 13ல் திமுக, 1ல் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
வன்னியர்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களிலும் மற்ற வட மாவட்டங்களிலும் திமுக புதிய எழுச்சி பெற்றுள்ளது. வடமாவட்டங்களில் திமுக வெற்றிபெற முடியாது. அது பாமக, அதிமுக கோட்டை என்று சென்டிமென்டை
உடைத்து திமுக இங்கே வெற்றிவாகையை சூடி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அதிமுக, தேமுதிகவும் இங்கு படுதோல்வியை அடைந்துள்ளது.
வன்னியர்களுக்கு 10 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கொண்டு வந்த கட்சி என்ற வகையிலும், ஜாதி வாக்குகள் காரணமாகவும் அதிமுக இங்கு கணிசமான இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செங்கல்பட்டில் 1,
விழுப்புரத்தில் 1 என்று இரண்டு மாவட்ட கவுன்சிலர் இடங்களை மட்டுமே அதிமுக பெற்றுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒன்றில் கூட அதிமுக மாவட்ட கவுன்சிலர் பதவிகளை வெல்ல முடியவில்லை.
அதேபோல் ஜாதி ரீதியான வாக்கு வங்கி காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தேமுதிகவும் வலுவான கட்சியாக பார்க்கப்பட்டது. அந்த கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கி இங்கிருந்துதான் வரும். ஆனால் தேமுதிகவும் இங்கு தோல்வியை தழுவி உள்ளது.
ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியையும் தேமுதிக பெற முடியவில்லை. ஒரே ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவியை மட்டுமே தேமுதிக பெற்றுள்ளது.
இதற்கு முன்பெல்லாம் வடமாவட்டங்களில் பெரிதாக வெற்றியை பெறாமல் இருந்த திமுக கடந்த லோக்சபா தேர்தலில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக இங்கே
முன்னேற்றம் அடைந்து வருகிறது. சட்டசபை தேர்தலிலும் வட மாவட்டங்களில் திமுக கொஞ்சம் நன்றாகவே செயல்பட்டு இருந்தது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக கிளீன் ஸ்வீப் செய்து வெற்றிபெற்றுள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது:- "அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதால் ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு
விரோதம் இருந்தது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே போர் நடந்து வந்தது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பினார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
முன்னதாக இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். டெல்லி அசோகா ஓட்டலில் தங்கியிருந்த தன்னை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாக பிரபாகரன் குற்றம் சாட்டினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிடிபட்டவர்களை அடைத்து வைக்க பூந்தமல்லி சப்-ஜெயில் பலத்த பாதுகாப்பு கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது. 14 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் 18 அடி உயரத்துக்கு உயர்த்திக் கட்டப்பட்டது. மேலே கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டன.
கூடுதலாக 10 சிறை அறைகள் கட்டப்பட்டன. இங்கு நளினி, முருகன் உள்பட ராஜீவ் கொலையையொட்டி கைதானவர்கள் அடைக்கப்பட்டனர். சி.பி.ஐ. பிடித்து வைத்து விசாரித்து வந்த நளினியின் தங்கை கல்யாணி விடுவிக்கப்பட்டாள்.
ராஜீவ் கொலை வழக்கில் புதிதாக விஜயன் என்கிற பெருமாள் விஜயன் (வயது 26), பாஸ்கர் என்கிற வேலாயுதம் (55) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள். மாமனார் -மருமகனான இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்தான். அகதிகளாக இந்தியா வந்தவர்கள். கொடுங்கையூரில் தங்கி இருந்தார்கள்.
சென்னை ஆழ்வார்திருநகரில் பதுங்கியிருந்த ஒற்றைக்கண் சிவராசனும், சுபாவும் இனியும் சென்னையில் இருந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று நினைத்தனர். அதனால் சென்னையிலிருந்து தப்பிச்செல்ல என்ன வழி என்று யோசித்தனர். சில விடுதலைப்புலிகளின்
உதவியுடன் டேங்கர் லாரிக்குள் மறைந்து கொண்டு ரகசியமாக பெங்களூருக்குச் சென்றார்கள். 29-6-1991-ல் பெங்களூர் போய்ச் சேர்ந்தனர். அங்கு தலைமறைவாக இருந்த அவர்கள் 1 மாத காலம் போலீஸ் கண்ணில் படாமல் அங்கும் இங்கும் திரிந்தனர்.
பிறகு கோனேகுண்டே என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கினர். இதுபோல் பல விடுதலைப்புலிகள் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தனர். பெங்களூர் புறநகரில் உள்ள இந்திரா நகர் காலனியில்
இந்தக்கொலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது தமிழக போலீசாருக்கு பெரிய சவாலாக இருந்தது. இந்த கொலையில் துப்புதுலக்கும் பொறுப்பு "ஐ.ஜி." கார்த்திகேயன் தலைமையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் துப்பு துலக்கிய விதம் மர்மப்பட மன்னன் ஹிட்ச்ஹாக்
படங்களையும் மிஞ்சுவதாக இருந்தது. ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சிகளை அரிபாபு என்ற போட்டோகிராபர் படம் எடுத்துக் கொண்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவர் இறந்து போனாலும் அவருடைய கேமரா சேதம் அடையாமல் கிடந்தது. அந்த கேமராவை போலீசார் கைப்பற்றி உள்ளே பதிவாகியிருந்த
படங்களை பிரிண்ட் போட்டுப் பார்த்தனர். ஒரு படத்தில் லதா கண்ணன், கோகிலா ஆகியோருக்கு நடுவே கையில் சந்தன மாலையுடன் மர்மப்பெண் நின்று கொண்டிருந்தாள். அடுத்த படத்தில் சிறுமி கோகிலாவை ராஜீவ் பாராட்டிய காட்சி பதிவாகியிருந்தது. அருகே அந்த மர்மப்பெண்ணின் தலை தெரிந்தது.
ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்ற செய்தி டெல்லியில் இருந்த சோனியா காந்திக்கு இரவு 12 மணி அளவில் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிர்ச்சியால் உறைந்து போனார். ராஜீவ் காந்தியின் ஒரே மகன் ராகுல் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனடியாக விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார். சோனியாவும், மகள் பிரியங்காவும் தனி விமானம் மூலம் சென்னைக்கு விரைந்தனர். இதற்கிடையே ராஜீவ் காந்தியின் உடல் வேன் மூலம் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு உடல் பரிசோதனை நடந்தது.
டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவதற்காக பெட்டியில் வைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வந்தது. கவர்னர்
பீஷ்மநாராயண் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.