ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிடிபட்டவர்களை அடைத்து வைக்க பூந்தமல்லி சப்-ஜெயில் பலத்த பாதுகாப்பு கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது. 14 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் 18 அடி உயரத்துக்கு உயர்த்திக் கட்டப்பட்டது. மேலே கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டன.
கூடுதலாக 10 சிறை அறைகள் கட்டப்பட்டன. இங்கு நளினி, முருகன் உள்பட ராஜீவ் கொலையையொட்டி கைதானவர்கள் அடைக்கப்பட்டனர். சி.பி.ஐ. பிடித்து வைத்து விசாரித்து வந்த நளினியின் தங்கை கல்யாணி விடுவிக்கப்பட்டாள்.
ராஜீவ் கொலை வழக்கில் புதிதாக விஜயன் என்கிற பெருமாள் விஜயன் (வயது 26), பாஸ்கர் என்கிற வேலாயுதம் (55) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள். மாமனார் -மருமகனான இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்தான். அகதிகளாக இந்தியா வந்தவர்கள். கொடுங்கையூரில் தங்கி இருந்தார்கள்.
இவர்களது வீட்டு சமையல் அறையில், தரைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த வயர் லெஸ்' கருவியை புலனாய்வு போலீசார் கைப்பற்றினார்கள். இந்த வயர்லெஸ் கருவி மூலம் இலங்கையில் இருக்கும் விடுதலைப்புலிகளுடன் சிவராசன் பேசி இருக்கிறான்.
ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பும், கொலை நடந்த பிறகும் இங்கு சிவராசன் வந்து தங்கிச் சென்று இருக்கிறான்.என்ற தகவல் கிடைத்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன் நீதிபதியாக முதலாவது அடிஷனல் செசன்சு நீதிபதி எஸ்.எம்.சித்திக் நியமிக்கப்பட்டார். இந்த தனி செசன்சு கோர்ட்டு சென்னை கோர்ட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலையாளியான தனுவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தஞ்சை மாவட்டம் வேதாரண்யம்
பக்கமுள்ள கொடியங்காடு பகுதியைச் சேர்ந்த மிராசுதார் சண்முகம் (40) என்பவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது தோட்டத்தில் ஏராளமான வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதனால் அவரை தனி ஹெலிகாப்டர் மூலம் வேதாரண்யம் அழைத்துச்சென்று சோதனை போட்டனர். அவரது தோட்டத்தில் பெட்டிபெட்டியாக பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினார்கள். பிறகு மிராசுதார் சண்முகத்தை அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்க வைத்தார்கள்.
சுற்றுலா விடுதி அருகில் உள்ள மரத்தில் மிராசுதார் சண்முகம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். மிராசுதாரை போலீசார் அடித்து கொன்று தொங்க விட்டுவிட்டதாக அவரது மனைவி பவானி ஜனாதிபதிக்கு தந்தி கொடுத்தார்.
பிறகு நடந்த பிரேத பரிசோதனையில் மிராசுதார் சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக டாக்டர் அறிக்கை கொடுத்தார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் (எல்.டி.டி.இ.) பிரபாகரன் உள்பட 41 பேர் மீது தனிக்கோர்ட்டில் 20-5-92 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
"ஒற்றைக்கண்" சிவராசன் தனு, சுபா, கோடியக்கரை மிராசுதாரர் சண்முகம் உள்பட 12 பேர் தற்கொலை செய்து கொண்டனர். எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் இலங்கையில் இருந்தனர். எனவே இவர்கள் 3 பேரும் "பிரகடனம் செய்யப்பட்ட குற்றவாளிகள்"என்று அறிவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் நளினி, அவள் கணவன் முருகன் உள்பட 26 பேர் மீது மட்டும் வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு முடிவு செய்தது. குற்றம் சாட்டப்பட்ட 26 பேர் விவரம் வருமாறு:- 1. நளினி (வயது 33) நர்சு பத்மாவின் மகள். 2. முருகன் (28) நளினியின் கணவன். விடுதலைப்புலி.
3. சின்னசாந்தன் (33) 4. சங்கர் (30) 5. விஜயானந்தன் (47) 6. சிவரூபன் என்கிற சுரேஷ்குமார் (26) 7. கனகசபாபதி (76) 8. ஆதிரை (23) கனகசபாபதியின் பேத்தி. 9. ராபர்ட் பயாஸ் (31) 10. ஜெயக்குமார் (30) 11. சாந்தி (30) ஜெயக்குமாரின் மனைவி 12. விஜயன் (32)
13. செல்வலட்சுமி (31) விஜயனின் மனைவி. 14. பாஸ்கரன் (62) விஜயனின் மாமனார். 15. சண்முக வடிவேலு (53) 16. ரவிச்சந்திரன் என்ற ரவி (30) தமிழர் மீட்புப்படைத் தளபதி. 17. சசீந்திரன் என்கிற மகேஷ் (27) 18. பேரறிவாளன் என்ற அறிவு (24) ஜோலார் பேட்டையைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி.
"ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்' தொடரில் குறிப்பிடப்பட்டிருந்த அண்ணா, சம்பத் ஆகியோர் நடித்த "சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்' நாடகத்தில் விடுப்பட்டுப் போன மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வை மறைந்த எனது தந்தையார் இரா.சங்கரலிங்கனார் என்னிடம் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அந்நாடகத்தில் அடுத்த காட்சிக்காகக் காத்திருக்க நேரிட்ட சம்பத், புகைபிடித்துக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரை விலகி விளக்குகள் எரிந்தன. காகப்பட்டராக நடித்த அண்ணாவின் கேள்விக்கணைகளுக்குப்
பதிலளிக்கத் தொடங்கிய சம்பத்தின் வாயிலிருந்து சிகரெட்டின் புகையைப் பார்த்த அண்ணா, உடனே சுதாரித்துக் கொண்டு, ""சிவாஜி, கனல் கக்கப் பேசுவாய் என்று நினைத்தேன். ஆனால் நீயோ புகை கக்கப் பேசுகிறாயே'' என்று சொன்னபோது மாநாட்டு அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி.
இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்.
இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா?
இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால்1937-ம் ஆண்டு முதல்முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.
ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார்.
குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.
கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட...
கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
வக்கீல் நோட்டீஸ்
27-2-2008 தேதியிட்ட குமுதம் வார இதழில் நீங் கள் (விஜயகாந்த்) பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை, அடிப்படை ஆதாரம் இல் லாதவை.
பேட்டியில் நீங்கள்,
"சட்ட சபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி னார் காங்கிரசின் அனந்த நாயகி. இவர் உடனே எழுந்து, நாடாவைக் கழற்றி பாவா டையை தூக்கிப்பார் அங்கே தெரியும் என்றார். சட்டசபை அல்லோகலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான்
`கந்தஹார் விமானக் கடத்தல்.. வாஜ்பாய் அரசு செய்தது தவறு' - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி புத்தகம்
அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக்குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான்.
ஆனால், பைலட் மறுக்கிறார். உடனே 25 வயது பயணி ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி!
1999-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்பதற்காக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. இதை `நவீன இந்திய வரலாற்றில் மிக மோசமாக பயங்கரவாதிகளிடம் சரணடைந்த சம்பவம் இது'
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.